● எஸ்.எஸ். நாராயணன், கோவை.
என் மகன் கார்த்திக் திருமணம்- நீங்கள் பொருத்தம் பார்த்த பெண் கோமதியுடன் நிகழ்ந்தது. திருமணத்துக்குப்பிறகு பையனுக்கு வேலை- வருமான வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எப்போது அமையும்?
மகன் கார்த்திக் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். மருமகள் கோமதி பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். இருவரும் ஒரே ராசி- ஒரே லக்னம். ஒரே யோனி (மகம், பூரம்- எலி) மிகமிகச் சிறப்பு. இருவருக்கும் நல்ல ஒற்றுமையும், மனம் நிறைவான மணவாழ்க்கையும், விரைவில் வாரிசுயோகமும் அமையும். பெண்ணுக்கு 2033 வரை ராகு தசை! மகனுக்கு சந்திர தசையில் 29-4-2019 முதல் ராகு புக்தி- ஒன்றரை வருடம்- 22-10-2020 வரை. அதனால் சம ராகு தோஷம். இந்த தோஷம் விலக சூலினிதுர்க்கா ஹோமம் செய்து மகனும் மருமகளும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். ஆனால் ஜாதகக் கோட்சாரக் கிரக அமைப்புப்படி, மேற்படி ஹோமம் செய்ய ஏதாவது தடை ஏற்படலாம். அல்லது பங்காளித்தீட்டு போன்ற சங்கடமும் தடையும் ஏற்படலாம். கோவிலுக்குப் போய் அர்ச்சனை, பூஜை செய்யவும்கூட தீட்டு ஏற்பட லாம்; தடை ஏற்படலாம். தீட்டுக்காலம் முடிந்ததும் வடக்குப் பார்த்த அம்மனுக்கு நெய்தீபமேற்றி, மாலை சாற்றி பூஜை செய்யலாம். கோவை அவினாசி அருகில் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் போய் வழிபடலாம். அது சித்தர் கோவில் என்பதால் அதற்கு எந்தத் தீட்டும் இல்லை.
● கனகராஜ், தேவாரம்.
பொதுவாக பங்காளித் தீட்டு, குடும்பத்தில் முக்கிய மானவர்கள் இறந்த தீட்டு, பெண் பிள்ளைகள் பருவ மடைந்த ருது தீட்டு அல்லது பேறுகாலத் தீட்டு போன்றவை யெல்லாம் எவ்வளவு காலம் இருக்கும்?
பேறுகாலத் தீட்டு- ருதுமங்களத் தீட்டு போன்றவை 30 நாள்; பிறகு தோஷமில்லை. இறந்த தீட்டு அப்பா- அம் மாவுக்கு ஒருவருடம்; பங்காளித்தீட்டு ஆறுமாதம்; மனைவி இறந்த தீட்டு மூன்று மாதம்வரை உண்டு. மேற்படித் தீட்டுக்காலம் முடியும்வரை சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது திருப்பதி, சபரிமலை போன்ற மலைக்கோவில்களுக்குப் போகக்கூடாது. 30
● எஸ்.எஸ். நாராயணன், கோவை.
என் மகன் கார்த்திக் திருமணம்- நீங்கள் பொருத்தம் பார்த்த பெண் கோமதியுடன் நிகழ்ந்தது. திருமணத்துக்குப்பிறகு பையனுக்கு வேலை- வருமான வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எப்போது அமையும்?
மகன் கார்த்திக் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். மருமகள் கோமதி பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். இருவரும் ஒரே ராசி- ஒரே லக்னம். ஒரே யோனி (மகம், பூரம்- எலி) மிகமிகச் சிறப்பு. இருவருக்கும் நல்ல ஒற்றுமையும், மனம் நிறைவான மணவாழ்க்கையும், விரைவில் வாரிசுயோகமும் அமையும். பெண்ணுக்கு 2033 வரை ராகு தசை! மகனுக்கு சந்திர தசையில் 29-4-2019 முதல் ராகு புக்தி- ஒன்றரை வருடம்- 22-10-2020 வரை. அதனால் சம ராகு தோஷம். இந்த தோஷம் விலக சூலினிதுர்க்கா ஹோமம் செய்து மகனும் மருமகளும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். ஆனால் ஜாதகக் கோட்சாரக் கிரக அமைப்புப்படி, மேற்படி ஹோமம் செய்ய ஏதாவது தடை ஏற்படலாம். அல்லது பங்காளித்தீட்டு போன்ற சங்கடமும் தடையும் ஏற்படலாம். கோவிலுக்குப் போய் அர்ச்சனை, பூஜை செய்யவும்கூட தீட்டு ஏற்பட லாம்; தடை ஏற்படலாம். தீட்டுக்காலம் முடிந்ததும் வடக்குப் பார்த்த அம்மனுக்கு நெய்தீபமேற்றி, மாலை சாற்றி பூஜை செய்யலாம். கோவை அவினாசி அருகில் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் போய் வழிபடலாம். அது சித்தர் கோவில் என்பதால் அதற்கு எந்தத் தீட்டும் இல்லை.
