● எஸ். வாசுகி, திருச்சி.

ஜோதிட ஒளிக்கு பணிவான வணக்கம்! தாங்கள் கூறியபடி, எனது மகன் பொறியியல் பட்டப் படிப்பை முடித்து, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறான். நன்றி! எனது கணவருடன் பிறந்த சகோதரர்கள் இரண்டு பேர். என் கணவர்தான் மூத்தவர். கணவருக்கு நேர் இளையவர் சிறிய அளவில் ஸ்டேஷனரி கடை நடத்திவருகிறார். நாங்கள் ஒரே வீட்டில் வசித்துவரு கிறோம். அவருக்குப் பூர்வீக வீட்டில் வசிக்கும் (மாமனார் வீட்டில்) அமைப்புண்டா? மேலும் அவர் தாயார்வழி சொத்தை அடையும் பாக்கியம் உண்டா?

சிம்ம லக்னம், ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி. 2020 டிசம்பர்வரை அட்டமச்சனி நடக்கிறது. அதனால் இடப்பெயர்ச்சி ஏற்பட இடமுண்டு. வீடு மாற்றம் ஏற்படலாம். அந்த மாற்றம் இனிய மாற்றமாக அமைய உங்கள் கணவரின் வயதுடன் ஒரு எண்ணிக்கை சேர்த்து, அந்த எண்ணிக்கை மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் அட்டமச்சனி முடியும்வரை (2020 டிசம்பர் வரை) நெய்யில் மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமேற்ற வேண்டும். அட்டமச்சனி முடிந்தபிறகு, உங்கள் விருப்பம்போல் எல்லாம் இனிதாக ஈடேறும்.

● வி.ஆர். முத்துச்சாமி, தாராபுரம்.

Advertisment

எனது பேரன் ஸ்ரீராம் கேட்டரிங் டிப்ளமோ முடித்து வெளிநாட்டில் வேலை செய்கிறான். ஒன்றரை லட்சம் சம்பளம். இரண்டு வருட காலமாகப் பெண் பார்த்து வருகிறோம். 1. வெளிநாடு, 2. கேட்டரிங் டிப்ளமோ, 3. ராகு- கேது தோஷம் (லக்னத்தில் ராகு, 7-ல் கேது) என்ற காரணங்களினால் பெண் அமையவில்லை. திருமணம் தடைப் படுகிறது. இன்னும் மூன்று வருடம் வெளி நாட்டில் வேலை பார்க்கவேண்டும்.(ஒப்பந் தப்படி). தடை விலகி திருமணம் முடிக்க என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

gg

2020 செப்டம்பரில் 29 வயது முடிந்து 30 ஆரம்பம். 30 வயதில் திருமணம் கூடும். லக்னத்தில் ராகு, 7-ல் கேது இருப்பது தோஷம்தான். ஆனால் குரு பார்ப்பதால் தோஷம் நீங்கும். 2-ல் சனி நிற்பதால்தான் திருமணத்தடை. ஸ்ரீராம் விடு முறையில் தாராபுரம் வரும்போது, தவறாமல் காரைக்குடி சென்று காமோ கர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் வெளிநாட்டுக்குப் போகவிருப்பமுள்ள பெண் அமையும். திருமணமாகி பெண்ணை பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ விட்டுச்செல்ல எந்த பெற்றோரும் விரும்ப மாட்டார்கள். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு மேற்படி ஹோமம் செய்யலாம். பெரும் பாலும் 30 வயதில் திருமணம் செய்து பெண்ணை அழைத்துப் போகலாம்.

Advertisment

● ஆர். பிருந்தா, நீடாமங்களம்.

நான் எம்.ஏ., எம்.பில்., முடித்து தனியாரிடம் வேலை பார்க்கிறேன். எனக்கு அரசு வேலை கிடைக்குமா? எந்தத் துறையில் கிடைக்கும்?

தனுசு லக்னம், பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி. புதன் தசை, தனது புக்தி நடக்கிறது. புதன் 7, 10-க்குடையவர். சூரியன் 9-ல் ஆட்சி. 10-க்குடைய புதன் கடகத்தில்- சந்திரன் ராசியில். சூரியனும் சந்திரனும் ராஜகிரகங்கள். அரசு வேலை உறுதி. புதன் தசை, சுயபுக்தி இறுதியில், கல்லூரியில் வேலை கிடைக்கும். ஒரு விடுமுறை நாளில் கும்பகோணம்- குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று குரு தத்தாத்ரேயரை வணங்கிவரவும். வேலை கிடைத்தபிறகு ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும்.

● வி.எஸ். செந்தில்குமார், கோவை- 14.

கந்தர்வராஜ ஹோமம் செய்தேன். (ஐந்து வருடங்களாகின்றன). எப்போது திருமணம் நடைபெறும்? ராகு தசை வருகிறது. அதில் திருமணம் நடக்குமா?

மேஷ ராசிக்கு குரு 9-ல் இருக்கிறார். அவருடன் கோட்சாரத்தில் கேது சம்பந்தம். ஆவணிக்குள் திருமணம் நடக்கும்! வரும் தீபாவளியே தலை தீபாவளியாக அமையும். ராகு தசை, ராகு புக்தியில் திருமணம் செய்யலாம்

● எஸ். சுப்பையா, திருநெல்வேலி டவுன்.

