● வி. அண்ணாதுரை, சென்னை-42.
கடந்த நான்கைந்து மாத காலமாக நுரை யீரல் அலர்ஜி, மூச்சுத் திணறல், தொடர் இருமல் ஆகியவற்றால் அவஸ்தைப்படுகிறேன். தீவிர சிகிச்சை செய்தால் 15 நாள் குணமாகிறது. பிறகு மீண்டும் அவஸ்தை உண்டாகிறது. மருத் துவச்செலவு அதிகம். சமாளிக்க முடிய வில்லை. எப்போது பூரண குணமாகும்?
மக நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னம். 65 வயது நடப்பு. 2022 டிசம்பர்வரை ராகு தசை. (73 வயதுவரை). ராகு தசை நடந்தாலே தோல் சம்பந்தப்பட்ட நோய் அல்லது இதயம் சம்பந்தமான நோய் அல்லது மூச்சுக்குழாய் சம்பந்தமான வியாதி வரும் என்பது விதி. 2022 வரை வேதனை, சோதனை தொடரும். உயிருக்கு ஆபத்தில்லை. நித்திய கண்டம் பூரண ஆயுசு. ராகுவும் கேதுவும் பாம்பு கிரகங்கள். பாம்பு அடித்துப் போட்டாலும் காற்றைக் குடித்து உயிர்பெற்றுவிடும். அதனால்தான் கிராமத்தில் செத்த பாம்பை எரித்துவிடுவது வழக்கம். தொடர்ந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது திருவக்கரை சென்று (திண்டிவனம்- புதுச்சேரி பாதை) வக்ர காளியை வழிபடவேண்டும்.
● பாலகிருஷ்ணன், பரமக்குடி.
உங்கள் "பாலஜோதிடம்' கேள்வி- பதிலைப் படித்தே அரைகுறை ஜோதிடம் தெரிந்துகொண்டேன். முறையாக, முழுஜோதிடராக என்ன வழி?
சென்னையில் பி.எஸ்.பி. என்ற பரமசிவம் எழுதிய ஜோதிடப் புத்தகத்தை அவர் மகன் பி.எஸ்.பி. விஜய்பாலா வெளியிட்டுள்ளார். "ஜோதிடம் ஓர் அறிமுகம்' என்ற புத்தகமும், "ஜோதிடப் பலன்கள் சொல்வது எப்படி' என்ற புத்தகமும் வெளிவந்துள்ளன. "பாலஜோதிடம்' 3-12-2019 இதழில் (வால்யூம் 35, இதழ் 51) கடைசிப் பக்கம் அதன் விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு புத்தகங்களும் சலுகை விலை ரூபாய் 3,000 மட்டும்தான். 400 பக்கம், 75 பாடம் கொண்டது. "ஜோதிடம் ஓர் அறிமுகம்'- இதில் அடிப்படைக் கணிதம் விளக்கப்பட்டுள்ளது. அடுத்து "ஜோதிடப் பலன்கள் சொல்வது எப்படி?' என்ற புத்தகம் 1,008 பக்கங்கள், 500-க்கும் மேற்பட்ட பாடங்கள். இவ்விரு புத்தகங்களை யும் வாங்கிப் படித்துப் பயிற்சி செய்தாலே போதும்- முழு ஜோதிடராகிவிடலாம். இது தவிர, வீட்டிலிருந்தபடியே அஞ்சல்வழியில் சுலபமாக ஜோதிடம் கற்கலாம். முறையாகப் பயின்று திறமையான ஜோதிடராகி பெருமைபெறலாம். தொடர்புக்கு: யுனிவர்சல் ரிசர்ச் அகாடமி, 11ஈ/38, பஜனை கோவில் முதல் தெரு, சூளைமேடு, சென்னை-600 094. தொலைபேசி: 044-43540625, 65182568, செல்: 98410 40251.
● எஸ். சிவப்பிரகாசம், திருவண்ணாமலை.
