ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-87

● மு. சந்திரன், தேனி.

என் மகள் சண்முகப்பிரியா எம்.எஸ்.சி., பி.எட் முடித்துள்ளாள் அரசுப் பணி எப்போது கிடைக்கும்?

கடக லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம், சனி தசையில் சூரிய புக்தியில் கிடைக்கவாய்ப்புண்டு. தவறினால் சந்திர புக்தி முடிவிற்குள் கிடைக்கும்.

● ஆர். சூரியசேகர், திட்டக்குடி.

2019-ல் டிப்ளமோ ஈ.ஈ.ஈ. முடித்தேன். தற்போது எலக்ட்ரீஷியன் வேலை செய்கிறேன். வருமானம் பற்றாக்குறையாக உள்ளது. நல்ல வேலை கிடைக்குமா?

செவ்வாய் தசை நடக்கிறது. 2020 குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல வேலை அமையும்.

● எஸ். கண்ணன், ஆற்காடு.

என் மகன் +2 படித்துள்ளான். அடுத்து எந்தத் துறையில் படிக்கலாம்?

விருச்சிக லக்னம். 7-ல் உள்ள செவ்வாய் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எலக்ட்ரிக்கல் அல்லது சிவில் இஞ்ஜினியரிங் படிக்கலாம்.

● கே. அமுதா, காஞ்சிபுரம்.

எனக்கு 65 வயது. சர்க்கரை வியாதியால் கஷ்டப்படுகிறேன். ஆயுட்காலம் எவ்வளவு?

சர்க்கரை வியாதியை உணவுக்கட்டுப்பாட்டால் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதிலும் வேதாத்திரி மகரிஷி யோகத்தாலும் குணப்படுத்த முடியும். கடக லக்னத்தில் சனி இருப்பதால், ஆயுள் குற்றம் வராது. 80 வயது கூறலாம். சந்திரனும் சனியும் பரிவர்த்தனை. மகர ராசி. அட்டமாதிபதி சனி ஜென்மத்தில். குரு பார்வையில்லை. பொருளாதாரப் போராட்டம் வாழ்நாள் முழுவதும் இருக்கத்தான் செய்யும். தியானத்தால் மனநிறைவைப் பெறலாம்.

● பி. கணேசன், கூடலூர்.

என் பெண் நந்தினி மீரா ஜாதகத்தில் தோஷம் அதிகமாக இருப்பதால், காலம் கடந்து திருமணம் நடக்குமென்று இங்குள்ள ஜோதிடர் கூறிவிட்டார். எங

● மு. சந்திரன், தேனி.

என் மகள் சண்முகப்பிரியா எம்.எஸ்.சி., பி.எட் முடித்துள்ளாள் அரசுப் பணி எப்போது கிடைக்கும்?

கடக லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம், சனி தசையில் சூரிய புக்தியில் கிடைக்கவாய்ப்புண்டு. தவறினால் சந்திர புக்தி முடிவிற்குள் கிடைக்கும்.

● ஆர். சூரியசேகர், திட்டக்குடி.

2019-ல் டிப்ளமோ ஈ.ஈ.ஈ. முடித்தேன். தற்போது எலக்ட்ரீஷியன் வேலை செய்கிறேன். வருமானம் பற்றாக்குறையாக உள்ளது. நல்ல வேலை கிடைக்குமா?

செவ்வாய் தசை நடக்கிறது. 2020 குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல வேலை அமையும்.

● எஸ். கண்ணன், ஆற்காடு.

என் மகன் +2 படித்துள்ளான். அடுத்து எந்தத் துறையில் படிக்கலாம்?

விருச்சிக லக்னம். 7-ல் உள்ள செவ்வாய் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எலக்ட்ரிக்கல் அல்லது சிவில் இஞ்ஜினியரிங் படிக்கலாம்.

● கே. அமுதா, காஞ்சிபுரம்.

எனக்கு 65 வயது. சர்க்கரை வியாதியால் கஷ்டப்படுகிறேன். ஆயுட்காலம் எவ்வளவு?

சர்க்கரை வியாதியை உணவுக்கட்டுப்பாட்டால் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதிலும் வேதாத்திரி மகரிஷி யோகத்தாலும் குணப்படுத்த முடியும். கடக லக்னத்தில் சனி இருப்பதால், ஆயுள் குற்றம் வராது. 80 வயது கூறலாம். சந்திரனும் சனியும் பரிவர்த்தனை. மகர ராசி. அட்டமாதிபதி சனி ஜென்மத்தில். குரு பார்வையில்லை. பொருளாதாரப் போராட்டம் வாழ்நாள் முழுவதும் இருக்கத்தான் செய்யும். தியானத்தால் மனநிறைவைப் பெறலாம்.

● பி. கணேசன், கூடலூர்.

