● எஸ். ருக்மிணி, தாம்பரம்.
எனது மகள் லட்சுமி தேவி எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு முடிக்கவுள்ளார். மேற்கொண்டு படிக்கலாமா? அரசு வேலைக்கு முயற்சிக்க லாமா? திருமணம் செய்யலாமா?
லட்சுமி தேவி ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னம். லக்னத்தில்- ராசிக்கு எட்டில் செவ்வாய், சனி, சூரியன், புதன் என்பதால், 25 வயதில்தான் திருமண முயற்சி எடுக்கவேண்டும். இப்போது 22 முடிந்து 23தான் ஆரம்பம். வாக்கியப் பஞ்சாங்கமே அனுபவரீதியாக சரியானது. திருக்கணிதம் சரிவரவில்லை. மேலும், திருக்கணிதப்படி லக்னத்தில் செவ்வாய், 2-ல் சனி இருப்பதால் தாமதத் திருமணம்தான். குரு விருச்சிகத்தில் அமர்ந்து 2-ஆம் இடம், 4-ஆமிடங்களைப் பார்ப் பதால் மேற்படிப்பு படிக்கலாம். 2019 ஜூன் மாதத்துக்கு மேல் அரசு வேலை யோகம் அமையும். அரசுப் பரீட்சை எழுதச்சொல்லவும். சுக்கிர தசை நடப்பதால் ஒரு வெள்ளிக்கிழமை மாங்காடு காமாட்சியம்மன் கோவிலிலும், அருகில் வெள்ளீஸ்வரர் கோவிலிலும் நெய் தீபமேற்றி அர்ச்சனை செய்யவும். (ஒருமுறை).
● ப. திரவியம், திருநெல்வேலி.
ஜாதகம் இருப்பவர்கள் ஜாத கப்பலனைப் பார்த்து நல்லது, கெட்டதை அறியலாம். நட்சத் திரம், ராசி தெரியாதவர்கள் எதைப் பார்த்து அல்லது எதைப் படித்து எதிர்காலத்தை அறிவது?
ஜாதகம் இல்லை- நட்சத்திரம், ராசி எதுவும் தெரியவில்லையென்றால் பிரச் சினையே இல்லை. மனம் கொண்டதே மாளிகை என்று ஆறுதல் அடையலாம். நட்சத்திரம், ராசி தெரிந்தால்தானே ஏழரைச்சனி, அட்டமச்சனி, கண்டச்சனி, ஜென்ம குரு, விரய குரு என்று பலன் பார்க்க வேண்டும். எதுவுமில்லை யென்றால், எல்லா நாளும் நல்ல நாள்தான் என்று இறைவன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, நமது கடமைகளை நம்பிக்கையோடு செயல்படுத்தலாம். எனது உறவினர் ஒருவர் தன் மகளுக்குத் திருமணம் எப்போது ஆகும் என்று கவலைப்பட்டார். எனது குருநாதரை (பள்ளத்தூர் குருக்கள் அய்யாவை) போய்ப் பார்க்கலாம் என்று அழைத்துப் போனேன். வழியில் பிள்ளையார்பட்டி, வயிரவன் பட்டி, குன்னக்குடி போன்ற கோவில்களுக்குப் போய் வழிபாடு செய்துவிட்டுப் போவோம் என்று திட்டமிட்டோம். வழியில் பல தடைகள், குறுக்கீடுகள்- அவற்றையெல்லாம் கடந்துபோனோம். அவர், "இப்படி தடை கள் வரத்தான் செய்யும். அதற்கு காரணம் உண்டு' என்றார். ஆனால், என்ன காரணம் என்பதைச் சொல்ல மறுத்து விட்டார். "பிறகு சொல்வேன்' என்று மழுப்பி விட்டார். குருநாதரின் ஆசிரமம் போனால் அவரும் அங்கில்லை. வெளியில் சென்று விட்டார். பல மணி நேரம் காத்திருந்தோம். கடைசியில் அவர் வந்தபிறகு ஜாதகம் பார்த் தோம். தடைகளுக்குப் பரிகாரம் சொன்னார். "பூஜை செய்துவைக்கிறோம். 30 நாள் கழித்து பெண்ணை அழைத்துவாருங்கள்' என்றார். திரும்பிவரும்போதுதான் உறவினர் உண்மைக் காரணத்தைச் சொன்னார். அதாவது அவர் பங்காளி இறந்துவிட்டதாகவும், அதற்குப் போகாமல் வந்துவிட்டதாகவும் கூறினார். முதலில் எனக்குத் தெரிந்திருந்தால் பயணத்தை ஒத்திவைத்திருப்பேன் என்பதால், என்னிடம் உண்மையை மறைத்து அழைத்துப் போய்விட்டார். முடிவில் குருநாதர் 30 நாள் கழித்து வருமாறு சொன்னதும், தீட்டு முடிந்து விடும் என்று ஒரு திருப்தி ஏற்பட்டது. "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக் கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.' இதுதான் பகவத்கீதையின் தத்துவம்.
● கே.கே. வெள்ளிங்கிரி, காராப்பாடி அஞ்சல்.
8-11-2019-ல் வெளிவந்த "பால ஜோதிடம்' இதழில் எழுதிய ராசிபலன் என் மகள் ஜனனிக்கு பொருத்தமாக இருந்தது. மிகவும் நன்றி! என் மனைவி துளசிமணி உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. எனக்கு மக நட்சத்திரம், சிம்ம ராசி. 20-9-1968-ல் பிறந்தேன். வியாபாரம், ரியல் எஸ்டேட் தொழில் எப்படியிருக்கும்?
வெறும் நட்சத்திரம், ராசியை வைத்து தெளிவாகப் பலன் கூறமுடியாது. முழு ஜாதகக் குறிப்பும், தசாபுக்தியும் (இருப்பு) தேவை. ஜாதகம் இல்லையென்றால் மதுரை கே.எம். சுந்தரம், செல்: 92453 28178-ல் தொடர் புகொண்டு, வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜாதகம் கணித்து, ஜெராக்ஸ் காப்பி எடுத்து அனுப்பிவைக்கவும்.
● இரா. உதயகுமார், கடலூர்.
என் ஜாதகத்தின்படி ஜீவன ஸ்தானம் எப்படி இருக்கிறது? நான் டி.சி. டெக் (கம்ப்யூட்டர்) படித்து வேலை பார்க் கிறேன். மேற்கொண்டு படிக்கலாமா? வாகனம் வாங்கும் யோகமுண்டா? உத்தியோகத்தில் சாதனை செய்ய என்ன செய்யவேண்டும்? அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?
மிதுன லக்னம்- அதில் சனி இருப்பது தோஷம். 9-ல் குரு இருந்து சனியைப் பார்க்கிறார். தோஷ நிவர்த்தி. 6-ல் சூரியன், செவ்வாய், புதன், ராகு, சுக்கிரன் மறைவு. பூர நட்சத்திரம், சிம்ம ராசி. 6-12-1974-ல் ஜனனம். வயது 45 நடக்கிறது. 32 வயதுமுதல் 50 வயதுவரை ராகு தசை. இந்த தசை முழுவதும் எதிர்நீச்சலும், போராட்டமும்தான்! அடுத்து வரும் குரு தசை 9-ல் நின்று ராசியைப் பார்ப்பது யோகம். 50 வயதுக்குமேல் யோகம் வந்தால் என்ன- வராவிட்டால் என்ன என்று கவலைப்பட வேண்டாம். எம்.ஜி.ஆருக்கே 50 வயதுக்குமேல்தான் யோகம் வந்தது. ராகு தசை முடியும்வரை திருவக்கரை சென்று வக்ரகாளியம்மனையும், குண்டலினி முனிவர் ஜீவசமாதியையும் மாதந்தோறும் வழிபடவும். விமோசனம் உண்டாகும்.
● ஆர். வினோலியா, தஞ்சாவூர்.
மதிப்பிற்கும் எங்கள் மரியாதைக்கும் உரிய ஜோதிட வித்தகரே! உங்களுக்கு எங்களின் கோடி நமஸ்காரம்! எங்கள் பெற் றோருக்கு நாங்கள் இரண்டு குழந் தைகள். நானும், என் தங்கையும், எங்கள் குடும்பமும் ஆண்டவனால் ஆசிர்வதிக் கப்படாத குடும்பம்! தந்தையொரு பக்கம்; தாயொரு பக்கம். நாங்களோ தாத்தா- பாட்டியிடம்! எப்படியோ தட்டுத் தடுமாறி நானும் ஈ.ஈ.ஈ. முடித்துவிட்டேன். வேலை தேடி அலைகிறேன். கிடைத்த பாடில்லை. திருமண வயதின் எல்லையில் நின்றுகொண்டிருக்கிறேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. வேலை கிடைக்குமா? திருமணம் நடக்குமா? எப்போது நடக்கும்?
7-6-1994-ல் பிறந்த உங்களுக்கு, 2019 ஜூன் மாதம் 25 வயது முடிந்து 26 வயது ஆரம்பம். அதற்குள் திருமணம் நடக்குமா, நடக்காதா என்று ஏன் விரக்தியடைகிறீர்கள்? பரணி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னம். 2035 வரை ராகு தசை. இதில் 4-3-2020 வரை ராகு தசை, தனது புக்தி. எப்போதும் எந்வொரு தசையிலும் அந்த தசையின் சொந்த புக்தி நன்மை செய்யாது. (சுயபுக்தி பலன் தராது). ஆகவே 4-3-2020-க்குமேல் வேலை, சம்பாத்தியம், திருமணம் எல்லாம் இனிதாக நடக்கும். ஞாயிற்றுக்கிழமை அல்லது பரணி நட்சத்திரம் (ஜென்ம நட்சத்திரம்) அன்று வேளாங்கண்ணி சென்று 27 மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்யவும்.
● எம். பிரகாஷ், சத்திரரெட்டியபட்டி.
ஜோதிட குருவே வணக்கம். மூன்று வருட காலமாக "பாலஜோதிடம்' படிக் கிறேன். மக்களுக்கான நல்ல வழிகாட்டும் புத்தமாகத் திகழ்கிறது. நான் பி.பி.ஏ., பட்டம் பெற்று சுமார் மூன்று வருடங் களாகின்றன. இதுவரை மூன்றுமுறை போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஓட்டம், கயிறு ஏறுதல் பயிற்சியில் தோல்வியாகிவிட்டது. ஒருமுறை ராணுவத்தில் ஓட்டத்தில் தோல்வி. மனம் மிகவும் வேதனைப்படுகிறது. எனக்குப் பின்னால் உள்ளவர்கள் தமிழக அரசு வேலையில் சேர்ந்துவிட்டனர். எனக்கு ராணுவம் அல்லது போலீஸில் பணிபுரிய வேண்டுமென்று ஆசை. என் ஆசை நிறைவேறுமா?
பிரகாஷ் உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னம். 17 வயதுமுதல் (26-11-2010 முதல்) ராகு தசை ஆரம்பம். இதில் 2018 நவம்பர் முதல் 2021 மே வரை புதன் புக்தி. உங்கள் ஜாதகப்படி சூரியன் துலா ராசியில் நீசம். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரனும் கன்னியில் நீசம். 10-க்குடைய குரு 10-ஆம் இடத்துக்கு 8-ல் மறைவு. அரசு வேலைக்கு இடமில்லை. எனவே வேறு ஏதாவது வேலைக்கு முயற்சி செய்யலாம். டிரான்ஸ்போர்ட் துறை அமையலாம்.
● எல்லையப்பன், சென்னை.
எவ்வளவோ சிறப்பான தொழில்கள் இருக்கும்போது ஜோதிடத்தை நம்புவதும், ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்வதும் சரியா? முறையா?
திருடுவதைத்தவிர, மற்ற எல்லாத் தொழில் களும் சிறப்பானவைதான். அதிலும் மணி, மந்திரம், ஔஷதம் என்பது புனிதமான தொழில் களே! மணி என்பது ஜோதிடம். மந்திரம் என்பது ஆலய பூஜை. ஔஷதம் என்பது மருத்துவம். (வைத்தியம்). இந்த மூன்றும் மனித வாழ்க்கைக்கு ஆதாரமானவை! டாக்டர் உடற்பிணியைப் போக்குகிறார். ஜோதிடர்களும் பூஜகர்களும் மனப்பிணியைப் போக்குகிறார்கள். ஜோதிடம் என்பது ஜோதி இருக்குமிடத்தைக் காட்டுவது. இருளை நீக்கி ஒளியை- வெளிச்சத்தைக் காட்டுகிறது. மனித வாழ்க்கையே நம்பிக்கை என்ற அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்ட கட்டடம்! அந்த நம்பிக்கைக்கு ஆதாரம் ஜோதிடம், பக்தி, ஆன்மிகம்! ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்கள் வாழவில்லையா- நன்றாக இல்லையா என்று ஒரு கேள்வி எழும். ஜோதிடத்தை நம்புகிறவர்கள் நீச்சல் தெரிந்து ஆற்றில் குதிப்பவர்களுக்குச் சமம். நம்பிக்கை இல்லாதவர்கள் நீச்சல் தெரியாமல் ஆற்றில் விழுவதற்குச் சமம்!