● எஸ்.எஸ். நாராயணன், கோவை.
என் மகன் கார்த்திக்- மருமகள் கோமதி இருவருக்கும் நீங்கள்தான் பொருத்தம் பார்த்துச் சொன்னீர்கள். 10-5-2019-ல் திருமணமும் நடந்தது. பெண்ணுக்கு 2033 வரை ராகு தசை என்றும், ஆணுக்கு 2034-ல்தான் ராகு தசை வரும் என்றும் குறிப்பிட்டு, சம ராகு தோஷம் இல்லையென்றும், பத்துக்குப் பத்துப் பொருத்தம் என்று எழுதிக் கொடுத் தீர்கள். திருமணத் துக்குப்பிறகு மகன் கார்த்திக் வேலை பிடிக்காமல் விட்டுவிட்டான். அடுத்து அவனுக்கு எப்போது நல்ல வேலை அமையும்?
கார்த்திக்- கோமதி இருவரும் ஒரே ராசி, ஒரே லக்னம். ஒரே யோனி- (மகம்- பூரம்- எலி). இருவருக்கும் நல்ல பொருத்தம் உண்டு. அதனால் அன்யோன்யம், சுமுக உறவு, வாரிசு யோகம் போன்ற சுபப்பலன்கள் நடக்கும். அதேசமயம் இருவருக்கும் தசா சந்திப்பு (சம ராகு தசை) இல்லையே தவிர, மகனுக்கு 29-4-2019 முதல் 29-10-2020 வரை சந்திர தசையில் ராகு புக்தியும், மருமகள் கோமதிக்கு 24-12-2015 முதல் ராகு தசையும் (2033 வரை) நடப்பது ஆகாது. ஆக, பெண்ணுக்கு ராகு தசையும் ஆணுக்கு ராகு ப
● எஸ்.எஸ். நாராயணன், கோவை.
என் மகன் கார்த்திக்- மருமகள் கோமதி இருவருக்கும் நீங்கள்தான் பொருத்தம் பார்த்துச் சொன்னீர்கள். 10-5-2019-ல் திருமணமும் நடந்தது. பெண்ணுக்கு 2033 வரை ராகு தசை என்றும், ஆணுக்கு 2034-ல்தான் ராகு தசை வரும் என்றும் குறிப்பிட்டு, சம ராகு தோஷம் இல்லையென்றும், பத்துக்குப் பத்துப் பொருத்தம் என்று எழுதிக் கொடுத் தீர்கள். திருமணத் துக்குப்பிறகு மகன் கார்த்திக் வேலை பிடிக்காமல் விட்டுவிட்டான். அடுத்து அவனுக்கு எப்போது நல்ல வேலை அமையும்?
கார்த்திக்- கோமதி இருவரும் ஒரே ராசி, ஒரே லக்னம். ஒரே யோனி- (மகம்- பூரம்- எலி). இருவருக்கும் நல்ல பொருத்தம் உண்டு. அதனால் அன்யோன்யம், சுமுக உறவு, வாரிசு யோகம் போன்ற சுபப்பலன்கள் நடக்கும். அதேசமயம் இருவருக்கும் தசா சந்திப்பு (சம ராகு தசை) இல்லையே தவிர, மகனுக்கு 29-4-2019 முதல் 29-10-2020 வரை சந்திர தசையில் ராகு புக்தியும், மருமகள் கோமதிக்கு 24-12-2015 முதல் ராகு தசையும் (2033 வரை) நடப்பது ஆகாது. ஆக, பெண்ணுக்கு ராகு தசையும் ஆணுக்கு ராகு புக்தியும் (29-4-2019 முதல் ராகு புக்தி) நடக்கும் சமயம் 10-5-2019-ல் திருமணம் நடந்ததுதான் சிக்கல். அதனால் ஒரு சந்தோஷத்தைக் கொடுத்து, வேலை இழப்பு என்ற இன்னொரு சந்தோஷக் கெடுதலை சந்திக்க நேர்ந்தது. 2020 அக்டோபர்வரை சம ராகு இருப்பதால் நிலையான வேலை, நிம்மதியான வருவாய்க்கு வாய்ப்பில்லாமல் வாடும் நிலை! இதற்குப் பரிகாரமாக சூலினிதுர்க்கா ஹோமமும், திருஷ்டி துர்க்கா ஹோமமும் செய்து, தம்பதிகள் இருவருக்கும் கலச அபிஷேகம் செய்யவேண்டும். அதேசமயம் அப்படி அக்னி காரியம் (ஹோமம்) செய்ய இருவர் குடும்பத்திலும் முக்கியமான வர்கள் இறந்த தீட்டு இருந்தால் தடை யாகும். தீட்டுக்காலம் முடிந்தபிறகுதான் ஹோமம் செய்யவேண்டும். பெண் வந்த நேரத்துக்கும், ஆண் வேலையிழந்ததுக்கும் எந்த சம்பந்த மும் இல்லை. யாரையும் குறை கூறவேண்டாம். அப்படி உறவினர் இறந்த தீட்டு ஹோமம்செய்யத் தடையாகக் கருதினால், கோவையில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் சென்று மாலை சாற்றி, நெய் தீபமேற்றலாம். சித்தர்கள் ஜீவசமாதி இடங்களுக்கு எந்தத் தீட்டும் இல்லை. தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்யாமல், மாலையிட்டு நெய் தீபமேற்றலாம். தந்தை- தாய் இறந்தால் ஒருவருடம் தீட்டு. பங்காளி (சகோதரர்) இறந்தால் ஆறு மாதம் தீட்டு. மனைவி இறந்தால் மூன்று மாதம் தீட்டு. மலை ஏறக்கூடாது. சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது. கொடிமரம் உள்ள கோவில்களுக்குப் போகக்கூடாது.
