● எஸ். சரவணன், தேவனாங்குறிச்சி.
பலருக்கு வழிகாட்டியாகவும், கலங்கரை விளக் காகவும் திகழும் தாங்கள் எங்களுக்கும் வழிகாட்டிட வேண்டி வணங்குகிறேன். நான் பர்னிச்சர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். கடந்த ஐந்து வருடங்களாக தொழில் முன்னேற்றமில்லை. கடன்சுமை அதிகரித்துவிட்டது. உள்ளூர் ஜோதிடர் புதன் தசையில் எல்லா துன்பங்களும் விலகும் என்கிறார். நேரில்வர போனில் தொடர்புகொண்டும் முடியவில்லை.
சரவணனுக்கு சதய நட்சத்திரம், கும்ப ராசி, மிதுன லக்னம். 12-2-2020 வரை சனி தசை. பிறகு புதன் தசை. இதில் தனது புக்திவரை (புதன் 6-ல் மறைவு) கடன் தொல்லையும், கவலையும் இருக்கும். பிறகு படிப்படியாக தொழில் முன்னேற்ற மடையும். கடன் குறையும். வசதியிருந் தால் கடன் நிவர்த் திக்கும், தொழில் முன்னேற் றத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் 19 வகையான ஹோமம் செய்யலாம். கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று (கடன்நிவர்த்தி ஸ்தலம்) சுந்தரமூர்த்தி குருக்களிடம் 11 திங்கட்கிழமை கடன்நிவர்த்தி அர்ச்சனைக்குப் பணம் கட்டலாம். அல்லது வெள்ளிக்கிழமை (ஒருமுறை) ஹோமம் செய்து கடன்நிவர்த்தி யந்திரம் வாங்கிவந்து வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைத்துப் பூஜை செய்யலாம். தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி குருக்கள், செல்: 94437 37759, 94428 27759. மனைவி ஜெயந்திக்கு மகர ராசி. ஏழரைச்சனியில் விரயச்சனி. மகள் பூர்விகாவுக்கு தனுசு ராசி. ஏழரைச்சனியில் ஜென்மச்சனி. மகன் ரோகன் கார்த்திக் துலா ராசி, மகர லக்னம். லக்னரீதியாக ஏழரைச்சனி- விரயச்சனி. அதனால் குடும்பத்துடன் ஹோமம் செய்வதே நல்லது. திருச்சேறை செல்வதுடன், சனிக்கிழமைதோறும் 19 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி நெய்யில் நனைத்து காலபைரவர் சந்நிதி யில் தீபமேற்றி வழிபடவும். (2023 வரை).
● ஒரு வாசகர், பண்ருட்டி.
நான் கொடுத்த பணம் எப்போது திரும்பக் கிடைக்கும்? எனக்கு ஜோதிடக் கலை வருமா? பணி ஓய்வுபெற்ற நான், வேறு என்ன தொழில் செய்யலாம்? ஆயுள் எவ்வளவு?
தங்கவேலு சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மிதுன லக்னம். 66 வயது வரை புதன் தசை. (தற்போது 64 வயது). லக்னாதிபதி புதன் 8-ல் மறைவு. 2-க்
● எஸ். சரவணன், தேவனாங்குறிச்சி.
பலருக்கு வழிகாட்டியாகவும், கலங்கரை விளக் காகவும் திகழும் தாங்கள் எங்களுக்கும் வழிகாட்டிட வேண்டி வணங்குகிறேன். நான் பர்னிச்சர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். கடந்த ஐந்து வருடங்களாக தொழில் முன்னேற்றமில்லை. கடன்சுமை அதிகரித்துவிட்டது. உள்ளூர் ஜோதிடர் புதன் தசையில் எல்லா துன்பங்களும் விலகும் என்கிறார். நேரில்வர போனில் தொடர்புகொண்டும் முடியவில்லை.
