● குருசாமி கண்ணன், நாலாட்டின்புத்தூர்.

சனிக்கிழமை வந்தால் முதலில் "பாலஜோதிடம்' வாங்கிப் படித்துவிட்டுதான் மற்ற வேலைகளைத் தொடங்குவேன். நீங்கள் கணித்து எழுதுவது எனக்குச் சரியாக இருந்துவருகிறது. நான் சிறு தொழில் எதுவும் தொடங்கலாமா? எந்த மாதிரி தொழில் தொடங்கினால் நன்றாக இருக்கும்? என் மகள் மகேஸ்வரி பி.எஸ்.ஸி. படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அரசாங்க வேலைக்கு வாய்ப்பு இருக்கிறதா? மகளுக்குத் திருமணம் எப்போது நடைபெறும்? எப்படிப்பட்ட வரன் அமையும்?

உங்களுக்கு அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னம். ஜாதகத்தில் செவ்வாய் தசை இருப்பு எவ்வளவு என்று எழுதவில்லை. அதனால் சனி தசை, சுயபுக்தி முடிந்துவிட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. சுயபுக்தி முடியவில்லை என்றால் சொந்தத் தொழில் எதுவும் செய்யக்கூடாது. சுயபுக்தி முடிந்துவிட்டதென்றால் சிறுதொழில் செய்யலாம். கடன் வாங்கி முதலீடு செய்யலாம். மகளுக்கு உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னம். 2018 செப்டம்பரில் 25 வயது முடிந்து 26 தொடங்கும். 19 வயதுமுதல் ராகு தசை. ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு (13-2-2019) அரசு வேலை அல்லது இப்போதுள்ள வேலையைவிட மிக நல்ல வேலை, நல்ல சம்பளம் அமையும். 27 வயது முடிந்தபிறகு 28 முதல் திருமண யோகம் வரும். 30-க்குள் முடிக்கலாம். திருமணப் பேச்சு தொடங்குவதற்கு முன்பு மகேஸ்வரிக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும், காமோகர்ஷண ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்யவேண்டும். நல்ல வரனும், நல்ல மணவாழ்க்கையும் அமையும்.

● வி.பி. பால்ராஜ், சிவகாசி.

Advertisment

எங்கள் மகன் சிவசங்கர் பி.ஈ., சிவில் முடித்துள்ளான். மேற்கொண்டு எம்.ஈ. படிக்கலாமா? அல்லது வேலைக்குப் போகலாமா? அரசு வேலை கிடைக்குமா?

சிவசங்கர் மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம், மகர லக்னம். 26-3-2019 வரை ராகு தசை. அதன்பிறகு குரு தசை. குரு ஜென்ம லக்னம் (மகரத்தில்) நீசம். அவருக்கு வீடு கொடுத்த சனி மீனத்தில் பரிவர்த்தனை. அதனால் தொடர்ந்து எம்.ஈ., படிக்கலாம். 2021-க்குமேல் தனியார் வேலை அமையும். வெளிநாடு போகலாம்.

● எம்.என். குணசேகரன், திருவலம்.

Advertisment

எனது மகன் கவியரசன். பி.ஈ., பட்டம் பெற்று சொந்தமாகத் தொழில் செய்கிறார். என் மனைவி- மகன்- நான் மூவரும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம். என் மகனுக்குத் திருமணமே நடக்கமுடியாதபடி பல தடைகள் ஏற்படுகின்றன. என் மனைவியின் எல்.ஐ.சி. முகவர் தொழிலும் திருப்திகரமாக இல்லை. எப்போது நிவர்த்தி ஏற்படும்?

