● பாலாஜி, பெரம்பலூர்.

எனக்கு சுயதொழில் யோகம் உண்டா? என்ன தொழில் செய்யலாம்? அடுத்துவரும் சனிப்பெயர்ச்சி (2020 டிசம் பரில்) சாதகமா? பாதகமா? வீடு கட்டும் யோகமுண்டா?

பாலாஜி பூரட்டாதி 4-ஆம் பாதம், மீன ராசி, சிம்ம லக்னம். 21 வயதுதான் நடக்கிறது. நீங்கள் வீடு கட்டப்போகிறீர்களா? உங்கள் பெற்றோர் (பெரியவர்கள்) வீடு கட்டப்போகிறார்களா? 34 வயதுவரை சனி தசை. நீச கிரக தசை. சுயதொழில் செய்தால் கடனாளியாவீர்கள். வேலைக்குப்போவது நல்லது.

பி. சுருதிகா, நமையூர்.

Advertisment

பி.காம்., இரண்டாம் வருடம் படிக்கிறேன். எனக்கு அரசு வேலை அமையுமா? வீட்டில் உள்ளவர்கள் திருமணம் பேசுகிறார்கள். எனக்கு உடன்பாடில்லை. என்ன செய்யலாம்?

சுருதிகாவுக்கு கன்னியா லக்னம், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனி. நடப்பு வயது 19 தான். லக்னத்துக்கு 4-ல் செவ்வாய், கேது இருப் பதாலும், ராசிக்கு 7-ல் சனி இருப்பதாலும் 21 வயதுக்குமேல் 23 வயதுக்குள்தான் திருமணம் கூடும். பெரியவர்கள் முயற்சி செய்தாலும் நடக்காது; தடைப்படும். சூரியன் 12-ல் மறைவென்பதால் அரசு வேலை கிடைக்காது.

● அ. வடிவுக்கரசி, தூத்துக்குடி.

Advertisment

எனக்கு தற்போது 61 வயது நடக்கிறது. இருந்த வீடு, பணம், பொருள் எல்லா வற்றையும் என் மகள் எடுத்துக்கொண்டு, எனக்கு சோறும், வருடத்துக்கு இரண்டு புடவையும் பிச்சைபோட்ட மாதிரி கொடுக்கிறாள். ஏதாவது பணம் கேட்டால், "இதற்குமேல் உனக்கு என்ன தேவை இருக் கிறது?' என்கிறாள். இங்கு இருப்பதைவிட வேறு எங்காவது போக வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கே போவது என்றுதான் தெரியவில்லை. என் எதிர்காலத்துக்கு ஒருவழி சொல்லுங்கள்?

மகர லக்னம். லக்னத்தில் குரு நீசம். லக்னாதிபதிகள் சனி 8-ல் மறைவு. செவ்வாயும் 8-ல் மறைவு. சனி, செவ்வாய் சேர்க்கை. கன்னி ராசியில் கேது. லக்னம் அல்லது ராசி இரண்டுமே பலமில்லை என்பதால், உங்கள் அந்திமக் காலத்தில் சொந்த- பந்தம், உற்றார்- உறவினர் எல்லா வற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு எங்கேயாவது ஒரு ஆசிரமம் அல்லது முதியோர் இல்லத்தில்தான் அடைக்கலமாக வேண்டும்.

● கே. ஆனந்த், மன்னார்குடி.

perumal

ஒருவர் ஜாகதத்திலிருந்து மற்ற உறவுகளின் பலாபலன்களைப் பற்றிய விவரம் அறியமுடியுமா? மனைவியின் ஜாதகத்திலிருந்து கணவரின் வேலை விவரம், எதிர்காலம் அறியமுடியுமா?

ஒரு மனிதனின் ஜாதகத்தில் படிப்பு, வேலை, சம்பாத்தியம், ஆயுள், ஆரோக்கியம், திருமணம், வாரிசு போன்ற எல்லா பலன் களும் 12 பாவகங்களில் வகுத்து வைக்கப் பட்டுள்ளன. அந்தந்த தசாபுக்திக் காலத்திலும் கோட்சாரத்தில் அதன் நல்ல பலன்- கெட்ட பலன் அறியலாம். நீங்களே அதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டு மானால், ஒரு தெளிவான ஜோதிடரைச் சந்திக்க வேண்டும். அல்லது தெளிவான குருநாதரிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

● எல். முத்து, திண்டுக்கல்.

எனக்கு 41 வயது நடக்கிறது. முதல் மனைவி இறந்து ஐந்து வருடங்கள் கழித்து மறுமணம் செய்து கொண் டேன். இரண்டாவது மனைவிக்கு குழந்தை அல்லை. முதல் மனைவிக்குப் பிறந்த ஒரே மகனை நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்க நினைக் கிறேன். அவனோ ஒத்துழைக்கவில்லை. அவனுக்கும் சித்திக்கும் ஒத்துப் போக வில்லை. சண்டையில் யார் பக்கம் பேசுவதென்று புரியாமல் எங்கேயாவது ஓடிப்போய்விடலாமா என்று தோன்று கிறது.