சரவணனுக்கு சதய நட்சத்திரம், கும்ப ராசி, மிதுன லக்னம். 12-2-2020 வரை சனி தசை. பிறகு புதன் தசை. இதில் தனது புக்திவரை (புதன் 6-ல் மறைவு) கடன் தொல்லையும், கவலையும் இருக்கும். பிறகு படிப்படியாக தொழில் முன்னேற்ற மடையும். கடன் குறையும். வசதியிருந் தால் கடன் நிவர்த் திக்கும், தொழில் முன்னேற் றத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் 19 வகையான ஹோமம் செய்யலாம். கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று (கடன்நிவர்த்தி ஸ்தலம்) சுந்தரமூர்த்தி குருக்களிடம் 11 திங்கட்கிழமை கடன்நிவர்த்தி அர்ச்சனைக்குப் பணம் கட்டலாம். அல்லது வெள்ளிக்கிழமை (ஒருமுறை) ஹோமம் செய்து கடன்நிவர்த்தி யந்திரம் வாங்கிவந்து வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைத்துப் பூஜை செய்யலாம். தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி குருக்கள், செல்: 94437 37759, 94428 27759. மனைவி ஜெயந்திக்கு மகர ராசி. ஏழரைச்சனியில் விரயச்சனி. மகள் பூர்விகாவுக்கு தனுசு ராசி. ஏழரைச்சனியில் ஜென்மச்சனி. மகன் ரோகன் கார்த்திக் துலா ராசி, மகர லக்னம். லக்னரீதியாக ஏழரைச்சனி- விரயச்சனி. அதனால் குடும்பத்துடன் ஹோமம் செய்வதே நல்லது. திருச்சேறை செல்வதுடன், சனிக்கிழமைதோறும் 19 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி நெய்யில் நனைத்து காலபைரவர் சந்நிதி யில் தீபமேற்றி வழிபடவும். (2023 வரை).
● ஒரு வாசகர், பண்ருட்டி.
நான் கொடுத்த பணம் எப்போது திரும்பக் கிடைக்கும்? எனக்கு ஜோதிடக் கலை வருமா? பணி ஓய்வுபெற்ற நான், வேறு என்ன தொழில் செய்யலாம்? ஆயுள் எவ்வளவு?
தங்கவேலு சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மிதுன லக்னம். 66 வயது வரை புதன் தசை. (தற்போது 64 வயது). லக்னாதிபதி புதன் 8-ல் மறைவு. 2-க்குடைய சந்திரன், ராகு சாரம். எனவே புதன் தசைவரை கொடுத்த பணம் திரும்பக் கிடைப்பது கஷ்டம். 2-ஆம் இடத்தை புதன் பார்ப்பதால் ஜோதிடம் பயிலலாம். கமிஷன் அடிப்படையில் எந்தத் தொழிலும் செய்யலாம்- அனுபவம் இருந்தால். 10-ல் சுக்கிரன் உச்சம். ஆடம்பரம், அலங்காரம், ஸ்டேஷனரி, பேன்ஸி ஸ்டோர் வைக்கலாம். பெயர் எழுதவேண்டாம் என்கிறீர்கள், ஜோதிடக் கேள்வி கேட்பது கேவலம் என்று வெட்கப்படுகிறீர்களா?
● பா.ரா. மாணிக்கம், கோவை.
ஜாதகி மகேஸ்வரிக்கு 36 வயதாகியும் திருமணமாகவில்லை. சுயம்வரகலா பார்வதி யாகம் கோவை சேரன் மாநகரில் செய்து இரண்டு வருடமாகிவிட்டன. எப்போது திருமணம் நடைபெறும்?
