● எல்லையப்பன், சென்னை.
எவ்வளவோ சிறப்பான தொழில்கள் இருக்கும்போது ஜோதிடத்தை நம்பு வதும், ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்வதும் சரியா? முறையா?
திருடுவதைத்தவிர, மற்ற எல்லாத் தொழில்களும் சிறப்பானவைதான். அதிலும் மணி, மந்திரம், ஔஷதம் என்பவை புனிதமான தொழில்கள்! மணி என்பது ஜோதிடம். மந்திரம் என்பது ஆலய பூஜை. ஔஷதம் என்பது மருத்துவம். (வைத்தியம்). இந்த மூன்றும் மனித வாழ்க்கைக்கு ஆதார மானவை! மருத்துவர் உடற்பிணியைப் போக்குகிறார். ஜோதிடர்களும் பூஜகர்களும் மனப்பிணியைப் போக்குகிறார்கள். ஜோதிடம் என்பது ஜோதி இருக்கு மிடத்தைக் காட்டுவது. இருளை நீக்கி ஒளியை- வெளிச்சத்தைக் காட்டுகிறது. மனித வாழ்க்கையே நம்பிக்கை என்ற அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்ட கட்டடம்! அந்த நம்பிக்கைக்கு ஆதாரம் ஜோதிடம், பக்தி, ஆன்மிகம்! "ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்கள் வாழவில்லையா- நன்றாக இல்லையா' என்று ஒரு கேள்வி எழும். ஜோதிடத்தை நம்புகிறவர்கள் நீச்சல் தெரிந்து ஆற்றில் குதிப்பவர்களுக்குச் சமம். நம்பிக்கை இல்லாதவர்கள் நீச்சல் தெரியாமல் ஆற்றில் விழுவதற்குச் சமம்!
● குமரன், முகப்பேர்.
குலதெய்வம், இஷ்டதெய்வம், தசாபுக்திகளுக்கேற்ற பரிகார தெய்வம், நவகிரகம் ஆகியவற்றில் எது முதலிடம் பெறும்? எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும்?
இவற்றுக்கெல்லாம் பிரதானமானது பெற்றோர் வழிபாடு! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்! அடுத்து குரு வழிபாடு. அதன்பிறகு குலதெய்வம், பிறகு இஷ்டதெய்வம் அல்லது உபாசனா தெய்வம். குருமுகமாக தீட்சை எடுத்துக்கொண்ட தெய்வமே உபாசனா தெய்வம்! அன்னை தகப்பனாரை அடையாளம் காட்டுகிறாள். தந்தை நல்ல குருவைக் காட்டு கிறார். குரு தெய்வத்தைக் காட்டுகிறார்.
● வி. ம

● வி. மயிலேறிநாதன், திருச்சி.
எனது மகள் திருமணம் எப்போது நடைபெறும்? வரன் சொந்தமா? அந் நியமா? லக்னத்தில் கேது, 7-ல் ராகு இருப் பதால் திருமணம் தாமதமாகும் என்பது உண்மையா? 7-க்குடைய சுக்கிரன் 12-ல் மறைவது தோஷமா? அரசு வேலை அமையுமா?
மகள் மேஷ லக்னம். 7-க்குடைய சுக்கிரன் உச்சம் என்றாலும், 7-ல் மறைவது குற்றம்தான். 7-ஆமிடத்தையும், 7-ல் உள்ள ராகுவையும் செவ்வாய் பார்ப்பது (ராசிநாதன் அல்லது லக்னநாதன் பார்ப்பது தோஷ நிவர்த்தி) குற்றமில்லை. ஆனால் குரு 8-ல் மறைவது குற்றம். 8-ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானத்தை கும்பச் சனி பார்ப்பதும் குற்றம். அதனால் 27 வயதுக்குமேல்தான் திருமண யோகம். மேலும் கடகச் செவ்வாய் கும்பச் சனியைப் பார்ப்பதும் தோஷம். எனவே காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும், சூலினிதுர்க்கா ஹோமமும், திருஷ்டிதுர்க்கா ஹோமமும் செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். மேலும் தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கும் இக்காலம் சந்திர தசை சந்திப்பு என்பதும் ஆகாது. எனவே திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் ஏழரைச்சனி தோஷம் விலக,
சனிக் கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் 27 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி நெய்யில் நனைத்து தீபமேற்ற வேண்டும்.
● வி. கார்த்திகேயன், விழுப்புரம்.
