● கே. சந்தானம், கொளத்தூர் (சென்னை).

15 வருடங்களாக "பாலஜோதிட'த் தின் பரம ரசிகன். உயிர்மூச்சாக ஒன்றி விட்டேன். நான் ஜோதிடம் தெரிந்தவன் அல்ல! என்றாலும் ராசி பலனும், கேள்வி- பதிலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன. எனது திருமணம் 9-9-1990-ல் நடந்தது. 25-11-1991-ல் முதல் மகன் சூரியா; 5-6-1995-ல் இரண்டாவது மகள் மாதங்கி பிறந்தனர்.

hh

இருவருடைய ஜாதகம் திருக்கணித முறைப்படி கணிக்கப்பட்டது. அதனால் மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக் கியப்படி எழுதினோம். அதில் பையனின் நட்சத்திரம் மாறுபடுகிறது. திருக்கணித ஜாதகத்துக்கும் வாக்கிய ஜாதகக் கணிதத்துக்கும் நட்சத்திரமும் மாறும்; கிரகநிலைகளும் மாறத்தான் செய்யும். என்றாலும் வாக்கியப்படி கணிக்கப்பட்ட ஜாதகப்பலனே சரியாக நடக்கும். கே.எம். சுந்தரம் எழுதியது வாக்கியப் பஞ்சாங்கப்படிதான் இருக்கும். தசாபுக்திகளும் மாறலாம். அதையே பின்பற்றவும்.

Advertisment

● கே.கே. வெள்ளிங்கிரி, காரப்பாடி.

நான் மளிகைக் கடை வைத்திருக் கிறேன். வியாபாரம் சுமார். வியாபாரம் விருத்தியடையுமா? ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறேன். அதுவும் சுமார்தான். ஒரே மகள் ஜனனி முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படிக்கிறாள். உத்திராட நட்சத்திரம். 12-5-2001-ல் பிறந்தவள். அரசு வேலை கிடைக்குமா? எனது கடைக்கு கே.கே. வெள்ளிங்கிரி மளிகை, கே.வி. ஜனனி மளிகை- இதில் எந்தப் பெயர் வைக்கலாம்?

ஜனனி மளிகை என்று வைக்கலாம். உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி. ஜென்மச் சனி நடக்கிறது. படிப்பு தடையில்லாமல் முடியும். பட்டம் பெறலாம். பிறகு வேலை கிடைக்கும். திருமணம் 25 வயதில் நடக்கும். ஏழரைச்சனியின் பாதிப்புக்குறைய 27 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவரின் சந்நிதியில் நெய்யில் தீபமேற்றி வழிபடவும். சனி பகவானின் குருநாதர் பைரவர்.

Advertisment

● தேவராஜ், சின்னமனூர்.

குருப்பெயர்ச்சி எந்தெந்த ராசி அன்பர் களுக்கு நல்லது செய்யும்?

"குருப்பெயர்ச்சிப் பலன்கள்' என்ற தலைப்பில் தனிப்புத்தகம் எழுதியுள்ளேன். வாங்கிப்படிக்கவும். அத்துடன் 10-11-2019 "பாலஜோதிடம்' இதழில் சுருக்கமாக எழுதியுள்ளேன்.

● சதீஷ்குமார், மதுரை.

பொதுவாக குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது எந்த எழுத்தில் ஆரம்பிக்கவேண்டும்? எண்கணிதப்படியா அல்லது நட்சத்திரப்படியா?

ஆங்கிலத் தேதிப்படி (பிறந்த தேதி எண்- கூட்டிவரும் எண்) அதிர்ஷ்ட எண் எதுவோ அதன்படி வைக்கவேண்டும். சில குடும்பங்களில் குலதெய்வப் பெயர் அல்லது முன்னோர்களின் பெயர்வைத்து அழைப் பார்கள். பெயர் எழுத்து ஆரம்பம் A, J, Q முதலிடம் வகிக்கும். அடுத்து A, I, E, O, U என்ற Vowels எழுத்தில் ஆரம்பிக்கலாம். பொதுவாக P, T என்று ஆரம்பிக்கும் எழுத்துகள் சோதனை யான வாழ்க்கையைத் தரும். நட்சத்திர எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. நட்சத்திர எழுத்து ஆரம்பம் எண்கணிதப்படி அமைந்தால் விசேஷம்தான்!

● சபரி, முகப்பேர்.

இறைவனை ஜோதி ரூபமாக வர்ணித்தது ஏன்?

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பது பஞ்சபூதம். இந்த பஞ்சபூதம்தான் உலகைத் தோற்றுவித்து இயக்கிவருகிறது. எல்லா உயிரினங்களின் ஜனனமும் பஞ்சபூத தத்துவத்தால்தான் அமையும். (மனித, தாவர, மிருக ஜனனம் எல்லாம் பஞ்சபூதத்தால் தோன்றும்.) இந்த பஞ்சபூதத்தில் நெருப்பு என்பது ஜோதி சொரூபம். இதைப் பகிர்ந் தால் வளரும். ஆகாயம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. மற்ற மூன்று நீர், நிலம், வாயு (காற்று) பகிர்ந்தால் அளவு குறையும். நெருப்பு வளரும். பெருகும். உதாரணமாக ஒரு கிலோ மண் (நிலம்), ஒரு லிட்டர் தண்ணீர் (நீர்) பகிர்ந்தால் அளவு குறையும். ஒரு தீபத்தைப் பகிர்ந்தால் இன்னொரு தீபமாகப் பெருகும். அதனால்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளார் "அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை' என்றார். ஆரம்பத்தில் தீவிரமாக நடராஜரையும் திருத்தணி முருகனையும் வழிபட்டுக் கவிகள் இயற்றிய வள்ளலார், இறுதியில் ஜோதி ரூபத்தில் இறை வனைக் கண்டார். கண்ணாடியில் வேலும் மயிலும் காட்சியளித்ததால் "வேலும் மயிலும் துணை' என்று எழுதினார். பக்குவம் பெற்ற பக்தர்கள் ஜோதி யாக இறைவனிடம் சங்கமித்தார்கள். எல்லா சிலைகளும் உருவ வழிபாடாகும். ஜோதி, தீபம் அருவுருவமாகும்.