Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-75

● சக்தி முருகதாஸ், தாராபுரம்.

எனது மகள் ராஜராஜேஸ்வரிக்கு வரன் பார்த்துவருகிறேன். ராகு- கேது தோஷம் உள்ளது. 7-ல் செவ் வாயும் உள்ளது. அதேமாதிரி ஜாதகம்தான் பார்க்க வேண்டுமா? எப்போது திருமணம் நடக்கும்? அரசு வேலை கிடைக்குமா? ஏற்கெனவே ராகு- கேது, செவ்வாய் பரிகாரம் செய்து விட்டோம்.

Advertisment

aa

ராஜராஜேஸ்வரி சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னம். லக்னத்துக்கு 2-ல் சனி, கேது. அவர்களுக்கு செவ்வாய் பார்வை. வெறும் நாகதோஷம் (ராகு- கேது தோஷம்) மட்டுமில்லை; செவ்வாய் தோஷம் மட்டு மில்லை; 2-ல் சனி, கேது- அவர்களுக்கு செவ்வாய் பார்வை இருப்பது மாங்கல்ய தோஷம். கலப்புத் திருமணம், காதல் திருமணம் என்ற தோஷம். ஆனால் 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தோஷநிவர்த்திக்கு இடமுண்டு. அதனால் காமோகர்ஷண ஹோமமும், சூலினிதுர்க்கா ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் (மொத்தம் 19 வகை ஹோமம்) செய்து, மகளுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். இதைச் செய்தால் பி.ஈ., அல்லது எம்.ஈ., படித்த நல்ல மாப்பிள்ளை அமைவார். இருவருக்கும் நல்ல உத்தியோகம், சம்பாத்தியம் அமையும். நல்ல வாரிசு யோகமும் அமையும். தற்போது 23 வயது முடிந்து 24 ஆரம்பம். ஜாதக அமைப்புப்படி 27 வயதுக்குமேல் 30 வயதுவரைகூட திருமணம் தாமதப்படலாம். மேற்படி ஹோமம் செய்தால் 25 முதல் 27 வயதுக்குள் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும். காரைக்குடி சுந்தரம் குருக்களை (செ

● சக்தி முருகதாஸ், தாராபுரம்.

எனது மகள் ராஜராஜேஸ்வரிக்கு வரன் பார்த்துவருகிறேன். ராகு- கேது தோஷம் உள்ளது. 7-ல் செவ் வாயும் உள்ளது. அதேமாதிரி ஜாதகம்தான் பார்க்க வேண்டுமா? எப்போது திருமணம் நடக்கும்? அரசு வேலை கிடைக்குமா? ஏற்கெனவே ராகு- கேது, செவ்வாய் பரிகாரம் செய்து விட்டோம்.

Advertisment

aa

ராஜராஜேஸ்வரி சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னம். லக்னத்துக்கு 2-ல் சனி, கேது. அவர்களுக்கு செவ்வாய் பார்வை. வெறும் நாகதோஷம் (ராகு- கேது தோஷம்) மட்டுமில்லை; செவ்வாய் தோஷம் மட்டு மில்லை; 2-ல் சனி, கேது- அவர்களுக்கு செவ்வாய் பார்வை இருப்பது மாங்கல்ய தோஷம். கலப்புத் திருமணம், காதல் திருமணம் என்ற தோஷம். ஆனால் 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தோஷநிவர்த்திக்கு இடமுண்டு. அதனால் காமோகர்ஷண ஹோமமும், சூலினிதுர்க்கா ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் (மொத்தம் 19 வகை ஹோமம்) செய்து, மகளுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். இதைச் செய்தால் பி.ஈ., அல்லது எம்.ஈ., படித்த நல்ல மாப்பிள்ளை அமைவார். இருவருக்கும் நல்ல உத்தியோகம், சம்பாத்தியம் அமையும். நல்ல வாரிசு யோகமும் அமையும். தற்போது 23 வயது முடிந்து 24 ஆரம்பம். ஜாதக அமைப்புப்படி 27 வயதுக்குமேல் 30 வயதுவரைகூட திருமணம் தாமதப்படலாம். மேற்படி ஹோமம் செய்தால் 25 முதல் 27 வயதுக்குள் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும். காரைக்குடி சுந்தரம் குருக்களை (செல்: 99942 74067) தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யலாம்.

● பி. லட்சுமிப்பிரியா, திருவண்ணாமலை.

