ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-78

● ஏ. அசோக், திருநெல்வேலி.

எனது குடும்ப வாழ்க்கை மிகவும் துன்ப மாக உள்ளது. ஒரு ஆன்மிக குருவைத் தேடிக்கொண்டிருக்கிறேன். குருவை எப்போது காண்பேன்?

குருவருளும் திருவருளும் உங்களுடைய பிரார்த்தனை பலத்தாலும், விடாமுயற்சி- வைராக்கிய சாதனையாலும்தான் அமையும். குரு துரோணாச்சாரியார் அரச பரம்பரையினருக்கு மட்டுமே வில்வித்தையைக் கற்றுக் கொடுத்தவர். குடிமகன் ஏகலைவனுக்கு வித்தை கற்றுக்கொடுக்க மறுத்துவிட்டார். அதற்காக அவன் மனம் தளரவில்லை. துரோணரை மானசீக குருவாக மதித்து, சுயமுயற்சியிலேயே அர்ஜுனனை மிஞ்சிய வில்லாளியாகிவிட்டான். அர்ஜுனனுக்கு இது பொறுக்கவில்லை. குருவிடம்போய் முறையிட்டான். துரோணர் ஏகலைவனிடம் குருகாணிக்கையாகக் கட்டை விரலைக் கேட்டார். அவனும் மனமுவந்து கட்டைவிரலை வெட்டிக் கொடுத்துவிட்டான். (வில்- அம்பைத் தொடாதபடி). இது அர்ஜுன னும் துரோணரும் செய்த சதி! பாரதத்தில் ஏகலைவன் மதிப்பு உயர்ந்துவிட்டது. துரோண ரும் அர்ஜுனனும் அந்த பாவச்செயலுக்கு தண்டனை அடைந்துவிட்டார்கள். பாரத யுத்தத்தில் துரோணர்- கண்ணன் திருவிளை யாடலால், மகன் அஸ்வத்தாமா இறந்துவிட்ட தாகக் கருதி, வில்லை தூக்கியெறிந்துவிட்டு போரிலிலிருந்து விலகிவிட்டார் துரோணர். உண்மையில் இறந்தது அஸ்வத்தாமா என்ற யானை! அதேபோல அர்ஜுனனும் ஆசைமகன் அபிமன்யுவைப் பறிகொடுத்தான். ஆக, இதிலிருந்து ஒரு உண்மையை உணரவேண்டும். தர்மத்துக்குப் புறம்பாக அதர்மம் எப்போதும் ஜெயிக்காது. அதர்மத்தால் அடையும் வெற்றி நிலைக்காது. மனதுக்கு சாந்தியை அளிக்காது!

● வி சேகர், பெரணமல்லூர்.

ஜோதிடவித்தகருக்கு வணக்கம்! எனது மகள் நிர்மலாதேவிக்கு (மருமகன் பிரபு) 3-12-2008-ல் திருமணம் நடந்து, இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தவன் குவலேஷ். (வயது 11). இளையவன் சர்வேஷ். (வயது 7). மகளுக்கும் மருமகனுக்கும் அடிக்கடி சண்டை வரும்போது, மகள் ஒரு வாரமாக சாப்பிடாமல் இருப்பாள். கணவருடன் பேசாமல் இருப்பாள். ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பிரச்சினையால் கணவன்- மனைவிக்குள் சண்டை வந்துவிடும். பேரன்கள் இருவரும் செல்போன், லேப்டாப் என்று ஏதாவது ஒரு பொருளுக்காக விட்டுக்கொடுக்காமல் சண்டை போட்டுக்கொள்வார்கள். இதற்குப் பரிகாரம் உண்டா?

மகள் நிர்மலாதேவி (வயது 32) அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னம். மருமகன் பிரபு (34) ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னம். இருவருக்கும் லக்னம் ஆறு- எட்டாக இருந்தாலும், ராசி திரிகோண மாகவும் (விருச்சிகம், கடகம்), வசியப் பொருத்தமாகவும் இருப்பதால், பிரிவு- பிளவுக்கு இடமில்லை. நிர்மலாதேவிக்கு 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனி. (விருச்சிக ராசிக்கு). தற்போது பிரபுவின் ரிஷப லக்னத்துக்கு 8-ல் சனி, கேது. 2-ல் ராகு. எனவே வாக்கு வாதங்களும், அனுசரித்து விட்டுக்கொடுக்காத ஈகோவும் இருக்கத்தான் செய்யும். மேலும் இரண்டு மகன்களுக்கும் ஆயுள், ஆரோக்கியம், கல்வி யோகத்திலும் பிரச்சினை இல்லை. ஆனால் நிர்மலாதேவி- பிரபு திருமணத்தேதி எண் 3. கூட்டு எண் 7. இதுதான் பிரச்சினைகளை உருவாக்குகிறது. 4, 5, 7, 8 எண்களில் திருமணம் நடந்தாலே வம்புதான். தேதி எண் 3- குரு என்பதால், மாங்கல்யம், ஆயுள் தீர்க்கம், ஆண் வாரிசு யோகம் அமைந்துவிட்டது. அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் அன்யோன்யமும், மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படவேண்டுமானால், இரண்டு பரிகாரம் செய்யவேண்டும். முதலாவது 7-ஆம் எண் (கூட்டு எண்ணில்) தேதியில் கட்டிய மாங்கல்யத்தை கோவில் உண்டியலிலில் செலுத்தி அல்லது அந்த மாங்கல்யத்தை அழித்துப் புதுமாங்கல்யம் செய்து 1, 3, 6 வரும் தேதிகளில் மறுமாங்கல்யம் அணிவிக்கவேண்டும். அடுத்து புதுமாங்கல்யம் அணிந்தபிறகு, லக்ன சஷ்டாஷ்டக தோஷநிவர்த்திக்கும், நிர்மலாதேவியின் ஏழர

● ஏ. அசோக், திருநெல்வேலி.

எனது குடும்ப வாழ்க்கை மிகவும் துன்ப மாக உள்ளது. ஒரு ஆன்மிக குருவைத் தேடிக்கொண்டிருக்கிறேன். குருவை எப்போது காண்பேன்?

குருவருளும் திருவருளும் உங்களுடைய பிரார்த்தனை பலத்தாலும், விடாமுயற்சி- வைராக்கிய சாதனையாலும்தான் அமையும். குரு துரோணாச்சாரியார் அரச பரம்பரையினருக்கு மட்டுமே வில்வித்தையைக் கற்றுக் கொடுத்தவர். குடிமகன் ஏகலைவனுக்கு வித்தை கற்றுக்கொடுக்க மறுத்துவிட்டார். அதற்காக அவன் மனம் தளரவில்லை. துரோணரை மானசீக குருவாக மதித்து, சுயமுயற்சியிலேயே அர்ஜுனனை மிஞ்சிய வில்லாளியாகிவிட்டான். அர்ஜுனனுக்கு இது பொறுக்கவில்லை. குருவிடம்போய் முறையிட்டான். துரோணர் ஏகலைவனிடம் குருகாணிக்கையாகக் கட்டை விரலைக் கேட்டார். அவனும் மனமுவந்து கட்டைவிரலை வெட்டிக் கொடுத்துவிட்டான். (வில்- அம்பைத் தொடாதபடி). இது அர்ஜுன னும் துரோணரும் செய்த சதி! பாரதத்தில் ஏகலைவன் மதிப்பு உயர்ந்துவிட்டது. துரோண ரும் அர்ஜுனனும் அந்த பாவச்செயலுக்கு தண்டனை அடைந்துவிட்டார்கள். பாரத யுத்தத்தில் துரோணர்- கண்ணன் திருவிளை யாடலால், மகன் அஸ்வத்தாமா இறந்துவிட்ட தாகக் கருதி, வில்லை தூக்கியெறிந்துவிட்டு போரிலிலிருந்து விலகிவிட்டார் துரோணர். உண்மையில் இறந்தது அஸ்வத்தாமா என்ற யானை! அதேபோல அர்ஜுனனும் ஆசைமகன் அபிமன்யுவைப் பறிகொடுத்தான். ஆக, இதிலிருந்து ஒரு உண்மையை உணரவேண்டும். தர்மத்துக்குப் புறம்பாக அதர்மம் எப்போதும் ஜெயிக்காது. அதர்மத்தால் அடையும் வெற்றி நிலைக்காது. மனதுக்கு சாந்தியை அளிக்காது!

● வி சேகர், பெரணமல்லூர்.

ஜோதிடவித்தகருக்கு வணக்கம்! எனது மகள் நிர்மலாதேவிக்கு (மருமகன் பிரபு) 3-12-2008-ல் திருமணம் நடந்து, இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தவன் குவலேஷ். (வயது 11). இளையவன் சர்வேஷ். (வயது 7). மகளுக்கும் மருமகனுக்கும் அடிக்கடி சண்டை வரும்போது, மகள் ஒரு வாரமாக சாப்பிடாமல் இருப்பாள். கணவருடன் பேசாமல் இருப்பாள். ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பிரச்சினையால் கணவன்- மனைவிக்குள் சண்டை வந்துவிடும். பேரன்கள் இருவரும் செல்போன், லேப்டாப் என்று ஏதாவது ஒரு பொருளுக்காக விட்டுக்கொடுக்காமல் சண்டை போட்டுக்கொள்வார்கள். இதற்குப் பரிகாரம் உண்டா?

மகள் நிர்மலாதேவி (வயது 32) அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னம். மருமகன் பிரபு (34) ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னம். இருவருக்கும் லக்னம் ஆறு- எட்டாக இருந்தாலும், ராசி திரிகோண மாகவும் (விருச்சிகம், கடகம்), வசியப் பொருத்தமாகவும் இருப்பதால், பிரிவு- பிளவுக்கு இடமில்லை. நிர்மலாதேவிக்கு 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனி. (விருச்சிக ராசிக்கு). தற்போது பிரபுவின் ரிஷப லக்னத்துக்கு 8-ல் சனி, கேது. 2-ல் ராகு. எனவே வாக்கு வாதங்களும், அனுசரித்து விட்டுக்கொடுக்காத ஈகோவும் இருக்கத்தான் செய்யும். மேலும் இரண்டு மகன்களுக்கும் ஆயுள், ஆரோக்கியம், கல்வி யோகத்திலும் பிரச்சினை இல்லை. ஆனால் நிர்மலாதேவி- பிரபு திருமணத்தேதி எண் 3. கூட்டு எண் 7. இதுதான் பிரச்சினைகளை உருவாக்குகிறது. 4, 5, 7, 8 எண்களில் திருமணம் நடந்தாலே வம்புதான். தேதி எண் 3- குரு என்பதால், மாங்கல்யம், ஆயுள் தீர்க்கம், ஆண் வாரிசு யோகம் அமைந்துவிட்டது. அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் அன்யோன்யமும், மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படவேண்டுமானால், இரண்டு பரிகாரம் செய்யவேண்டும். முதலாவது 7-ஆம் எண் (கூட்டு எண்ணில்) தேதியில் கட்டிய மாங்கல்யத்தை கோவில் உண்டியலிலில் செலுத்தி அல்லது அந்த மாங்கல்யத்தை அழித்துப் புதுமாங்கல்யம் செய்து 1, 3, 6 வரும் தேதிகளில் மறுமாங்கல்யம் அணிவிக்கவேண்டும். அடுத்து புதுமாங்கல்யம் அணிந்தபிறகு, லக்ன சஷ்டாஷ்டக தோஷநிவர்த்திக்கும், நிர்மலாதேவியின் ஏழரைச்சனியின் பாதிப்பு விலகுவதற்கும், குவலேஷ்- மகர ராசிக்கு ஏழரைச்சனியின் சங்கடம் தீரவும், சர்வேஷுக்கு 11 வயதுவரை நடக்கும் கேது தசையின் கெடுதல் விலகவும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) 19 வகையான ஹோமங்கள் செய்து, நான்குபேரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். மேற்படி ஹோமங்களில் அனைவருடைய ஆரோக்கியம், ஆயுள், பொருளாதார வளர்ச்சி, பிள்ளைகளின் படிப்பு, முன்னேற்றம், கடன்நிவர்த்தி ஆகிய பலன் அடங்கும். செலவைப் பார்க்காமல் விடுமுறையில் போய் ஹோமம் செய்யவும்.

● ஜீ. ஸ்ரீரெங்கநாதன், உறையூர்.

மானசீக குருவுக்கு வணக்கம்! எனது சகலையின் பேத்தி ஜாதகத்தை கே.எம். சுந்தரத்திடம் கணித்து அனுப்பியுள்ளேன். அந்த ஜாதகத்தில் நாகதோஷம், சனி தோஷம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். குரு, சனி வக்ரம். எதிர்காலம் எப்படி யிருக்கும்?

பேத்தி வைஷ்ணவிக்கு 2020 பிப்ரவரியில் நான்கு வயது முடியும். மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். 12 வயது, ஐந்து மாதம்வரை குரு தசை. மேஷ லக்னம். பாக்கியாதிபதி தசை யோகமான தசைதான். வக்ரத்தில் உக்ரபலம் என்ற விதிப்படி, நடக்கும் குரு தசையும், அடுத்துவரும் சனி தசையும் (வக்ர தசை) நல்ல பலனையே தரும். குரு மேஷ லக்னத்துக்கு பாக்கியாதிபதி, சனி 10-க்குடைய ஜீவனாதிபதி. ஆக, 31 வயதுவரை (சனி தசை முடியும்வரை) யோகதசை. லக்னத்துக்கு 7-ல் செவ்வாய் இருந்தாலும் லக்னாதிபதிக்கு தோஷமில்லை. 8-ல் சனி நிற்பது ஒருவகையில் திருமணத்தடை அல்லது தாமதத்தைத் தரும். அதைப்பற்றி இப்போது கவலைப்படவேண்டாம். 24 வயதுக்கு மேல் திருமணயோகம் அமையும். அக்காலம் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம் வரகலா ஹோமமும் செய்து, வைஷ்ணவிக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். அதுவரை படிக்கட்டும்; வேலைக்குப் போகட்டும். 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி வரும். பேத்திக்கு அட்டமச்சனி ஆரம்பம். அப்போது ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், நீலுசரசுவதி ஹோமம், வாக்வாதினி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம் செய்து, வைஷ்ணவிக்கு கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். அப்போது அவர் அண்ணனுக்கும் சேர்த்து ஹோமம், அபிஷேகம் செய்யலாம்.

● பெ. ரவி, கோவை.

எனது மகள் அனுசுயா தேவிக்கு எப்போது திருமணம் நடக்கும்?

அனுசுயா உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னம். 2020 ஜனவரியில் 27 வயது முடிந்து 28 ஆரம்பம். மகரச் சனியை மிதுனச் செவ்வாய் பார்ப்பது தோஷம். எனவே 30 வயதுவரைகூட திருமணம் தாமதமாகலாம்; தடைப்படலாம். மேலும், ஜாதகி ஒரே பெண். ங.நஸ்ரீ., ங.டட்ண்ப்., பட்டம் பெற்று முனைவர் ஆய்வுப்பட்டமும் பெற்றவர். 7-க்குடைய சனி 6-ல் மறைவதோடு, செவ்வாயும் சனியைப் பார்ப்பதால், காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து, அனுசுயாவுக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். இத்துடன் சுமார் 19 வகையான ஹோமம் செய்யவேண்டும். காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) மேற்படி ஹோமம் செய்தால், மகளுக்குச் சமமான அல்லது அதற்கு மேலான படிப்பு, பட்டம் பெற்ற மாப்பிள்ளை அமைவது உறுதி. 28 வயது முடியும்முன்பே அவருக்கேற்ற மாப்பிள்ளை அமைவார். திருமணமும் சிறப் பாக, திருப்தியாக நடக்கும். இருவரும் வேலைக்குப் போவார்கள்.

● டாக்டர். தியாகராஜன், அருப்புக்கோட்டை.

3-12-2019-ல் எழுதிய கடிதத்துக்கு 3-1-2020 இதழில் பதில் எழுதியமைக்கு நன்றி! அடியேன் "பாலஜோதிட'த்தின் நீண்டகால வாசகன்! ஒரு வாசகரை எத்துணை மட்டம்தட்டி எழுதமுடியுமோ அப்படித் திட்டித் தீர்த்திருக்கிறீர்கள். தகவலைத் தெரிவிப்பதற்கு துண்டுப் பிரசுரத்தை உபயோகிக்கக்கூடாதா? இதை சிக்கனம் என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? சாக்கடை நீரில் கிடந்த இரண்டு அங்குலப் பென்சிலை அருவறுப்பின்றி தன் கைகளால் எடுத்துத் துப்புரவாக்கி, "ஒரு ஏழைமாணவனுக்கு இது உதவக்கூடியது' என்றுரைத்த அண்ணல் காந்தியடிகளைத் தங்களுக்கு நினைவுகூர்கிறேன். அடியேன் செயலைக் கஞ்சத்தனம் என்று கடிந்ததோடு, "மறுபிறப்பில்லாத வீடுபேறு பற்றி கனவுகாண்கிறீர்கள்' என்றும் எள்ளி நகையாடியிருக்கிறீர்கள். அடியேன் 1980-ல் அலங்கியம் தவத்திரு இரத்தின சற்குருவிடம் ஆத்மஞான தீட்சை பெற்றவன். சற்குருவின் அருள்வாக்கால் மறுபிறவி அற்றவன் என்று மொழியப் jபெற்றவன். மற்றும் திருவண்ணாமலையில் 2016-ஆம் ஆண்டு திருக்கயிலாயப் பரம்பரை துளாவூர் ஆதீனகர்த்தரிடம் அடியேன் சிவ தீட்சையும் பெற்றுள்ளேன். தங்களை மானசீக குருவாகப் போற்றி, வணங்கிவரும் ஜோதிடசிகாமணி ஆதித்ய குருஜி அவர்கள் அண்மையில் அடியேனின் ஜாதகக்குறிப்பை ஆய்வுசெய்து தெரிவித்த பலாபலன்களை ஜெராக்ஸ் எடுத்து தங்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். கடிதத்தில் ரூ.100/- வைத்தது சத்தியம்! பொய்யுரைக்கவில்லை. இக்கடிதத்துக்கு தங்களிடமிருந்து பதில் வருமென்று அடியேன் எதிர்பார்க்கவில்லை. எனினும் அடியேன் உள்ளக் கிடக்கையை- உண்மையை உணர்த்திவிட்ட திருப்தி போதும். கேள்வி கேட்பவர் ஜாதகச் சக்கரத்திலுள்ள கோள்களின் நிலைகளைக்கணித்து, பலாபலன்களைத் தெரிவிப்பதற்குப் பதிலாக, தேவையற்ற வார்த்தை சிலம்பமாடிக் காயப்படுத்தியுள்ளீர்கள்- எண்பத்து மூன்று அகவை நிரம்பிய ஒரு சிவனடியாரை.

