● பி. சுந்தரம், கோவனூர்.

முப்பது வருடகாலமாக நான் தங்கள் ரசிகன். தாங்கள் எனக்கு பலமுறை பதில் எழுதியுள்ளீர்கள். தங்கள் ஆலோசனைப் படியே இதுவரை நடந்து வருகிறேன். தற்போது என் அத்தை மகன் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். இதுவரை திருமண மாகவில்லை. எப்போது நடக்கும்? அத்தை மகனின் தந்தை இறந்து மூன்று மாதங் களாகின்றன. நீங்கள் அனுப்பிய ஜாதக ஜெராக்ஸ் தெளிவாக இல்லை. அத்தை மகனா? மகளா என்பதும் தெரியவில்லை. பெயரும் இல்லை. திருப்பதியில் காணாமல்போனவரைக் கண்டுபிடிக்க அடையாளம் கேட்டால், "மொட்டையடித்திருப்பார்' என்று சொன்னால் எப்படி கண்டுபிடிக்க முடியும்?

ஊர், பேர் சொல்லவேண்டாமா? ஆணா- பெண்ணா என்ற விவரமும் கூறவேண்டாமா? 40 வயது என்பதால், ஆண் என்று தெளிவா கிறது. கந்தர்வராஜ ஹோமம் செய்ய வேண்டும்.

● சி.ஆர்.சி. சேகர், ஆவடி.

Advertisment

என் மகள் பூஜா 10-ஆம் வகுப்பு படிக்கிறாள். பிளஸ் 1-ல் எந்த குரூப் எடுக்க லாம்? மேற்படிப்பு எது படிக்கலாம்? அரசு வேலை கிடைக்குமா?

பூஜா அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னம். 7-12-2004-ல் பிறந்தவர். 2019 டிசம்பரில் 15 வயது முடிந்து 16 ஆரம்பம். 11 வயதுமுதல் ராகு தசை- 18 வருடம். ராகு 4-ல் கேது சாரம். அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 10-ல் நின்று பார்க்கிறார். அவருடன் சுக்கிரன் ஆட்சி. 9-ல் குருவும் சந்திரனும் சேர்க்கை. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தகவல் தொழில்நுட்பம் படிக்கலாம். உயர் கல்வி யோகம் உண்டு. ராகு தசை நடப்பதால், விரும்பினால் மருத்துவத்துறையில் படிக்கலாம். 8-க்குடைய சூரியன் 6-க்குடைய புதனோடு சேர்க்கை. புதன் 9-க்குடையவர் என்பதால் அரசு வேலை பார்க்கலாம். ந. டஞஞஓஆஆ என்று ஒரு "ஆ' சேர்க்கவும்.

jj

Advertisment

● பி. சுந்தரம், கோவனூர்.

28-6-2019 "பாலஜோதிட'த்தில், நான் ஆதீனத்தில் காலத்தைக் கழிக்கலாமே என்று எழுதியிருந்தீர்கள். குருவே, பூர்வீகச் சொத்து உள்ளது; தாய் இருக்கிறார்; சொந்த வீடு உள்ளது; மனைவி இருக்கிறார். பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆதீனம் செல்லாமல் வாழ வழிசொல்லுங்கள். நான் வாழவேண்டும். நீங்கள்தான் "எல்லாமிருந்தும், அமைதி யில்லை, ஆனந்தமில்லை, வாழவே பிடிக்கவில்லை' என்று எழுதியிருந்தீர்கள். "அப்படியென்றால் ஆதீனத்தில் காலம் கழிக்கலாமே' என்று வழி சொன்னேன். இப்போது மாற்றிப் பேசுகிறீர்களே!

ஜோதிடம் என்ன தாய விளையாட்டுமாதிரி என்று நினைத்துவிட்டீர்களா? அல்லது ஆடுபுலிலியாட்டம் என்று எண்ணிவிட்டீர்களா? உங்கள் நேரத்தை வீணடிப்பது மட்டு மல்லாமல், என் நேரத்தையும் வீணடிக் கலாமா?

● தி. பரணிதரன்...

மாமா வீட்டிலிலிருந்து 10-ஆம் வகுப்பு வரை படித்து முடித்து, பிறகு சொந்த வீட்டிலிருந்து படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து படிக்க முடியவில்லை. நான்கு வருடகாலமாக சந்தன காளி யம்மனுக்கு கரகம் எடுத்து வருகிறேன். அதில் ஏதாவது குறையா? எதுவரை படிக்க லாம்? அப்பாவும் அம்மாவும் என்னை வெடுவெடுவென்று பேசுகிறார்கள்.

கரகம் எடுப்பதால் உமக்கு பதிலாக சந்தன காளியம்மன் வந்து பரீட்சை எழுதுமா? கரகம் எடுப்பதால் நீங்கள் பக்திமான் என்று தெரிகிறது. அதேசமயம் ஆர்வமாகப் படிக்கவேண்டும். அது உனது கடமை! கரகம் எடுக்கும்போது உனது காலிலில் மற்றவர்கள் விழுந்து வணங்கி ஆசிபெறுவதால், "ஈகோ' வந்துவிடும். படிப்பு வேறு; பக்தி வேறு! படித்துப் பட்டம் வாங்கும்வரை பக்தியை மனதுக்குள் மட்டும் நிறுத்திக்கொண்டு, படிப்பில் முழுக்கவனம் செலுத்தவும்! தனுசு ராசிக்கு ஜென்மச்சனி இருப்பதால் படிப்பில் தடை வரலாம். ஆர்வமும் அக்கறையும் தேவை. முயற்சி இருந்தால் முன்னேறலாம். ● ஆர். ஜெயசரசுவதி, திருச்சி- 102.

ராமச்சந்திரன் (கணவர்) ஜாதகமும், எனது மகனின் ஜாதகமும், எனது ஜாத கமும் அனுப்பியுள்ளேன். ஏற்கெனவே கேள்வி கேட்டேன். சர லக்னத்துக்கு 11-ஆமிடமும், ஸ்திர லக்னத்துக்கு 9-ஆமிடமும், உபய லக்னத்துக்கு 7-ஆமிடமும் பாதகஸ்தானம். 4-ஆமிடம் தகப்பனார் ஸ்தானம், 7-ஆமிடம் களஸ்திர ஸ்தானம், 11-ஆமிடம் லாபஸ் தானம். இவற்றை பாதிக்குமா? அதேசமயம் பாதகாதிபதிகளே யோகாதி பதிகளாக வருவார்கள் அல்லவா? அப்படி வரும்போது, அந்த கிரகம் தமது தசாபுக்திகளின் காலத்தில், அந்த பாதகாதிபத்திய பலனைச் செய்வார்கள் அல்லவா? மேற்படி பாதகஸ்தானத்தில் வேறு ஏதாவது ஒரு கிரகம் இருந்தால், அந்த பாதகத் தன்மை அந்த இடத்தில் இருக்கும் கிரகத்துக்குப் போய்விடும் என்று முன்பு எழுதியிருந்தீர்கள். இன்னும் எனக்கு சரியான விடை கிடைக்க வில்லையே?

உங்களின் கேள்வியிலேயே அதற்கான பதில் அடங்கியுள்ளது. ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் படித்து சிந்தியுங்கள்; விடை கிடைக்கும்.

● ஆர். முனுசாமி, புதுச்சேரி.

எனது மகனுக்கு தற்போது 38 வயதா கிறது. ஏழு ஆண்டுகளாக முயற்சி செய்தும்- பல பெண் ஜாதகங்கள் வந்தும் திருமணம் தள்ளிப்போகிறது. எல்லாருக்கும் கவலை! ஒரு நல்ல வழிகாட்டவும்.

மகர லக்னம். 7-ல் செவ்வாய்- ராகு. செவ்வாய் நீசம். லக்னத்தில் கேது. களஸ்திரகாரகன் சுக்கிரன் கன்னியில் நீசம். 7-க்குடைய மனைவி ஸ்தானாதிபதி சந்திரன் 8-ல் மறைவு (சிம்மத்தில்); 8-க்குடைய சூரியனுடன் சம்பந்தம். அவர் ஜாதகத்தைப் பொருத்தம் பார்க்கும்போது எல்லா ஜோதிடர் களும் குமரனுக்கு களஸ்திரதோஷம் இருப் பதாகவும், மனைவி இறந்துவிடுவார் என்றும் கூறியிருப்பார்கள். ஆகவே, நல்ல இடமாகத் தெரிந்தாலும் முடியாமல் தள்ளிப்போகும். அதற்காக பயந்து, மனமொடிந்துவிடாதீர்கள். குமரனுக்கென்று ஒரு பெண் பிறந்து எங்கேயோ வளர்ந்துவருகிறாள். உரிய காலம் வரும்போது உங்கள் கண்ணுக்குத் தெரிவாள். அப்படித் தெரியவும், நிச்சயம் செய்யவும், கல்யாணம் நடக்கவும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல் 99942 74067) குமரனை அழைத்துப்போய் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்யவேண்டும். (புத்தாடை உடுத்தி). தைப்பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையன்று ஆகாத போகாத கழிவுகளையெல்லாம் சேகரித்து எரித்துவிடுகிறோம் அல்லவா? அதுபோல கிரக தோஷங்களையும், மற்ற தோஷங்களையும் அக்னிகாரியம் ஹோமம் வளர்த்து எரித்துவிடவேண்டும். நீரும் நெருப் பும்தான் நம் வினைப்பயனைப் போக்கும். (ஹோமம்- நெருப்பு, அபிஷேகம்- நீர். கங்கை நீரில் பாவம் கரைந்துவிடுவதுபோல).