நானும் கணவரும் காதல் திருமணம் (7-12-2017-ல்) செய்துகொண்டோம். இதுவரை குழந்தை இல்லை. பொருளா தாரரீதியாகவும் கடுமையான சூழ்நிலை நிலவுகிறது. சுயதொழில் செய்யலாமா அல்லது நிரந்தர வேலை கிடைக்குமா? எம்.எஸ்.சி., பி.எட்., முடித்து பி.எச்டி ஆய்வு செய்கிறேன். கணவர் சிவப்பிரகாஷ் எம்.எஸ்.சி. காரணமில்லாமல் சண்டையும் போட்டுக் கொள்வோம்; அடுத்து சமாதானமும் ஆகிவிடுவோம். எங்கள் எதிர்காலத்துக்கு நல்வழி காட்டுங்கள்.

Advertisment

பெர்னாட்ஷா என்ற பேரறிஞர், "கணவன்- மனைவி அன்யோன்யம், சுமுகமாக இருக்க அடிக்கடி விடுமுறை (லீவு) எடுத்துக்கொள்ள வேண்டும், என்றார். திருவள்ளுவரும் "ஊடுதல் காமத்துக்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்' என்றார். உங்கள் சண்டைக்குக் காரணம் பொருளாதாரப் போராட்டம்தான். இருவரும் கைநிறைய சம்பாதித்து, சேமிப்பு செய்து, குழந்தையும் பெற்றெடுத்தால் சமாதானமும், சந்தோஷமும் ஏற்பட்டுவிடும். உங்கள் திருமணத் தேதி- விதி எண் 7; மதி எண் 2. இது முன்னேற் றத்தைத் தடுக்கும் எண்ணாகும். எனவே அன்று கட்டிய மாங்கல்யத்தைக் கழற்றி, வசதியிருந்தால் தெய்வ சந்நிதி உண்டியலில் போடலாம். வசதியில்லை யென்றால், ஆசாரியிடம் கொடுத்து அதை அழித்து புதுமாங்கல்யம் செய்து 1, 3, 6 வரும் தேதிகளில், உங்களுக்கு விருப்பமான தெய்வ சந்நிதியில் மறுபடி மாங்கல்யம் அணிந்து கொள்ளலாம். மறுதாலி கட்டும்வரை வெறும் கழுத்தாக இல்லாமல், லட்சுமிப்பிரியா ஒரு விரலி மஞ்சளை மஞ்சள் கயிற்றில் கட்டியிருக்கவேண்டும். உங்கள் இருவருக் கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில், மேற்படி தேதியில் மறுமாங்கல்யம் அணிய வேண்டும். சிவப்பிரகாஷ் சித்திரை நட்சத் திரம், கன்னி ராசி. லட்சுமிப் பிரியா திருவா திரை நட்சத்திரம், மிதுன ராசி. இருவருக் கும் ஒரே ராசிநாதன் புதன் என்பதால் பொருத்தம் உண்டு. தவறான திருமணத் தேதி என்பதால் வருத்தமும் உண்டு. அதுவும் சரியாகிவிடும்.

● வெ. தியாகராஜன், அருப்புக்கேட்டை.

"அதிர்ஷ்டம்' நாளிதழில் ஜோதிடப் பலன் எழுதிய காலம்முதல் தங்கள் அமானுஷ்ய ஜோதிடப் புலமையை நன்கறிவேன். 6-11-2019-ல் தங்கள் மேலான பதிலுக்காக அஞ்சல் உறை யுடன், சிறு காணிக்கையாக ரூ.100/- கூரியர்மூலமாக அனுப்பியிருந்தேன். ஒருமாத காலமாகியும் தங்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. நூறு ரூபாய் அடங்கிய கூரியரை தங்கள் பார்வைக்கு வராமல், தங்கள் உதவியாளர் மறைத்து விட்டாரோ என்று ஐயப்படுகிறúன். தாங்கள் தலைசிறந்த ஜோதிடர் என்ப தைவிட, நேர்மையான பத்திரிகை ஆசிரியர் என்பதில் அடியேனுக்கு எள்ளவும் சந்தேகமில்லை. தங்கள்முன் வைக்கும் கேள்விகள்: 1. அடியேன் மறுபிறவியற்று வீடுபேறு அடையும் பாக்கியம் பெறுவேனா? 2. அடியேன் சரீர அவஸ்தையிலிருந்து விடுதலை பெறும் காலம் எப்போது?