மகர லக்னம். 7-க்குடைய சந்திரன் 8-ல் மறைவது தோஷம். அத்துடன் 7-ஆம் இடத்தை சனி பார்ப்பதும் தோஷம். பூர நட்சத்திரம், சிம்ம ராசி. செவ்வாய் தசை டிசம்பர் 2014 முதல் நடக் கிறது. செவ்வாய் பாதகாதிபதி. கும்பகோணம்- பூந்தோட்டம் அருகில் நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள திருவீழிமிழலை யில் மாப்பிள்ளை சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டும். தொடர்புக்கு: ராமு குருக்கள், செல்: 94882 21536, மகாலிங்கம் குருக்கள், செல்: 94881 17358. இருவரில் யாரையாவது தொடர்பு கொண்டு பூஜை முறை களைத் தெரிந்துகொள்ளவும். மகேஸ்வரியை அழைத்துச் செல்லவும்.
● தேசிங்குராஜன், சேலம்.
2005 முதல் "பாலஜோதிடம்' ரசிகன். எனக்கு கடன் பெருகிக்கொண்டே இருக் கிறது. (50 லட்சம்). எண்ணெய்த் தொழில் செய்கிறேன். தங்கள் வழிகாட்டுதலின்படி நிறைய ஜீவசமாதி சென்றுவருகிறேன். வட்டி கட்டுகிறேன். என் எதிர்காலம் எப்படியிருக்கும்?
தேசிங்குராஜன் மிதுன ராசி. மனைவி ஜீவிதா மேஷ ராசி. மூத்த மகன் ஜெய் கிருஷ்ணா மகர ராசி. இளைய மகன் ஜெய்காளிதாஸ் கன்னி ராசி. எல்லாருக்கும் கோட்சாரம் சரியில்லை. 2017 முதல் பிரச்சினை விசுவரூபம் எடுத்துவிட்டது. கடனை வாங்கிக் கடன் கொடுப்பவனும்- வட்டிக்கு வாங்கி வட்டியைக் கட்டுகிறவனும் மரமேறி கைவிட்டவனுக்குச் சமம். இந்த சுனாமியில் சிக்காமல் தப்பிக்கவேண்டுமானால், கட்டுப்பாடாகத்தான் இருக்கவேண்டும். வருமுன் காப்போன், வந்தபின் காப்போன், வந்தபின்னும் காக்காதவன் என்று மூன்றுநிலை. இதில் நீங்கள் எந்த நிலை? அநேகமாக மூன்றாவது நிலையாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
● முத்துராஜா, விருதுநகர்.
முத்துராஜா- பகவதி ஜாதங்களைப் பொருத்தம் பார்த்துச் சொல்லவும்.
பகவதி- பரணி நட்சத்திரம், மேஷ ராசி. முத்துராஜா- கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. இருவருக்கும் ராசிப் பொருத்தமில்லை. சஷ்டாஷ்டக ராசி. என்றாலும், இருவருக்கும் ஒரே ராசிநாதன் செவ்வாய் என்பதோடு, ஆண் மேஷ லக்னம்; பெண் மேஷ ராசி. ஒருவரின் ராசி மற்றவருக்கு லக்னம் என்பதால் நல்ல பொருத்தம் உண்டு. திருமணம் செய்யலாம். இதை சுப சஷ்டாஷ்டகம் எனலாம்.
● தட்சிணாமூர்த்தி, புதுச்சேரி.
பையனின் அப்பா செங்குந்த முதலியார். பெண்ணின் அப்பா விசுவகர்மா. (பத்தர்). பையனும் பெண்ணும் படிக்கும் காலத் திலிருந்தே காதலித்து, இப்போது திருமணம் செய்துகொள்ள விரும்பு கிறார்கள். இருவரும் பெங்களூருவில் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் பொருத்தம் உண்டா? திருமணம் செய்துவைக்கலாமா? காதல் திருமண வாழ்க்கை திருப்தியாக இருக் குமா?
