ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-71

● பி. சீனிவாசன், இராசிபுரம்.

எனது மகன் லால் எம்.ஈ., படித்துள்ளான். ஆனால் எந்தவிதமான வேலைக்கும் முயற்சி செய்யவில்லை. அதற்குக் காரணம் என்ன? எப்போது வேலைக்குப் போவான்? அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்?

கன்னியா லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். ஆகஸ்டுமுதல் 29 வயது ஆரம்பம். 20 வயதுமுதல் 39 வயதுவரை சனி தசை. 10-ஆம் இடம் தொழில் ஸ்தானம். அதற்கு தசாநாதன் சனி 8-ல் மறைவு. 4-ல் ராகு. 10-ல் கேது. சோம்பல், சுகவாசி. வேளா வேளைக்கு சாப்பாடும், கைச்செலவுக்கு "பேட்டா'வும் கிடைப்பதால் அவருக்கு எந்த வேலைக்கும் போக விருப்பம் இருக்காது. 7-ஆம் இடத்தை சனி பார்ப்பதால் திருமணம் தாமதமாகும். 7-க்குடைய குருவும் 12-ல் மறைவு. களஸ்திரகாரகன் சுக்கிரனும் 12-ல் மறைவு. "உடையவரே உண்டக்கட்டிக்கு திண்டாடும்போது லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டதாம்' என்றமாதிரி மகனுக்கே வருமானம் இல்லாதபோது திருமணம் செய்துவைத்தால் மரும களுக்கும் சேர்த்து சோறுபோட வேண்டும். இது தேவையா? "கல்யாணப் பரிசு' என்ற திரைப் படத்தில், வேலையில்லாத "டணால்' தங்கவேலு மனைவி சரோஜாவிடம் "ஒரு வாரத்தில் வேலை பார்க்காவிட்டால் ஒரு வேளை சாப்பாட்டை நிறுத்து' என்பார். "ஒரு மாதத்தில் வேலைக்குப் போகாவிட்டால் வெளியில் நிறுத்து' என்பார். அதற்கு அந்த அம்மாள், "வெளியில் என்ன, வீதியில் நிறுத்துவேன்' என்பார். அதுமாதிரி அதிரடி ஆக்ஷன் எடுங்கள். அப்போதுதான் பொறுப்பு வரும்.

● ஜி. ஜெயந்திமாலா, கோவை.

என் தோழி ராஜலட்சுமியின் கணவர் விஸ்வநாதனுக்கு தற்போது கேன்சர் நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டு மருத்துவ சிகிச்சை நடக்கிறது. அவருடைய ஆயுள் தீர்க்கம், நோய்நிவர்த்தி விவரம் கூறவும்.

விசுவநாதன் மேஷ ராசி, பரணி நட்சத்திரம், கடக லக்னம். 2019 டிசம்பரில் 60 வயது முடியும். 6-ஆமிடம் நோய் ஸ்தானம். அதில் சனி இருப்பதும், 8-ஆமிடத்தைப் பார்ப்பதும் தோஷம். 8-ஆமிடத்தை செவ்வாயும் 4-ஆம் பார்வை பார்ப்பதும் தோஷம். 2015 முதல் குரு தசை- 6-க்குடைய தசை. இதில் 9-1-2022 வரை 12-க்குடைய புதன் புக்தி. அதன்பிறகு கேது புக்தி 15-12-2022 வரை. அவர் மனைவி ராஜலட்சுமி மிருகசீரிட நட்சத்திரம், ரிஷப ராசி. 2020 டிசம்பர்வரை அட்டமத்துச்சனி. அத்துடன் 21-12-2019 வரை சனி தசை. பொதுவாக 60 வயது ஒவ்வொருவருக்கும் கண்டம் ஏற்படுத்தும் காலம். தசாபுக்தியும் அனுகூலமாக இல்லை. இறைவனை வழிபடவும். கோவை தன்வந்திரி பகவானுக்கு அபிஷேக பூஜை செய்யவும்.

● ஜெயந்திமாலா, கோவை.