என் பெண் நந்தினி மீரா ஜாதகத்தில் தோஷம் அதிகமாக இருப்பதால், காலம் கடந்து திருமணம் நடக்குமென்று இங்குள்ள ஜோதிடர் கூறிவிட்டார். எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள்தான் நல்வழிகாட்ட வேண்டும்.

நந்தினி மீராவுக்கு 21 வயது முடிந்து 22 ஆரம்பம். ரிஷப லக்னம். 2-ல் கேது, 7-ல் சந்திரன் நீசம். 8-ல் ராகு. 9-ல் சனியை 6-ல் உள்ள செவ்வாய் பார்க்க, சனியும் செவ்வாயைப் பார்ப்பது கடுமையான தோஷம்தான்.

ஜோதிடர் சொன்னது உண்மைதான். 25 வயது முடிந்தபிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். 25 வயதில் நாகதோஷ நிவர்த்திக்கும் மாங்கல்ய தோஷ நிவர்த்திக்கும் ஹோமம் செய்து அபிஷேகம் செய்யவேண்டும். ஈரஉடைகளை தானம் செய்யவேண்டும். காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்யவேண்டும்.

● எஸ். கதிரவன், திருவள்ளூர்.

நான் இருபது வருடங்களாக மளிகைக்கடை நடத்துகிறேன். தொழிலில் பெரிய முன்னேற்றமில்லை. மாற்றுத் தொழிலாக சித்த வைத்திய மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன். அது வெற்றியைத் தருமா?

சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். ராகு 2-ல் இருப்பதால் சேமிப்பு இல்லை. ராகுவுக்கு சித்த வைத்தியம், மருந்து வியாபாரம் பொருத்தமானது தான்; செய்யலாம்.

● டி. மங்களம், வேலூர்.

என் ஆயுள் எவ்வளவு? சுமங்கலியாகப் போவேனா? எனக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள்மூலமாக வீடு வாங்குவேனா?

கடக லக்னத்தில் குரு உச்சம். தீர்க்க சுமங்கலி! 45 வயதுதான் ஆகிறது. அதற்குள் ஆயுளைப் பற்றி சந்தேகம் ஏன்? பிள்ளைகள் முயற்சியால் சொந்த வீட்டு யோகம் அமையும்!

● கே. மன்னன், உத்திரமேரூர்.

நான் ஜாதகம் கற்று இலவசமாக சேவை செய்ய லாமா? மனைவி பேரில் ஏதாவது தொழில் செய்ய லாமா? என்ன தொழில் செய்யலாம்?

ரிஷப லக்னம். 2-ல் ராகு இருப்பதால் ஜோதிடம் கற்கலாம். துலா ராசி. ஜென் மச்சனி ராகுவோடு கூடியிருப் பதால் தற்சமயம் சொந்தத் தொழில் செய்வதால் பயனில்லை. முதலீடு செய்யாமல் எந்தத் தொழிலும் செய்யலாம்.

ss

இ. கேசவன், நாகப்பட்டினம்.

● எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? 14 வருடமாக சொந்தத் தொழில் செய்கிறேன்; விருத்தியில்லை. எங்களுடைய வீட்டின் பக்கத்தில் அம்மன் இருக்கிறது. அந்த இடம் எங்களுக்குக் கிடைக்குமா?

கன்னியா லக்னம், லக்னத்தில் ராகு. கும்ப ராசி, அதில் செவ்வாய். தோஷ ஜாதகம் என்பதால் திருமணம் தடை. 36 வயதாகிறது. இது முடியவேண்டும். 37 வயதில் திருமண நடக்கும். மனைவி வந்தபிறகு தொழில் சிறக்கும். அம்மன் இருக்கும் இடத்தை வாங்க நினைக்காதீர்கள்.

● வி. சுரேஷ், நரியூர்.

எனது சகோதரி ஜாதகத்தில் 2-ல் செவ்வாய், புதன், சுக்கிரன், கேது இருப்பதால் இரு திருமணம் என்கிறார்கள். உண்மையா?

சரண்யா ஜாதகத்தில் 2-ஆமிடம், 8-ஆமிடத்தில் குறிப்பிட்ட கிரகங்கள் இருப்பதும், 8-ஆமிடத்தை சனி பார்ப்பதும் தோஷம்தான். குரு 12-ல் மறைவு. இப்படிப் பட்ட ஜாதகிக்கு 25 வயதுக்குமேல் திருமணம் நடந்தால் தோஷமில்லை. முன்னதாக நடந்தால் தோஷம்; பாதிக்கும்.

● எல். சீனிவாசகம், கோவில்பட்டி.

நான் கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாமல் இருந்தது. இனி குடி போகலாமா? அந்த வீட்டில் இருந்தபோது என் மனைவி சாரதாமணிக்கு உடல்நலத் தொந்தரவு ஏற்பட்டது. கார்த்திகேயன் பைக், கார் ஓட்டலாமா? அவர் மனைவி விஜி பைக், கார் ஓட்டலாமா?

