● பிரகாஷ், சேலம்.

எனக்கும் என் மனைவி வனிதாவுக்கும் 11-2-2015 ஆம் தேதியன்று திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கிய மில்லை. ஆங்கில வைத்தியம் செய்து, செலவுகள் அதிகமாகி மன உளைச்சல் ஏற்பட்டதுதான் மிச்சம். ஜோதிடரீதியாக எங்களுக்கு குழந்தை பாக்கியம் எப்போது கிட்டும்?

Advertisment

பிரகாஷ் மூல நட்சத்திரம், தனுசு ராசி. மனைவி வனிதா ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி. இருவருக்கும் ராசிப் பொருத்த மில்லை. சஷ்டாஷ்டக ராசி. அதனால் தாம்பத்திய சுகமும் திருப்தியும் இருக்காது. பிரகாஷ் ஜாதகப்படி சூரிய தசை. வனிதா ஜாதகப்படி ராகு தசை. இருவர் ஜாதகத் திலும் 5-ல் ராகு- கேது. சர்ப்பதோஷம் உண்டு.

அதனால் சூலினிதுர்க்கா ஹோமம், சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், சந்தான கணபதி ஹோமம் செய்து, தம்பதிகள் இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். அத்துடன் மொத்தம் 19 வகையான ஹோமம் செய்யப்படும். தொடர்புக்கு: சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067.

● சீனிவாசன், தென்காசி.

பேங்கில் உத்தியோகம் பார்த்தேன். சுயதொழில் ஆசையால் வேலையைவிட்டு தொழில்செய்து இன்று பெரும் கடனாளி யாகிவிட்டேன். தீர்வு என்ன?

Advertisment

மகர லக்னம், சிம்ம ராசி. பூர நட்சத்திரம். 10-க்குடைய சுக்கிரன் விரயாதிபதியான குருசாரம் (பூரட்டாதி). 10-க்கு (துலாத்துக்கு) லக்னாதிபதி சனி 8-ல் (துலாத்தில்) மறைவு. எந்தக் காலத்திலும் உங்களுக்கு சொந்தத் தொழில் யோகமில்லை. அடிமை வேலைதான் நல்லது. அல்லது கூட்டுத்தொழில் செய்யலாம்: தனித்தொழில் யோகமில்லை. 19 சனிக்கிழமை கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சென்று ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரை வழிபடவும். முதல்வாரம் படிப்பாயச பூஜைசெய்து வழிபடவும். 19 வாரம் முடிந் ததும் விமோசனம் பிறக்கும். அத்துடன் ஒருமுறை கும்பகோணம் வழி திருச்சேறை கடன்நிவர்த்தி ஸ்தலம் சென்று வழிபடவும். சுந்தரமூர்த்தி குருக்கள் செல்: 94437 37759, 94426 37759-ல் பேசவும்.

● அசோக், கோவை.

என் தங்கை பிரியாவுக்கு எவ்வளவு முயன்றும் திருமணம் கைகூடவில்லை. பல பரிகாரங்கள் செய்துவிட்டோம். எப்போது திருமணம் நடக்கும்?

பிரியா கன்னி ராசி, கன்னி லக்னம், அஸ்த நட்சத்திரம். குரு தசை, சுக்கிர புக்தி நடக்கிறது. 36 வயது நடப்பு. ராசிக்கும் லக்னத் துக்கும் 2-ல் சனி இருப்பதும், 9-ல் ராகு இருப்பதும் தோஷம்! பல பரிகாரங்கள் செய்ததாகக் குறிப்பிட்டாலும், முறையான பரிகாரம் செய்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். 2022 மே வரை குரு தசை, சுக்கிர புக்திக்குள் திருமணம் நடைபெறும். 7-க்குடைய குரு, 8-க்குடைய செவ்வாயுடன் சம்பந்தம். (4-ல்). அவர்களுக்கு 2-ல் உள்ள சனியின் 3-ஆம் பார்வை. எனவே, இரண்டாம் தாரமாகக் கேட்டாலும் கொடுத்துவிடலாம்; யோசிக்கவேண்டாம். அதாவது விவாகரத்தான அல்லது மனை வியை இழந்த வரன் அமையும். கோவை சேரன் மாநகரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் யோகேஷ் என்ற அர்ச்சகரைச் சந்தித்து (செல்: 94430 64265) காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வர கலா ஹோமமும் செய்து, தங்கைக்கு கலச அபிஷேகம் செய்யவும். இறுதியாக இந்த ஒரு பரிகார பூஜையையும் செய்யவும். நல்ல வரன் அமையும்.

Advertisment

jj

● பி. கனிமொழி, அல்லூர்.

நாங்கள் எப்போது வீடுகட்டிக் குடிபோவோம்? எனது மகன்கள் அஸ்வந்த், பிரணவ் ராம் இருவரும் சரியாகப் படிக்க என்ன செய்யலாம்? பிளஸ் டூ படித்து சத்துணவுக்கூடத்தில் உதவியாளராக இருக்கிறேன். கணவர் நடத்துநராகப் பணிபுரிகிறார். அவருக்குப் பணிஉயர்வு கிடைக்குமா?

