● சி. சென்னப்பன், பெத்த தாளாப்பள்ளி.
நான் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். என் மனைவி விவாகரத்து பெற்றுக்கொண்டாள். எனது மகனுக்குத் திருமணம் செய்துவைத்தேன். அவனும் எனக்கு உதவியாக இல்லை. இதனால் நான் மறுமணம் செய்ய விரும்புகிறேன். மறுமணம் செய்துகொள்ளலாமா? மூன்று வருடம் தனிமையாக வாழ்கிறேன்.
சென்னப்பனுக்கு 63 வயது நடக்கிறது. தனுசு லக்னம், மிருகசீரிடம் நட்சத்திரம், ரிஷப ராசி. 56 வயதுமுதல் 73 வயதுவரை புதன் தசை. 40 அல்லது 45 வயது என்றால்கூட தாரம் இழந்தால் மறுமணம் செய்துகொள்ளலாம். மகன் வயிற்றுப்பேரனுக்கு மூன்று வயது முடியப்போகிறது. பேரன்- பேத்தியைக் கொஞ்சும் வயதில் தாரம் அவசியமா?
● பாலமுருகன், பழைய ஏழாயிரம்பண்ணை.
எனக்கு நடைபெறும் குரு தசை எப்படியிருக்கும்? அடுத்து வரும் புக்திகள் எப்படியிருக்கும்? ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உண்டா?
ரிஷப லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். 2014 ஜனவரி முதல் குரு தசை. இது ரிஷப லக்னத்துக்கு 8-க்குடைய தசை, 4-ல் இருக்கிறார். 2022 வரை முதல் எட்டு வருடம் அட்டமாதிபத்திய பலன். பிறகு 11-க்குடைய லாபாதிபத்திய பலன். லக்னத்துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு- நாகதோஷம் என்பதால் திருமணம் தாமதமாகும்; தடைப்படும். கோவில் பூஜை முறைகள் செம்மையாக நடக்கும். 2-ல் கேது இருப்பதால் ஜோதிடமும் கற்றுக்கொண்டு ஜோதிடம் சொல்லலாம். வாக்குப்பலிதம் உண்டாகும்.
● கே. மணி, எடப்பாடி.
என் மகன் பாலாஜிக்கு எப்போது திருமணம் நடக்கும்? வரன் உறவா? அசலா? எதிர்காலம் எப்படியிருக்கும்?
பாலாஜிக்கு விருச்சிக ராசி. கும்ப லக்னம். 2020 வரை ஏழரைச்சனி நடக்கும். 2-ல் ராகு, 8-ல் கேது. நாகதோஷம் உண்டு. 33 வயது முடிந்த பிறகு திருமணம் நடக்கும். ராசிக்கு 7-ஆம் இடத்தையும், லக்னத்துக்கு 7-ஆம் இடத்தையும் சனி பார்க்கிறார். முன்னதாக திருமணம் செய்ய விரும்பினால் காரைக்குடி அருகில் வேலங்குடி வயல்நாச்சியம
● சி. சென்னப்பன், பெத்த தாளாப்பள்ளி.
நான் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். என் மனைவி விவாகரத்து பெற்றுக்கொண்டாள். எனது மகனுக்குத் திருமணம் செய்துவைத்தேன். அவனும் எனக்கு உதவியாக இல்லை. இதனால் நான் மறுமணம் செய்ய விரும்புகிறேன். மறுமணம் செய்துகொள்ளலாமா? மூன்று வருடம் தனிமையாக வாழ்கிறேன்.
சென்னப்பனுக்கு 63 வயது நடக்கிறது. தனுசு லக்னம், மிருகசீரிடம் நட்சத்திரம், ரிஷப ராசி. 56 வயதுமுதல் 73 வயதுவரை புதன் தசை. 40 அல்லது 45 வயது என்றால்கூட தாரம் இழந்தால் மறுமணம் செய்துகொள்ளலாம். மகன் வயிற்றுப்பேரனுக்கு மூன்று வயது முடியப்போகிறது. பேரன்- பேத்தியைக் கொஞ்சும் வயதில் தாரம் அவசியமா?
● பாலமுருகன், பழைய ஏழாயிரம்பண்ணை.
எனக்கு நடைபெறும் குரு தசை எப்படியிருக்கும்? அடுத்து வரும் புக்திகள் எப்படியிருக்கும்? ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உண்டா?