உங்கள் உள்ளத்தைப் புண்படுத்துவது என் நோக்கமல்ல. சிவனடியார் என்றும், சிவதீட்சை பெற்றவர் என்றும் பெருமைப்படும் தாங்கள் "சிறியோர் செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வது பெரியோர் கடன்' என்பதை மறந்துவிட்டீர்களா? 83 வயது பெரியவர் என்பதற்காகவும், சிவனடியார் அல்லது சிவதீட்சை பெற்றவர் என்பதற்காகவும், "எருமை மாட்டான் கருணை காட்டமாட்டான்' என்றோ, "வரமாட்டான்' என்றோ சொல்லமுடியுமா? அடியேனும் உங்கள் வயதினைவிட சீனியர்தான். அடியேனும் 45 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளத்தூர் குருநாதரிடம் தீட்சைபெற்று சிவபூஜை செய்கிறவன்தான். தாங்கள் ரூ.100/- கவரில் வைத்தது சத்தியமென்றால், கவரில் அந்தப் பணம் இல்லையென்பதும் சத்தியத்திலும் சத்தியம். சிவனுக்கே வெளிச்சம்! முதலில் நோட்டீஸின் பின்பக்கம் கேள்விகேட்ட தாங்கள், இப்போது லெட்டர்பேடில்- முகவரி அச்சடித்த தாளில் எழுதியுள்ளீர்களே! 16-7-2019 "மாலை மலரி'ல் ஜோதிடக்கலையரசு ஆதித்ய குருஜி எழுதியபடி, 2021-ஆம் ஆண்டு ஜுலை அல்லது ஆகஸ்டில் உங்களின் நல்முடிவு அமையும். அவர் கணிப்பு பொய்யாகாது. "உறங்குவது போலும் சாக்காடு- உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்பது வள்ளுவரின் வாக்கு. கவியரசர் கண்ணதாசன் எழுதியமாதிரி, "வந்தவர் எல்லாம் இந்த பூமியில் நிலைத்துவிட்டால் பூமி தாங்குமா? இறந்தவர்கள் எல்லாம் மோட்சம் அடைந்துவிடுவார்கள் என்றால் ஜனத்தொகையின் கணக்கு ஏன் அதிகரிக்கவேண்டும்? "புல்லாகிப் பூடாகிப் புழுவாகி பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனவிராய்த் தேவராய் செல்லாசு நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்' என்று மாணிக்கவாசகப் பெருமான் பாடுகிறார்! அதாவது ஒரு மனிதன் நல்லவன் என்பதும், அல்லவன் என்பதும் அவனது அந்திமக் கால முடிவின்போது மற்றவர்களின் கணிப்பில்தான் தெரியும். ஏசுநாதரும்- மகாத்மா காந்தியடிகளும் 100-க்கு 100 தூய்மையானவர்கள்தானே! அவர்களின் அந்திமக் காலத்தில் ஏசுநாதருக்கு உயிரோடு சிலுவையில் அறையும் தண்டனையும், காந்தியடிகளுக்கு துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்ட கொடுமையும் ஏன் கிடைக்கவேண்டும்? இதெல்லாம் தெய்வ ரகசியம். அதேசமயம் காந்தியடிகளும் ஏசுபிரானும் "அய்யோ' என்று அலறவில்லை. காந்தியடிகள் "ராம் ராம்' என்று தெய்வ சிந்தனையாக வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டார். ஏசுபிரான் "அறியாமல் செய்யும் இவர்களை மன்னியுங்கள்' என்று பிரார்த்தித்தார். நம்மைப் போன்ற ஆசாபாசம் உடையவர்களுக்கு அந்திமக் காலத்தில் கடவுளின் பேரை அழைக்கவேண்டும் என்றுதான் சந்ததிகளுக்கு முருகன், ராமன், கோவிந்தன், கணபதி என்று பெயர் வைத்தார்கள். இப்போது அந்த மரபெல்லாம் மாறிப்போய் நஞ்சு (நஞ்சுண்டான்) என்றும், பாபி (செல்லப்பேர்) என்றும் அழைக்கும் வழக்கமாகிவிட்டது.

● எஸ். சந்திரசேகரன், சென்னை- 23.

எனக்கு 70 வயது. உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம். தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடக்கிறது. எனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து பத்து ஆண்டுகளாகின்றன. அதிலிருந்து அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. எப்போது சீராகும்?

உத்திரட்டாதி சனியின் நட்சத்திரம்; மீனம் குருவின் ராசி; துலாம் சுக்கிரனின் லக்னம். எனவே 80 வயது சதாபிஷேகம் பார்க்கலாம். சந்திர தசையில் ராகு புக்திவரை தேகநலனில் பிரச்சினைகள் இருக்கலாம். திங்கள்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு பால் தந்து அபிஷேகம் செய்யுங்கள். வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு நெய் விளக்கேற்றுங்கள். குரு புக்தி வந்ததும் முழுமையான சுகம் ஏற்படும். சென்னை அருகே திருநின்றவூரில் இருதயாலீஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு சென்று ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும். மனதுக்குள்ளேயே சிவனுக்கு கோவில் கட்டியவர் பூசலார் நாயனார். நெஞ்சில் ஓர் ஆலயம் கட்டி, கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தார். அதேசமயம் காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் காடவர்கோன் இராஜசிம்மன் உண்மையாகவே ஒரு கோவிலைக்கட்டி, கும்பாபிஷேகத்துக்கு அதேநாளைக் குறித்தான். சுவாமி, மன்னன் கனவில் தோன்றி, ""பூசலார் கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் அன்றுதான். எனவே நீ வேறொரு நாள் குறித்துக்கொள்'' என்றார். உடனே மன்னன் பூசலாரை தரிசித்து ஆசிபெறத் தேடிவந்தான். நேரில் வந்தபோது கும்பாபிஷேகம் செய்யும் கோவில் கோபுரம் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தான். கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. மக்களிடம் விசாரித்தான். அவர்கள் ஒரு மரத்தைக் காட்டி, ""மரத்தடியில் ஒரு சந்நியாசி இருக்கிறார். அவர்தான் கோவில் கட்ட விரும்பினார்'' என்றார்கள். மன்னன், தடாகத்திலுள்ள தவளை (மண்டூகம்) தாமரை மலரின் அருமையை உணராது என்று நினைத்து, பூசலார் இருக்குமிடம் சென்று வணங்கினான். அவர் நெஞ்சில் சிவலிங்கம் காட்சியளிப்பதை தரிசனம் செய்து, தாள் பணிந்தான். பின்னர், தான் தரிசித்த காட்சியை அடிப்படையாகக்கொண்டு, அங்கேயே கோவில் எழுப்பினான் மன்னன். அந்த இடமே தற்போதைய திருநின்றவூர், இருதயாலீஸ்வரர் கோவில். மூலஸ்தானத்திலேயே சிவலிங்கத்துக்கு இடதுபாகம் பூசலாருக்கும் ஒருவிக்ரகம் உண்டு. இதயம் சம்பந்தப்பட்ட எல்லாப் பிணி, பீடைகளுக்கும் அங்குசென்று நம்பிக்கையோடு வழிபட்டால் பூரண குணமாகும்.

● பி. சுந்தரம், கோவனூர்.

முப்பது வருடகாலமாக நான் தங்கள் ரசிகன். தாங்கள் எனக்கு பலமுறை பதில் எழுதியுள்ளீர்கள். தங்கள் ஆலோசனைப்படியே இதுவரை நடந்து வருகிறேன். தற்போது என் அத்தை மகன் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். இதுவரை திருமணமாகவில்லை. எப்போது நடக்கும்? அத்தை மகனின் தந்தை இறந்து மூன்று மாதங்களாகின்றன.

நீங்கள் அனுப்பிய ஜாதக ஜெராக்ஸ் தெளிவாக இல்லை. அத்தை மகனா? மகளா என்பதும் தெரியவில்லை. பெயரும் இல்லை. திருப்பதியில் காணாமல்போனவரைக் கண்டுபிடிக்க அடையாளம் கேட்டால், "மொட்டையடித்திருப்பார்' என்று சொன்னால் எப்படி கண்டுபிடிக்க முடியும்? ஊர், பேர் சொல்லவேண்டாமா? ஆணா- பெண்ணா என்ற விவரமும் கூறவேண்டாமா? 40 வயது என்பதால், ஆண் என்று தெளிவாகிறது. கந்தர்வராஜ ஹோமம் செய்யவேண்டும்.

● சி.ஆர்.சி. சேகர், ஆவடி.

என் மகள் பூஜா 10-ஆம் வகுப்பு படிக்கிறாள். பிளஸ் 1-ல் எந்த குரூப் எடுக்கலாம்? மேற்படிப்பு எது படிக்கலாம்? அரசு வேலை கிடைக்குமா?

பூஜா அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னம். 7-12-2004-ல் பிறந்தவர். 2019 டிசம்பரில் 15 வயது முடிந்து 16 ஆரம்பம். 11 வயதுமுதல் ராகு தசை- 18 வருடம். ராகு 4-ல் கேது சாரம். அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 10-ல் நின்று பார்க்கிறார். அவருடன் சுக்கிரன் ஆட்சி. 9-ல் குருவும் சந்திரனும் சேர்க்கை. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தகவல் தொழில்நுட்பம் படிக்கலாம். உயர்கல்வி யோகம் உண்டு. ராகு தசை நடப்பதால், விரும்பினால் மருத்துவத்துறையில் படிக்கலாம். 8-க்குடைய சூரியன் 6-க்குடைய புதனோடு சேர்க்கை. புதன் 9-க்குடையவர் என்பதால் அரசு வேலை பார்க்கலாம். ந. டஞஞஓஆஆ என்று ஒரு "ஆ' சேர்க்கவும்.

● பி. சுந்தரம், கோவனூர்.

28-6-2019 "பாலஜோதிட'த்தில், நான் ஆதீனத்தில் காலத்தைக் கழிக்கலாமே என்று எழுதியிருந்தீர்கள். குருவே, பூர்வீகச் சொத்து உள்ளது; தாய் இருக்கிறார்; சொந்த வீடு உள்ளது; மனைவி இருக்கிறார். பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆதீனம் செல்லாமல் வாழ வழிசொல்லுங்கள். நான் வாழவேண்டும்.

