ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-82

● எம். தேவராஜன், மேற்கு மாம்பலம்.

"பாலஜோதிடம்' (தை 12 முதல் 18 வரை) புத்தகத்தில் சூரியன் மிதுனத்தில் உள்ளதாக எழுதியுள்ளீர்கள். என்னைப் போல் சாதாரண வாசகனுக்கே தை மாதம் சூரியன் மகரத்தில் இருப்பார் என்று புரியும்போது, ஜோதிடரான தங்களுக்கு இது தெரியவில்லையா?

ஜோதிடபானுவே இப்படி சரிபார்க்காமல் எழுதலாமா? உண்மைதான்! சரிபார்க்காமல் எழுதியதற்கு வருந்துகிறேன். இதற்கு விளக்கமும் வருத்தமும் மறுவாரம் "பாலஜோதிட'த்தில் தெரிவித்துவிட்டேன். அதைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

ff

● டி. கௌசல்யா, வீராச்சிபாளையம்.

ஜோதிடத்தின்மூலம் மக்களுக்கு நல்வழிகாட்டும் நீங்கள் நூறாண்டு நோய் நொடியின்றி வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். நான் பிசியோதெரபி படிப்பு முடித்துள்ளேன். எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?

செவ்வாய் தோஷமும் நாகதோஷமும் உள்ள தாகச் சொல்கிறார்கள். 2019 வைகாசியில் காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் 19 வகையான ஹோமம் செய்துவிட்டோம். வேறு பரிகாரம் செய்யவேண்டுமா? நர்சிங் கோர்ஸ் டிப்ளமோ படிக்க விரும்புகிறேன். தடை ஏற்படு கிறது. உடல் உபாதைகளும் உண்டாகின்றன. எப்போது சரியாகும்? வாழ்த்துக்கு நன்றி! ரிஷப லக்னம். இதற்கு அட்ட மச்சனி 2020 டிசம்பர் வரை நடக்கிறது. அதனால் படிப்பு, திருமணம், வேலை எல்லாம் தடைப்படும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தகிரி முருகன் கோவிலிலுள்ள சனீஸ்வ

● எம். தேவராஜன், மேற்கு மாம்பலம்.

"பாலஜோதிடம்' (தை 12 முதல் 18 வரை) புத்தகத்தில் சூரியன் மிதுனத்தில் உள்ளதாக எழுதியுள்ளீர்கள். என்னைப் போல் சாதாரண வாசகனுக்கே தை மாதம் சூரியன் மகரத்தில் இருப்பார் என்று புரியும்போது, ஜோதிடரான தங்களுக்கு இது தெரியவில்லையா?

ஜோதிடபானுவே இப்படி சரிபார்க்காமல் எழுதலாமா? உண்மைதான்! சரிபார்க்காமல் எழுதியதற்கு வருந்துகிறேன். இதற்கு விளக்கமும் வருத்தமும் மறுவாரம் "பாலஜோதிட'த்தில் தெரிவித்துவிட்டேன். அதைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

ff

● டி. கௌசல்யா, வீராச்சிபாளையம்.

ஜோதிடத்தின்மூலம் மக்களுக்கு நல்வழிகாட்டும் நீங்கள் நூறாண்டு நோய் நொடியின்றி வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். நான் பிசியோதெரபி படிப்பு முடித்துள்ளேன். எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?

செவ்வாய் தோஷமும் நாகதோஷமும் உள்ள தாகச் சொல்கிறார்கள். 2019 வைகாசியில் காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் 19 வகையான ஹோமம் செய்துவிட்டோம். வேறு பரிகாரம் செய்யவேண்டுமா? நர்சிங் கோர்ஸ் டிப்ளமோ படிக்க விரும்புகிறேன். தடை ஏற்படு கிறது. உடல் உபாதைகளும் உண்டாகின்றன. எப்போது சரியாகும்? வாழ்த்துக்கு நன்றி! ரிஷப லக்னம். இதற்கு அட்ட மச்சனி 2020 டிசம்பர் வரை நடக்கிறது. அதனால் படிப்பு, திருமணம், வேலை எல்லாம் தடைப்படும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தகிரி முருகன் கோவிலிலுள்ள சனீஸ்வரர், ஆஞ்சனேயர், முருகன் மூவருக்கும் பிரார்த்தனை செய்து அர்ச்சனை செய்யவும். வேலை, திருமணம் முடிந்தபிறகு, மறுபடி கணவருடன் சென்று அபிஷேக பூஜை (நன்றி) செய்யவும். சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்தபடியால், நாகதோஷம் உட்பட எந்த தோஷங்களும் உங்களை பாதிக்காது. வேறு எந்தப் பரிகாரமும் தேவை யில்லை. 2020 ஆகஸ்டில் 30 வயது தொடங்கும். 2021-க்குள் திருமணம் முடியும். சேந்தமங்கலம் போய்வந்ததும் வேலை அமைந்துவிடும். உடல் உபாதைகளும் விலகிவிடும். படிப்பில் தடையும் விலகிவிடும்.