பிரணவ் ராம் உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி. ஜென்மச்சனி 2020 டிசம்பர்வரை. பிறகு பாதச்சனி (ஏழரைச்சனி) 2023 வரை நடக்கும். அதனால் நன்றாகப் படித்தாலும், மறதியால் மார்க் அதிகம் வாங்கமுடியாது. இருந்தாலும் படிப்பு தடைப்படாது. தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நடப்பதோடு 2026 வரை (15 வயதுவரை) சந்திர தசையும் நடப்பது ஆகாது. அதனால் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யவும். அஸ்வந்த்- பத்து வயதுமுதல் சுக்கிர தசை. குட்டிச் சுக்கிரன். விருச்சிக ராசிக்கு 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனி. சனிக்கிழமைதோறும் 19 மிளகை சிவப் புத்துணியில் பொட்டலம் கட்டி, நெய்யில் மிளகுப் பொட்டலத்தை நனைத்து கால பைரவர் சந்நிதியில் தீபமேற்றவேண்டும். (2020 டிசம்பர் சனிப்பெயர்ச்சி வரை). அத்துடன் 108 ஏலக்காயை மாலையாகக் கோர்த்து, உங்கள் ஊரில் ஹயக்ரீவர் சந்நிதி இருந்தால் அதற்கு அந்த மாலையைச் சாற்றலாம். கனிமொழிக்கு- துலா ராசிக்கு ஏழரைச்சனி யெல்லாம் முடிந்துவிட்டது. பிரச்சினை எதுவுமில்லை. புருஷோத்தமன் சிம்ம ராசி, சிம்ம லக்னம். குரு தசை நல்ல தசை. கடமைகளையெல்லாம் நிறைவேற்ற குருவருளும் திருவருளும் துணைபுரியும்.

● தமிழ்ச்செல்வி, தாத்தையங்கார்பேட்டை.

எனது மூத்த மகன் சுவேந்தர், இளைய மகன் அவினாஸ் இருவரின் படிப்பு, வேலை, திருமணம், எதிர்காலம் பற்றிக் கூறவும்.

உங்கள் பிள்ளைகள் இருவரின் ஜாதகமும் திருக்கணிதத்தில் எழுதப்பட்டவை. அதை வாக்கியப் பஞ்சாங்கப்படி கணித்து அனுப் பினால்தான் சரியான பலன் கூறமுடியும். மதுரை கே.எம். சுந்தரம் வசம் கணிக்கவும். செல்: 92453 28178-ல் தொடர்புகொள்ளவும்.

● ஆர். முனுசாமி, புதுச்சேரி.

எனது மகன் குமரன் (39 வயது) திருமணம் தள்ளிப்போகிறது. ஏன்? தங்கையின் திருமணம் முடிந்தது. குமரன் திருமணமும், அவர் தம்பியின் திருமணமும் நடக்க என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

குமரன் மகர லக்னம். லக்னத்தில் கேது. 7-ல் செவ்வாய், ராகு. களஸ்திரகாரகன் சுக்கிரன் கன்னியில் நீசம். உடனடியாக அவருக்கும், அவர் தம்பிக்கும் சேர்த்து காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்யவேண்டும். பதில் எழுத ஸ்டாம்பு ஒட்டிய கவர் அனுப்பினால் எங்கே, என்ன செய்யவேண்டும் என்று தகவல் கூறலாம்.

● கரு. முருகையன், சிறுமுகை.

எனது மகள் தேன்மொழிக்கும் மைத்துனர் கிருஷ்ணமூர்த்திக்கும் 25-2-1985-ல் திருமணம் நடந்தது. இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பெண்ணும் ஆணும் குறை மாதத்தில் பிறந்து, பெண் குழந்தை இறந்து, ஆண் குழந்தை மட்டும் பிழைத்தது. அவனுக்கு தற்போது 35 வயது நடக்கிறது. அவன் ஜாதகத்தைக் கணித்து பலன் கூறவும்.

நான் ஜாதகம் எழுதுவதில்லை. பலன் மட்டுமே சொல்வேன். மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப் பஞ்சாங்கப்படி எழுதி நகல் அனுப்பினால் பலன் கூறலாம். அவர் செல்: 92453 28178-ல் தொடர்பு கொள்ளவும்.

● முத்துச்சாமி, முருக்கன்குடி.

தங்களின் ஆலோசனைப்படி மூன்றாண்டுகளுக்குமுன்பு வெளிநாடு சென்று, இப்போது வந்துவிட்டேன். வீடு கட்டும் யோகமுண்டா?

மூல நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னம். 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி. ஜென்மச்சனி விலகி பாதச்சனி மூன்று வருடம். அதில் வீடு கட்டலாம். கடன் கிடைக்கும். தவணை கட்டலாம்.