பையன் மகர லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். பெண் அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னம். இருவருக்கும் ராசிப் பொருத்த மில்லை. அத்துடன் நட்சத்திரப் பொருத்தமும் இல்லை. இருந்தாலும் பத்துப் பொருத்தத்தைவிட மனப் பொருத்தம் மிகமிக உயர்ந்தது; சிறந்தது. திருமணம் என்பது எட்டு வகை- அதில் காந்தர்வத் திருமணம் என்பது ஒன்று. அதாவது காதல் திருமணம். இதற்கு எந்தப் பொருத்தமும் தேவையில்லை. அத்துடன் 27 நட்சத்திரத்தில் நான்கு நட்சத்திரம் உயர்ந்த நட்சத்திரங்கள். மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய 4-ம் உத்தம நட்சத்திரங்கள். இதில் ஆணோ- பெண்ணோ பிறந்திருந்தால், அவர்களுக்கு எந்தப் பொருத்தமும் பார்க்காமல் திருமணம் செய்துவைக்க லாம். இனிய நல்வாழ்க்கை அமையு மென்பது ஜோதிட சாஸ்திரம்! மேலும் இருவரின் ஜாதகத்திலும் கலப்புத் திருமணம், காதல் திருமணம் என்பதுதான் அவர்களின் விதியாக அமைகிறது. ஆகவே எதைப்பற்றியும் சிந்திக்காமல், கவலைப்படாமல், ஒரே முடிவாக இருவருக்கும் திருமணம் செய்துவைக்க லாம். அவர்களின் வாழ்க்கை முன்னேற்ற மாகவும், ஒற்றுமையாகவும், திருப்தியாக வும் இருக்கும். பெண்ணைவிட ஆண் ஒரு வயது குறைவு என்பதால் அதுவும் விதிவிலக்காகிறது. பச்சைக்கொடி காட்டுங்கள். திருமணத்தேதி 1, 3, 6-ல் நடத்தவும். 4, 5, 7, 8 வேண்டாம்.
● கே. சந்தானம், கொளத்தூர் (சென்னை).
15 வருடங்களாக "பாலஜோதிட'த்தின் பரம ரசிகன். உயிர்மூச்சாக ஒன்றிவிட்டேன். நான் ஜோதிடம் தெரிந்தவன் அல்ல! என்றாலும் ராசி பலனும், கேள்வி- பதிலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன. எனது திருமணம் 9-9-1990-ல் நடந்தது. 25-11-1991-ல் முதல் மகன் சூரியா; 5-6-1995-ல் இரண்டாவது மகள் மாதங்கி பிறந்தனர். இருவருடைய ஜாதகம் திருக்கணித முறைப்படி கணிக்கப்பட்டது. அதனால் மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப்படி எழுதினோம். அதில் பையனின் நட்சத்திரம் மாறுபடுகிறது.
திருக்கணித ஜாதகத்துக்கும் வாக்கிய ஜாதகக் கணிதத்துக்கும் நட்சத்திரமும் மாறும்; கிரகநிலைகளும் மாறத்தான் செய்யும். என்றாலும் வாக்கியப்படி கணிக்கப்பட்ட ஜாதகப்பலனே சரியாக நடக்கும். கே.எம். சுந்தரம் எழுதியது வாக்கியப் பஞ்சாங்கப்படிதான் இருக்கும். தசாபுக்திகளும் மாறலாம். அதையே பின்பற்றவும்.
● கே.கே. வெள்ளிங்கிரி, காரப்பாடி.
நான் மளிகைக் கடை வைத்திருக்கிறேன். வியாபாரம் சுமார். வியாபாரம் விருத்தியடையுமா? ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறேன். அதுவும் சுமார்தான். ஒரே மகள் ஜனனி முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படிக்கிறாள். உத்திராட நட்சத்திரம். 12-5-2001-ல் பிறந்தவள். அரசு வேலை கிடைக்குமா? எனது கடைக்கு கே.கே. வெள்ளிங்கிரி மளிகை, கே.வி. ஜனனி மளிகை- இதில் எந்தப் பெயர் வைக்கலாம்?
