● எஸ். தாமரைக்கண்ணன், அருப்புக் கோட்டை.
தங்களை வாழ்த்த வயதில்லை- வணங்குகிறேன். எனது முன்னோர்கள் செய்த கோணி (சாக்கு) வியாபாரம் செய்கி றேன். மேற்படி தொழில், பிளாஸ்டிக் வளர்ச்சியால் நலிவடைந்து வருகிறது. அதனால் கடனும் வளர்கிறது. கோணித் தொழில் எப்போது சீராகும்? எனது மூத்த மகன் பிரவின் பாலாஜி, தற்போது கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ஆம் ஆண்டு எம்.டெக் படிக்கிறான். தொடர்ந்து தனியார் பயிற்சியில் ஐ.ஏ.எஸ். தேர்வு பயின்று முதல் முயற்சியில் தோல்வி! அவனுடைய ஐ.ஏ.எஸ். லட்சியம் நிறைவேறுமா? இளைய மகன் ஸ்ரீசூரஜ் கல்வி சிறக்க தங்களின் அறிவுரை என்ன? மனைவிக்கும் எனக்கும் சனி தசை, சம தசை. இதற்குப் பரிகாரம் உண்டா?
தாமரைக்கண்ணன் சித்திரை நட்சத்திரம். செவ்வாய் தசையில் ஜனனம். நடப்பு சனி தசை நான்காவது தசை; ஆகாது. மனைவி பால சுந்தரி திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. 2020 மார்ச்சில் சனிப்பெயர்ச்சிமுதல் அட்டமச் சனியுடன் சனி தசை, சந்திரபுக்தி சந்திப்பு. பிரவின் பாலாஜி கும்ப ராசி. 2020 மார்ச்சில் ஏழரைச் சனி ஆரம்பம். சூரஜ் சிம்ம ராசி. இரண்டு வயது முதல் 20 வருடம் குட்டிச்சுக்கிர தசை- 2024 வரை. இப்படி குடும்பமே சுனாமி வெள்ளத்தில் தத்தளிக்கும்போது என்ன சொல்வது? ஒருமணி நேரப் பயணம் அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை. தொலைபேசியில் முன்பதிவு செய்து விட்டு, நேரில்வந்தால் எல்லா ஜாதகங்களையும் பரிசீலனை செய்து பரிகாரம் சொல்லலாம்.
● ஷீஜாமோகனன், கோவை-20.
இரண்டு வருடங்களுக்குமுன் உங்களின் கணிப்புப்படி, மகனின் வேலை, மகளின் படிப்பு நிறைவேறியது. நன்றி! மகனுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு என்றீர்கள். நண்பருடன் போனான். எப்போது திருமணம் நடைபெறும்? கணவருக்கும் மாமியாருக்கும் மனக் கசப்பு; பேசுவதில்லை. மாமியார் ஆயுள் காலம் எவ்வளவு?
தாங்கள் அனுப்பியுள்ள எல்லா ஜாதகமும் திருக்கணித

தாங்கள் அனுப்பியுள்ள எல்லா ஜாதகமும் திருக்கணிதப்படி உள்ளன. அதை மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப்படி கணித்து நகல் எடுத்து அனுப்பவும். தொடர்புக்கு, செல்: 92453 28178.
● டி. முத்தையா, விருதுநகர்.
மணமகன் முத்தையா- மணமகள் பொன் முனீஸ்வரி. இவர்களுக்கு திருமணம் பேசி ஜாதகம் பார்க்கும்போது, ஜோதிடர் இன்னும் ஒரு மாதம் கழித்து செய்ய வேண்டும் என்றார். தங்கள் கருத்து என்ன?
இப்படி விவரம் இல்லாமல் மொட்டை யாகக் கேட்டால் என்ன அர்த்தம்? ஒரு மாதம் என்பது நீங்கள் பார்த்த நாளா? அல்லது தபால் அனுப்பிய நாளா? எந்த மாதம் என்று (பேர் சொல்லி) எழுதக்கூடாதா? அதிலும் பையன் ஜாதகம் (முத்தையா) வயது 28. விசாக நட்சத்திரம், துலா ராசி. பெண் முனீஸ்வரி வயது 17 (2002-ல் பிறந்தவர்). மிருகசீரிட நட்சத்திரம், ரிஷப ராசி. 2020 செப்டம்பரில் 18 வயது முடிந்தபிறகுதான் பெண்ணுக்குத் திருமண யோகம் வருகிறது. ஆக, திருமணம் ஒரு மாதமல்ல- ஒரு வருடம் கழித்துத்தான் செய்யவேண்டும்.
● ராஜேந்திரன, போடி.
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் யோனிப் பொருத்தம் முக்கியமா? ரஜ்ஜுப் பொருத்தம் முக்கியமா? ராசிப் பொருத்தம் முக்கியமா?
