● அழகுசுந்தரம், கும்பகோணம்.

நான் இருபது ஆண்டுகளாக அரசாங் கத்துறையில் (மருத்துவத்துறையில்) பணி யாற்றி, 2009-ல் ஓய்வுபெற்றேன். அக்காலத் தில் (பணியில் இருந்த காலத்தில்) சில இடங்களில் பிளாட்டுகளை வாங்கிப் போட்டேன். இப்போது அவற்றை விற்று புதுவீடு வாங்கமுடியுமா?

கவரில் ஆ. வசீகரன் என்றும், உள்ளே இருக்கும் கடிதத்தில் அழகுசுந்தரம் என்றும் காணப் படுகிறது. அழகுசுந்தரத்துக்கு வசீகரன் அண்ணனா? தம்பியா? வக்காலத்து வக்கீலா? நேரடியாகக் கேட்கவேண்டிதானே! அவரவர் பசிக்கு அவரவர் சாப்பிட்டால்தானே பசி அடங்கும். அழகுசுந்தரத்துக்காக வசீகரன் சாப்பிட்டால் சரிவருமா? அழகுசுந்தரம் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னம். 2019 நவம்பரில் 68 வயது முடியும். ராகு தசை, ராகு புக்தி நடக்கிறது. 4-க்குடைய சந்திரன் 12-ல் மறைவு. ராசிக்கு 4-க்குடைய புதன் லக்னத்துக்கு 8-ல், 4-க்கு 6-ல் மறைவு. மனைவி ரூபாவுக்கு உத்திராட நட்சத்திரம், மகர ராசி, துலா லக்னம். 2019 ஜனவரியில் 65 வயது முடிந்து 66 ஆரம்பம். 73 வயதுவரை சனி தசை. 4-ல் ராகு, கேது சம்பந்தம். இருவருக்கும் சொந்த வீடு யோகம் குறைவு தான். பிள்ளைகள் வாங்கிக்கொடுக்கும் வீட்டில் சுதந்திரமாக வாழலாம். உதாரணமாக என் சொந்தப் பணத்தில் (பற்றாக்குறைக்கு கடன் வாங்கி) என் மகன் பேரில் சொந்த வீடு கட்டிக் குடியிருந்தாலும், மகன் பேரில்தான் எல்லா ரிக்கார்டுகளும் உள்ளன. வாடகை இல்லாமல் குடியிருக்கிறோம். ஆனால் அதை விற்கவோ மாற்றவோ எங்களுக்கு சட்டப் பூர்வமாக உரிமையில்லை. இந்த நிலைதான் உங்களுடைய கிரக அமைப்பும்!

● மு. கவிதா, பாலாயிக்குடிக்காடு.

Advertisment

11-3-1979-ல், மாசி மகத்தில் பிறந்தேன். 1999-ல் திருமணம் நடைபெற்றது. கணவர் சிதம்பரம் கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. நிம்மதியில்லா வாழ்க்கையில் இரு குழந்தைகளுக்குத் தாயானேன். என் பையன் 4-5-2000-ல் கார்த்திகை நட்சத் திரத்தில் பிறந்தான். மகள் 5-4-2002-ல் பிறந்தாள். 2009-ல் என் கணவர் என்னை விவாகரத்து செய்துவிட்டார். என் இரு பிள்ளைகளும் அவருடன் இருக்க வேண்டும் என்று தீர்வாகிவிட்டது. வசதியில்லாததால் வழக்கை எடுத்து நடத்தமுடியவில்லை. என் அப்பா- அம்மாவுக்கு நான் பாரமாக இருக்கிறேன். பத்தாம் வகுப்புவரை படித்தேன். எந்த சம்பாத்தியமும் இல்லை. கைத்தொழில் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். அதிலும் தடை. என் மகள் அவள் அப்பா விடம் இருந்து இம்சை தாங்காமல் என்னிடம் வந்துவிட்டாள். என் கணவர் மது, மாது என்று நாட்களை நகர்த்து கிறார். என் அப்பா நான் பத்து வயதாக இருக்கும்போது, இரண்டு கருடனைக் (பிராந்து) கொன்றுவிட்டார். கருடனைக் கொல்லக்கூடாது என்று அவருக்குத் தெரியாது. அது தோஷமா?

