ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-9

● டி. முத்தாத்தாள், சேலம்-4.

நானும் என் கணவரும் 26 வருடங்களாகப் பிரிந்து வாழ்கிறோம். இரண்டு பையன்கள். திருமணம் ஆயிற்று. இரண்டு பேரன், பேத்தி உண்டு. எனக்கு 33 வயதாகும்பொழுது பிரிந்தோம். காரணமே இல்லாமல் வெறுப்பு, சண்டை. பிறகு 17 வருடம் தாயார் வீட்டில் வாழ்ந்தோம். (நானும் பிள்ளைகளும்). இப்போது மகன்கள் இருவருக்கும் திருமணமானதால் இருவரையும் சார்ந்து வாழ்கிறேன். என் மகள்கூட என் கணவரிடம் இருவரும் கடைசிக்காலத்தில் சேர்ந்திருங்கள் என்கிறாள். என் கணவர் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறார். ஹோட்டல் சாப்பாடு அவருக்கு ஒத்துக்கொள்ளாது என்றாலும் பிடிவாதமாக இருக்கிறார். எனக்கு கணவருடன் சேர்ந்து வாழும் பாக்கியம் உண்டா?

தியாகராஜன் (கணவர்) மூல நட்சத்திரம், தனுசு ராசி. முத்தாத்தாள் (மனைவி) பூச நட்சத்திரம், கடக ராசி. இருவரும் சஷ்டாஷ்டக ராசி. 6 ஷ் 8 எப்படி இந்த ஜாதகங்களை இணைத்தார்கள்? கடைசிவரை சேர்ந்துவாழ முடியாது. சேர்ந்தால் முத்தாத்தாளுக்குதான் சித்திரவதை! பிள்ளைகளிடம் சொல்லி முத

● டி. முத்தாத்தாள், சேலம்-4.

நானும் என் கணவரும் 26 வருடங்களாகப் பிரிந்து வாழ்கிறோம். இரண்டு பையன்கள். திருமணம் ஆயிற்று. இரண்டு பேரன், பேத்தி உண்டு. எனக்கு 33 வயதாகும்பொழுது பிரிந்தோம். காரணமே இல்லாமல் வெறுப்பு, சண்டை. பிறகு 17 வருடம் தாயார் வீட்டில் வாழ்ந்தோம். (நானும் பிள்ளைகளும்). இப்போது மகன்கள் இருவருக்கும் திருமணமானதால் இருவரையும் சார்ந்து வாழ்கிறேன். என் மகள்கூட என் கணவரிடம் இருவரும் கடைசிக்காலத்தில் சேர்ந்திருங்கள் என்கிறாள். என் கணவர் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறார். ஹோட்டல் சாப்பாடு அவருக்கு ஒத்துக்கொள்ளாது என்றாலும் பிடிவாதமாக இருக்கிறார். எனக்கு கணவருடன் சேர்ந்து வாழும் பாக்கியம் உண்டா?

தியாகராஜன் (கணவர்) மூல நட்சத்திரம், தனுசு ராசி. முத்தாத்தாள் (மனைவி) பூச நட்சத்திரம், கடக ராசி. இருவரும் சஷ்டாஷ்டக ராசி. 6 ஷ் 8 எப்படி இந்த ஜாதகங்களை இணைத்தார்கள்? கடைசிவரை சேர்ந்துவாழ முடியாது. சேர்ந்தால் முத்தாத்தாளுக்குதான் சித்திரவதை! பிள்ளைகளிடம் சொல்லி முத்தாத்தாள் முதியோர் இல்லத்தில் சரண் அடைவதே நல்லது. அல்லது யாராவது ஒரு பேரனைப் பார்த்துக்கொண்டு எஞ்சிய காலத்தை ஓட்டலாம்.

● கவிதா சரவணன், கூடுவாஞ்சேரி.

jothidamanswer

என் மகள் தேவிக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்போது திருமணம் நடக்கும்?

தேவிக்கு சுவாதியா? விசாகமா? என்ன நட்சத்திரம்- என்ன ராசி என்றே தெரியவில்லை. ஜாதக ஜெராக்ஸ் அனுப்பிய நீங்கள் ராசி, அம்சக்கட்ட நகல் அனுப்பாமல், திரேக்காணம், சப்தாம்சம் ஜெராக்ஸ் அனுப்பியுள்ளீர்கள். அதைவைத்து எவ்வாறு பதில் கூறுவது? முழு ஜாதக நகல் அனுப்பவும்.

● கே. சிவக்குமார், கடலூர்.

2005-ல் தங்களை நேரில் சந்தித்தபோது, என்னுடைய மகளுக்கு 2012-ல் திருமணம் நடக்கும் என்றீர்கள். அதன்படியே 31-5-2012-ல் மகள் திருமணம் நடந்தது. இப்போது என் மகன் மணிகண்டன் பி.ஈ., (ஊ.ஊ.ஊ.) படித்து முடித்து கடலூரில் ஒரு கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் பணி செய்கிறார். அவருக்கு நல்ல வேலை, திருமணம் எப்போது அமையும்?

