● லதா,மதுரை.
கொரோனா போன்ற வைரஸ் தாக்கு வதற்குக் காரணமென்ன- கிரகநிலையா, வேறு காரணமா? இதற்குத் தீர்வு எப்பொழுது ஏற்படும்?
ஒரு நாட்டின் இயற்கை சீற்றத்துக்கு அடிப்படைக் காரணம் அந்த நாட்டின் அரசர்கள் அல்லது தலைமைப் பீடத்தில் உள்ளவர்கள்தான். அந்தக் காலத்தில் அரசர்கள், மந்திரிகளிடம்,’’மாதம் மும்மாரி பொழிகிறதா’’ என்று சர்வே கேட்பாராம். அதற்கு, மந்திரிகள்,’’ அறவோர்க்கு ஒரு மழை- அந்தணர்க்கு ஒரு மழை- ஆவினங் களுக்கு (பசுக்களுக்கு) ஒரு மழை’’ என்று பதில் சொல்வார்களாம். ஸ்பெஷல் நாடக மேடைகளிலெல்லாம் இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டுவார்கள். இப்பொழுது மும்மாரி- கேப்மாரியாகிவிட்டது. கண்ணகி- கோவலன் கதையில், வஞ்சிப்பத்தன் என்ற ஆசாரி, மன்னரின் மனைவியின் காற்சிலம்பைத் திருடிவிட்டு, கோவலன்மீது பழிபோட்டு தப்பிவிடுவான். குற்றம்செய்யாத கோவலனுக்குப் பாண்டிய மன்னன் மரண தண்டனை விதித்துவிடுவான். (கோவலன் வெட்டுப்பட்ட இடம் மதுரையில் பழங்கா நத்தம் அருகில், டிவிஎஸ் நகருக்குப்போகும் பாதையில் ‘கோவலன் பொட்டல்’ என விளங்குகிறது). கோவலன் மனைவி கண்ணகி, பாண்டியன் அரசவைக்கு வந்து, தன் காலில் அணிந்திருந்த காற்சிலம்பு (கொலுசு)வில் உள்ள பரல்களும் பாண்டியன் மனைவி காற்சிலம்பு பரல்களும் வெவ்வேறு என்று நிரூபிப்பார். உடனே, பாண்டியன் குற்றவுணர்வு உறுத்த,’’யானே கள்வன்- நீதி தவறிய மன்னன்’’ என்று உயிர் நீப்பான். கற்புக்கரசியான அவன் மனைவி அரசியும் உயிர்துறப்பாள். இப்படிப்பட்ட தலைமையில் வாழ்ந்த நாடு இன்று சுயநலக்காரர்களாலும் ஊழல் மன்னர்களாலும் அவதிப்படுகிறது; அல்லல்பட்டுத் திண்டாடுகிறது. இது யார் செய்த குற்றம்? வல்லவர்களையும் நல்லவர் களையும் ஆட்சியில் அமரச்செய்யத் தவறிய மக்கள் செய்த குற்றம். அதனால்தான் மக்கள், கொரோனா என்னும் அசுரத் தாக்குதலுக்கு ஆளாகிப் பலியாகிறார்கள். காஞ்சி மகாப்பெரியவரோடு ஆன்மிகத்தூய்மையும், பெருந்தலைவர் காமராஜரோடு அரசியலில் நேர்மையும் தொலைந்துபோய்விட்டது. இந்த நாட்டை இனி ஆண்டவனால்கூட காப்பாற்றமுடியாது. விபத்துக்குள்ளான ஒரு பேருந்தில், ஒரு கெட்டநேரம் பிடித்த பயணியால் பேருந்தில் பயணம் செய்யும் எல்லாரும் பலியாவதுபோல அல்லது பாதிக்கப்படுவதுபோல, யாரோ செய்த குற்றத்துக்கு சம்பந்தப்படாத எல்லாரும் தண்டனை அனுபவிக்கிறார்கள். இதற்குத் தீர்வு- நாட்டை ஆள்கிறவர்கள் பதவியைத் தியாகம் செய்யவேண்டும். பண்டித ஜவஹர்லால் நேரு ஆட்சிக்காலத்தில், லால்பகதூர் சாஸ்திரி என்ற நேர்மையும் தூய்மையும் நிறைந்த ரயில்வே அமைச்சர் இருந்தார். அவர் இருந்தது டில்லியில். அந்தக் காலத்தில் திருச்சி மாவட்டம், அரியலூரில் ஒரு ரயில் விபத்து