● கனகராஜ், தேவாரம்.
பொதுவாக பங்காளித் தீட்டு, குடும்பத்தில் முக்கிய மானவர்கள் இறந்த தீட்டு, பெண் பிள்ளைகள் பருவ மடைந்த ருது தீட்டு அல்லது பேறுகாலத் தீட்டு போன்றவை யெல்லாம் எவ்வளவு காலம் இருக்கும்?
பேறுகாலத் தீட்டு- ருதுமங்களத் தீட்டு போன்றவை 30 நாள்; பிறகு தோஷமில்லை. இறந்த தீட்டு அப்பா- அம் மாவுக்கு ஒருவருடம்; பங்காளித்தீட்டு ஆறுமாதம்; மனைவி இறந்த தீட்டு மூன்று மாதம்வரை உண்டு. மேற்படித் தீட்டுக்காலம் முடியும்வரை சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது திருப்பதி, சபரிமலை போன்ற மலைக்கோவில்களுக்குப் போகக்கூடாது. 30 நாள் முடிந்ததும் வீட்டில் தீபமேற்றலாம். (தொழில் தர்மத்துக்கு விதிவிலக்கு உண்டு. அதாவது மலைக் கோவிலில் பணியாற்றுபவர்கள், வியாபாரம் செய்வோர் போன்றவர்களுக்கு விதிவிலக்கு.)
● ப. ஆறுமுகம், திருப்பூர் மாவட்டம்.
என் மகள் கார்த்திகா எம்.பி.ஏ., முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு இணையான கல்வித்தகுதியுள்ள வரன் கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?
கார்த்திகா தனுசு லக்னம், பூச நட்சத்திரம், கடக ராசி. கும்பச்சனியை கடகச் செவ்வாய் பார்ப்பது தோஷம். அதனால் 29 வயது முடிந்து 30 வயதில்தான் திருமணயோகம். தற்போது 26 வயதுதான் ஆரம்பம். அதற்கு முன்னதாக 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் 27 வயது நடப்பில் திருமணம் செய்யவும். அவருக்கேற்ற படிப்பு, உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளையும் அமையவேண்டு மானால், காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்யவேண்டும்.
● எம்.ஏ. செல்வராஜ், மேற்கு தாம்பரம்.
ஐந்து வருடங்களுக்குமுன்பு மகள் லட்சுமிதேவியின் ஜாதகத்துக்கு தோஷம் இருப்பதால், சில பரிகாரங்கள் செய்தபின் திருமணம் செய்யவேண்டும் (23 வயதுக்குமேல் செய்யலாம்) என்றீர்கள். தற்போது 24 வயது 2020 மார்ச்சில் முடியும். என்ன பரிகாரம் செய்யவேண்டும்? எங்கு செய்ய வேண்டும்?
மகள் லட்சுமிதேவி ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னம். லக்னத்தில் செவ்வாய், சனி சேர்க்கை. 2-ல் கேது. 8-ல் ராகு. மாங்கல்ய தோஷமும், நாக தோஷமும் இருப்பதால், சூலினிதுர்க்கா ஹோமமும், காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் பிரதானமாகச் செய்து, இதனை யொட்டி மொத்தம் 16 அல்லது 19 ஹோமங்கள் செய்து, லட்சுமிதேவிக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் செல்: 99942 74067-ல் விசாரிக்கவும்.
● மஹேஸ், கோவை.
என் மகள் பாமினிக்கு ராகு தசையில் குரு புக்தி 18-1-2021 வரை நடக்கும். மருமகன் சமூப்புக்கு நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? மருமகனுக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. எப்போது தீர்வு கிடைக்கும்? அவர்கள் லண்டனில் வசிக்கிறார்கள்.