என் தோழி இராஜலட்சுமியின் மகன் மனோஜ் ஜெயஸ்ரீ என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்த

என் தோழி இராஜலட்சுமியின் மகன் மனோஜ் ஜெயஸ்ரீ என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டான். திருமணம் 4-5-2015-ல் நடந்தது. ஒரு பெண் குழந்தை உண்டு. அதற்கு ஒரு வயது. இப்பொழுது இருவருக்கும் ஒற்றுமை இல்லை. ஏட்டிக்குப் போட்டி, வாக்குவாதம். அவர்கள் ஒற்றுமையாக வாழ என்ன பரிகாரம்?

மனோஜ்- ஜெயஸ்ரீயின் திருமணம் 4-5-2015-ல் நடந்ததால், தேதி எண் 4, கூட்டு எண் 8. அதனால் பிரிவது உறுதி. பிரியாமலிருக்க 4-5-2015-ல் கட்டிய மாங் கல்யத்தைக் கழற்றி உண்டியலில் செலுத்தி விட்டு, தேதி எண்ணும், கூட்டு எண்ணும் 1, 3, 6 வரும் நாளில் மறுமாங்கல்யம் கட்டவேண்டும். அத்துடன் காரைக்குடிசுந்தரம் வசம் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வர கலா ஹோமத்தில் பதிகமன ஹோமமும், கந்தர்வராஜ ஹோமத்தில் சதிகமன ஹோமமும்செய்து, இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். அத்துடன் குழந்தைக்கும் ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி மிருத்யுஞ்சய ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம் உள்பட 19 வகையான ஹோமமும் செய்து, மூவரும் கலச அபிஷேகம் செய்து கொண்டால் குடும்பம் பிரியாமல் சேர்ந்து வாழலாம். தொடர்புக்கு: சுந்தரம், செல்: 99942 74067.

● ஏ. அகிலாண்டேஸ்வரி, அய்யர்மலை.

எனது மகன் சிவகண்ணப்பன் டிப்ளமோ (ஈஈஈ) முடித்து விவசாயம் பார்த்துவருகிறான். அவனுக்கு அரசு வேலை அமையுமா? அல்லது குடும்பத் தொழிலான கோவில் பூஜை, பல்லக்கு அலங்காரம் செய்யலாமா? திருமணம், எதிர்காலம் எப்படி அமையும்?

மீன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். 2-க்குடைய செவ்வாய் 10-ல் தனுசு ராசியிலும், 10-க்குடைய குரு 2-ல் மேஷ ராசியிலும் பரிவர்த்தனை. 10-க்குடைய குரு 2-ல் நீசச்சனியுடன் சம்பந்தம் என்பதால், அரசு வேலைக்கோ அடிமை வேலைக்கோ இடமில்லை. சொந்தத் தொழில், கோவில் பூஜை சம்பந்தப்பட்டவை செய்யலாம். 20 வயது முடிந்து 21 வயது ஆரம்பம். 25 வயதில் திருமணம் கூடும். சொந்தத்தில் அமையும். 24 வயதுவரை கேது தசை. சுக்கிர தசை யோக தசையாக அமையும்.

● எம். சோமசுந்தரம், ஆம்பூர்.

தங்கையை நானும் தாயாரும் கட்டுப்பாடாகவும், ஒழுக்கமாகவும் வளர்த்துவிட்டோம். இதுவரை கடைக்கோ, மார்க்கெட்டுக்கோ, வங்கி, தபால் நிலையத்துக்கோ வீட்டைவிட்டு வெளியே எங்கும் அனுப்பியதில்லை. 30 வருடமாக சினிமாவுக்கும் போனதில்லை. தெருக்குழாயில் குடிநீர் வந்தால் மற்றவர்கள் அங்கேயே பாத்திரம் துலக்குவதையும், குழாயை மூடாமல் அப்படியே விட்டுவிடு வதையும்கூட தாங்கிக்கொள்ள இயலாமல் வருத்தப்படுகிறாள். தற்போது விற்பனையாகும் காய்கறி வகைகளில் கெமிக்கல் மருந்து இருப்பதால் உண்ணாமல் இருக்கி றாள். அப்படியே சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்வதில்லை. 21-1-2003-ல் தாயார் காலமானார். இந்நிலையில் மனோநிலை பாதிக்குமோ என்று அஞ்சி ஐந்து வீடுகள் மாறிவிட் டோம். அவளுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்?