● ஆர். சித்ரா, நாச்சியார்கோவில்.

என் தம்பி சண்முகம் ஜாதகப்படி எப்போது திருமணம் நடக்கும்? தந்தையை இழந்த எனக்கும் தம்பிக்கும் நீங்களே தந்தை!

சண்முகம் பூச நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னம். லக்னத்தில் கேது, ஏழில் ராகு இருப்பது நாகதோஷம்! களஸ்திர காரகன் சுக்கிரன் 8-ல் மறைவு. நடப்பு 40 வயது. (ஜனனம் 3-10-1980). எனவே காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் (மொத்தம் 19 வகை ஹோமம்) செய்து, சண்முகத்துக்கு புதுவேட்டி, துண்டு அணிவித்து கலச அபிஷேகம் செய்ய வேண்டும். மூன்று அல்லது ஆறு மாதத்துக்குள் திருமணம் நடந்துவிடும். ஹோமம் முடிந்தபிறகு என்னைத் தொடர்பு கொள்ளவும்.

● எம். மகாலட்சுமி, விருதுநகர்.

எனக்கு 2-12-2019-ல் திருமணம் நடந்தது. கணவர் பெயர் ராஜசேகர். எங்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கவில்லை. மனப் பொருத் தப்படி திருமணம் முடிந்தது. தோஷம் எதுவும் உண்டா? அரசு வேலை அமையுமா?

மகாலட்சுமி பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. ராஜசேகர் மூல நட்சத்திரம், தனுசு ராசி. இருவருக்கும் ஒரே ராசிநாதன் குரு. 7-ஆவது நட்சத் திரம் வதைதாரை என்றாலும், ஒரே ராசிநாதன் (குரு) என்பதால் விதிவிலக்கு உண்டு. தோஷமில்லை. ஆனால் திருமணத் தேதியின் கூட்டு எண் 8 என்பது தோஷம். இதனால் வாரிசு இருக்காது. வாரிசு பிறந்தால் சந்தோஷம், நிம்மதி இருக்காது. எனவே, 2-12-2019-ல் கட்டிய மாங்கல்யத்தை உண்டியலில் போடலாம். அல்லது ஆசாரியிடம் கொடுத்து அழித்து, மறுமாங்கல்யம் செய்து 1, 3, 6 வரும் நல்ல நாளில் (இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத சுபமுகூர்த்த நாளில்) மறுமுறை புதுமாங்கல்யம் அணிவிக்கவேண்டும். மறுமாங்கல்யம் கட்டும்வரை வெறும் கழுத்தாக இல்லாமல், மஞ்சள் கயிற்றில் ஒரு விரலி மஞ்சளைக்கட்டி அணியவேண்டும். ஏதாவது பிடித்தமான தெய்வ சந்நிதியில் பரிகாரத் தாலி அணியலாம். வாரிசும், வாழ்க்கை ஒற்றுமையும், முன்னேற் றமும், ஆரோக்கியமும் உண்டாகும்.

● ஏ. தமிழ்ச்செல்வி, தாத்தையங் கார்பேட்டை.

எனது இரண்டாவது மகன் அவினாஸ் பிளஸ் டூ பயாலஜி குரூப் படிக்கிறான். மேற்படிப்பு என்ன படிக்கலாம்? அரசு வேலை அமையுமா?

