● ஆர். விக்னேஷ்வரன், குளித்தலை.

கடந்த மூன்று வருடங்களாகக் கடுமையான மன அழுத்தத்தால் வாடுகிறேன். பொறியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்று, அரசு வேலைக்குத் தேர்வு எழுதி வேலை தேடிவருகிறேன். அமையவில்லை. அரசியலில் பிரபலமாக வேண்டும் என ஆசை. என் ஆசை நிறைவேறுமா?

உங்களுடைய எந்த ஆசையும் நிறைவேறாது. காரணம்... உங்கள் ஜாதகமே அனுப்பவிலையே..? திருப்பதியில் தொலைந்துபோனவரைத் தேடும்பொழுது பெயர், ஊர் எதுவும் கூறாமல், மொட்டையடித்திருப்பார் என அடையாளம் கூறினால் போதுமா? ரிஷப ராசிக்கு 2020 வரை- அட்டமச்சனி முடியும்வரை எதுவும் நடக்காது.

● கே. ஹேமா, சென்னை-47.

Advertisment

என் மகன் கிருஷ்ணகுமார் +2 படிக்கிறான். பொறியியல் படிக்க விரும்புகிறான். சென்னையில் படிக்க வாய்ப்பு கிடைக்குமா?

தனுசு லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். 17 வயதுமுதல் சந்திர தசை நடக்கும் இக்காலம் (2019 டிசம்பர்முதல்) 2023 வரை ஏழரைச்சனியும் நடக்கிறது. இது விருப்பங்களைத் தடுக்கும் காலம். திங்கள்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலபிஷேகமும், சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு, 19 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, நெய்யில் நனைத்து 2023 ஏழரைச்சனி முடியும்வரை தீபமேற்றவும். பெற்றோ ரைப் பிரிந்து வெளியூரில் விடுதியிலிருந்து படிக்கும் வாய்ப்பு வரலாம்.

● எஸ். ஜெய்ஸ்ரீ, அடையாறு.

Advertisment

என் மகன் ஷ்யாம் திருமணத்துக்காகத் தாங்கள் கூறியபடி, காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் மார்ச் 19-ல் காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் உள்பட 19 வகையான ஹோமங்கள் செய்தோம். திருமணம் எப்போது கைகூடும்?

காரைக்குடியில் செய்த ஹோமங்கள் போதுமானது. 33 வயது ஆரம்பம். கேது தசை நடப்பு. 1-9-2020-ல் ராகு- கேதுப் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடந்துவிடும். ஆடி 18 முதல் பெண் வரன் வரத்தொடங்கும்.

jj

● சரசு, வீராச்சிபாளையம்.

எனக்கு 14 வருடங்களாக உடல் உபாதை அவஸ்தையாக உள்ளது. அறுவை சிகிச்சை மூலமாக கருப்பை எடுத்தேன். இப்போது அடிக்கடி காய்ச்சல் வந்துவந்து விலகும். அரைக்கிலோ மீட்டர் தூரம்கூட நடக்கமுடியவில்லை. மாமியார் கட்டிலில் படுத்த படுக்கையாகக் கிடக் கிறார். நான்தான் அவரைக் கவனிக்கிறேன். எனக்கு ஒரு பையன், ஒரு பெண். பையன் பிகாம் படித்துள்ளான். அவனுக்கு அரசு வேலை கிடைக்குமா? கணவர் துரைசாமி கல்குவாரி மேனேஜராக இருக்கிறார். அவர் பூர நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னம். எங்கள் குடும்பத்துக்கு நல்வழி காட்டுங்கள்.

மகன் சேஷன் அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னம். 28 வயது நடப்பு. சந்திர தசை நடக்கிறது. 6-க்குடைய தசை. கேது சாரம். அதனால் தொல்லைகள் ஏற்படுகின்றன. திங்கள் கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பால பிஷேகம் செய்து வழிபடுங்கள். வாய்ப் பிருந்தால், ஒரு திங்கள்கிழமை ருத்ர ஹோமம் வளர்த்து சிவலிங்கத்துக்கு ருத்ராபிஷேகப் பூஜை செய்யலாம். எல்லாருக்கும் ஆயுள் பலமுண்டு. வைத்தியச் செலவுதான் ஏற்படும். பிள்ளைகள் எதிர்காலம் நல்லபடியாகத் திகழும்; கவலை வேண்டாம்.

● மணிமாறன், பொன்னமராவதி.

ஜோதிட உலகில் தனக்கென்று தனிப்பாதையமைத்து எல்லாருக்கும் எல்லாம் புரிந்துகொள்ளும்வகையில் "பாலஜோதிட'த்தில் பலன் எழுதிவரும் ஜோதிட விஞ்ஞானி, ஜோதிட வித்தகர், "அதிர்ஷ்டம்' தந்த ஜோதிடபானு அய்யா அவர்களுக்கு வணக்கம் பல! எனது மூத்த மகன் மதிவாணன் பி.ஈ மெக்கானிக்கல் மூன்றாமாண்டு படிக்கிறான். எழுத்துத் தேர்வு, நேர்முகம் மூலம் இஸ்ரோவில் டெக்னிக்கல் டிரெய்னிங் போகமுடியுமா?