சீனிவாசகம் கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னம். லக்னாதிபதி குரு 9-ல் இருந்து லக்னத்தைப் பார்க்கிறார். மனைவி சாரதாமணிக்கு கடக லக்னம். அதில் குரு (9-க்குடையவர்) உச்சம். குரு பலம் இருப்பதால் எந்த செய்வினையும் உங்களை அணுகாது. யார் எந்த செய்வினை செய்தாலும் அது உங்களை பாதிக்காது. அடுத்து வரும் குரு புக்தியில் சொந்த வீட்டுக்குப் போகலாம். சொந்த வீட்டில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் செய்துவிட்டு குடி யேறலாம். கார்த்திகேயன் அவிட்ட நட்சத்திரம், மகர ராசி. விஜி சதய நட்சத்திரம், கும்ப ராசி. பைக், கார் ஓட்டலாம். எந்தக் கெடுதிக்கும் இடமில்லை.

● கே. சாந்தி, செய்யூர்.

என் மகனின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். அதற்கு என்ன பரிகாரம்? வருகிற கேது தசை எப்படி இருக்கும்? என் தம்பியின் ஜாதகப்படி திருமண யோகம் உண்டா இல்லையா? ரோகிணி நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் யாருக்கு தோஷம்?

நரேஷ்குமார் ஜாதகப்படி மேஷ லக்னம்; அதில் ராகு. 7-ல் கேது, சனி. 10-ல் குரு நீசம். எனவே 30 வயது முடிய வேண்டும். அதன்பிறகு திருமணம் செய்யவேண்டும். களஸ்திர தோஷம் நிவர்த்தியாகவும், நல்ல மனைவி அமையவும், திருப்தியான மணவாழ்க்கை அமையவும், நாக தோஷ நிவர்த்தி பூஜையும் கந்தர்வராஜ ஹோமமும் செய்து, அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். இந்த ஹோமம் 29 வயது முடிந்து 30 ஆரம்பத்தில் செய்யலாம். ரோகிணி நட்சத்திரத்தில் பையன் பிறந்தால் தாய்மாமனை பாதிக்கும். பெண் பிறந்தால் எந்த பாதிப்பும் யாருக்கும் இருக்காது. பெண் குழந்தை பிறந்தாலும், ஒரு இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் நிரப்பி, அந்த எண்ணெயில் பிறந்த குழந்தையின் முகத்தைக் காட்டி அந்த நிழலை (எண்ணெயால் தெரியும் உருவத்தை) தாய்மாமன் பார்த்த பிறகுதான் அந்தக் குழந்தையைத் தூக்க வேண்டும். நேராகப் பார்க்க வேண்டும்; குழந்தைக்கு ஒரு வயது முடியும்போது- வார்ஷீக ஜென்ம நட்சத்திரத்தன்று ஆயுஷ் ஹோமம் செய்யவேண்டும்.

● என். பெருமாள், முத்தியால்பேட்டை.

எனக்கு 48 வயது. பயன்படாத பூர்வீக சொத்து- கண்டுகொள்ளாத சகோதர சகோதரிகள்- பிடிக்காத வேலையில் 30 வருடம் அனுபவம்- சேமிக்க முடியாத சம்பளம். 30 வருட அனுபவத் தொழிலை சுயமாகத் தொடங்க முதலீடு இல்லை; கடன் வாங்க பயம். ஜோதிட நம்பிக்கையில்லாத நான் கடந்த ஆறு மாதமாக ஜோதிடம் படித்து வருகிறேன். திண்டுக்கல்லில் நடந்த பி.எஸ்.பி. முப்பெரும் விழாவில் தங்கள் பேச்சைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. அப்போது முதல் "பாலஜோதிடம்' படிக்கிறேன். என் மகள் +2 படிக்கிறாள். அவள் மேற்படிப்பு, என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

கடக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். 9-க்குடைய குரு 10-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம். கடைசிவரை வறுமை, தரித்திரத்துக்கு இடமில்லை. ஆனால் குரு பார்வை ராசி, லக்னத்துக்கு இல்லை என்பதால், போராட்டமான வாழ்க்கை. குரு தசை, சந்திர புக்திமுதல் முன்னேற்றம், சுயதொழில் யோகம் எதிர்பார்க்கலாம். மகள் கனிமொழிக்கு கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம், கன்னியா லக்னம். படிப்பு யோகம் நன்றாகவே உள்ளது. தொழிற்கல்வி (டெக்னிக்கல்) படிக்கலாம். மேற்படிப்புக்கு வங்கிக்கடன் உதவி கிடைக்கும். திருமணம் 25 வயதுக்குமேல் நடக்கும். செவ்வாய், சனி, கேது சேர்க்கை என்பதால் காதல் திருமணம்- கலப்புத் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும்.

bala260620
இதையும் படியுங்கள்
Subscribe