ஜனனி மளிகை என்று வைக்கலாம். உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி. ஜென்மச்சனி நடக்கிறது. படிப்பு தடையில்லாமல் முடியும். பட்டம் பெறலாம். பிறகு வேலை கிடைக்கும். திருமணம் 25 வயதில் நடக்கும். ஏழரைச்சனியின் பாதிப்புக்குறைய 27 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவரின் சந்நிதியில் நெய்யில் தீபமேற்றி வழிபடவும். சனி பகவானின் குருநாதர் பைரவர்.
● தேவராஜ், சின்னமனூர்.
குருப்பெயர்ச்சி எந்தெந்த ராசி அன்பர்களுக்கு நல்லது செய்யும்?
"குருப்பெயர்ச்சிப் பலன்கள்' என்ற தலைப்பில் தனிப்புத்தகம் எழுதியுள்ளேன். வாங்கிப்படிக்கவும். அத்துடன் இந்த "பாலஜோதிடம்' இதழில் சுருக்கமாக எழுதியுள்ளேன்.
● சதீஷ்குமார், மதுரை.
பொதுவாக குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது எந்த எழுத்தில் ஆரம்பிக்கவேண்டும்? எண்கணிதப்படியா அல்லது நட்சத்திரப்படியா?
ஆங்கிலத் தேதிப்படி (பிறந்த தேதி எண்- கூட்டிவரும் எண்) அதிர்ஷ்ட எண் எதுவோ அதன்படி வைக்கவேண்டும். சில குடும்பங்களில் குலதெய்வப் பெயர் அல்லது முன்னோர்களின் பெயர்வைத்து அழைப்பார்கள். பெயர் எழுத்து ஆரம்பம் ஆ, ஓ, ண முதலிடம் வகிக்கும். அடுத்து ஆ, ஒ, ஊ, ஞ, ம என்ற யர்ஜ்ங்ப்ள் எழுத்தில் ஆரம்பிக்கலாம். பொதுவாக ட, ப என்று ஆரம்பிக்கும் எழுத்துகள் சோதனையான வாழ்க்கையைத் தரும். நட்சத்திர எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. நட்சத்திர எழுத்து ஆரம்பம் எண்கணிதப்படி அமைந்தால் விசேஷம்தான்!
● சபரி, முகப்பேர்.
இறைவனை ஜோதி ரூபமாப வர்ணித்தது öன்?
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பது பஞ்சபூதம். இந்த பஞ்சபூதம்தான் உலகைத் தோற்றுவித்து- இயக்கிவருகிறது. எல்லா உயிரினங்களின் ஜனனமும் பஞ்சபூத தத்துவத்தால்தான் அமையும். (மனித, தாவர, மிருக ஜனனம் எல்லாம் பஞ்சபூதத்தால் தோன்றும்.) இந்த பஞ்சபூதத்தில் நெருப்பு என்பது ஜோதி சொரூபம். இதைப் பகிர்ந்தால் வளரும். ஆகாயம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. மற்ற மூன்று நீர், நிலம், வாயு (காற்று) பகிர்ந்தால் அளவு குறையும். நெருப்பு வளரும். பெருகும். உதாரணமாக ஒரு கிலோ மண் (நிலம்), ஒரு லிட்டர் தண்ணீர் (நீர்) பகிர்ந்தால் அளவு குறையும். ஒரு தீபத்தைப் பகிர்ந்தால் இன்னொரு தீபமாகப் பெருகும். அதனால்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளார் "அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை' என்றார். ஆரம்பத்தில் தீவிரமாக நடராஜரையும் திருத்தணி முருகனையும் வழிபட்டுக் கவிகள் இயற்றிய வள்ளலார், இறுதியில் ஜோதி ரூபத்தில் இறைவனைக் கண்டார். கண்ணாடியில் வேலும் மயிலும் காட்சியளித்ததால் "வேலும் மயிலும் துணை' என்று எழுதினார். பக்குவம் பெற்ற பக்தர்கள் ஜோதியாக இறைவனிடம் சங்கமித்தார்கள். எல்லா சிலைகளும் உருவ வழிபாடாகும். ஜோதி, தீபம் அருவுருவமாகும்.