திருமணப் பொருத்தம் மொத்தம் 23. அது இப்போது நடைமுறையில் இல்லை. 1. தினம், 2. கணம், 3. ஸ்திரீ தீர்க்கம், 4. மாகேந்திரம், 5. யோனி, 6. ராசி, 7. ராசியா திபதி, 8, வசியம், 9. ரஜ்ஜு, 10, வேதை, 11. பட்சி, 12. நாடி, 13. மரம் என்று 23 பொருத்தம் 13 ஆக சுருங்கிவிட்டது. இதிலும் பட்சி, நாடி, மரம் ஆகிய மூன்றும் முக்கியமில்லை. மீதமுள்ள பத்துப் பொருத்தமே நடைமுறையில் உள்ளன. இதில் யோனி, ரஜ்ஜு, வேதை, தினம், ராசி ஆகிய ஐந்தும் மிகமிக முக்கியம். மற்றவை இருந்தாலும், இல்லா விட்டாலும் பரவாயில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மனப்பொருத்தம்தான் மிகமிக அவசியம். காதல் திருமணம் என்ற காந்தர்வ விவாகத்துக்கு எதுவுமே பார்க்கத் தேவையில்லை.
● ராமகிருஷ்ணன், திண்டுக்கல்,
சில பஞ்சாங்கங்களில் ஆவணி மாதம் வாஸ்துக் கண்விழிப்பு என்பது ஒரு நாழிகை என்றும், சில பஞ்சாங்கங்களில் 21 நாழிகை என்றும் குறிக்கப்பட்டுள்ளன. எது சரி?
சித்திரை 10-ஆம் தேதி 5 நாழிகை. வைகாசி 21-ஆம் தேதி 8 நாழிகை. ஆடி 11-ஆம் தேதி 2 நாழிகை. ஆவணி 6-ஆம் தேதி 1 நாழிகை. ஐப்பசி 11-ஆம் தேதி 2 நாழிகை. கார்த்திகை 8-ஆம் தேதி 10 நாழிகை. தை 12-ஆம் தேதி 8 நாழிகை. மாசி 22-ஆம் தேதி 8 நாழிகை. இதுதான் சரியான வாஸ்துக் கண்விழிப்பு நாள். மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) வருடத்தில் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களும் வாஸ்துப் புருஷன் கண்விழிப்பதில்லை. எனவே, இந்த மாதங்களில் (நான்கு உபய ராசி) கட்டடம், பூமி சம்பந்தமான எந்தக் காரியங்களும் செய்யக்கூடாது. வீடு மாறக் கூடாது. பால் காய்ச்சக் கூடாது. இது ஜோதிட விதி, சாஸ்திரம். ஆனால் இது முகம்மதி யர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் பொருந் தாது. இந்துக்கள் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டிய விதி! நெருப்பு என்றால் கை வைத் தவர்கள் எல்லாரையும் சுடத்தான் செய்யும். அதற்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற பேதமில்லை. அந்த முறையில் சாஸ்திரம் என்றால், எல்லாருக்கும் பொதுவாகத்தான் இருக்கவேண்டும். அதில் பாகுபாடு இருக்கக்கூடாது அல்லவா! ஆக இதில் மறைந்துள்ள ரகசியம்- மனம்தான் காரணம். அவரவரின் பழக்கவழக்கம். அதனால் தான் "ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி பாம்பு இரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடினார்.
● பிரியா, விழுப்புரம்.
நான் ஒருவரை விரும்புகிறேன். அவர் வேறு ஜாதி. அவரும் என்னை விரும்புகிறார். ஆனால் எங்கள் இருவரின் திருமணத்துக்கும் ஜாதிதான் தடையாக இருக்கிறது. என்ன செய்யலாம்?
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடியுள்ளார். ஔவைப் பிராட்டியார் தான தர்மம் செய்கிறவன் மேல்ஜாதி- செய்யாதவன் கீழ்சாதி- (இட்டார் பெரியோர்- இடாதோர் இழிகுலத்தோர்) என்று பாடினார். ஆகவே இருவருக்கும் திருமண வயது (சட்டரீதியாக) அமைந்து விட்டால் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம். சில திருமணம் காவல் நிலையத்திலேயே நடக்கிறது. அதேசமயம் விரும்புகிறவர் கடைசிவரைக் கைவிடாமல் காப்பாற்றுக்கூடியவரா என்பதுதான் கவனிக்கவேண்டிய அம்சம்!
● கந்தசாமி, கோச்சடை.
மூத்த பையனுக்கும் மூத்த பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா? பரிகாரம் உண்டா?
