ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-86

● சி.ஆர். கீர்த்தனா, திருப்பூர்.

2019-ல் ஹோமியோபதி மருத்துவம் முடித்து விட்டேன். மேலும் எம்.டி. படிக்க 2019 ஜூலையில் நீட் தேர்வு எழுதினேன். 78 சதவிகிதம் பெற்று தேர்ச்சிபெற்றதால் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் கட்டணம் அதிகம் என்பதால் சேரவில்லை. 2020-ல் மே- ஜூன் மாதம் மறுபடியும் நீட் எழுதலாமா? அரசுக் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்குமா? கேரளா, கர்நாடகா, ஆந்திரக் கல்லூரிகளில் கிடைக்குமா? நீட்-ல் இடமில்லையென்றால் வேலைக்குப் போகலாமா? அல்லது சொந்த கிளினிக் துவங்க லாமா? மகர ராசிக்கு ஏழரைச்சனி நடப்பதால் திருமணம் எப்போது செய்யலாம்?

கீர்த்தனாவுக்கு மிதுன லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். 17-3-2020 வரை ராகு தசை. பிறகு குரு தசை ஆரம்பம். குரு தசை, தனது புக்தி இரண்டு வருடம், ஒரு மாதம், பதினெட்டு நாள். இது எந்த நன்மையும் செய்யாது. இதில் நீட் வாய்ப்பும் குறைவு

● சி.ஆர். கீர்த்தனா, திருப்பூர்.

2019-ல் ஹோமியோபதி மருத்துவம் முடித்து விட்டேன். மேலும் எம்.டி. படிக்க 2019 ஜூலையில் நீட் தேர்வு எழுதினேன். 78 சதவிகிதம் பெற்று தேர்ச்சிபெற்றதால் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் கட்டணம் அதிகம் என்பதால் சேரவில்லை. 2020-ல் மே- ஜூன் மாதம் மறுபடியும் நீட் எழுதலாமா? அரசுக் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்குமா? கேரளா, கர்நாடகா, ஆந்திரக் கல்லூரிகளில் கிடைக்குமா? நீட்-ல் இடமில்லையென்றால் வேலைக்குப் போகலாமா? அல்லது சொந்த கிளினிக் துவங்க லாமா? மகர ராசிக்கு ஏழரைச்சனி நடப்பதால் திருமணம் எப்போது செய்யலாம்?

கீர்த்தனாவுக்கு மிதுன லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். 17-3-2020 வரை ராகு தசை. பிறகு குரு தசை ஆரம்பம். குரு தசை, தனது புக்தி இரண்டு வருடம், ஒரு மாதம், பதினெட்டு நாள். இது எந்த நன்மையும் செய்யாது. இதில் நீட் வாய்ப்பும் குறைவு. சொந்த கிளினிக் தொடங்குவதும் நல்லதல்ல. கிடைத்த சம்பளத்தில் வேலைக்குப் போகலாம். அல்லது வெளிமாநிலங்களில் போய் படிக்க வாய்ப்பு வந்தால் போகலாம். அதற்காக நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயருக்கும், குருநாதர் ஜீவசமாதிக்கும் அபிஷேக பூஜை செய்யவேண்டும். அர்ச்சகர் ஸ்ரீராம், செல்: 93454 38950-ல் தொடர்பு கொள்ளவும்.

● எஸ். சரவணன், அய்யப்பன்தாங்கல்.

எனது ஜாதகத்தில் இரண்டு சுபகிரகம் ஆட்சியாக இருந்தும் முன்னேற்றமில்லை. ஏன்?

பூர்வபுண்ணிய ஸ்தானம் 9-ஆமிடம், 5-ஆமிடம். 5-ல் கேது. 9-க்கு சூரியன், சனி பார்வை. சூரியன் 6-க்குடையவர். சனி 12-க்குடையவர். ஆகவே, பூர்வ புண்ணியக் கொடுப்பினை இல்லை. எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கவேண்டும் என்பதுதான் பூர்வபுண்ணியப் பலன்- பலம்! ஊமை கண்ட கனவுபோல ஆசைகளை மனதில் போட்டு அடக்கிவிடவும்.

● பி. சுந்தரம், கோவனூர்.

என் அத்தை மகன் சண்முகத் திற்கு எப்போது திருமணம் நடைபெறும்?