தங்கை தனலட்சுமிக்கு 71 வயது முடிந்து 72 ஆரம்பம். சுவாதி நட்சத்திரம். தங்கையின் 55 வயதில் தாயார் கால மானார். அவருக்கு காலாகாலத் தில் திருமணம் செய்துவைத்து, இரண்டு, மூன்று குழந்தைக்குத் தாயாக்கிப் பார்த்துவைக்காத தவறு உங்கள் தாயாருடையது. அந்த தவறில் தற்போது 82 வயது நடக்கும் உங்களுக்கும் பங்குண்டு. உங்களுக்காவது திருமணமாகிவிட்டதா இல்லையா என்பதை எழுதவில்லை. "ஊரோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லாத நிலைக்குச் சமம்' என்று ஒரு வாசகம் உண்டு. உங்கள் ஜாதகப்படி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி குரு பாதக ஸ்தானம் ஏறியதால், தாத்தா காலத்திலோ, தந்தை காலத்திலோ ஏதோ ஒரு தோஷம்- ஸ்திரீ சாபம்- பாவம் சம்பவித்துள்ளது. உங்கள் இருவருக்கும் அந்திமக் காலம். உங்களுக்கு 82 வயது. தங்கைக்கு 72 வயது. மீதமுள்ள காலத்தை இதமாக பதமாக மாற்றுவதற்கு மாயவரம்- பூந்தோட்டம் அருகில் செதலபதி சென்று பிதுர் தர்ப்பணம் செய்யவேண்டும். (ஒரு அமாவாசையன்று). தொடர்புக்கு: சுவாமிநாத சிவாச்சாரியார், செல்: 94423 90299. விசுவநாத சிவாச்சாரியார், செல்: 94427 14055. அத்துடன் பௌர்ணமியன்று திருஈங்கோய்மலை அடிவாரத்திலுள்ள ஆசிரமம் போய் வழிபடவும்.

gg

● கே. சந்தானம், கொளத்தூர்.

15 வருடகாலமாக "பாலஜோதிடம்' படித்து பரம ரசிகனாகிவிட்டேன். எனக்கு ஜோதிடம் தெரியாது என்றாலும், அதில் நீங்கள் எழுதும் பலன்களும், கேள்வி பதிலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்களின் மெய்ஞ்ஞானவாக்கு விளங்க பல்லாண்டு வாழ்க என்று பிரார்த்திக்கிறேன்- வாழ்த்துகிறேன். என் மகனுக்கும் மகளுக்கும் ஏற்கெனவே திருக்கணித ஜாதகம் உள்ளது. தங்கள் ஆலோசனைப்படி மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப்படி ஜாதகம் கணித்தேன். மகளின் நட்சத்திரம் மாறுபடுகிறது. எது சரி?