பாமினிக்கு தனுசு ராசி, பூராட நட்சத்திரம். ஏழரைச்சனி 2023 வரை நடக்கும். அத்துடன் 15-12-2033 வரை ராகு தசை. ராகுவும், கோட்சார சனியும் இணைவது சிக்கல். ஆபரேஷன் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தலாம். மருமகன் சமூப்புக்கு மகர ராசி; 2029 வரை சனி தசை நடக்கிறது. அத்துடன் அவருக்கும் ஏழரைச்சனி. மகர ராசிக்கு விரயச்சனி. எனவே அவர்கள் இந்தியாவுக்கு வரும் சமயம் காரைக்குடியில் ஆயுள் ஹோமம், சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்பட 19 அல்லது 21 வகையான ஹோமம் செய்து, மூவருக்கும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். மேற்படி ஹோமங்கள் செய்ய காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும்.
● ஆர். பாலாஜி, திருச்சி-3.
எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எந்தமாதிரி பெண் தேடுவது? தற்போது எனக்கு என்ன தசை நடக்கிறது?
உங்களுக்கு 2020 பிப்ரவரியில் 27 வயது முடிந்து 28 ஆரம்பம். உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னம். அதில் கேது. அதற்கு ஏழில் ராகு. 2-ல் செவ்வாய். 9-ல் சனி. செவ்வாய், சனியைப் பார்ப் பதும் தோஷமாகும். எனவே 30 வயது முடிந்தபிறகுதான் திருமணயோகம் வருகிறது. கலப்புத் திருமணம்- அதாவது பெண்ணைப் பெற்றவர்கள் தாயும் தந்தையும் வெவ்வேறு ஜாதி என்பது ஜாதக விதி. இதை மாற்றி சுயஜாதியில் விரைவில் திருமணம் நடக்க காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு பேசினால் செலவுத் தொகை விவரம் எல்லாம் அறியலாம். (செல்: 99942 74067.) விரைவில் திருமண யோகம், வாரிசு யோகம், பொருளாதார வசதி, தொழில் முன்னேற்றம், ஆயுள், ஆரோக் கியம் எல்லாவற்றுக்கும் 19 வகையான ஹோமம் செய்வார்கள். நீங்கள் புதுவேட்டியும் துண்டும் அணிந்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.
● கோவிந்தராஜன் ராணிப்பேட்டை.
"பாலஜோதிடம்' இதழைப் பல ஆண்டுகளாகப் படித்துப் பலனடைந்து வருகிறேன். தங்களின் ஜோதிடத்தொண்டு தொடரவும், மேலும் வளரவும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். என் மகன் ஜாதகப்படி அவனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? தனியார் வங்கியில் பணிபுரியும் அவருக்கு அரசுப்பணி அமையுமா? எப்போது கிடைக்கும்?
கும்ப லக்னம். அதில் சனி (சிம்ம ராசிக்கு 7-ல் சனி). களஸ்திர காரகன் சுக்கிரன் 8-ல் மறைவு; நீசம். 7-க்குடைய சூரியன் கடகத்தில் மறைவு. அந்த வீட்டுக்குடைய சந்திரன் சிம்மத்தில் பரிவர்த்தனை. 2020 ஆகஸ்டில் 26 வயது முடியும். ஜாதகப்படி 30 வயதில்தான் திருமண யோகம் அமைகிறது. 2024 பிப்ரவரி வரை சூரிய தசை. இது முடிந்தபிறகு சந்திர தசையில் திருமணம். அதுவரை பொறுமையாக இருக்கவும்.
● இரா. உதயகுமார், கடலூர்.
என் ஞான ஆசான், குருவாகிய தங்களுக்கு வணக்கம்! எனக்கு ஜோதிடக்கலை ஆர்வம் கைகூடுமா? எனது ஜாதகத்தில் (மிதுன லக்னம்) லக்னத்தில் சனி இருப்பதும், 6-ல் சூரியன், செவ்வாய், புதன், ராகு, சுக்கிரன் மறைவதும் நல்லதா? கெடுதலா? 12-ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பதும், மோட்சம் என்பதும் உண்மையா? சுக்கிரன் 5-க்குடையவர் அஸ்தமனம் அடைவது கெடுதலா? நல்லதா? பலம் அல்லது பலவீனம் என்ன?