என் நேர்மைக்கு நீங்கள் கொடுத்த சர்ட்டிபிகேட்டுக்கு நன்றி! அதேசமயம் ஒரு வெள்ளை பேப்பர் (ஒருரூபாய் மதிப்பு) வாங்கி, அதில் உங்கள் ஜாதகத்தையும் கேள்வி யையும் எழுதியனுப்பாத உங்கள் கஞ்சத் தனத்தை எப்படி பாராட்டுவது? யோகிராம் சுரத்குமார் நோட்டீஸ் பின்புறம்- நகர சாலியர் சங்க பாராட்டு விழா நோட்டீஸ் பின்புறம் கேள்வி எழுதியுள்ளீர்கள். இதில் உங்களுக்கு மறுபிறப்பில்லாத வீடுபேறு பற்றி கனவு காண்கிறீர்கள். அந்தோ பரிதாபம்! ஜாதகக் குறிப்பும் குகன் டெக்ஸ் நோட்டீஸ் பின்புறம், ஆக, ஒரு ரூபாய் செலவில் ஒரு வெள்ளை பேப்பர் வாங்கி எழுதியனுப்ப இயலாதவர் என் உதவியாளரைப் பற்றி சந்தேகப்படுகிறீர்கள். மீண்டும் அந்தோ பரிதாபம்! மேலும் கவரில் 100 ரூபாய் வைத்து அனுப்பியுள்ளதாக எழுதியுள்ளீர்கள். நூறு ரூபாய்க்கு மணியார்டர் கமிஷன் கொடுக்கத் தயங்கி கவரில் அனுப்பியதால் 100 ரூபாயையும் இழந்துவிட்டீர்கள். கவரில் பணம் அனுப்புவது சட்டப்படி குற்றம் மட்டுமல்ல; தபால் சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக்கொள்வதற்கும் வாய்ப்புண்டு. ஆக, கவரில் பணமில்லை. எப்படி காணாமல்போனது என்பதும் தெரியவில்லை அல்லது அனுப்பியதாக நீங்கள் பொய் சொல்கிறீர்களா என்பதும் புரியவில்லை. அருப்புக்கோட்டைக்கும் மதுரைக்கும் ஒரு மணிநேரப் பயணம். நேரில் வந்து போயிருக்கலாமே! எதுவும் எளிதாக நடக்க ஆசைப்பட்டால் இப்படித்தான் நஷ்டமாகும். 83 வயதில் பயணிக்கும் நீங்கள் இன்னும் எத்தனை பிறவி எடுக்கவேண்டுமோ ஆண்டவனுக்கே தெரியும் ரகசியம். நிச்சயம் இந்தப் பிறவியோடு முடிந்துவிடாது. உங்களுடைய ஆசாபாசங்கள், பணப்பற்று, குடும்பப்பற்று, பந்தபாசப்பற்று, தேக சரீரப்பற்று ஆகியவற்றுக்கெல்லாம் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கத்தான் வேண்டும். பற்றுகளைத் துறந்து, பற்றற்றவன் தாளினைப் பற்றினால்தான் பிறவியில்லை. வீடுபேறு அடையலாம். எல்லாம் துறந்த ஏசுபிரானே மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள். இன்னுமொரு தகவல்- எனக்கு எந்த உதவியாளரும் இல்லை. அதனால் உங்கள் ஐயமும் அர்த்தமற்றது.

● வி. அண்ணாதுரை, வேளச்சேரி.

8-12-2019 அன்று எனது மகளின் ஜாதகம் பார்த்து பலன்கூறி ஆசியளித் தீர்கள். எனது மகளுக்கு தாரமிழந்த ஒரு வரன் ஜாதகம் வந்துள்ளது. பொருத்தம் பார்த்துக்கூறவும்.

மாதவி சிந்து மக நட்சத்திரம், சிம்ம ராசி. பிரதீப்குமார் பூர நட்சத்திரம், சிம்ம ராசி. இருவரும் ஒரே ராசி. ஒரே யோனி. (மகம், பூரம்- எலி). நல்ல பொருத்தம் உண்டு. இருவீட்டார் மனப்பொருத்தம் இருந்தால் பேசி முடிக்கலாம். (ஒரு குறிப்பு: கவரில் ரூ.250/- உள்ளதாக போனில் சொன்னபடி ரூபாய் எதுவுமில்லை. அப்படி சொன்னால் தான் பதில் எழுதுவேன் என்று நினைத் தீர்களா? ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் முடிக்கவேண்டும் என்பார்கள். அதற்காக ஜாதகப் பொருத்தம் பார்க்க ரூபாய் அனுப்பியதாகச் சொல்லலாமா?)

bala030120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe