Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-83

● டி. கலைவாணி, சேலம்.

எனது மகள் பிரியாவுக்கு தலையில் நீர் கோர்த்ததனால் ஆபரேஷன் செய்ததில் பார்வை இழப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் கண்பார்வை கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். 20 வயது மகளின் நிலைகுறித்து மிகுந்த கவலையும் வேதனையுமாக உள்ளது. மகளுக்கு மீண்டும் பார்வை கிடைக்குமா? எப்போது கிட்டும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

Advertisment

d

பிரியா மூல நட்சத்திரம், தனுசு ராசி, கன்னியா லக்னம். லக்னத்தை ராசிநாதன் குரு பார்ப்பதால் பார்வை கிடைக்கும். குட்டிச் சுக்கிர தசை என்பதால் இந்த சிக்கல்! அத்துடன் ஏழரைச்சனி வேறு நடக்கிறது. 2-ஆமிடமும், 12-ஆமிடமும் பார்வை ஸ்தானங்களாகும். (வலதுகண்- இடது கண்). சுக்கிரன், சூரியன், புதன் சேர்க்கை என்பதால், பார்வை திரும்பக் கிடைக்கும். 8-க்குடைய செவ்வாய் சேர்க்கை என்பதால், நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டது. சிவகங்கை அருகில் நாட்டரசங்கோட்டை கண்ணாத்தாள் கோவிலுக்குச் சென்று அபிஷேகம், பூஜை செய்து, கண்மலர் சாற்றி வேண்டிக்கொள்ளவும். அதேபோல காஞ்சிபுரத்திலிருந்து எட்டுக் கிலோமீட்டர் தூரம் கூரம். சென்று ஞாயிறு அல்லது வெள்ளிக்கிழமை பூஜை செய்யவும். சென்னையிலிருந்து 64 கிலோமீட்டர் மதுரமங்கலம் என்ற ஊரில் எம்பார்பெருமாளையும் சேவித்து நிவர்த்தி பெறலாம். புனர்பூச நாளில் நெய்தீபமேற்றி வழிபடவும். தொடர்புக்கு: செல்: 98404 61127.

● பி.எஸ். மூர்த்தி, சென்

● பி.எஸ். மூர்த்தி, சென்னை.

எனது மகனுக்கு (ராஜேஸ்) தற்போது 35 வயது நடக்கிறது. அவன் திருமணத்துக்காக பல முயற்சிகள் செய்தும் கூடிவரவில்லை. ஏனிந்தக் கால தாமதம்? எப்போது திருமணம் நடக்கும்? காரக பாவநாஸ்தி என்பதற்கு என்ன விளக்கம்?

Advertisment

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு காரகம் உண்டு. அதற்குரிய கிரகம் காரகன். உதாரணமாக, சூரியன் பிதுர்காரகன் (தகப்பனார்). சந்திரன் மாதுர்காரகன் (தாயார்). செவ்வாய் சகோதரகாரன். சுக்கிரன் களஸ்திரகாரகன். (மனைவி). சனி ஜீவனகாரகன், ஆயுள்காரகன். இதில் அந்த பாவகத்தில் அந்தந்த காரக கிரகம் இருந்தால் அந்த பாவம் நாசமடையும். சூரியன் தகப்பனார் ஸ்தானத்தில் (9-ல்) இருந்தால் தகப்பனாருக்கு நாசம். சந்திரன் தாயார் ஸ்தானத்தில் இருந்தால் தாயாருக்கு தோஷம். செவ்வாய் சகோதர ஸ்தானத்தில் இருந்தால் சகோதர தோஷம். களஸ்திரகாரகன் சுக்கிரன் 7-ல்- களஸ்திர ஸ்தானத்தில் இருந்தால் களஸ்திர தோஷம். இப்படிக் கணக்கிடவேண்டும். இதில் சனிக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. சனி ஆயுள்காரகன். அவர் 9-ல் இருந்தால் ஆயுள் தீர்க்கம். (ஆயுள் தோஷமில்லை). இதைத்தான் "காரகோ பாவ நாஸ்தி' என்பார்கள். உங்கள் மகன் ராஜேஷ் ஜாதகத்தில் துலா லக்னத்தில் சந்திரன்- கேது. 7-ல் மேஷத்தில் ராகு; நாகதோஷம். அதனால் திருமணத்தடை- தாமதம். 7-க்கு குருபார்வை இல்லை. 7-க்குடைய செவ்வாய்க்கும் குருபார்வை இல்லை. 7-க்கு காரகன் சுக்கிரன். அவருக்கும் குருபார்வை இல்லை. அதனால் திருமணம் தாமதம். 7-க்குடைய செவ்வாய் 7-க்கு 9-ல் திரிகோணத்தில் இருப்பதோடு, களஸ்திரகாரகன் சுக்கிரனை 7-க்குடைய செவ்வாய் பார்ப்பதால் திருமணம் நிகழும். நாகதோஷத்தால் தாமதம்! சனி தசையில் கேது புக்தி 3-10-2021 வரை நடக்கும். இதன்பிறகு சுக்கிர புக்தியில் திருமணம் கூடும். அப்போது 36 வயது தொடங்கிவிடும். இப்போது 35 வயதில் பெண்வீட்டார்களே யோசிப்பார்கள். காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து, மகனுக்கு கலச அபிஷேகம் செய்யவும். அத்துடன் தொழில் முன்னேற்றம், சம்பாத்தியம், சேமிப்பு, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, வாழ்க்கை நிம்மதி, ஆனந்தம், மனநிறைவு எல்லாவற்றுக்கும் 19 வகையான ஹோமம் செய்யவேண்டும்.