மிதுன லக்னம். அதில் சனி நின்று 7-ஆமிடத்தைப் பார்க்க- அவரை 9-ல் உள்ள குரு பார்க்கிறார். குரு பார்வை லக்னம், ராசி இரண்டுக்கும் கிடைக்கிறது. குரு பார்க்க கோடி தோஷம் விலகும். கோடி நன்மை பிறக்கும். அதனால் உங்களுக்குள்ள எல்லா தோஷங்களும் பலமில்லாமல் போய்விடும். 6-12-1974-ல் பிறந்த உங்களுக்கு பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னம். 2019 டிசம்பரில் 45 வயது முடிந்து 46 ஆரம்பம். 32 வயது, 5 மாதம் முதல் ராகு தசை. 18 வருடம் (50 வயதுவரை). ராகு தசையோ கேது தசையோ நடந்தால் ஜோதிடம், வைத்தியம், ஆன்மிகத்தில் நாட்டமும் ஈடுபாடும் உண்டாகும். ஆகவே, 2007 முதல் உங்களுக்கு நடைபெறும் ராகு தசை ஜோதிட ஆர்வத்தை உருவாக்கி வெற்றிபெறச் செய்யுமென்று நம்பலாம். ராகு தசைக்குள் பிரபல ஜோதிடராகலாம். உங்களுக்கு இஷ்டமான பெண் தெய்வத்தை உபாசனா தெய்வமாக்கி வழிபடவேண்டும். 12-ல் கேது இருப்பவர்கள் எல்லாம் மோட்சம் போகமுடியாது. மோட்சம் போவதற்கு பந்தங்களையும் பற்றுகளையும் துறக்கவேண்டும்.
● பி. நடேசன், ராசிபுரம்.
வாழ வழிகாட்டும் குருவுக்கு வணக்கம். ஜோதிடத்தின்மூலம் மக்களுக்கு நல்வழிகாட்டும் நீங்கள் நூறாண்டுகள் நோய்நொடியின்றி வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். ஜோதிடத்தின்மூலம் மக்களுக்கு இவ்வளவு அறிவுரைகள் வேறு யாரும் சொன்னதில்லை. எனக்கு பத்து வருடங்களாக தொழிலும் சரியில்லை. உடம்பும் சரியில்லை. எட்டு மாதத்துக்குமுன்பு சைக்கிளில் செல்லும்போது பைக் மோதி கால் ஒடிந்து இன்னும் சரியாகவில்லை. ராகு தசை நடக்கிறது. இழப்பு, ஏமாற்றம், தொழில் நஷ்டம். அடுத்துவரும் குரு தசை எப்படியிருக்கும்? என் மகன் சரவணன் நான்கு வருடங்களாக வெளிநாட்டில் (குவைத்) வேலை செய்கிறான். இப்போது வேலை பிடிக்கவில்லை என்று விலகிவிட்டான். சிங்கப்பூர், மலேசியாவில் வேலை தேடுகிறான். இரண்டு வருடமாக பெண் தேடுகிறோம். அமையவில்லை. திருமணம் எப்போது நடக்கும்? வெளிநாட்டில் மனைவியோடு வசிக்கும் யோகமுண்டா? உங்களைக் கடவுள்போல வணங்கி என் குறைகளை முறையிட்டுவிட்டேன். உங்கள் பக்தனை ஏமாற்றிவிடாமல் பதில் கூறிக் காப்பாற்றவும்.
உங்களுக்கு (நடேசனுக்கு) தனுசு ராசி, மூல நட்சத்திரம், கடக லக்னம். ராகு தசை 9-11-2019 வரை. பிறகு குரு தசை. இதில் தனது புக்தி 27-12-2021 வரை. மகன் சரவணனுக்கு அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னம். 24-10-2020 வரை குரு தசை, கேது புக்தி. (வயது 37). உங்களுக்கு ராகு தசை நடப்பதால் தொழில் சரியில்லை. உடம்பும் சரியில்லை. மகன் சரவணனுக்கு கேது புக்தி 2020 அக்டோபர் வரை. வேலைமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். ராகு- கேது தோஷம் விலக, வசதியிருந்தால் சூலினிதுர்க்கா ஹோமமும், சரவணனுக்கு திருமணம் நடைபெற காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து குடும்பத்தார் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். இத்துடன் சுமார் 19 வகையான ஹோமங்கள் செய்வார்கள். காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு விவரம் அறியலாம்.