சண்முகம் கடக ராசி. அதில் ராகு. மகர லக்னம் அதில் கேது. களஸ்திர காரகன் சுக்கிரன் 8-ல்- சிம்மத்தில் மறைவு. ரத்தபந்த சொந் தத்தில் திருமணம் செய்யும் பாக்கியமில்லை. 2020 அக்டோபரில் 40 வயது முடியும். அதன்பிறகுதான் திருமண யோகம். முன்னதாக நாகதோஷ நிவர்த்திக்கு சூலினிதுர்க்கா ஹோமமும், காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து, அவருக்கு கலச அபிஷேகம் செய்தால், உங்கள் முயற்சி யால் நல்ல பெண் அமையும். திருமண வாழ்வும் சிறப்பாக அமையும்.

● ஜெகதீசன், பொள்ளாச்சி.

8-11-2019 "பாலஜோதிடம்' இதழில் P அல்லது T என்று ஆரம்பிக்கும் எழுத்துகள் (பெயர்) சோதனையான வாழ்க்கையைத் தருமென்றுஎழுதி உள்ளீர்கள். எனது பேரன் 10-2-2019-ல் பிறந் துள்ளான். P.T. SURIYAA என்று வைத்துள்ளேன். சரியா?

பெயர்

S U R I Y A A

3 6 2 1 1 1 1 =15

நல்ல எண். இனிசியல் P.T. யோகமில்லை. P என்ற எழுத்தை (ஊர் பொள்ளாச்சி) எடுத்துவிட்டு, தந்தை பெயர் T என்று (தங்கராஜ்) மட்டும் வைத்துக்கொள்ளவும். இன்ஷியலை கடைசியாப் போடவும். SURIYAA T. (19 வரும்). ராசியானது.

dd

● ஆர். பெருமாள், பாடியேந்தல்.

எனக்கு 61 வயது. குரு தசை, சுக்கிர புக்தி. 6-ஆவது தசை. குரு தசை- மாரக தசை என்று படித்துள்ளேன். என் ஆயுள் எவ்வளவு? நூறாண்டுகள் பழைய பூர்வீக வீட்டில், பங்காளிப் பிரச்சினைகளுடன் வாழ்கிறேன். புதிய வீடு கட்டும் யோகம் உண்டா? பழைய வீட்டை சீர்திருத்தம் செய்யமுடியுமா?

நூறாண்டுகள் பழமையான வீட்டில் குடியிருப்பதால் எந்த முன்னேற்றமும், நன்மையும், சுபகாரியங்களும் நடக்காது. அதை சீர்திருத்தவும் வாய்ப்பு சிக்கல்தான்! வேறு புது இடம் வாங்கிக் கட்டி குடி போகலாம். அல்லது வீடாகவே வாங்கலாம். உங்கள் வசதியைப் பொருத்தது. ஆயுளைப் பற்றிக் கேட்கவேண்டாம். கவலையும் அடையவேண்டாம். ஒரு குழந்தை பிறக்கும் போதே அதன் தலையில் அதனுடைய ஆயுள், படிப்பு, செல்வ நிலையை பிரம்மன் எழுதிவிடுகிறான். அதுதான் பிரம்ம லிபி! ஆயுள் பயம் இருந்தால் திருப்பட்டூர் சென்று பிரம்மனுக்கு மஞ்சள் காப்பிட்டு பூஜைசெய்யலாம்.

ராஜகோபால், திருச்சி.

எனக்கு 40 வயது. மூன்று பிள்ளைகள். எந்த வயதில் சொந்த வீடு கட்டலாம்? எந்த ஊரில் கட்டலாம்?

முதல் மகன் ஜெனார்த்தனன் உத்திராட நட்சத்திரம், மகர ராசி. ஏழரைச்சனி- விரயச்சனி. இரண்டாவது மகன் அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி. 3-ஆவது மகள்- கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி. உங்களுக்கு கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். எல்லாருடைய கிரக அமைப்பின்படி, பிறந்த ஊரைவிட்டு, வெளியூரில் வசதிக் கேற்றபடி சொந்த வீடு கட்டலாம். முன்னதாக பொன்னமராவதி அருகில் செவலூரில் பூமிநாதசுவாமிக்கும், திருச்சி மார்க்கெட் அருகிலுள்ள பூமிநாதர் கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை, பூஜை செய்து விட்டு வேலையைத் தொடங்கவும். இடையூறின்றி, தடையின்றி நிறைவேறும்.

bala270320
இதையும் படியுங்கள்
Subscribe