எனக்கு அரசாங்க வேலை கிடைக் குமா? நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் எனது அம்மா அமுதா நிற்கிறார். வெற்றிபெறுவாரா? எனக்குத் திருமணம் நடக்குமா- நடக்காதா? ஆன்மிக வாழ்க்கையில் சென்றுவிடலாமா? கடன்சுமை அதிகமாக இருக்கிறது. தீருவதற்குப் பரிகாரம் என்ன? சகோதரருக்கு (சேட்டு) திருமண மாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார் கள். அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டேயிருக்கிறார். வளையல், வண்டி தொழில் செய்தார். அது தற்போது முடங்கிவிட்டது. மீண்டும் செய்யலாமா? சகோதரர் காந்தி அரசு வேலை பார்க்கிறார். பதவி உயர்வு கிடைக்குமா? போலீஸ் வேலை கிடைக்குமா? காந்தியின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்குமா? சொந்த வீடு கட்டலாமா?
கேள்விகள் இவ்வளவுதானா? வேறு கேள்வி எதுவும் கேட்க மறந்துவிட்டீர்களா? கப்பலில் பெண் இலவசமாக வருகிறது என்றதும், எனக்கு ஒன்று, சித்தப்பாவுக்கு ஒன்று, அண்ணனுக்கு ஒன்று வேண்டுமென்று சொல்வதுபோல இருக்கிறது உங்கள் கேள்விகள். எல்லாக் கேள்விகளுக்கும் விவரமான- தெளிவான பதில் வேண்டுமென்றால், முன்பதிவு செய்துவிட்டு காணிக்கையுடன் நேரில்வரவும். தாயார் அமுதா தேர்தலில் நின்றால் வெற்றி பெறமுடியாது. சிவப்பிரகாசம் மகர லக்னம், மகர ராசி. ஏழரைச்சனி- விரயச்சனி நடக்கிறது. அதனால் அரசிய லில் வெற்றிவாய்ப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. 1982-ல் பிறந்த சிவப்பிரகாசம் திருவோண நட்சத்திரம், மகர ராசி. குரு தசையில் புதன் புக்தி நடக்கிறது. 9-ல் சனி, செவ்வாய். இருவரும் வக்ரம். முறையான திருமணம் நடக்காது. விரும்பிய, இஷ்டப்படி குடும்பம் அமையலாம். சேட்டு சிம்ம லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். ராசியில் கேது- 7-ல் ராகு. சிம்ம லக்னத்துக்கு 2-ஆமிடம் குடும்ப ஸ்தானத்தை மீனச் செவ்வாயும், தனுசு சனியும் பார்ப்பதால், குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி இருக்காது; மனநிறைவும் இருக்காது. மூக்குள்ளவரை சளிதான்! ஆனால் குடும்பம் பிரியாது. காலைச்சுற்றிய பாம்பு கடித்தபாடுமில்லை; கழன்றுவிட்ட பாடுமில்லை என்ற நிலைதான்! காந்திக்கு கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனி. இது முடியவேண்டும். அதன்பிறகு பதவி உயர்வு அல்லது போலீஸ் வேலை அமையும். வீடு கட்டுவது சுபச் செலவு- செய்யலாம். மனைவிக்கு வேலைவாய்ப்பு தள்ளிப்போகும்.
● ஆர். பெருமாள், பாடியேந்தல் அஞ்சல்.
எனது இளைய மகன் கோபாலுக்கும், சரிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய நினைக் கிறோம். ஏழு பொருத்தம் உள்ளதாக இங்கு சொல்கி றார்கள். தங்கள் கருத்தென்ன?