தலைச்சனுக்கும் தலைச்சனுக்கும் ஆகாது என்பார்கள். ஒருசிலர் தலையும் வாலும் ஆகாது என்பார்கள். மூத்த பையனும், மூத்த பெண்ணும் ஆனி மாதம் பிறந்திருந்தால் (யாராவது ஒருவர் ஆனியில் பிறந்திருந்தாலும்) திருமணம் செய்யக்கூடாது. ஆனி மாதம் ஜேஷ்டமாதம் எனப்படும். ஜேஷ்டபுத்திரன்- ஜேஷ்ட புத்திரி- ஜேஷ்ட மாதம்- திரிஜேஷ்டை- (மூன்று ஜேஷ்டை) ஆகாது என்பது சாஸ்திரம். அதாவது வாழ்க்கையில் சுபிட்சம் இருக்காது. அதேபோல தலைக் கல்யாணம் தையில் செய்யக்கூடாது என்றும் சொல்வார்கள். சாஸ்திரம் என்று ஒன்றுண்டு. சம்பிரதாயம் என்று ஒன்றுண்டு. சாஸ்திரமும் சம்பிரதாயமும் வெவ்வேறு. நடைமுறைப் பழக்கம் என்பதுதான் சம்பிரதாயம்.
● இளவழகன், காரைக்குடி.
ஜோதிடம், ஆன்மிகம் (தெய்வபக்தி) நம்பிக்கை இல்லாதோர் நன்றாக இல்லையா? இது அவசியமா?
ஜோதிடம், தெய்வ பக்தி இல்லாதோரில் கஷ்டப்படுகிறவர்கள் இல்லையா? எல்லாரும் நன்றாக இருக்கிறார்களா? அவரவர் செய்த நல்வினை- தீவினைக்கேற்பத்தான் நல்லதும் கெட்டதும் நடக்கிறது. அதை ஒரே வரியில் சொன்னால் "மனம்போல் வாழ்வு'. ஜாதகம் எழுதும்போது முதலில் "ஜெனனீ ஜென்ம ஸெனக்யானாம் வர்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்யானாம்' என்று எழுதுவார்கள். ஒரு பிறவி எடுப்பதென்றால் (ஒரு ஜீவாத்மா) தந்தையின் கர்ப்பத்தில் இரண்டு மாதமும், தாயின் கர்ப்பத்தில் பத்து மாதமும் வாசம் செய்யும். அதன்பிறகுதான் அந்த உயிர் பூலோகத்தில் பிறக்கும்; உருவெடுக்கும்! அப்படி அமையும்போது இந்த தகப்பனின் கர்ப்பத்திலும், இந்த தாயின் கர்ப்பத்திலும் அந்த உயிர் (குழந்தை) உருவாகவேண்டும் என்பது இறைவன் வகுத்த விதி! முன்ஜென்மாவில் அந்த உயிர் (குழந்தை) செய்துள்ள பாவம்- புண்ணியத்துக்குத் தக்கவாறுதான் அடுத்த ஜென்மா அமைகிறது. எல்லாக் குழந்தைகளும் பிறக்கும்போது நல்ல குழந்தைகள்தான். அது நல்லவனாவதும் வல்லவனாவதும் அல்லது கெட்டவனாவதும் அதன் தலைவிதி அமைப்பு! அதைத்தான் "பிரம்மலிபி' என்பார்கள். காரணம், காரியம், கர்த்தா என்று மூன்றுண்டு. காரணமில்லாமல் காரியமில்லை. காரியமில்லாமல் காரணமில்லை. இதை இயக்குவது அல்லது சம்பந்தமுடையது கர்த்தா! ஆக, எண்ணம், செயல் இரண்டின் விளைவுதான் எல்லாம்! நல்லதே நினை, நல்லதே செய், நல்லதே நடக்கும் என்பதுதான் இதன் ரகசியம்!
● சோலையப்பன், பட்டுக்கோட்டை.
கடவுள் என்பது உண்மையா? என்றால் எங்கிருக்கிறார்? எப்படி இருக்கிறார்?
ஏபி. நாகராஜன் இயக்கிய ஒரு திரைப்படத்தில் இதற்கு விளக்கம் சொல்வார். தெய்வம் மனித ரூபம்! கேள்வி கேட்கும் சோலையப்பனும் கடவுள்தான்- பதில் சொல்லும் "ஜோதிடபானு'வும் கடவுள்தான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். அடுத்து பெண்ணுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்! தாய்- தகப்பனைக் காட்டுகிறாள்; தகப்பன்- குருவைக் காட்டுகிறார்; குரு- கடவுளைக் காட்டுகிறார். அறுசுவை இருக்கிறது. (இனிப்பு, காரம், உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு). இதை சுவைப்பவர் ருசிக்கலாம். அடுத்தவருக்குஉணர்த்த முடியுமா? "சப்புக்கொட்டி ஆஹா என்ன ருசி' என்று அனுபவிக்கிறவரின் உணர்வு அடுத்தவரை உணரவைக்குமா? அந்தச் சுவையை உணர்த்தியவர் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர்- உணர்ந்தவர் சீடர் விவேகானந்தர். ஆக, குருவும் சீடனும் உணரலாம்.