மதிவாணன் ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னம். 21 வயது நடப்பு. 16 வயதுமுதல் சுக்கிர தசை- 20 வருடங்கள். உத்திரம் சூரியன் சாரம். சூரியன் 9-ல் நீசம்; 8-க்குடைய புதன் சம்பந்தம். எனவே, நீங்கள் கோரும் படிப்புக்கு வாய்ப்புக் குறைவு. மகள் சூரிய பாப்பாத்தி- சுவாதி நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னம். தொடர்ந்து படிக்கவைக்கவும். ரிஷப லக்னத்தில் ராகு, சனியும், 7-ல் கேதுவும் இருக்க, 7-க்குடைய செவ்வாய் கடகத்தில் நீசம் என்பதால் 23 வயதுக்குமேல்தான் திருமண யோகம். அதுவரைப் படிக்கலாம், வேலைக்குப் போகலாம். படிப்பைக் கெடுக்கவேண்டாம். நீங்களும் மனைவியும் தொடர்ந்து அரசுப் பணிபுரியலாம்.

மலையரசு, சிங்கம்புணரி.

எனக்குத் திருமணம் நடைபெறுமா? எப்போது நடைபெறும்? இரண்டு வருடங்களாக மனநிம்மதியில்லாமல் தவிக்கிறேன். எப்போது தீர்வு ஏற்படும்? வேலையும் வருமானமும் இல்லை. மரணபயம் வருகிறது. ஆயுள்காலம் எவ்வளவு?

பூராட நட்சத்திரம், தனுசு ராசி. 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனியில் ஜென்மச்சனி. உங்கள் அவலநிலைக்கு இதுவே காரணம்! சனிக்கிழமைதோறும் 45 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி அதனை நெய்யில் நனைத்து காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றி வழிபடுங்கள்- 2023 சனிப்பெயர்ச்சிவரை. ஜென்மச்சனி விலகியதும் உங்களுக்கு மன தைரியம், நம்பிக்கை, வேலை, சம்பாத்தியம் எல்லாம் வந்துவிடும். 12 அமாவாசை, 12 பௌர்ணமிகள் வாத்தியார்கோவிலுக்குச் சென்று அபிஷேகப் பூஜையைப் பார்க் கவும். மனவுறுதி, தைரியம் எல்லாம் வந்துவிடும்.

● என். பெரியசாமி, மகுடஞ்சாவடி.

என் மனைவி இறந்து பத்தாண்டுகளாகின்றன. மகள் இலக்கியா- மகன் பவித்திரன். நான் டெய்லராகத் தொழில் செய்கிறேன். போதிய வருமானம் இல்லை. தொழில் மாற்றம் உண்டா? மகள் திருமணம் சம்பந்தமாக 2017-ல் கேட்டேன். அட்டமச்சனி முடியவேண்டுமென்று "பால ஜோதிட'த்தில் எழுதியிருந்தீர்கள். இப்போது மாப்பிள்ளை வீட்டார், பெண் ஜாதகத்தைக் கேட்கிறார்கள். உங்கள் ஆலோசனை தேவை.

இலக்கியா ரிஷப ராசி. 2020 டிசம்பர் வரை அட்டமச்சனி. 27 வயது நடக்கிறது. கடக லக்னம். 8-ல் சனி இருப்பதால், 2020 டிசம்பர் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு, திருமண முயற்சிகளை செயல்படுத் தலாம். 2021 ஏப்ரலில் (சித்திரை மாதம்) 27 வயது முடியும். அதன்பிறகு, நல்ல மணவாழ்க்கை அமையும். அதற்கு முன்னதாக, நல்ல இடமெனத் தெரிந்தால் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (தொடர்புக்கு: செல்- 99942 74067) காமோஹர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும்செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்துவிட்டுத் திருமணம் செய்யலாம்.

●அரிகிருஷ்ணன், வேலூர்-6.

எனக்குத் திருமணமாகி நான்காண்டுகளாகிவிட்டன. இன்னும் குழந்தை பாக்கியமில்லை. எப்போது குழந்தை பாக்கியம் கிட்டும்?

உங்கள் திருமணத்தேதி 9-3-2015 எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். தேதி எண் 9, கூட்டு எண் 2 என்பதால் குற்றமில்லை, தோஷ மில்லை. 4, 7, 8 என வந்தால்தான் தோஷம். ஜாதகப்படி, தனுசு லக்னம். 5- ஆமிடம் மேஷம் புத்திர ஸ்தானம். அதை செவ்வாய், சனி (துலாத்திலிருந்து) பார்ப்பது தோஷம். அதேசமயம், லக்னாதிபதி குரு லக்னத்தில் ஆட்சிபெற்று 5-ஆமிடத்தைப் பார்ப்பது தோஷநிவர்த்தி. உறுதியாக வாரிசு யோகம் உண்டு. முன்னதாக, தம்பதிகள் இருவரும் கும்பகோணம் அருகில் (குடவாசல் வழி) சேங்காலிபுரம் சென்று தத்தாத் ரேயருக்கு ஒருமுறை அபிஷேகப் பூஜை செய்யவும். (அர்ச்சகர்: மணி அய்யர், செல்: 94438 48951). வியாழக்கிழமை சிறப்பு.