● ராஜேஷ், சென்னை.

எல்லாத் தடைகளுக்கும் ஹோமம் செய்தால் சரியாகிவிடும் என்று எழுதுகிறீர்களே- ஏன்?

காலில் அசுத்தம் ஒட்டிக்கொண்டால் காலை அலம்புகிறோமே ஏன்? திருஷ்டி வீட்டுக்கு கேதத்துக்குப் போய்வந்தால் ஆடைகளை நனைத்து, தலையில் தண்ணீர்விட்டுக் குளிக்கிறோமே ஏன்? நாள் கிழமை வந்துவிட்டால் வீட்டை அலம்பித் துடைக்கிறோமே ஏன்? சுத்தம் செய்யத்தான்! ஆடையை சுத்தம் செய்ய துவைக்கிறோம். மனதை சுத்தம் செய்ய அக்னி காரியம் (ஹோமம்) செய்தால் போதும். பஞ்சபூதத்தில் நீரும் நெருப்பும்தான் சுத்தப்படுத்தும். தை பிறப்புக்கு முதல்நாள் போகிப் பண்டிக்கையன்று ஆகாத போதாதவற்றை எரித்து சுத்தப்படுத்து கிறோமே- அதுபோலதான்! ஆடையை வெளுக்க சோப்புபோட்டு துவைக்கிறோம். மனதை வெளுக்கப் பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவத்தை நீரும், நெருப்பும் உருவாக்கும். மனதை எரிப்பதற்கு பதிலாக ஹோமம் செய்து எண்ணங்களை- ஆசாபாசங்களை எரித்துவிடுகிறோம்.

● ஞானசங்கரன், திருமுட்டம்.

எனக்கு 60 வயது. படிப்பு பி.எஸ்.ஸி.. மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் படித்தேன். படித்தது ராமாயணம் குடிப்பது பெருமாள் கோவில் என்று புத்திபோனதால், காதலித்து விரும்பிய பெண்ணை மணந்து, இரு பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாராகி, இருவரையும் எம்.எஸ்.சி; எம்.டெக் படிக்கவைத்து, நல்லபடியாகத் திருமணமும் செய்து, நல்லவேளையில் நல்லநிலையில் இருக்கிறார்கள். "அதிர்ஷ்டம்' பத்திரிகை வாயிலாக உங்கள் அறிமுகம் கிடைத்தது. நண்பர் ஒருவருடன் கூட்டணி சேர்ந்து பரிசுச் சீட்டு வாங்கி பரிசு கிடைத்ததால், பரிசுச் சீட்டுப் பைத்தியமாகி, வாங்கி வாங்கி மானம், மரியாதை, நிம்மதியைத் தொலைத்துவிட்டேன். 1998-ல் ஒரு ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் 12 மாதப் பயிற்சி எடுத்தும், "குடும்ப ஜோதிடம்', "பாலஜோதிடம்' படித்தும், வேறுபல ஜோதிடப் புத்தகங்கள் படித்தும் அரை குறை ஜோதிடனாகிவிட்டேன். முழு ஜோதிடராகி புகழ்பெறமுடியுமா? 71 வயது. ராகு தசை நடக்கிறது. பெரிய பெண் மதுமிதாவுக்குத் திருமணமாகி மூன்று வருடங்களாகின்றன. புத்திர பாக்கியம் எப்போது ஏற்படும்?

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு ஆற்றல் மறைந்துகிடக்கிறது. அல்லது புதைந்துகிடக்கிறது. அதைவெளிப்படுத்த ஒரு தூண்டுகோல் வேண்டும். அதாவது சாதனை தேவை! ராஜவம்சத்தினருக்கு மட்டுமே வில்வித்தை கற்றுக்கொடுத்த துரோணாச்சாரியார், ஏகலைவனுக்கு (காட்டுவாசிக்கு) வில்வித்தை கற்றுக்கொடுக்க மறுத்துவிட்டார். ஆனாலும் ஏகலைவன் மனம் தளரவில்லை. மானசீக குருநாதராக துரோணரை வடிவமைத்து, திருவருளால் அர்ஜுனனை மிஞ்சிய வில்லாளியாக மாறிவிட்டான். அதேபோல ராஜபோகத்தில் இருந்த மன்னன் கௌசிகன் துறவுபூண்டு ராஜரிஷி விசுவாமித்திரராகி சாதனை படைத்தார். மானிட உடலோடு திரிசங்குவை விண்ணுலகு அனுப்பிவைத்து, அவனுக்கென்று தனி சொர்க்க லோகத்தை (திரிசங்கு சொர்க்கம்) உருவாக்கினார். ஆகவே, "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்றும், "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்' என்னும் குறளில் கூறியபடி முயற்சி திருவினையாக்கும். மகள் மதுமிதாவுக்கு கடக லக்னம். அதில் குரு உச்சம்! வாரிசு கிடைக்கும். கேது- ராகு சம்பந்தம் என்பதால் தாமதமாகும். மேலும் மதுமிதாவின் திருமணத் தேதி எண் 4, 7, 8 என்றிருந்தால், அன்று கட்டிய மாங்கல்யத்தைக் சுழற்றி 1, 3, 6 வரும் தேதிகளில் புதுமாங்கல்யம், மறுமாங் கல்யம் அணிவிக்கவேண்டும். நீங்கள் ஜோதிடப் புலமையில் முழுமையடைய பி.எஸ்.பி எழுதிய ஜோதிட நூலைப் படிக்கலாம்.

bala060320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe