● கோவிந்தராஜன் ராணிப்பேட்டை.

"பாலஜோதிடம்' இதழைப் பல ஆண்டு களாகப் படித்துப் பலனடைந்து வருகிறேன். தங்களின் ஜோதிடத் தொண்டு தொடரவும், மேலும் வளரவும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். என் மகன் ஜாதகப்படி அவனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? தனியார் வங்கியில் பணிபுரியும் அவருக்கு அரசுப் பணி அமையுமா? எப்போது கிடைக்கும்?

கும்ப லக்னம். அதில் சனி (சிம்ம ராசிக்கு 7-ல் சனி). களஸ்திர காரகன் சுக்கிரன் 8-ல் மறைவு; நீசம். 7-க்குடைய சூரியன் கடகத்தில் மறைவு. அந்த வீட்டுக்குடைய சந்திரன் சிம்மத்தில் பரிவர்த்தனை. 2020 ஆகஸ்டில் 26 வயது முடியும். ஜாதகப்படி 30 வயதில்தான் திருமண யோகம் அமைகிறது. 2024 பிப்ரவரி வரை சூரிய தசை. இது முடிந்தபிறகு சந்திர தசையில் திருமணம். அதுவரை பொறுமையாக இருக்கவும்.

● இரா. உதயகுமார், கடலூர்.

Advertisment

என் ஞான ஆசான், குருவாகிய தங்களுக்கு வணக்கம்! எனக்கு ஜோதிடக் கலை ஆர்வம் கைகூடுமா? எனது ஜாத கத்தில் (மிதுன லக்னம்) லக்னத்தில் சனி இருப்பதும், 6-ல் சூரியன், செவ்வாய், புதன், ராகு, சுக்கிரன் மறைவதும் நல்லதா? கெடுதலா? 12-ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பதும், மோட்சம் என்பதும் உண்மையா? சுக்கிரன் 5-க்கு டையவர் அஸ்தமனம் அடைவது கெடு தலா? நல்லதா? பலம் அல்லது பலவீனம் என்ன?

jj

மிதுன லக்னம். அதில் சனி நின்று 7-ஆமிடத் தைப் பார்க்க- அவரை 9-ல் உள்ள குரு பார்க் கிறார். குரு பார்வை லக்னம், ராசி இரண்டுக்கும் கிடைக்கிறது. குரு பார்க்க கோடி தோஷம் விலகும். கோடி நன்மை பிறக்கும். அதனால் உங்களுக்குள்ள எல்லா தோஷங் களும் பலமில்லாமல் போய் விடும். 6-12-1974-ல் பிறந்த உங்களுக்கு பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னம். 2019 டிசம்பரில் 45 வயது முடிந்து 46 ஆரம்பம். 32 வயது, 5 மாதம் முதல் ராகு தசை. 18 வருடம் (50 வயதுவரை). ராகு தசையோ கேது தசையோ நடந்தால் ஜோதிடம், வைத்தியம், ஆன்மிகத்தில் நாட்டமும் ஈடுபாடும் உண்டாகும். ஆகவே, 2007 முதல் உங்களுக்கு நடைபெறும் ராகு தசை ஜோதிட ஆர்வத்தை உருவாக்கி வெற்றிபெறச் செய்யு மென்று நம்பலாம். ராகு தசைக்குள் பிரபல ஜோதிடராக லாம். உங்களுக்கு இஷ்டமான பெண் தெய்வத்தை உபாசனா தெய்வமாக்கி வழிபடவேண்டும். 12-ல் கேது இருப்பவர்கள் எல்லாம் மோட்சம் போகமுடியாது. மோட்சம் போவதற்கு பந்தங்களையும் பற்றுகளையும் துறக்கவேண்டும்.

Advertisment

● பி. நடேசன், ராசிபுரம்.

வாழ வழிகாட்டும் குருவுக்கு வணக்கம். ஜோதிடத் தின்மூலம் மக்களுக்கு நல்வழிகாட்டும் நீங்கள் நூறாண்டு கள் நோய்நொடியின்றி வாழவேண்டும் என்று இறை வனை வேண்டுகிறேன். ஜோதிடத்தின்மூலம் மக்களுக்கு இவ்வளவு அறிவுரைகள் வேறு யாரும் சொன்னதில்லை. எனக்கு பத்து வருடங்களாக தொழிலும் சரியில்லை. உடம்பும் சரியில்லை. எட்டு மாதத்துக்குமுன்பு சைக் கிளில் செல்லும்போது பைக் மோதி கால் ஒடிந்து இன்னும் சரியாகவில்லை. ராகு தசை நடக்கிறது. இழப்பு, ஏமாற்றம், தொழில் நஷ்டம். அடுத்துவரும் குரு தசை எப்படியிருக்கும்? என் மகன் சரவணன் நான்கு வருடங் களாக வெளிநாட்டில் (குவைத்) வேலை செய்கிறான். இப்போது வேலை பிடிக்கவில்லை என்று விலகி விட்டான். சிங்கப்பூர், மலேசியாவில் வேலை தேடுகிறான். இரண்டு வருடமாக பெண் தேடுகிறோம். அமைய வில்லை. திருமணம் எப்போது நடக்கும்? வெளிநாட்டில் மனைவியோடு வசிக்கும் யோகமுண்டா? உங்களைக் கடவுள்போல வணங்கி என் குறைகளை முறையிட்டு விட்டேன். உங்கள் பக்தனை ஏமாற்றிவிடாமல் பதில் கூறிக் காப்பாற்றவும்.