ரிஷப லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். 2014 ஜனவரி முதல் குரு தசை. இது ரிஷப லக்னத்துக்கு 8-க்குடைய தசை, 4-ல் இருக்கிறார். 2022 வரை முதல் எட்டு வருடம் அட்டமாதிபத்திய பலன். பிறகு 11-க்குடைய லாபாதிபத்திய பலன். லக்னத்துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு- நாகதோஷம் என்பதால் திருமணம் தாமதமாகும்; தடைப்படும். கோவில் பூஜை முறைகள் செம்மையாக நடக்கும். 2-ல் கேது இருப்பதால் ஜோதிடமும் கற்றுக்கொண்டு ஜோதிடம் சொல்லலாம். வாக்குப்பலிதம் உண்டாகும்.
● கே. மணி, எடப்பாடி.
என் மகன் பாலாஜிக்கு எப்போது திருமணம் நடக்கும்? வரன் உறவா? அசலா? எதிர்காலம் எப்படியிருக்கும்?
பாலாஜிக்கு விருச்சிக ராசி. கும்ப லக்னம். 2020 வரை ஏழரைச்சனி நடக்கும். 2-ல் ராகு, 8-ல் கேது. நாகதோஷம் உண்டு. 33 வயது முடிந்த பிறகு திருமணம் நடக்கும். ராசிக்கு 7-ஆம் இடத்தையும், லக்னத்துக்கு 7-ஆம் இடத்தையும் சனி பார்க்கிறார். முன்னதாக திருமணம் செய்ய விரும்பினால் காரைக்குடி அருகில் வேலங்குடி வயல்நாச்சியம்மன் கோவிலில் காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், சூலினிதுர்க்கா ஹோமம் முதலிய 18 வகையான ஹோமம் செய்து பாலாஜிக்கு கலச அபிஷேகம் செய்தால் நல்ல மனைவி- பட்டதாரிப் பெண் அமையும். அந்நிய சம்பந்தம்! சுந்தரம் குருக்கள் செல்: 99942 74067-ல் பேசவும்.
● ஜெ. சாரதா, மாயவரம்.
பலரது வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கும் தாங்கள் எனது மகனின் வாழ்வுக்கும் தீர்வு கூறுவீர்கள் என நம்பி இக்கடிதத்தை எழுதுகிறேன். எனக்கு ஒரு மகன், 36 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொன்னான். பல பிரச்சினைகளுக்குப் பிறகு அவன் விருப்பத்துக்கு சம்மதித்தோம். பெண் வீட்டில் அவன் ஜாதகத்தை வாங்கிச் சென்றனர். இப்பொழுது எங்கள் மகன் ஜாதகம் சரியில்லை என்றும், ஆயுள் குறைபாடு உள்ளது என்றும் கூறி பெண்ணைத் தரமுடியாது என்று போய்விட்டனர். அவனுக்குத் திருமணம் நடக்குமா? எப்பொழுது நடக்கும்? காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா?
அவர்கள் சொல்வதுபோல ஆயுள் குற்றம் உள்ளதா? அவன் காதலிக்கும் பெண்ணின் ஜாதகத்தையும் இணைத்துள்ளேன். மகன் ரமேஷ் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னம். லக்னத்தில் ராகு, ஏழில் கேது. நாகதோஷம் உண்டு. திருமண தாமதத்துக்கு அதுவே காரணம்! விருச்சிகச் செவ்வாய், கன்னிச்சனி 3-ஆம் பார்வை பார்ப்பதால் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பது விதி. 