நடந்தது. உள்ளூர் ரயில் பணியாளர் (பாயிண்ட்ஸ் மேன்) செய்த தவறுக்கு, சம்பந்தப்படாத ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவியை ராஜினாமா (தார்மீக ராஜி னாமா) செய்துவிட்டு வெளியில் வந்தார். அவருக்குரிய காரோட்டி, அவர்முன் காரைக் கொண்டுவந்து நிறுத்தினார். அவர்,’’நான் இப்பொழுது அமைச்சர் இல்லை. அதனால், அரசு வாகனமும் அவசியமில்லை’’ என்றுகூறி நடந்தே சென்று பேருந்தில் ஏறி வீடுபோய்ச் சேர்ந்தார். இன்றுள்ள பதவியாளர்களுக்கு அந்தத் தியாக மனம் அமையுமா? ‘பெவிகால்’ ஒட்டிய பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டல்லவா இருப்பார்கள்?
● ஆதித்சிவா, கோவை.
காலையில் எழுந்தவுடன் கண்ணாடியில் என் முகத்தைப் பார்ப்பதா, சுவாமிப் படங்களைப் பார்ப்பதா- எது நல்லது?
இரண்டையும் எழுந்துபோய்ப் பார்ப் பதைவிட, படுக்கையில் அமர்ந்தபடியே இரண்டு உள்ளங்கைகளையும் மூன்றுமுறை தேய்த்துவிட்டு,’’"கராக்ரே வஸதே லட்சுமி கரமத்யே ஸரஸ்வதி கரமூலே கௌரீ ஸ்மரத் பிரபாதே கர தர்சனம்'’’ எனக்கூறினால் போதும். நமது கைகளில் லட்சுமியும் சரசுவதி யும் கௌரீயும் வசிப்பதாகவும், அவர்களின் அருள் கிடைப்பதாகவும் அர்த்தம்.
● கோவை குமார்.
இரவில் கெட்ட கனவுகள் வராமல் நிம்மதியான நித்திரைக்கு மந்திரம் உண்டா?
அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்
ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்
நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்
துர் ஸ்வப்பன சாந்தயே
எனும் இந்த மந்திரத்தை விஷ்ணுவை வழிபடுகிறவர்கள் ஜபிக்கலாம். சிவ வழிபாடு செய்கிறவர்கள்-
துர்ஸ்வப்பனம் துர்கதிர் தௌர்மனஸ்ய
துர்பிஷை துஸ்ஸஹ உத்பாத
தாப விஷ்பீதி கிரகார்த்தீம்
வியாதிம் ச நாஸம் ஜகதாம் அதீஸ
என ஜபிக்கலாம்.
● ஆரணஸ்ரீ, மதுரை.
படிப்பில்- பரிட்சையில் நிறைய மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சிபெற மந்திரம் ஏதும் உண்டா?
உண்டு. ஹயக்ரீவர் மந்திரம் சொல்ல வேண்டும். படித்த படிப்பு மறக்காமல் பரிட்சையில் எழுதி வெற்றிபெறலாம். சரசுவதியின் குருநாதர் ஹயக்ரீவர். ஹயம் என்றால் குதிரை. குதிரைமுகப் பெருமாள்.
கடலூர் அருகில் திருவந்திபுரம் (திருவஹிந்தரபுரம்) சிறு குன்றின்மேல் ஹயக்ரீவர் மூலஸ்தானம் உள்ளது. குன்றின்கீழே சாரநாதப் பெருமாள் சந்நிதி உள்ளது.
“ஞானாந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ
வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே!’’- இது வடமொழி (சமஸ்கிருதம்).
குமரகுருபர சுவாமிகள் தமிழில் பாடிய பாடல்-
“"வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப்
பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்.