உங்களுக்கு (நடேசனுக்கு) தனுசு ராசி, மூல நட்சத்திரம், கடக லக்னம். ராகு தசை 9-11-2019 வரை. பிறகு குரு தசை. இதில் தனது புக்தி 27-12-2021 வரை. மகன் சரவணனுக்கு அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னம். 24-10-2020 வரை குரு தசை, கேது புக்தி. (வயது 37). உங்களுக்கு ராகு தசை நடப்பதால் தொழில் சரியில்லை. உடம்பும் சரியில்லை. மகன் சரவண னுக்கு கேது புக்தி 2020 அக்டோபர் வரை. வேலைமாற் றம், ஊர்மாற்றம் ஏற்படும். ராகு- கேது தோஷம் விலக, வசதியிருந்தால் சூலினி துர்க்கா ஹோமமும், சரவண னுக்கு திருமணம் நடைபெற காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து குடும்பத்தார் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். இத்துடன் சுமார் 19 வகையான ஹோமங்கள் செய்வார்கள். காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.

● பி. பன்னீர்செல்வம், ஈரோடு.

எனது மகன் பி. யோகேஸ்வரனின் திருமணம் தாமதமாகிறது. எப்போது நடக்கும்?

உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னம். லக்னத்தில் சனி வக்ரம்; 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். 7-க்குடைய சுக்கிரன் 11-ல் நீசம்; கேது சம்பந்தம், ராகு பார்வை. நடப்பு 34 வயது 2020 ஆகஸ்டில் முடியும். களஸ்திர தோஷம், சனி தோஷம், புத்திர தோஷம் இருக்கின்றன. அதனால் 40 வயதுகூட ஆகலாம். உடனடியாக காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து, யோகேஸ்வரனுக்கு கலச அபிஷேகம் செய்தால், ஆவணி மாதத்துக்குள் (வைகாசி முதல் ஆவணி) திருமணம் நடக்கும். பொருந்தாத நட்சத்திரம்- கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாம், பூரட்டாதி. ஒரே ரஜ்ஜு சேராது. ரோகிணி- மிருகசீரிடம் (பாம்பு), சித்திரை- விசாகம் (புலி); யோனிப்பகை சேராது. ரேவதி- சுவாதி (வதை தாரை) சேராது. ரிஷப ராசி- கடக ராசி சஷ்டாஷ்டக ராசி சேராது. இவற்றை விலக்கி விட்டு மற்றவற்றைப் பொருத்தம் பார்க்கலாம்.

● பி. வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை.

கடந்த 28-4-2018-ல் கால் உடைந்து நடக்கமுடியாமல் உள்ளேன். பிப்ரவரி மாதம் எனது கேள்விக்கு பதில் கூறிய பரிகா ரப்படி, திருமாகறல் சென்று அபிஷேக பூஜை செய்துவிட்டேன். திருமுறைப் பதிகங்களில் "விங்கு விளைகழணி' பாட லைப் பாராயணம் செய்துவருகிறேன். பழையமாதிரி நடக்கமுடியுமா? எனது ஆயுள் காலம் எவ்வளவு? பிள்ளை களுக்கு சொத்தைப் பங்குபாகம் பிரித்துக் கொடுப்பதில் குழப்பமாக இருக்கிறது. மூத்த மகன் ஜாதகம், பேரன் ஜாதகம் அனுப்பியுள்ளேன்.

வெங்கடேசன் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம். 2020 மார்ச் 1-ஆம் தேதி 79 வயது முடிந்து 80 ஆரம்பம். 71 வயதுமுதல் 87 வயதுவரை குரு தசை. இந்த தசையே அந்திம தசையாகும். இதில் 2023-ல் ஏழரைச்சனி ஆரம்பம். 80 தொடக்கத்தில் சதாபிஷேக ஹோமம் செய்துகொள்ளலாம். 1-3-2020-ல் 80 வயது ஆரம்பம். தமிழ் விகாரி வருடம், மாசி மாதம், 15-ஆம் தேதி வியாழக்கிழமை (27-2-2020); நட்சத்திரப்படி ரேவதியன்றுதான் 80 வயது தொடக்கம். சதாபிஷேக ஹோமம் செய்து, தம்பதி சகிதம் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். பொதுவாகவே 59- 60 வயது, 69- 70 வயது, 79-80 வயது காலங்களில் ஏதாவது தொந் தரவுகள், வைத்தியச் செலவு- விரயச்செலவு ஏற்படு வதுண்டு. மகன்- பேரன் ஜாதகப்படி ஆயுள் கண்டம் ஏற்படாது. ஆயுஷ் ஹோமம், தன்வந் திரி ஹோமம், நவகிரக ஹோமம், கணபதி ஹோமம் செய்துகொள்ளவும். வயது முதிர்வு காரணமாக எலும்பு ஒன்றுசேர்வது கடினம். கம்பு ஊன்றி நடக்கலாம். 2020 தை முதல் வைகாசி, ஆவணிக் குள் பிள்ளைகளுக்கு சொத்து பாகம் பிரித்துக் கொடுக்கலாம். முன்னதாக, ஸ்ரீமுஷ்ணம் சென்று பூவராக சுவாமிக்கு அபிஷேக பூஜை செய்துவந் தால், எல்லாம் சுமுகமாக நிறைவேறும்.