18-2-2019-க்குமேல் ராகு தசை ஆரம்பம். அப்போது திருமணம் கூடும். நீங்கள் அனுப்பியுள்ள பெண் ஜாதகம் சதய நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னம். அந்தப் பெண் ஜாதகத்திலும் 2-ல் சனி, செவ்வாய், ராகு இருப்பது தோஷம். தோஷத்துக்கு தோஷம் சமம். அதற்கும் சனி, செவ்வாய் சேர்க்கை என்பதால் கலப்புத் திருமணம், காதல் திருமணம் என்பது விதி. ஆனால் இருவர் ஜாதகத்திலும் லக்னத்துக்கு குரு பார்வை இருப்பதால் காதல் திருமணம் நடைபெறாமல் மாறுவதற்கும் இடமுண்டு. நல்ல பொருத்தம் இருக்கிறது. பெண்ணுக்கு 2-6-2019 வரை சனி தசை, தனது புக்தி. இதன்பிறகு திருமணம் நடக்கலாம். ஆண் ஜாதகத்தில் (ரமேஷ்) ஆயுள் தீர்க்கம் உண்டு. ஆயுள்காரகன் சனி மிதுன லக்னத்தைப் பார்க்க, குருவும் பார்க்கிறார். பெண்ணைப் பெற்றவர்களுக்கு இந்த திருமணத்தில் மனப்பூர்வமான உடன்பாடு இல்லாத காரணத்தால் ஜாதகத்தின்மேல் பழியைப் போட்டு தப்பிக்க நினைக்கிறார்கள். உங்கள் பையன் அந்தப் பெண்ணை விரும்புவதுபோல, அந்தப் பெண் சத்யாவும் உங்கள் பையனை உண்மையில் விரும்பினால் வீட்டைவிட்டு வெளியேறி பதிவுத்திருமணம் செய்து கொள்ளட்டும். சத்யா தன் பெற்றோருக்குப் பயந்து ரமேஷை புறக்கணித்தால், ரமேஷ் சத்யாவை மறந்துவிட்டு வேறு திருமணம் செய்துகொள்ளட்டும். இதுதான் தீர்வு.
● பகவதி சோமசுந்தரம், ஈரோடு.
எனது மகள் சௌமியாவுக்கும் மாப்பிள்ளை அஜய் கார்த்திக்கிற்கும் தங்கள் ஆசிர்வாதத்தால் 19-1-2018-ல் திருமணம் இனிதே நடைபெற்று நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வெளிநாடு செல்வார்களா? சௌமியா, தற்போது வேலை பார்க்கும் கம்பெனியிலிருந்து வேறு கம்பெனிக்கு மாறலாமா?
சௌமியா பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னம். 7-9-2019 வரை சந்திர தசை. அக்டோபரில் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு வேலை மாற்றம் எதிர்பார்க்கலாம். புதிய வேலைக்கு வாய்ப்புண்டாகும். அஜய் கார்த்திக் அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னம். 1-10-2015 முதல் சந்திர தசை ஆரம்பம். இருவரும் ஒரே ராசி. நல்ல பொருத்தம் உண்டு. விரைவில் வாரிசு உருவாகும். இருவருக்கும் சந்திர தசை, ஏக தசை நடப்பதால் பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று ஒரு திங்கட்கிழமையன்று பூமிநாதசுவாமிக்கும் ஆரணவல்லியம்மனுக்கும் ருத்ரஹோமம் வளர்த்து, 108 சங்கு வைத்துப் பூஜை செய்து ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். இருவருக்கும் அட்டமச்சனி முடிந்துவிட்டால் பயமில்லை. தோஷமில்லை. இருந்தாலும் சம தசை, சந்திர தசைக்கு இந்த பூஜை செய்தால் நல்ல வேலை, வாரிசு யோகம், வெளிநாட்டு வாய்ப்பு போன்ற நன்மைகள் தடையின்றி நடைபெறும். திருச்சி- புதுக்கோட்டை வழி பொன்னம ராவதிக்குமுன்பு செவலூர் பிரிவு வரும். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863-ல் தொடர்புகொண்டு பேசவும்.
● தா. ராமகிருஷ்ணன், பெருங்குடி.
நான் கடந்த பத்து வருடமாக "பாலஜோதிடம்' படிக்கிறேன். தாங்கள் வாசகர்களுக்கு கூறும் பதில்கள் மிக நேர்த்தியாகவும் பலன் தரக்கூடியதாகவும் உள்ளன. என் மகன் நகலகம் தொழில் வைத்திருக்கிறான். கடை வருமானம் சரியில்லை. திருமணமும் அமையவில்லை. எப்போது நடக்கும்?
மகன் ஜெகந்நாதன் திருவோண நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னம். ராசிக்கு 2-ல் ராகு, லக்னத்துக்கு 7-ல் சனி. 30 வயது முடிந்த பிறகு திருமணம் நடக்கும். மகர ராசிக்கு 2020 வரை ஏழரைச்சனி- விரயச்சனி நடப்பதால் தொழில் வளமில்லை. உடல்நலமும் பாதிக்கலாம். ராகு தசை நடக்கிறது. நட்சத்திரம், இருப்பு தசை குறிப்பிட்டுள்ள பக்கம் ஜெராக்ஸ் அனுப்பவில்லை. 35 மிளகை ஒரு சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து தீபமேற்றவும். அத்துடன் தொழில் வளர்ச்சிக்கு சனிக்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றி நெய் தீபமேற்றி வழிபடவும்.
● எஸ். ரமேஷ், அவலூர்பேட்டை.
தாங்கள் சொல்லும் பலன் நூறு சதவிகிதம் மிகமிகச் சரியாக உள்ளது. கேள்வி- பதில் பகுதியைப் படித்தே ஜோதிடர் ஆகிவிடலாம். என் பூர்வீக நிலத்தை விற்று நகரங்களில் முதலீடு செய்யலாமா? அண்ணன் பூர்வீக இடத்தை விற்க விரும்பவில்லை. ஆனால் கடன் நிறைய உள்ளது. அதை எப்படி அடைப்பது? நான் ஜோதிடம் படிக்கிறேன். பகுதி நேரமாக ஜோதிடத் தொழிலைப் பார்க்கலாமா? சனி தசை 4-ஆவது தசை, முடியும் நேரம் யோகம் தருமா? அடுத்து புதன் தசை எப்படியிருக்கும்?
உங்களுக்கு (ரமேஷ்) அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னம். சனி தசை, ராகு புக்தி நடப்பு. அடுத்துவரும் குரு புக்தியில் (2019 பிப்ரவரி முதல்) உங்கள் விருப்பப்படி பூர்வீக நிலத்தை விற்று நல்லமுறையில் நகரங்களில் முதலீடு செய்யலாம். திண்டிவனம்- புதுச்சேரி பாதையில் திருவக்கரை சென்று வக்ரகாளியையும் சந்திர மௌலீஸ்வரரையும் பூஜை செய்து, குண்டலினி முனிவர் ஜீவசமாதியின்முன்பு 18 நெய் விளக்கேற்றி பிரார்த்திக்கவும். ஜோதிடம் படிக்கலாம். சித்திக்கும். பலன் சொல்லலாம். அண்ணனும் அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, சிம்மம் லக்னம். புதன் தசை நடப்பு. அவர் பூர்வீக நிலத்தை வைத்துப் பராமரிக்கலாம். 2020-ல் சனிப்பெயர்ச்சியின்போது- ஏழரைச்சனி ஆரம்பிக்கும்போது அவருக்கு என்ன தோன்றுகிறதோ அப்படிச் செயல்படலாம். திருவண்ணாமலை அருகில் ஆதிதிருவரங்கம், ஆதிரங்கநாதர் கோவிலுக்கு புதன்கிழமை சென்று வழிபடவேண்டும்.
● வி. அருணாசல கனி, வடலூர்.
எனக்கு என்ன தசை, புக்தி நடக்கிறது? எந்த தெய்வத்தை வழிபடவேண்டும்? எனக்குள்ள நோய் தீர என்ன வழிபாடு செய்ய வேண்டும்?
பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னம். இருப்பு தசையே எழுதாமல் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்லுவது?
● விஜயா, நாமக்கல்.
என்னுடைய மகன் முருகனுக்கு அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னம். அண்ணனிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே போய்விட்டான். சென்னையில் இருக்கிறான். வேலையும் இல்லை. நான்தான் பணம் அனுப்புகிறேன். எப்போது குடும்பத்தோடு வந்துசேருவான்?
29 வயது முடிந்து 30 வயது ஆரம்பம். 33 வயதுவரை புதன் தசை. அவனுக்கு நடக்கும் ஏழரைச்சனிதான் அவனை வெளியேற்றியுள்ளது. சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயருக்கும் குருநாதர் ஜீவசமாதிக்கும் அபிஷேக பூஜை செய்து வழிபடவும். விரைவில் வீடு திரும்புவான்.
குறிப்பு: கேள்வி கேட்கும் வாசகர்கள் கார்டில் (அஞ்சல் அட்டை) அல்லது இன்லன்ட் லெட்டரில் கேள்வி கேட்காமல் கவரில் எழுதி அனுப்புங்கள்.
-ஜோதிடபானு.