● ஸ்ரீவித்யா பாலசுப்ரமணியன், சைதாப்பேட்டை.
"பாலஜோதிடம்' படிக்கும் பல்லா யிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருத்தி. நீங்கள் எழுதும் பதில்கள் மிகவும் அருமை. என் பையன் வெங்கடேசன் ஜாதகப்படி 15-10-2015 முதல் சனி தசை. என் பையனுக்கு ஒன்று மாற்றி ஒன்று ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. விரக்தியாகப் பேசுகிறான். பெற்றோரை விட்டுத் தள்ளி வெளியில் இருக்கிறான். கடைசிவரை தள்ளி இருப்பானா? எங்களுடன் வந்துசேருவானா? அவனு டைய ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கத்துக்கு நாங்கள் ஏதாவது பரிகார பூஜை செய்யலாமா?
வெங்கடேசன் சிம்ம லக்னம், துலா ராசி, சித்திரை நட்சத்திரம். மருமகள் (அவர் மனைவி) லட்சுமி புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, கன்னியா லக்னம். இருவருக்கும் ஏழரைச்சனி, அட்டமச்சனி போன்ற பாதிப்புகள் இல்லை. அதனால் கண்டம், ஆயுள் குற்றம் போன்ற பாதிப் புகள் ஏதும் வராது. சனி தசை சிம்ம லக்னத்துக்கு 6-க்குடையவர் 2-ல் செவ்வாயோடு சேர்ந்திருப்பதால் சில சங்கடம். கும்பகோணம்- குடவாசல் பாதையில் கூந்தலூர் கிராமத்தில் ஜம்பு காரனேசுவரர் சுவாமி திருக்கோவில் சென்று (முருகன் ஸ்தலம்) அபிஷேக பூஜை செய்யவும். சனி, செவ்வாய் பரிகார ஸ்தலம். ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம், எதிர்கால முன்னேற்றம் போன்ற எல்லா நன்மைகளும் உண்டாகும்.
● மகேஷ், கோவை.
நீங்கள் ஜோதிடத்துக்குச் செய்துவரும் பணி மிக அற்புதம். இதை நீண்ட காலம் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன். எனக்கு கேது தசையில் ராகு புக்தி நடக்கிறது. இதில் உடல்நலம் பாதிக்குமா? அடுத்துவரும் குரு புக்தி எப்படியிருக்கும்?
ஏற்கெனவே உங்கள் கேள்விக்கும், பேரன் பிரவின் கேள்விக்கும் பதில் சொல்லியிருக்கிறேன். அதைப் படிக்காமல் மீண்டும் மீண்டும் தபால் எழுதுவது முறையா? சரியா? தகுமா? கப்பலிலே பெண் இலசமாக வருகிறது என்றால் எனக்கு ஒன்று, சித்தப்பாவுக்கு ஒன்று, பெரியப்பாவுக்கு ஒன்று, தம்பிக்கு ஒன்று என்று கேட்பதா?
● மகேஷ், சேலம்-8.
எனது எதிர்காலம், குடும்ப வாழ்க்கை எப்படியிருக்கும்?
விருச்சிக லக்னம், மக நட்சத்திரம், சிம்ம ராசி. 27-9-2019 முதல் ராகு தசை, தனது புக்தி. ஜென்ம ராகு. 10-ல் சூரியன் ஆட்சி. 9-க்குடைய சந்திரன் சேர்க்கை. தர்மகர்மாதிபதி யோகம் இருந்தும், லக்னத்தில் ராகு, 7-ல் செவ்வாய், கேது இருப்பதால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியவில்லை. குரு 6-ல் மறைவதும் ஒரு காரணம். சுக்கிரன் 10-ல் நின்று செவ்வாய்யைப் பார்ப்பதும் ஒரு காரணம். மனைவி வகையிலும் நிம்மதிக்குறைவு, குடும்ப (களஸ்திர) வாழ்க்கையும் கேள்விக் குறியாகும். இருந்தாலும் ராசியை குரு பார்ப்பதால்- குரு கேது சாரம் அஸ்வினி 1-ல் வர்க்கோத்தமம் என்பதால், விசாகம் 4-ல் ராகு- குருவின் சாரம் பெறும் ராகு தசை வாழ்க்கையில் ஒரு திருப்பத்தையும், முன்னேற்றத்தையும் தர வாய்ப்புண்டு. அதற்கு சூலினிதுர்க்கா ஹோமம் உள்பட 19 வகையான ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.