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தாய்'
என்பதாகும். இவற்றைச் சொல்லலாம். சரசுவதி கடாட்சம் உண்டாகும்.
● ஆர். லோகநாதன், விக்கிரவாண்டி.
எனது இளைய மகளுக்கு ஐந்தாண்டுகளாக வரன் பார்க்கிறோம். அமையவில்லை. எப்பொழுது திருமணம் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
மகள் அலமேலு அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னம். 7-ல் செவ்வாயும், 7-க்குடைய குரு 12-ல் சிம்மத்தில் மறைவதும் தோஷம். இதனால் திருமணம் தாமதமாகிறது. இத்துடன் 7-ஆமிடத்தையும், 7-ல் உள்ள செவ்வாயையும் 5-ல் உள்ள மகரச் சனி 3-ஆம் பார்வை பார்க்கிறார். குரு பார்வை இல்லை. 29 வயது முடிந்து 30 வயதில் திருமணயோகம் வருகிறது. 2020, மே மாதம் 28 முடிந்து 29 வயது ஆரம்பம். இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும். வயது கூடுகிறதே என வருத்தம் இருந்தால், காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) காமோகர்ஷண ஹோமம், பார்வதிகலா சுயம்வர ஹோமம் உள்பட 16 வகையான ஹோமங்கள் செய்து, அலமேலுக்குக் கலச அபிஷேகம் செய்ய வேண்டும். நடப்பு வயது 29-ல் திருமணம் நடந்துவிடும்.
● ஆர். விக்னேஷ்வரன், குளித்தலை.
கடந்த மூன்று வருடங்களாகக் கடுமையான மன அழுத்தத்தால் வாடுகிறேன். பொறியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்று, அரசு வேலைக்குத் தேர்வு எழுதி வேலை தேடிவருகிறேன். அமையவில்லை. அரசியலில் பிரபலமாக வேண்டும் என ஆசை. என் ஆசை நிறைவேறுமா?
உங்களுடைய எந்த ஆசையும் நிறைவேறாது. காரணம்... உங்கள் ஜாதகமே அனுப்பவிலையே..? திருப்பதியில் தொலைந்துபோனவரைத் தேடும்பொழுது பெயர், ஊர் எதுவும் கூறாமல், மொட்டையடித்திருப்பார் என அடையாளம் கூறினால் போதுமா? ரிஷப ராசிக்கு 2020 வரை- அட்டமச்சனி முடியும்வரை எதுவும் நடக்காது.
● கே. ஹேமா, சென்னை-47.
என் மகன் கிருஷ்ணகுமார் +2 படிக்கிறான். பொறியியல் படிக்க விரும்புகிறான். சென்னையில் படிக்க வாய்ப்பு கிடைக்குமா?
தனுசு லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். 17 வயதுமுதல் சந்திர தசை நடக்கும் இக்காலம் (2019 டிசம்பர்முதல்) 2023 வரை ஏழரைச்சனியும் நடக்கிறது. இது விருப்பங்களைத் தடுக்கும் காலம். திங்கள்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலபிஷேகமும், சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு, 19 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, நெய்யில் நனைத்து 2023 ஏழரைச்சனி முடியும்வரை தீபமேற்றவும். பெற்றோரைப் பிரிந்து வெளியூரில் விடுதியிலிருந்து படிக்கும் வாய்ப்பு வரலாம்.
● எஸ். ஜெய்ஸ்ரீ, அடையாறு.
என் மகன் ஷ்யாம் திருமணத்துக்காகத் தாங்கள் கூறியபடி, காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் மார்ச் 19-ல் காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் உள்பட 19 வகையான ஹோமங்கள் செய்தோம். திருமணம் எப்போது கைகூடும்?
காரைக்குடியில் செய்த ஹோமங்கள் போதுமானது. 33 வயது ஆரம்பம். கேது தசை நடப்பு. 1-9-2020-ல் ராகு- கேதுப் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடந்துவிடும். ஆடி 18 முதல் பெண் வரன் வரத்தொடங்கும்.