மணிகண்டனுக்கு விசாக நட்சத்திரம், துலா ராசி, கடக லக்னம். 2018 ஜூலையில் 26 வயது முடிந்து 27 ஆரம்பம். புதன் தசை தனது புக்தி 2019 மே வரை நடக்கும். அதன்பிறகு கேது புக்தி ஒரு வருடம். அடுத்து சுக்கிர புக்தியில் (2020) நல்ல வேலை அமையும். 7-ல் சனி இருப்பதால் 31 வயது முடிந்தபிறகு திருமணம் கூடும்.

● டி. பழனியப்பன், மண்மங்கலம்.

என் மகள் வயிற்றுப்பேரன் வி.ஸ்ரீக்கு எப்போது திருமணம் நடக்கும்?

ஜாதகருக்கு உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னம். 27 வயது முடிந்து 28 ஆரம்பம். ராகு தசை, குரு புக்தி 14-5-2019 வரை. லக்னத்துக்கு 2-ல் சந்திரன், ராகு. ராசிக்கு 2-ல் சனி. கடகச் செவ்வாயும் மகரச்சனியும் பார்த்துக்கொள்வதால் 30 வயதுக்குமேல்தான் திருமண யோகம். பெரும்பாலும் காதல் திருமணம், கலப்புத் திருமணம் நடக்கும் வாய்ப்பிருப்பதால், காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு சூலினி துர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் நல்ல மனைவி, நல்ல குடும்பம் அமையும். செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும். சுமார் 19 ஹோமங்களுக்குமேல் செய்யப்படும்.

● கோவிந்தம்மாள், சங்ககிரி (பச்சக்காடு).

என் மகள்வழிப் பேரனுக்கு தங்கள் வழிகாட்டுதலின்படி V. SUBHANNESH என்று பெயர் வைத்துள்ளோம். அடுத்து எனது மகன் சரவணனுக்கு M.A., B.Ed- DTED படித்தும் சரியான வேலையும் அமையவில்லை; திருமணமும் அமையவில்லை. எந்த வேலைக்கும் போகமாட்டேன் என்கிறான். இருபது வருடங்களாக முதுகுவலி இருப்பதாகக் கூறுகிறான். டாக்டரிடம் காட்டினால் எவ்வித நோயுமில்லை என்கிறார். வீட்டில் தினமும் பிரச்சினை. ஷேர் மார்க்கெட் பிஸினஸ் செய்வதாகக் கூறுகிறான். இதுவரை ஒரு பைசா வருமானமேயில்லை. இவன் வேலைக்குப் போவானா? திருமணமாகுமா?

சரவணன் 14-11-1978-ல் பிறந்தவர். 2018 நவம்பரில் 40 வயது முடியும். பரணி நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னம். 2033 ஜூலைவரை ராகு தசை. இருபது வயதில் வந்த சந்திர தசை பத்து வருடம். அடுத்துவந்த செவ்வாய் தசை ஏழு வருடம். இப்போது நடக்கும் ராகு தசை ஐந்து வருடம் பயனில்லாத தசைகளாக ஓடிவிட்டன. சுக ஜீவனம். சாப்பாட்டுப் பஞ்சம், துணிமணிப் பஞ்சமில்லை. அவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர் கவலையில்லாத மனிதனாக வாழ்கிறார். கற்பனையிலேயே வாழ்கிறார். உண்மையாக தூங்குகிறவரை எழுப்பலாம். விழித்துக்கொள்வார். தூங்குவது போல் நடிக்கிறவரை எழுப்பமுடியுமா? அவராகவே மனம் விரும்பி- மனம் திருந்தி செயல்பட்டால்தான் முன்னேற்றம் உண்டு. அவருக்காக நீங்கள் கவலைப்பட்டு ஆகப்போவது என்ன?

அவர் பசிக்கு மற்றவர்கள் சாப்பிட்டால் அவர் பசி அடங்குமா? இருந்தாலும் வயதான உங்களின் கடமைகளை நிறைவேற்ற நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று, ஸ்வயம்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதிக்கும் தத்தாத்ரேயருக்கும் ஒருமுறை அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளவும். அத்துடன் ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பெரியவர் சீதாராம் சுவாமியை சந்தித்து முறையிடுங்கள்.

அம்பாள் உபாசகர். சனிக்கிழமை மௌன விரதம். மற்ற நாளில் சந்திக்கலாம். செல்: 98433 11741-ல் முன்பதிவு செய்துவிட்டுப் போகவும். சரவணனையும் அழைத்துச்செல்லவும்.

bala170818
இதையும் படியுங்கள்
Subscribe