கருடன் பெருமாளின் வாகனம். அதைக் கொல்வது ஏழு தலைமுறைக்கு தோஷம். உங்கள் வாழ்க்கை சோகமானதற்கு உங்கள் அப்பா செய்த தோஷமும் ஒரு காரணம். கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் சென்று சீனிவாசப் பெருமாள் கோவிலிலுள்ள கல் கருடனுக்கு அபிஷேகப் பூஜைசெய்து, வெள்ளிக்கல்கருடன் இரண்டு உருவம் வாங்கிப்போய் பாதத்தில் வைத்து வணங்கி உண்டியலில் போடவேண்டும். பிள்ளைகள் ஜாதகத்தை மதுரை கே.எம். சுந்தரம் (செல்: 92453 28178) வசம் எழுதிவாங்கி, ஜெராக்ஸ் எடுத்து எனக்கு அனுப் பவும். உங்கள் ஜாதக நகலும், கணவர் ஜாதக நகலும் சேர்த்து அனுப்பவும். விமோசனம் உண்டா என்று பார்ப் போம்.

● பிரபா சரவணன், ஊர்?

Advertisment

என் கணவருக்கு சுக்கிர தசையில் களஸ்திர தோஷம் உள்ளது என்றும், 3-ஆம் தார யோகம் உண்டு என்றும், அதனால் எனது மாங்கல்யத்தை திருத் தணியில் தானம் செய்துவிட்டு மறுமாங் கல்யம் அணியுமாறும் ஒரு ஜோதிடர் கூறினார். கணவரின் குலவழக்கப்படி இரண்டு மாங்கல்யம் போட்டுள்ளேன். 11 வருடமாக ஒரு மாங்கல்யம் அணிந் திருந்தேன். மாங்கல்ய தானம் செய்ய வேண்டும் என்றால், முதலில் அணிந்த மாங்கல்யத்தை தானம் செய்யவேண்டுமா? தற்போது இரண்டாவதாகக் கட்டி யுள்ள புதுமாங்கல்யத்தை தானம் செய்யவேண்டுமா? அல்லது இரண் டையும் சேர்த்து தானம் செய்துவிட்டு மூன்றாவது புதிதாகக் கட்டவேண்டுமா?

kkk

உங்களுக்கு ஆலோசனை சொன்ன ஜோதிடரையே கேட்க வேண்டியதுதானே! மாங்கல்யத்தை தானம் செய்வதைவிட குடும்பத்துடன் ஆயுஷ் ஹோமம், தன்வந் திரி ஹோமம், நவகிரக ஹோமம், மிருத் யுஞ்சய ஹோமம் முதலிய ஹோமம் செய்து, எல்லாரும் கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு என்னிடம் தொலைபேசியில் கேட்கலாம்.

● ஏ. துரைசாமி, சேலம்.

"பாலஜோதிட'த்தில் என் ராசிக்கு எழுதும் வாரபலன் அப்படியே நடக் கிறது. வெள்ளி உருக்கும் தொழில் செய்து வருகிறேன். இதுவரை வருமானமும் தொழிலும் திருப்தியில்லை. நல்ல மனைவி, மூன்று குழந்தைகள். பிறரிடம் வேலை பார்த்து ஊதியம் வாங்குகிறேன். மீண்டும் சுயமாக வெள்ளி வேலை ஆரம்பிக்கலாமா?

துலா லக்னம், உத்திர நட்சத்திரம், கன்னி ராசி. 39 வயதுவரை ராகு தசை. (2023 வரை). ராகு லக்னத்துக்கு 8-ல் மறைவு. அடுத்துவரும் குரு 3-ல் ஆட்சி. தனாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை. எனவே ராகு தசை, செவ்வாய் புக்திமுதல் தொழில் முன்னேற்றம் எதிர்பார்க்கலாம்.

● டி. ஸ்ரீஹரி, சென்னை.