நீங்கள் ஓடிப்போய்விட்டால் உங்கள் மகனை யார் படிக்க வைப்பது? ஆளாக்குவது? இரண்டாவது மனைவியின் கதி என்னவாகும்? நீங்கள் ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி. இரண்டாவது மனைவி விசாக நட்சத்திரம், துலா ராசி. இருவருக்கும் ராசி 6 ஷ் 8. (சஷ்டாஷ்டக ராசி). அதனால் அடிக்கடி உங்களுக்குள் கருத்து வேறுபாடு உருவானாலும் பிரிவு ஏற்படாது. மேலும் நீங்கள் மீன லக்னம்; மனைவி தனுசு லக்னம். இருவருக்கும் லக்னாபதி ஒருவர். (குரு). அதேபோல ராசியாதிபதியும் ஒருவர். (சுக்கிரன்). உங்கள் மகன் மேஷ ராசி, கும்ப லக்னம், கார்த்திகை நட்சத்திரம். 15 வயதுவரை சந்திர தசை. அடுத்துவரும் செவ்வாய் தசை 8-ல் இருப்பதால், அவனைப் பிரித்து ஹாஸ்டலில் சேர்த்தால்தான் உங்கள் கனவு நிறைவேறும். உங்களுக்கு மீன லக்னம். குரு தசை 8-ல் மறைவு. சுக்கிர புக்திவரை வாழ்க்கைப் போராட்டம், கடன் பிரச்சினை இருக்கும். சித்தர்களை வழிபடவும்.

● ஆர். மீனா, விழுப்புரம்.

எங்களின் வாழ்க்கை எதிர்காலம் எப்படியிருக்கும்?

குணசேகரன் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மேஷ லக்னம். மீனாவும் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னம். இருவருக்கும் ஒரே நட்சத்திரம்- ஒரே ராசி. மிகவும் நல்ல பொருத்தம். நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து நடந்துகொள்வதே போதும். மற்றவர்கள் யாரும் உங்களைப் புரிந்துகொண்டாலும் சரி; புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி- அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள். மற்றவர்களுக்காக வாழத் தேவையுமில்லை; அவசியமுமில்லை. பிறகு உங்கள் பயணம் இனிதாகும்.

● யு. முரளிதரன், திருவள்ளூர்.

என் மைத்துனியின் பேரன் சரவணனுக்கு 14 வயது நடந்தாலும் ஐந்து வயது சிறுவனைப் போன்ற நடவடிக் கைகள்தான் உள்ளன. உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் வயதுக்கேற்ற அளவு இல்லை. பல ஆயிரம் ரூபாய் செலவாகி யும் பலனில்லை. பெற்றோருக்கும் உடல் நலக்குறைவு. எப்போது சீராகும்? பரிகாரம் உண்டா?

ஒரு ஜாதகத்தில் ராசி அல்லது லக்னம் வலுப்பெற வேண்டும். 5, 9-க் குடையவரும் பலம்பெற வேண்டும். அல்லது ராசி- லக்னத்தை அல்லது ராசியாதிபதி- லக்னாதிபதியை குரு பார்க்கவேண்டும். இதில் எதுவுமே இந்த ஜாதகத்தில் இல்லை. 9-ல் கேது. ராசியாதிபதி குரு நீசம். 5-க்குடைய சுக்கிரனும் நீசம். ராசி- லக்னத்துக்கு குரு பார்வையில்லை. ஏதோ பூர்வபுண்ணிய தோஷத்தால், இந்த ஜாதகன் இந்தக் குடும்பத்தில் ஒரு சுமையாகப் பிறந்து விட்டான். 9-க்குடைய சனி 10-ல் இருப்பதால்- தர்மகர்மாதிபதி யோகத்தால் ஆயுள்தீர்க்கம். மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான காப் பகத்தில் இந்த ஜாதகனைச் சேர்த்துப் பராமரிப்பதுதான் பரிகாரம்.

● சி. கற்பகம், ஆரணி.

என் மகன் சசிகுமாருக்கு 31 வயது. எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரம் உண்டா?

சசிகுமார் உத்திரட்டாதி நட்சத்திரத்திரம், மீன ராசி, மீன லக்னம். குரு 6-ல் மறைவு. 7-ல் செவ்வாய். சிம்மச்சனி 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். சுக்கிரதசை சுயபுக்தியில் திருமணம் நடக்கும். 5-ல் ராகு. நாக தோஷம். இதுவும் திருமணத் தடைக்கு ஒரு காரணம். கந்தர்வராஜ ஹோமம் செய்யுங்கள். பெண் அமையும். அந்நிய சம்பந்தம்.

● ஜி. சின்னச்சாமி, கோவை.

ராசி சக்கரத்தைக்கொண்டு பலன் சொல்லும்போது எந்த நிலையில் அம்ச சக்கரத்தை கவனித்துப் பலன் சொல்ல வேண்டும்? ராசியில் லக்னத்திலிருந்து கணக்கிடுவதுபோல அம்ச லக்னத்திலிருந்தும் கணக்கிட வேண்டுமா?

ராசியில் ஒரு கட்டத்தில் 3 நட்சத்திரம் (9 பாதம்) உண்டு. இதிலுள்ள கிரகம் எந்த நட்சத்திரத்தில், எந்த பாதத்தில் இருக்கிறது என்பதை உணர்த்துவதுதான் நவாம்ச சக்கரம். அம்சத்திலுள்ள கிரகம் எந்த நட்சத்திரத்தில், எந்த பாதத்தில் இருக்கிறதோ- எந்த கிரகத்தின் அம்சத்தில் இருக்கிறதோ அந்தப் பலனை ராசியில் இருக்கும் கிரகம் தனது தசாபுக்திக் காலத்தில் செய்யும். அம்சத்தில் ஆட்சி, உச்சம், நீசம், பகை, நட்பு போன்ற பலனைத்தான் நிர்ணயிக்கலாம். அதற்குப் பார்வை பலமோ, அம்ச லக்னத்துக்கு 1-ல், 2-ல், 3-ல், 4-ல் என்று ஸ்தானமோ இல்லை. சேர்ந்துள்ள கிரகத்தின் பலம் உண்டு.