இந்திய சுதந்திர நேரப்படி, 29-1-2020 முதல் 29-2-2021 வரை இந்தியாவுக்கு சந்திர தசையில் சனி புக்தி நடக்க இருப்பதாகத் தெரிகிறது. குருஜி, தங்களின் தேவ ஜோதிட வாக்குமூலம் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் என்ன பலன்- என்ன பரிகாரம் என்று கூறுங்கள்.

ff

நாடு சுதந்திரம டைந்து 73 ஆண்டுகளாகின்றன. 73 ஆண்டுகளில் எத்தனையோ பிரதமர்கள், எத்தனையோ ஆளுங்கட்சிகள், எத்தனையோ எதிர்க்கட்சிகள் மாறியபோதும் ஜனத்தொகை கூடியுள்ளது. அன்று 30 கோடி. இன்று 120 கோடிக்குமேல்! எவ்வளவோ சாதனைகள்! உலக நாடுகளில் பாரதத்துக்கு மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் கூடியுள்ளது என்பதை மறுக்கமுடியாது. நீர்வளம், நிலவளம், அணைக்கட்டுகள் பெருகியிருந்தாலும், வறுமையை ஒழிக்க முடியவில்லை. அதற்காக பட்டினிச்சாவு எதுவுமில்லை. அப்போதிருந்த வாய்மை, தூய்மை, நேர்மை, தியாகம் அரசியல் தலைவர்களிடம் இல்லை. எல்லாம் ஊழல், எல்லாவற்றிலும் சுயநலம். சுதந்திர லக்னத்துக்கு குரு 6-ல் மறைவு; ராகு- கேது சம்பந்தம். சனியின் நட்சத்திரம். (பூசம்). நாடு சுதந்திரம் அடைந்த தேதியின் கூட்டு எண் 8. (சனி ஆதிக்கம்). மனைவியை இழந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், திருமணமே ஆகாதவர்கள், மனைவியைப் பிரிந்தவர்கள்- இப்படிதான் நாட்டின் தலைமைப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தும் அவலம்! தப்பித்தவறி குடும்பஸ்தர்கள், நேர்மையானவர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந் தாலும், நெடுங்காலம் நிலையான ஆட்சி தரமுடியாத நிலை! ஔவைப் பிராட்டி மன்னனை வாழ்த்தும் போது "வரப்புயர' என்று வாழ்த்தினாராம். வரப்புயர நீர் உயரும். நீர் உயர விவசாயம் உயரும். விவசாயம் உயர மக்கள் வாழ்வு (பயிர்வளம், செல்வவளம்) உயரும். ஒருகாலத் தில் அரிசித் தட்டுப்பாடு காரணமாக திருமணப் பத்திரிகையில், "தங்கள் பங்கு ரேஷன் அரிசியைக் கொண்டு வரவும்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். (ஆறு அவுன்ஸ் ரேஷன் திட்டம். பி.எஸ். குமாரசாமி ராஜா முதல்வராக இருந்த காலம்). இன்று உணவுப் பஞ்சம் இல்லையென்றாலும் வருமானப் பஞ்சம் போகவில்லை. இதற்கெல்லாம் ஒட்டு மொத்தப் பரிகாரம் எதுவுமில்லை. ஒவ்வொரு தனிமனிதனும் (குடிமகனும்) ஒழுக்கமாக, நேர்மையாக இருந்தாலே போதும்! அரசு தரும் இலவச சலுகையை வசதியிருப்பவரும் வாங்கி மாற்றிவிடுகிறாரே- அரிசி, சீனியை ரேஷனில் வாங்கி, பலசரக்குக் கடையில் விலைக்குக் கொடுத்து காசாக்கி விடுகிறார்களே! அதைவிடக் கொடுமை- வாக்குரிமைக்கும் விலை நிர்ணயிக்கப்படுகிறதே! ஆக, மக்களிடம் தூய்மை, நேர்மை இல்லை. அரசியல்வாதிகளிடம் வாய்மை இல்லை! இவையெல்லாம் மாறும் என்று நினைக்கிறீர்களா? நிச்சயம் மாறாது. வாலி எழுதியதுமாதிரி "மாறாதய்யா மாறாது. மனமும் குணமும் மாறாது.' இவையெல்லாம் மாற வேண்டும் என்றால், அன்று ஆங்கிலேயர் ஆதிக்கம் இருந்ததுபோல இன்னொரு அந்நியர் ஆதிக்கம் வரவேண்டும். அதை விரட்டியடிக்க மறுபடி இன்னொரு காந்தி மகான் அவதரிக்கவேண்டும். இந்திராகாந்தி காலத்தில் "மிசா சட்டம்' கொண்டுவந்தபோது அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் ஒரு குறுகிய காலம் வேலைகள் ஒழுங்காக நடைபெறவில்லையா?

1962-ல் பக்கத்து நாடான சீனா, இந்தியாமீது படையெடுத்தபோது, நாட்டுமக்களுக்கு நாட்டுப்பற்றும் ஒற்றுமையும் வந்ததே- அந்த உணர்வு இப்போது ஏனில்லை? (வயதான பெரியோர்களுக்கு- சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த நிகழ்ச்சி நினைவிருக்கும்). இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. நம் நாட்டுக்கா ரன்தான் நம்மை சுரண்டி வாழவேண்டும். அடுத்தவனை வரவிடக்கூடாது என்பது அரசியல்வாதிகளின் கணக்கு. காஞ்சி மகா பெரியவர் காலத்தோடு ஆன்மிகம் தொலைந்துவிட்டது. (இப்போது நித்தியின் கைலாச காலம்). பெருந்தலைவர், சரித்திரநாயகன் காமராஜரோடு அரசியல் தூய்மை தொலைந்துவிட்டது. (இப்போது இரட்டையர்கள் கட்சிக்காலம்) சக்தியிழந்தவன் சக்திபடைத்தவனைப் பார்த்துப் பொருமி, ஏங்கிப் பொறுமையாக ஆறுதல் அடையவேண்டியதுதான்.