திருக்கணிதப் பஞ்சாங்கம்- வாக்கியப் பஞ்சாங்கம் என்று இருவகை உண்டு. அனுபவ ரீதியாக வாக்கியப் பஞ்சாங்கமே சரியாக இருக்கிறது. இரண்டுக்கும் நட்சத்திரம், கிரகநிலைகள் மாறத்தான் செய்யும். அதைப்பற்றி குழப்பமடையாமல் வாக்கியப் பஞ்சாங்கப்படி கணித்த ஜாதகத்துக்கே பலன் அறியலாம். குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி போன்ற கிரக மாற்றங்கள் எல்லாம் வாக்கியப் பஞ்சாங்கப்படிதான் தமிழ்நாட்டுக் கோவில்களில் விழா நடக்கும். அந்தக் காலத்தில் ரூபாய், அணா, பைசா என்று இருந்தது. ஒரு ரூபாய்க்கு 96 பைசா. காலணா, அரையணா, முக்காத்துட்டு என்று புழக்கத்தில் இருந்தது. அரசாங்கத்தால் ஒரு ரூபாய்க்கு 100 நயா பைசா என்று மாற்றம் செய்யப்பட்டது. இப்போது அதுதான் நடைமுறையிலுள்ளது. ஆகவே யார் என்ன சொன்னாலும் சரி; எழுதினாலும் சரி -வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட ஜாதகங்களையே நம்பவும், கடைப்பிடிக்கவும். இந்த விஷயத்தில் சென்னை சைதாப்பேட்டை ஜோதிடர் ஆதித்ய குருஜிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுண்டு. அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்தான். இருந்தாலும் ரயில்வே தண்டவாளம்போல அவர் ஒரு பாதை- ffநான் ஒரு பாதை. இரண்டிலும் ரயில் போனால்தான் ஊர்போய்ச் சேரலாம். யாருக்கு எதில் நம்பிக்கை இருக்கிறதோ அதைக் கடைப்பிடிக்கலாம். அதேசமயம் வாக்கியப் பஞ்சாங்கமே சரி என்று அனுபவசாலிகள் நம்புகிறார்கள். காஞ்சி மகாப்பெரியவரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆங்கில மருத்துவமும் மருத்துவம்தான். சித்த, யுனானி, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவமும் மருத்துவம்தான். யாருக்கு எந்த மருத்துவம் சரியாக இருக்கிறதோ- ஒத்துவருகிறதோ அதைக் கடைப்பிடிக்கலாம். ஆங்கில மருத்துவம் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு வந்தது. மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பு- தாத்தா பாட்டி காலத்தில் இருந்து கடைப்பிடிப்பது மற்ற மருத்துவம். இது வாக்கியம்- அது திருக்கணிதம்.

● பெ. ரவி, கோவை.

எனது மகள் அனுசுயா தேவி எம்.எஸ்.சி., எம்.பில், பி.எச்.டி, முடித்துள்ளாள். மகளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? தனியார்த்துறையா? அரசுப் பணியா? திருமணம் எப்போது நடைபெறும்? கடந்த ஆறு ஆண்டுகளாக "பாலஜோதிடம்' வாசிக்கிறேன். மனதுக்கு நிறைவாக உள்ளது. நல்ல விஷயங்கள், வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி என்பது திண்ணம்.

மகள் அனுசுயா தேவி கன்னியா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். நடப்பு வயது 27. சனி தசை முடிந்து புதன் தசை 14-6-2023 வரை. (வயது 30-4-17 வரை). புதன் 6-ல் மறைவு. லக்னாதிபதி சூரியனும் 6-ல் மறைவு. 7-க்குடைய கணவர் ஸ்தானாதிபதி சனியும் 6-ல் மறைவு. (ஆனால் ஆட்சி.) அத்துடன் சனியை செவ்வாய் 8-ஆம் பார்வை பார்க்கிறார். ஆகவே, 30 வயதுக்குமேல்தான் திருமண யோகம். ராசிக்கு 7-ல் குரு இருப்பதால், தாமதமானாலும் நல்ல கணவரும், நல்ல மணவாழ்க்கையும் அமையும். இன்னும் மூன்று வருடம் காத்திருக்க முடியாதென்று கவலைப்பட்டால், காரைக்குடியில் 19 வகையான ஹோமம் செய்து, மகளுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். கலப்புத் திருமணம், காதல் திருமணம் நடக்காமல் முறையான திருமணம் நடக்கும். இனிய நல்வாழ்வும் அமையும். நம்பிக்கையோடு செயல்படவும்.

● ஆர். சௌந்திர ராஜன், சேலம்-15.

ff

5-1-2009 "பாலஜோதிட'த்தில் முருகு இராசேந்திரன் எழுதியுள்ள "குரு கொடிய பலன் தருவாரா' என்ற தலைப்பில் எழுதியதைப்போல், ஜனன ஜாதகத்தில் கன்னியா லக்னத்துக்கு 7-ல் குரு ஆட்சிபெற்ற பெரும்பாலானவர்களுக்கு திருமணமே ஆவதில்லை. அப்படியே திருமணம் ஆனாலும் சிறிது காலத்திலேயே பிரிவு உண்டகிறது. இது எனது மகள் வாழ்க்கையில் நடந்த உண்மை. திருமணமாகி ஏழு வருடம்தான் வாழ்ந்தார். கணவர் இறந்துவிட்டார். ஒரு மகள் உண்டு. எனக்குப் பேத்தி. அவள் தனுசு லக்னம். 7-ல் பாதக ஸ்தானத்தில் புதன், குரு, ராகு இருக்க, செவ்வாய் பார்ப்பது தோஷமா? இதற்கு விளக்கம் கூறவும்.

மகள் ஜாதகத்தில் கன்னியா லக்னம், 7-ல் குரு ஆட்சி. அதனால் உபய லக்னத்துக்கு 7-ஆமிடம் பாதக ஸ்தானம் என்ற தோஷமில்லை. இருந்தாலும் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டதற்கு அது காரணமல்ல. மகள் ஜாதகத்தில் நவாம்சத்தில் குரு மகரத்தில் நீசம். நவாம்ச லக்னம் மீனம். அதன் அதிபதியே குருதான். அம்சத்தில் பலக்குறைவு. உங்கள் பேத்தி ஜாதகத்தில் தனுசு லக்னம். லக்னத்தில் கேது. 7-ல் புதன் ஆட்சி. குரு- ராகு சம்பந்தம். லக்னாதிபதி குரு 7-ல் இருப்பது தோஷநிவர்த்தி. நாகதோஷம் மட்டும் உண்டு. அதனால் திருமணம் தாமதமாகும். 27 வயதுமுதல் விவாக யோகம். அப்போது காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்யவேண்டும். மேலும் பேத்தி ஜாதகத்தில் நவாம்ச சக்கரத்தில் குரு ஆட்சிபெறுகிறார். (தனுசு குரு). ஆகவே முருகு இராசேந்திரன் எழுதியபடி தோஷம் பாதிக்காது. பேத்திக்கு 12-ல் செவ்வாய் ஆட்சி என்பதால் (விருச்சிகம்) செவ்வாய் தோஷம் நிவர்த்தி. தோஷமில்லை.

● யோகானந்த், சென்னை.

20 வருடமாகப் பார்த்த வியாபாரம் நல்ல லாபம் தந்தது. 2015 முதல் மூடும் நிலை வந்துவிட்டது. இப்போது வியாபாரமும் வருமானமும் இல்லை. வீட்டு வாடகையை வைத்துத்தான் குடும்பம் நடக்கிறது. நீங்கள் எழுதிய பரிகாரம் எல்லாம் முறையாகச் செய்கிறேன். விமோசனம் உண்டா?

மூல நட்சத்திரம், தனுசு ராசி, கன்னி லக்னம். 2014 மார்ச்முதல் ராகு தசை- 2032 வரை. ராகு 8-ல் இருக்கிறார். அவரை 6-க்குடைய சனியும், 8-க்குடைய செவ்வாயும் பார்க்கிறார்கள். ஏமாற்றம், இழப்பு, நஷ்டம், அவமானம் எல்லாம் ஏற்படும் காலம். ஏன் வாழவேண்டும் என்ற விரக்தியும் உண்டாகும். செலவோடு செலவாக- கடனோடு கடனாக பணம் தயார் செய்துவிட்டு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும். 19 வகை ஹோமம் செய்து, பூஜை செய்யவேண்டும். பஞ்சபாண்டவர்களும் ராமபிரானும் வனவாசம் போன நிலைமாதிரி உங்கள் நிலை. வீட்டை விற்கவும், புது வீடு வாங்கவும், கடன் அடைபடவும், புதிய தொழில் தொடங்கவும், மறுவாழ்வு சிறக்கவும், ஒளிமயமான எதிர்காலம் ஏற்படவும் வழிவகை பிறக்கும்.

bala291119
இதையும் படியுங்கள்
Subscribe