நான் தற்போது தனியார் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக முயற்சி செய்கிறேன். என் குறிக்கோள், லட்சியம், கனவு நிறைவேற ஆசிர்வாதமும், தக்க பரிகாரமும் கூறவும். 3-ஆவது தசையாக நீசகிரக தசை நடப்பதால் அதன் பலன் என்ன? 2020 சனிப்பெயர்ச்சியில் எனது கும்ப ராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பம்! எப்படியிருக்கும்?

அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, துலா லக்னம். குரு தசை 3-ஆவது தசை மகரத்தில் நீசம் என்றாலும், குரு மகரத்திலும், சனி மீனத் திலும் பரிவர்த்தனை! செவ்வாய் தசையில் பிறந்த உங்களுக்கு 19 வயதுமுதல் குரு தசை ஆரம்பம். (2017 முதல்). தற்போது குரு தசை, சனி புக்தி. அடுத்து கும்ப ராசிக்கு ஏழரைச் சனி வரப்போகிறது. உங்கள் கனவுகளுக்கும் திட்டங்களுக்கும் ஏமாற்றம், பாதிப்பு வரலாம். வைராக்கியமும் விடாமுயற்சியும் தேவைப்படும். அத்துடன் ஹயக்ரீவருக்கு 27 வெள்ளிக்கிழமை கற்கண்டு நைவேத்தியம் படைத்து, ஏலக்காய் மாலை சாற்றி, அர்ச்சனை செய்யவும். (108 ஏலக்காயை மாலையாகக் கோர்க்கவும்). "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும்' என்பது வள்ளுவர் வாக்கு.

● எஸ். சரவணன், தேவனாங்குறிச்சி.

பலருக்கு வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்காகவும் திகழும் தாங்கள் எங்களுக்கும் வழிகாட்டிட வேண்டி வணங்குகிறேன். நான் பர்னிச்சர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறேன். கடந்த ஐந்து வருடங்களாக தொழில் முன்னேற்றமில்லை. கடன்சுமை அதிகரித்துவிட்டது. உள்ளூர் ஜோதிடர் புதன் தசையில் எல்லா துன்பங்களும் விலகும் என்கிறார். நேரில்வர போனில் தொடர்புகொண்டும் முடியவில்லை.

சரவணனுக்கு சதய நட்சத்திரம், கும்ப ராசி, மிதுன லக்னம். 12-2-2020 வரை சனி தசை. பிறகு புதன் தசை. இதில் தனது புக்திவரை (புதன் 6-ல் மறைவு) கடன் தொல்லையும், கவலையும் இருக்கும். பிறகு படிப்படியாக தொழில் முன்னேற்றமடையும். கடன் குறையும். வசதியிருந்தால் கடன் நிவர்த்திக்கும், தொழில் முன்னேற்றத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் 19 வகையான ஹோமம் செய்யலாம். கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று (கடன்நிவர்த்தி ஸ்தலம்) சுந்தரமூர்த்தி குருக்களிடம் 11 திங்கட்கிழமை கடன்நிவர்த்தி அர்ச்சனைக்குப் பணம் கட்டலாம். அல்லது வெள்ளிக்கிழமை (ஒருமுறை) ஹோமம் செய்து கடன்நிவர்த்தி யந்திரம் வாங்கிவந்து வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைத்துப் பூஜை செய்யலாம். தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி குருக்கள், செல்: 94437 37759, 94428 27759. மனைவி ஜெயந்திக்கு மகர ராசி. ஏழரைச்சனியில் விரயச்சனி. மகள் பூர்விகாவுக்கு தனுசு ராசி. ஏழரைச்சனியில் ஜென்மச்சனி. மகன் ரோகன் கார்த்திக் துலா ராசி, மகர லக்னம். லக்னரீதியாக ஏழரைச்சனி- விரயச்சனி. அதனால் குடும்பத்துடன் ஹோமம் செய்வதே நல்லது. திருச்சேறை செல்வதுடன், சனிக்கிழமைதோறும் 19 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி நெய்யில் நனைத்து காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றி வழிபடவும். (2023 வரை).

● ஒரு வாசகர், பண்ருட்டி.

நான் கொடுத்த பணம் எப்போது திரும்பக் கிடைக்கும்? எனக்கு ஜோதிடக்கலை வருமா? பணி ஓய்வுபெற்ற நான், வேறு என்ன தொழில் செய்யலாம்? ஆயுள் எவ்வளவு?

தங்கவேலு சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மிதுன லக்னம். 66 வயது வரை புதன் தசை. (தற்போது 64 வயது). லக்னாதிபதி புதன் 8-ல் மறைவு. 2-க்குடைய சந்திரன், ராகு சாரம். எனவே புதன் தசைவரை கொடுத்த பணம் திரும்பக் கிடைப்பது கஷ்டம். 2-ஆம் இடத்தை புதன் பார்ப்பதால் ஜோதிடம் பயிலலாம். கமிஷன் அடிப்படையில் எந்தத் தொழிலும் செய்யலாம்- அனுபவம் இருந்தால். 10-ல் சுக்கிரன் உச்சம். ஆடம்பரம், அலங்காரம், ஸ்டேஷனரி, பேன்ஸி ஸ்டோர் வைக்கலாம். பெயர் எழுதவேண்டாம் என்கிறீர்கள், ஜோதிடக் கேள்வி கேட்பது கேவலம் என்று வெட்கப்படுகிறீர்களா?

● பா.ரா. மாணிக்கம், கோவை.

ஜாதகி மகேஸ்வரிக்கு 36 வயதாகியும் திருமணமாகவில்லை. சுயம்வரகலா பார்வதி யாகம் கோவை சேரன் மாநகரில் செய்து இரண்டு வருடமாகிவிட்டன. எப்போது திருமணம் நடைபெறும்?

மகர லக்னம். 7-க்குடைய சந்திரன் 8-ல் மறைவது தோஷம். அத்துடன் 7-ஆம் இடத்தை சனி பார்ப்பதும் தோஷம். பூர நட்சத்திரம், சிம்ம ராசி. செவ்வாய் தசை டிசம்பர் 2014 முதல் நடக்கிறது. செவ்வாய் பாதகாதிபதி. கும்பகோணம்- பூந்தோட்டம் அருகில் நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள திருவீழிமிழலையில் மாப்பிள்ளை சுவாமிக்கு பூஜை செய்யவேண்டும். தொடர்புக்கு: ராமு குருக்கள், செல்: 94882 21536, மகாலிங்கம் குருக்கள், செல்: 94881 17358. இருவரில் யாரையாவது தொடர்புகொண்டு பூஜை முறைகளைத் தெரிந்துகொள்ளவும். மகேஸ்வரியை அழைத்துச்செல்லவும்.

● தேசிங்குராஜன், சேலம்.

2005 முதல் "பாலஜோதிடம்' ரசிகன். எனக்கு கடன் பெருகிக்கொண்டே இருக்கிறது. (50 லட்சம்). எண்ணெய்த் தொழில் செய்கிறேன். தங்கள் வழிகாட்டுதலின்படி நிறைய ஜீவசமாதி சென்றுவருகிறேன். வட்டி கட்டுகிறேன். என் எதிர்காலம் எப்படியிருக்கும்?

தேசிங்குராஜன் மிதுன ராசி. மனைவி ஜீவிதா மேஷ ராசி. மூத்த மகன் ஜெய்கிருஷ்ணா மகர ராசி. இளைய மகன் ஜெய்காளிதாஸ் கன்னி ராசி. எல்லாருக்கும் கோட்சாரம் சரியில்லை. 2017 முதல் பிரச்சினை விசுவரூபம் எடுத்துவிட்டது. கடனை வாங்கிக் கடன் கொடுப்பவனும்- வட்டிக்கு வாங்கி வட்டியைக் கட்டுகிறவனும் மரமேறி கைவிட்டவனுக்குச் சமம். இந்த சுனாமியில் சிக்காமல் தப்பிக்கவேண்டுமானால், கட்டுப்பாடாகத்தான் இருக்கவேண்டும். வருமுன் காப்போன், வந்தபின் காப்போன், வந்தபின்னும் காக்காதவன் என்று மூன்றுநிலை. இதில் நீங்கள் எந்த நிலை? அநேகமாக மூன்றாவது நிலையாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.