கலப்புத் திருமணம் என்பது யாது? காதலித்தோ மணமாலை விளம்பரம் மூலமாகவோ ஜாதி, மதம் மாறி இணையும் ஜோடிகள் இந்த லிஸ்டில் வருவார்களா?
உங்கள் கேள்வியிலேயே பதில் அடங்கி யிருக்கிறது.
● க. பொன்னையா ராஜா, திருவானைக் காவல்.
எனக்கு வயது 68. குரு தசை, ராகு புக்தி நடப்பு. பல வருடங்களாக வயிற்று வலி, கல்லீரல், மண்ணீரல் கோளாறு வாட்டுகிறது. எப்போது நிரந்தரமாக குணமாகும்? குரு தசை முடிவில் மார கமா? அல்லது சனி தசை, சனி புக்தியில் மாரகம் ஏற்படுமா?
கும்ப லக்னம். அதில் ராகு. சிம்ம ராசி (பூரம் நட்சத்திரம்). அங்கு கேது. லக்னம், ராசி இரண்டுக்கும் ராகு- கேது சம்பந்தம். 8-ல்- கன்னியில் செவ்வாய், சனி சேர்க்கை. குரு- சனியின் சாரம். (உத்திரட்டாதி 3-ல் குரு). சனி 6-க்குடைய சந்திரன் சாரம் (அஸ்தம் 4-ல்). எனவே சனி தசை, தனது புக்தி முடிந்து புதன் புக்தியே அந்திமக் காலம் என்பது எனது கணிப்பு. அதுவரை நோய் அவஸ்தை இருக்கும். ஒரு வியாழக் கிழமை தொண்டி பாதையில் திருவாடா னையை அடுத்து திருவெற்றியூர் சென்று பாகம்பிரியாளை வழிபடவும். முடிந்தால் ஓரிரவு அங்கு தங்கவும்.
● சி. முருகேசன், அலங்காநல்லூர்.
தங்கள் ஆலோசனைப்படி, காரைக்குடி சென்று மகளுக்கு ஹோமம் செய்தபிறகு, நல்லபடியாகத் திருமணம் நடந்தது. என் மருமகன் பெங்களூருவில் வேலை பார்க்கிறார். மகள் மதுரையில் இருக் கிறாள். இருவரும் சேர்ந்து ஒரே ஊரில் இருக்க வாய்ப்புண்டா? மருமகன் சரவணகுமார் ஜாதகப்படியும், பேரன் அர்ஜித்ராம் ஜாதகப்படியும் காலிமனை அல்லது கட்டிய வீடு வாங்கலாமா? வீடு வாங்கினால் எந்த திக்கு வாசல்படி யோகமாக இருக்கும்? பேரனுக்கு சிறுவய திலேயே ராகு தசை வருவதால் படிப்பு பாதிக்குமா?
ஒருமணி நேரப் பயணத்தில் இருந்து கொண்டு, சென்னை விலாசத்துக்கு கடிதம் எழுதுகிறீர்களே! மேலும் யாருடைய ஜாதக நகலும் இல்லை. எல்லா ஜாதகக் குறிப் பையும் எடுத்துக்கொண்டு நேரில் வந்து பலன் அறிந்துகொள்ளவும். முன்பதிவு அவசியம்.
● பி. வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை.
28-4-2018-ல் கீழே விழுந்து, தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு டாக்டரிடம் காண்பித்தபோது, காலை எடுக்கவேண்டும் என்றார். வயது 74 என்பதால், பயந்துகொண்டு நாட்டு வைத்தியம் செய்தேன். "பாலஜோதிடம்' கேள்வி- பதில் பகுதியில் கூறியபடி, பலன் தரும் பதிகங்களில் எலும்பு கூடுவதற் கான பதிகத்தைப் பாராயணம் செய்தும் பலன் கிடைக்கவில்லை. அதனால் ஆங்கில வைத்திய சிகிச்சைப்படி பிளேட் வைத்துக்கொள்ளலாமா? ஆயுள் எவ்வளவு?
பாராயணத்தாலும், பக்திவயத்தாலும் சிகிச்சையின்றி எலும்பு முறிவு கூடுவதற்கு உங்களுக்கு வயதும் ஒரு தடையாக உள்ளது. அதேபோல நீங்கள் தெய்வ உபாசகரும் இல்லை. பந்தபாசங்களைக் கடந்த பக்திமானும் இல்லை. 70 வயதுமுதல் குரு தசை. துலா லக்னத்துக்கு 3, 6-க்குடைய தசை. அவர் நீசச்சனியுடன் சேர்க்கை. 8-ஆவது தசை. கலிகாலத்துக்கு ஏற்றவகையில் ஆங்கில வைத்தியம் செய்துகொள்ளவும். பிளேட் வைத்துக்கொள்ளலாம். ஆயுள் நிர்ணயம் என்பது இறைவன் ஒருவனுக்கே தெரியும் ரகசியம்! பொதுவாக 60, 70, 80 வயது காலம் எல்லாம் கண்டம் ஏற்படும் காலம்.
● வி. அண்ணாதுரை, சென்னை-42.
கடந்த நான்கு ஐந்து மாத காலமாக நுரையீரல் அலர்ஜி, மூச்சுத்திணறல், தொடர் இருமல் ஆகியவற்றால் அவஸ்தைப்படுகிறேன். தீவிர சிகிச்சை செய்தால் 15 நாள் குணமாகிறது. பிறகு மீண்டும் அவஸ்தை உண்டாகிறது. மருத்துவச்செலவு அதிகம். சமாளிக்க முடியவில்லை. எப்போது பூரண குணமாகும்?
மக நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னம். 65 வயது நடப்பு. 2022 டிசம்பர் வரை ராகு தசை (73 வயதுவரை). ராகு தசை நடந்தாலே தோல் சம்பந்தப்பட்ட நோய் அல்லது இதயம் சம்பந்தமான நோய் அல்லது மூச்சுக்குழாய் சம்பந்தமான வியாதி வரும் என்பது விதி. 2022 வரை வேதனை, சோதனை தொடரும். உயிருக்கு ஆபத்தில்லை. நித்திய கண்டம் பூரண ஆயுசு. ராகுவும் கேதுவும் பாம்பு கிரகங்கள். பாம்பு அடித்துப் போட்டாலும் காற்றைக் குடித்து உயிர்பெற்றுவிடும். அதனால்தான் கிராமத்தில் செத்த பாம்பை எரித்துவிடுவது வழக்கம். தொடர்ந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது திருவக்கரை சென்று (திண்டிவனம் - புதுச்சேரி பாதை) வக்ரகாளியை வழிபடவேண்டும்.
● பாலகிருஷ்ணன், பரமக்குடி.
உங்கள் "பாலஜோதிடம்' கேள்வி- பதிலைப் படித்தே அரைகுறை ஜோதிடம் தெரிந்துகொண்டேன். முறையாக, முழுஜோதிடனாக என்ன வழி?
சென்னையில் பி.எஸ்.பி. என்ற பரமசிவம் எழுதிய ஜோதிடப் புத்தகத்தை அவர் மகன் பி.எஸ்.பி. விஜய்பாலா வெளியிட்டுள்ளார். "ஜோதிடம் ஓர் அறிமுகம்' என்ற புத்தகமும், "ஜோதிடப் பலன்கள் சொல்வது எப்படி' என்ற புத்தகமும் வெளிவந்துள்ளன. "பாலஜோதிடம்' 3-12-2019 இதழில் (வால்யூம் 35, இதழ் 51) கடைசிப் பக்கம் அதன் விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு புத்தகங்களும் சலுகை விலை ரூபாய் 3,000 மட்டும்தான். 400 பக்கம், 75 பாடம் கொண்டது. "ஜோதிடம் ஓர் அறிமுகம்' -இதில் அடிப்படைக் கணிதம் விளக்கப்பட்டுள்ளது. அடுத்து "ஜோதிடப் பலன்கள் சொல்வது' எப்படி?' என்ற புத்தகம் 1,008 பக்கங்கள், 500-க்கும் மேற்பட்ட பாடங்கள் கொண்ட இவ்விரு புத்தகங்களையும் வாங்கிப் படித்துப் பயிற்சி செய்தாலே போதும்- முழு ஜோதிடராகிவிடலாம். இதுதவிர, வீட்டிலிருந்தபடியே அஞ்சல்வழியில் சுலபமாக ஜோதிடம் கற்கலாம். தொடர்புக்கு: யுனிவர்சல் ரிசர்ச் அகாடமி, 11ஈ/38, பஜனை கோவில் முதல் தெரு, சூளைமேடு, சென்னை-600 094. தொலைபேசி: 044-43540625, 65182568, செல்: 98410 40251. முறையாகப் பயின்று திறமையான ஜோதிடராகி பெருமைபெறலாம்.