குணசேகரன் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மேஷ லக்னம். சசிகலா திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னம். கவியரசன் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னம். ஒரே குடும்பத்தில் ராகு- கேது- சனியின் நட்சத்திரங்கள் ஒரே மாதிரியாக அமைந்தால் நன்மைகள் தாமதமாகும். திருவாதிரை, சுவாதி, சதயம்- ராகுவின் நட்சத்திரங்கள். அஸ்வினி, மகம், மூலம்- கேதுவின் நட்சத்திரங்கள். பூசம், அனுஷம், உத்திரட்டாதி- சனியின் நட்சத்திரங்கள். இப்படியிருந்தால் ஒரேசமயம் ஒரே தசாபுக்திகள் நடக்கும். குணசேகரனுக்கு 2016 முதல் சுக்கிர தசை, தனது புக்தி. சசிகலாவுக்கு 2017 முதல் கேது தசை. கவியரசனுக்கு 2020 ஜனவரி வரை குரு தசையில் ராகு புக்தி. ஏழரைச்சனி, அட்டமச்சனி போன்றவை வந்தால் ஒரேசமயம் சேர்ந்து மூவருக்கும் நடக்கும். 2020-க்குமேல் கவியரசனுக்குத் திருமண யோகம் அமையும். அதனால் மூவரும் காரைக்குடி அருகில் வேலங்குடியில் வயல்நாச்சியம்மன் கோவிலில் சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், மேலும் விஜயலட்சுமி, தன்வந்திரி, நவகிரகம், மிருத்யுஞ்சய ஆயுஷ்ஹோமம் உள்பட 18 முதல் 19 வரையிலான ஹோமங்கள் செய்து மூவருக்கும் கலச அபிஷேகம் செய்யவேண்டும். மூவரும் புதுஆடை உடுத்தி, ஹோமம் முடிந்து, கலச அபிஷேகம் செய்த பிறகு ஈரஉடைகளை தானம் செய்துவிட்டு மாற்றுடை (சலவை செய்தது) அணியலாம். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு செய்யவும். கவியரசனுக்கு நல்ல மணவாழ்க்கை, நல்ல வாரிசு, தொழில் மேன்மை ஏற்படும். மூவருக்கும் ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம், ஆனந்தமான வாழ்வு, முன்னேற்றம், மகிழ்ச்சி உண்டாகும்.

● ஏ. லோகநாதன், சென்னை-39.

hanuman-ram

என் மகன் கார்த்திக் 35 வயது. இதுவரை திருமணமாகவில்லை. எப்போது நடக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? இன்னும் நல்ல வேலையும் அமையவில்லை. மனைவிக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கிறது. எப்போது குணமாகும்?

கார்த்திக் புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, துலா லக்னம். லக்னத்தில் சனி, சுக்கிரன். 2-ல் கேது, 8-ல் ராகு. 2025 வரை புதன் தசை. மூத்த சகோதரிகள் இருவருக்கும் திருமணம் முடிந்திருக்கும். கார்த்திக்குக்கு களஸ்திர தோஷமும், நாகதோஷமும் கடுமையாக உள்ளது. ராசிக்கு 7-ஆம் இடத்தை சனியும், செவ்வாயும் பார்ப்பது தோஷம். கலப்புத் திருமணம், காதல் திருமணம் நடக்கவும் அல்லது விதவைத் திருமணம் நடக்கவும் இடமுண்டு. இவையெல்லாம் விலகவும், உங்கள் சமூகத்திலேயே நல்ல பெண் அமையவும் காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 94067-ல் தொடர்புகொண்டு பேசுங்கள். 18 அல்லது 19 வகையான ஹோமங்கள் செய்து உங்கள் மூவருக்கும் கலச அபிஷேகம் செய்யப்படும். நல்ல வேலை, வருமானம், சம்பாத்தியம், வாரிசு, ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம் ஆகிய நன்மைகள் உண்டாகும். ஐந்து சிவாச்சாரியார்கள் மூன்று மணிநேரம் 108 வித சமித்துகள் கொண்டு முறையாகச் செய்வார்கள்.

● ஆர். மோகன், தி. நகர்.

என் மகன் நாராயணன் பிடெக்., எம்.எஸ். முடித்து அமெரிக்காவில் வேலை செய்கிறார். தற்காலிக வேலை. எங்களுக்கு ஒரே மகன். யு.எஸ்.ஸில் வேலை பார்க்கும் ஐயங்கார் பெண் தேடுகிறோம். அமையவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

நாராயணன் கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி. 40 வயது வரை ராகு தசை. தற்போது 28 வயதுதான் நடக்கிறது. மகர லக்னத்தில் ராகு, 7-ல் சூரியன் (அட்டமாதிபதி), புதன் (6-க்குடையவர்) இவர்களோடு கேதுவும் இருப்பது கடுமையான தோஷம். 30 வயது முடிந்த பிறகுதான் திருமண யோகம் வருகிறது. தருமபுரி மாவட்டம், வேப்பிலை ஊராட்சி, வே. முத்தம்பட்டி-635 301 சென்று லட்சுமிநரசிம்மரை வழிபடவும். புற்று வடிவ நரசிம்மர், சுயம்பு. ஆதிசேஷன் கீழே உள்ளார். சதீஷ்குமார், செல்: 96265 75496-ல் தகவல் தெரிவிக்கலாம். சேலம்- தொப்பூர் சாலையில் முத்தம்பட்டி கிராமம் உள்ளது. இத்தலத்துக்கு அருகில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீர ஆஞ்சனேயரையும் வழிபடலாம்.

● அருண்பிரசாத், கோவில்பாளையம்.

தங்களின் கேள்வி- பதில் பகுதி. என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தங்களின் இறைச்சேவை பல ஆண்டுகள் நீடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன். வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன். நான் தாய்- தந்தை, நான்கு சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்கிறேன். மளிகைக்கடை தொழில்! எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். இத்தனை நாள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்துவிட்டேன். இனி இரண்டு பெண் குழந்தைகளையும் கட்டிக்கொடுத்து, சீர்வசதி செய்து தரவேண்டும். அதனால் தனியாகச் சென்று தொழில் தொடங்கினால் வெற்றிபெற முடியுமா? வீடு கட்டும் யோகம் உண்டா?

சிம்ம லக்னம், பரணி நட்சத்திரம், மேஷ ராசி. 2019 எப்ரல் வரை ராகு தசை. அடுத்துவரும் குரு தசையில் தனித்தொழில் தொடங்கலாம். சுயபுக்தி இரண்டு வருடம் சுமாராக இருக்கும். பிறகு துரித வேகமாக இருக்கும். தொழில் தொடங்கும் முன்பாக திருவாரூர் மடப்புரம் பகுதியில் குரு தட்சிணாமூர்த்தி மடம் சென்று பிரார்த்தனை செய்யவும்.

● டி. முத்தாத்தாள், சேலம்-4.

நானும் என் கணவரும் 26 வருடங்களாகப் பிரிந்து வாழ்கிறோம். இரண்டு பையன்கள். திருமணம் ஆயிற்று. இரண்டு பேரன், பேத்தி உண்டு. எனக்கு 33 வயதாகும்பொழுது பிரிந்தோம். காரணமே இல்லாமல் வெறுப்பு, சண்டை. பிறகு 17 வருடம் தாயார் வீட்டில் வாழ்ந்தோம். (நானும் பிள்ளைகளும்). இப்போது மகன்கள் இருவருக்கும் திருமணமானதால் இருவரையும் சார்ந்து வாழ்கிறேன். என் மகள்கூட என் கணவரிடம் இருவரும் கடைசிக்காலத்தில் சேர்ந்திருங்கள் என்கிறாள். என் கணவர் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறார். ஹோட்டல் சாப்பாடு அவருக்கு ஒத்துக்கொள்ளாது என்றாலும் பிடிவாதமாக இருக்கிறார். எனக்கு கணவருடன் சேர்ந்து வாழும் பாக்கியம் உண்டா?

தியாகராஜன் (கணவர்) மூல நட்சத்திரம், தனுசு ராசி. முத்தாத்தாள் (மனைவி) பூச நட்சத்திரம், கடக ராசி. இருவரும் சஷ்டாஷ்டக ராசி. 6 ஷ் 8 எப்படி இந்த ஜாதகங்களை இணைத்தார்கள்? கடைசிவரை சேர்ந்துவாழ முடியாது. சேர்ந்தால் முத்தாத்தாளுக்குதான் சித்திரவதை! பிள்ளைகளிடம் சொல்லி முத்தாத்தாள் முதியோர் இல்லத்தில் சரண் அடைவதே நல்லது. அல்லது யாராவது ஒரு பேரனைப் பார்த்துக்கொண்டு எஞ்சிய காலத்தை ஓட்டலாம்.