நீங்கள்தான் "எல்லாமிருந்தும், அமைதியில்லை, ஆனந்தமில்லை, வாழவே பிடிக்கவில்லை' என்று எழுதியிருந்தீர்கள். "அப்படியென்றால் ஆதீனத்தில் காலம் கழிக்கலாமே' என்று வழி சொன்னேன். இப்போது மாற்றிப் பேசுகிறீர்களே! ஜோதிடம் என்ன தாய விளையாட்டுமாதிரி என்று நினைத்துவிட்டீர்களா? அல்லது ஆடுபுலியாட்டம் என்று எண்ணிவிட்டீர்களா? உங்கள் நேரத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல், என் நேரத்தையும் வீணடிக்கலாமா?

● தி. பரணிதரன்...

மாமா வீட்டிலிருந்து 10-ஆம் வகுப்புவரை படித்து முடித்து, பிறகு சொந்த வீட்டிலிருந்து படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து படிக்க முடியவில்லை. நான்கு வருடகாலமாக சந்தன காளியம்மனுக்கு கரகம் எடுத்து வருகிறேன். அதில் ஏதாவது குறையா? எதுவரை படிக்கலாம்? அப்பாவும் அம்மாவும் என்னை வெடுவெடுவென்று பேசுகிறார்கள்.

கரகம் எடுப்பதால் உமக்கு பதிலாக சந்தன காளியம்மன் வந்து பரீட்சை எழுதுமா? கரகம் எடுப்பதால், நீங்கள் பக்திமான் என்று தெரிகிறது. அதேசமயம் ஆர்வமாகப் படிக்கவேண்டும். அது உனது கடமை! கரகம் எடுக்கும்போது உனது காலில் மற்றவர்கள் விழுந்து வணங்கி ஆசிபெறுவதால், உனக்கு "ஈகோ' வந்துவிடும். படிப்பு வேறு; பக்தி வேறு! படித்துப் பட்டம் வாங்கும்வரை பக்தியை மனதுக்குள் மட்டும் நிறுத்திக்கொண்டு, படிப்பில் முழுக்கவனம் செலுத்தவும்! தனுசு ராசிக்கு ஜென்மச்சனி இருப்பதால் படிப்பில் தடை வரலாம். ஆர்வமும் அக்கறையும் தேவை. முயற்சி இருந்தால் முன்னேறலாம்.

● ஆர். ஜெயசரசுவதி, திருச்சி- 102.

ராமச்சந்திரன் (கணவர்) ஜாதகமும், எனது மகனின் ஜாதகமும், எனது ஜாதகமும் அனுப்பியுள்ளேன். ஏற்கெனவே கேள்வி கேட்டேன். சர லக்னத்துக்கு 11-ஆமிடமும், ஸ்திர லக்னத்துக்கு 9-ஆமிடமும், உபய லக்னத்துக்கு 7-ஆமிடமும் பாதகஸ்தானம். 4-ஆமிடம் தகப்பனார் ஸ்தானம், 7-ஆமிடம் களஸ்திர ஸ்தானம், 11-ஆமிடம் லாபஸ்தானம். இவற்றை பாதிக்குமா? அதேசமயம் பாதகாதிபதிகளே யோகாதிபதிகளாக வருவார்கள் அல்லவா? அப்படி வரும்போது, அந்த கிரகம் தமது தசாபுக்திகளின் காலத்தில், அந்த பாதகாதிபத்திய பலனைச் செய்வார்கள் அல்லவா? மேற்படி பாதகஸ்தானத்தில் வேறு ஏதாவது ஒரு கிரகம் இருந்தால், அந்த பாதகத் தன்மை அந்த இடத்தில் இருக்கும் கிரகத்துக்குப் போய்விடும் என்று முன்பு எழுதியிருந்தீர்கள். இன்னும் எனக்கு சரியான விடை கிடைக்கவில்லையே?

உங்களின் கேள்வியிலேயே அதற்கான பதில் அடங்கியுள்ளது. ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் படித்து சிந்தியுங்கள்; விடை கிடைக்கும்

bala310120
இதையும் படியுங்கள்
Subscribe