அவினாஸ் ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னம். நீங்கள் அனுப்பிய ஜாதகம் திருக்கணிதப்படி கணிக்கப்பட்டது. இதை மதுரை கே.எம். சுந்தரம் வசம் (செல்: 92453 28178) வாக்கியப் பஞ்சாங்கப்படி கணித்து, மறுபடி எனக்கு எழுதிக் கேட்கவும். அப்போது சரியான வழிகாட்ட முடியும். முகவரி: கே.எம். சுந்தரம் (கைரேகை + ஜோதிடம்), அப்பாஸ் காம்ப்ளக்ஸ் (மாடி), அம்பிகா காலேஜ் எதிர்புறம், அண்ணாநகர் மெயின்ரோடு, சாத்தமங்கலம், மதுரை-20. அதேபோல சுவேந்திரன் ஜாதகத்தையும் வாக்கி யப்படி கணித்து மீண்டும் அனுப்பவும். மேற்படிப்பு, அரசு வேலை பற்றி பதில் கூறலாம்.

● இ. கண்ணன், திருநெல்வேலி.

என் தகப்பனார் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக வருஷ திதி, தர்ப் பணம், ஆடி, மகாளயம், தை அமாவாசைக் கால தர்ப்பணம் கொடுத்தும், அவரின் படத்திற்கு மாலையிட்டும், அவருக்குப் பிடித்த பண்டங்கள் படையல் செய்தும் வணங்கிவருகிறேன். எங்கள் குடும்பத்தில் எந்த நல்ல காரியமும் நடைபெறவில்லை. குழப்பமும் சண்டையுமாகவே இருக்கிறது.

இறந்தவருக்கு தர்ப்பணம் கொடுக்கா விட்டால் மனது சங்கடப்படாதா? எனது சந்தேகம்- வருஷ திதி தர்ப்பணம் கொடுக்காமல், ஆடி, புரட்டாசி, தை அமாவாசைக் காலங்களில் தர்பபணம் கொடுக்கலாமா? இயற்கையாக மரணம டைந்த தாத்தா- பாட்டிக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? தர்ப்பணம் கொடுக் காதவர் செய்யும் பூஜைகளை சிவனும் விஷ்ணுவும் ஏற்பதில்லை என்று ஒரு ஆன்மிகப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். மிக நல்ல கேள்வி. "நீத்தார் நினைவு' என்பது சம்பந்தப்பட்டவர்கள் செய்யும் பரிகாரமாகும். ரத்தபந்த சொந்தம் உடையவர்கள் அவசியம் செய்தாக வேண்டும். அரசியல்வாதிகளுக்கும், தலைவர்களுக்கும் தொண்டர்கள் உள்பட எல்லாரும் நினைவுகூர்ந்து, மாலை மரியாதை செய்து ஊதுபத்தி ஏற்றுவார்கள். ஆனால் ரத்தபந்த சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக தர்ப்பணம், பரிகார பூஜை செய்யவேண்டும். இது இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு மட்டும்தான்! தற்கொலை, விபத்து, அகால மரண மடைந்தவர்களுக்குப் பொருந்தாது. அப்படி இறந்தவர்களின் உறவினர்கள் வெளியாருக்கு அன்னதானம் வழங்கலாம். ஊனமுற்றோர், முதுமையடைந்தோர், ஆதரவற்றோர் இல்லங் களுக்கு அன்னதானம், அன்பளிப்பு வழங்கலாம். நீங்கள் எந்த அமாவாசை விரதமும் இருக்கக் கூடாது; தர்ப்பணம் செய்யக்கூடாது. உங்கள் திருப்திக்கும், மனக்குறை, சந்தேகம் நீங்கவும். ஒரே ஒருமுறை பூந்தோட்டம் அருகில் செதலபதி (திலதர்ப்பணபுரி) சென்று ஒரு அமாவாசை யன்று பிதுர்தர்ப்பணம் செய்து நிறுத்திக் கொள்ளவேண்டும். ஸ்ரீராமபிரான் தந்தை தசரத சக்கரவர்த்திக்கு இறுதிச்சடங்கு (கொள்ளி) செய்யவில்லை. அதனால் செதலபதி வந்து பூஜைசெய்து அந்தக் குறையை நிறைசெய்தார். தசரதனுக்கு பதில் ஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்தார். ஒருமுறை மட்டும் செதலபதி போனால் போதும். அடுத்துவரும் அமாவாசைக் காலங்களில் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளோருக்கு விருந்து படைக்கலாம். பசுவுக்கு பச்சரிசியும் வெல்லமும் சிறிது எள்ளும் கலந்து படைக்கலாம். பிராமணருக்கு போஜனம் செய்துவைக்கலாம்.

bala280220
இதையும் படியுங்கள்
Subscribe