திருமணப் பொருத்தமெல்லாம் உள்ளுர் ஜோதிடரிடம் பார்த்து முடிவெடுக்க வேண்டியதுதான். எனக்கு தபாலில் அனுப்பினால் அதைப் பார்க்க மாதக்கணக்கில் ஆகிவிடும். தபால் தேங்கிவிடும். மிகவும் முக்கியமென்றால், முன்பதிவு செய்துவிட்டு நேரில்வந்து பார்த்து முடிவெடுக்கலாம். நீங்கள் அனுப்பிய ஜாதகங்களுக்கு தசாபுக்தி அனுகூலமாக இல்லை. கோபாலுக்கு கேது தசை. சரிதாவுக்கு ராகு தசை. இரண்டும் பாம்பு தசை. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது; மனநிறைவும் இருக்காது. வேறு ஜாதகம் தேடவும். கோபாலுக்கு உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம், சுக்கிரன் நீசம். லக்னத்தில் செவ்வாய். அவருக்கு மகரச் சனி பார்வை. செவ்வாயும் சனியும் ஒருவரையொருவர் பார்த் துக்கொள்வது ஆகாது. கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் என்பது ஜாதகப் பலன். 30 வயதில் திருமணம் செய்தால் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் நடக்கலாம். (2021-ல்). அதுவரை காத்திருக்கவும்.
● எம். ரமேஷ், வந்தவாசி மேல்பாதி.
என் மகள் புஷ்பலதாவுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக் கிறது. வைத்தியம் பார்த்தும் பலனில்லை. 8-ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டோம். ஜோதிடர்கள் ஆயுள்பலம் குறைவென்கிறார்கள். பயமாக இருக்கிறது. பயத்தைப் போக்கி வழிகாட்டுங்கள்.
உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி. 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனியில் ஜென்மச்சனி! அத்துடன் சந்திர தசை சந்திப்பு! எனவே உயிர்ச் சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட இடமுண்டு. செலவைப் பார்க்காமல் செவலூர் சென்று ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம் உள்பட 19 வகையான ஹோமம் செய்து, புஷ்பலதாவுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் பெற்றோருக் கும் கலச அபிஷேகம் செய்து, சுவாமி- அம்பாளுக்கும் ருத்ரஹோமம் வளர்த்து, ருத்ராபிஷேக (சங்காபிஷேக பூஜை) செய்தால் ஆயுள் தீர்க்கம், ஆரோக்கியம், மணவாழ்க்கை, வாரிசு யோகம் போன்ற எல்லா நலமும் உண்டாகும். தொடர்புக்கு: ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863.
● எஸ். ஜெயகுமார், காவடிப்பேட்டை.
எனது மகன் துளசிரங்கனுக்கு இது வரை திருமணம் நடக்கவில்லை. எப்போது நடக்கும்?
துளசிரங்கனுக்கு 34 வயது முடிந்து 35 ஆரம்பம். மேஷ லக்னம். அதில் ராகு. 7-ல் கேது, புதன். 6-க்குடைய புதன் 7-ல் இருப்பதும், 7-க்குடைய சுக்கிரன் சிம்மத்தில் செவ்வாயுடன் சேர்ந்திருக்க, அவர்களை விருச்சிகச்சனி பார்ப்பதும் களஸ்திர தோஷமாகும். மேலும் செவ்வாயும் சனியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதும் தோஷம். 7-ஆமிடத்துக்கு குரு பார்வை இல்லை. குரு 10-ல் நீசமாகி சனி பார்ப்பதால், பூர்வபுண்ணிய தோஷம்; முன்னோர்கள் வகையில் ஸ்த்ரீ சாபதோஷம். அதனால் திருமணம் ஆகுமா என்பதே சந்தேகம்தான். அதாவது முறையான திருமண வாய்ப்பு குறைவு. கலப்புத்திருமணம், காதல் திருமணம் ஆகலாம். முறையான திருமணம் நடக்க, செலவைப் பார்க்காமல் காமோகர்ஷண ஹோமம், சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், தத்தாத்ரேயர் ஹோமம் உள்பட 19 வகையான ஹோமம் செய்து, மகனுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். முந்தைய கேள்வியில் சொன்ன பதில்படி காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொள்ளவும். செல்: 99942 74067.