● ஏ. சத்திபிரபா, மேலக்கடையநல்லூர்.

எனக்கு 30 வயது. அப்பாவுக்கு 70 வயது. என் சகோதரிகள் இருவரும் திருமணமாகிச் சென்றுவிட்டார்கள். எனக்கு திருமண முயற்சியெடுக்க யாருமில்லாத நிலை. எப்போது திருமணம் நடைபெறும்?

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, துலா லக்னம். ராசிக்கு 2-ல் சனி. தற்போது ஏழரைச் சனி- 2020 மார்ச் வரை. உங்கள் திருமணத் தடைக்கு இதுவே காரணம். திருமணம் தாமத மானாலும் நல்ல மணவாழ்க்கையும், மனம் நிறைந்த கணவரும் அமைவார். தினசரி கீழ்வரும் சுலோகத்தை, தீபமேற்றி 108 முறை சொல்லவும். நிவேதனமாக கிஸ்மிஸ்பழம் அல்லது டைமண்டு கற்கண்டு வைத்துக்கொள்ளலாம். "ஸ்வயம்வர மஹாதேவி ஸர்வ மங்கள தாயினி ஸீக்ரம் விவாஹ ஸித்யர்த்தம் நமாமி த்வாம் மஹேஸ்வரீம் ஸ்வயம்வர கலாதேவ்யை நமோ நமஹா.'

● பு. அரிகிருஷ்ணன், வேலூர்-6.

Advertisment

எனது மகளுக்குத் திருமணம் முடிந்து எட்டு வருடமாகிவிட்டது. இன்னும் குழந்தை பாக்கியம் அமையவில்லை. எப்போது அமையும்? திருமண நாள் 6-3-2011.

திருமணத் தேதியின் கூட்டு எண் 4 என்பது குற்றம். பொதுவாக 4, 7, 8 கூட்டு எண் வரும் தேதிகள் திருமணத்துக்கு ஆகாத நாட்கள். மகள் வனிதா ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி. 38 வயது நடக்கிறது. 29 வயதுமுதல் குரு தசை. மருமகன் விஜய்ஆனந்த் கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி. 40 வயது நடப்பு. 36 வயதுமுதல் குரு தசை. இருவருக்கும் 2020 மார்ச்வரை அட்ட மச்சனி! உடனடியாக காரைக்குடி சென்று சுந்தரம் குருக்களிடம் சந்தான கோபால கிருஷ்ண ஹோமம், சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கணபதி ஹோமம் உள்பட 19 வகையான ஹோமம் செய்து, தம்பதிகள் இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். (செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும்).

● கே. லதா, வாசுதேவநல்லூர்.

Advertisment

fff

இத்துடன் எனது ஜாதகத்தையும், கணவர் ஜாதகத் தையும் அனுப்பியுள்ளேன். திருமணமாகி மூன்று வருடம் முடிந்தது. ஒரு பெண் குழந்தை உண்டு. எனது கணவர், அவர் அம்மாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எனது தந்தை வீட்டுக்கு விரட்டிவிட்டார். கடந்த ஆறு மாத காலமாக பிறந்த வீட்டில் இருக் கிறேன். குழந்தை கணவரிடம் இருக்கிறாள். நான் அரசு வேலையிலும், கணவர் தனியார் வேலையிலும் இருக்கிறோம். பஞ்சாயத்துப் பேசியும் தீரவில்லை. விவாகரத்து வாங்கிக்கொள் என்கிறார். நாங்கள் எப்பொழுது ஒன்றுசேருவோம்? தங்களை நேரில் சந்திக்கமுடியுமா?

லதா பூராட நட்சத்திரம், தனுசு ராசி. ஏழரைச்சனி 2014-ல் ஆரம்பம். கணவர் குமார் உத்திராட நட்சத்திரம், கன்னி ராசி. அர்த்தாஷ்டமச்சனி. (நாலாமிடத்துச் சனி). லதாவுக்கு செவ்வாய் தசை, குமாருக்கு ராகு தசை. குமாரின் ராகு தசை குடும்பத்தில் குழப்பத்தையும், பிரிவையும் ஏற்படுத்து கிறது. அடுத்து லதாவுக்கு 2024-ல் ராகு தசை சந்திக்கும். அப்போது இருவருக்கும் 2029 வரை (ஐந்து வருடம்) சம தசை- ராகு தசை நடக்கும். அது இன்னும் மோசமான விளைவுகளை உருவாக்கும். நிரந்தரப் பிரிவை ஏற்படுத்த லாம். குழந்தையை உங்களிடம் ஒப்படைக்குமாறும், குழந்தைக்காக ஜீவனாம்சம் வேண்டுமென்றும் நல்ல வக்கீலைக்கொண்டு வழக்குத் தொடரலாம். அல்லது கலெக்டரிடம் மனு கொடுக்கலாம். என்னை நேரில் சந்திக்க மதுரை வரவேண்டும். முன்பதிவு செய்யவும்.

● கே. பழனி, ஆரணி.

எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மகள் இருவருக்கும் திருமணம் முடிந்து நல்ல வாழ்க்கை அமைந்து, சௌகரிய மாக இருக்கிறார்கள். மகன் பி.ஈ., (ஈஈஈ) முடித்து தனியார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுகிறார். அவருக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

மகன் ஹரிபிரசாத் ரிஷப லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். தனுசு சனியை ரிஷபச் செவ்வாய் பார்ப்பதால் 30 வயதில் அல்லது அதற்குமேல் திருமண யோகம் கூடும். ராகு தசை நடப்பதால் திருமணம் தாமதமாகிறது. 18 வெள்ளிக்கிழமை துர்க்கையம் மனுக்கு அல்லது வடக்குப் பார்த்த அம்மனுக்குத் தீபமேற்றி வழிபடவும்.

● விஜய் ஸ்ரீதர், சென்னை.

எனக்கு வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்யும் யோகம் உண்டா? எப்போது அந்த யோகம் வரும்?

49 வயது முடிந்து 50 வயது ஆரம்பம். 7-3-2019 முதல் குரு தசை ஆரம்பம். 25-4-2021 வரை தனது புக்தி. 50 வயதுவரை உங்களுக்குத் திருமணமே ஆகவில்லையா? அல்லது வெளிநாட்டுப் பெண்ணை 2-ஆம் திருமணம் முடிக்க ஆசைப் படுகிறீர்களா? 7-ஆம் இடத்தில் செவ்வாயும் சுக்கிரனும் இருக்க, அவர்களை சனி பார்ப்பதால், ஜாதகரீதியாக நீங்கள் காம வசப் பட்டவர் என்று காட்டுகிறது. உதாரணமாக, இராவணன் சீதையை விரும்பியதுபோல! அவர்களை குருவும் பார்ப்பதால், சீதை இராவணனை விரும்ப வில்லை. ஆனால் உங்களை வெளி நாட்டுப் பெண் விரும்பினால் மணம் முடிக்கலாம். ஒரு ஆன்மிக ஸ்தா பனத்தில் நீங்கள் பணிபுரியலாம் என்றும், அங்கு வெளிநாட்டுப் பெண்களும் பணிபுரியலாம் என்றும், அதில் ஒரு பெண்மீது உங்களுக்கு மோகம் இருப் பதாகவும் எனது ஜோதிடக் கணக்கு சொல் கிறது. செவ்வாய் 12-க்குடையவர். சுக்கிரன் 7-ஆம் இடத்துக்கு 12-க்குடையவர். 12-ஆம் இடம் வெளியூர் அல்லது வெளிநாடு என்பதைக் குறிக்கும். சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை என்பதால், உங்கள் எண்ணம் நிறைவேற இடமுண்டு. அதற்கு ஆண்டாளையும் கிருஷ்ண ரையும் மனதார வழிபடவேண்டும். ஆண்டாள் கிருஷ்ணரைக் காதலித்தாள். கிருஷ்ணர் அர்ஜுனன் காதல் நிறைவேறத் துணைபுரிந்தார். 2021 ஏப்ரலுக்குமேல் சனி புக்தியில் உங்கள் விருப்பம் நிறைவேறும் வாய்ப்புண்டு.

● எஸ். சேகர், காரைக்கால்.

எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். அம்மாவுக்கும் ஆறு மாதத்தில் கர்மம் செய்வேன் என்று ஒரு ஜோதிடர் கூறியது உண்மையா? திருமணமும், நல்ல வேலையும் எப்போது அமையும்?

1985, ஜூன் மாதம் பிறந்த உங்களுக்கு 34 வயது முடிந்து 35 ஆரம்பம். கன்னியா லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். 2020 நவம்பர்வரை சனி தசை, சந்திர புக்தி. அதுவரை தாயாருக்கு ஆயுள் தீர்க்கமுண்டு. அதன்பிறகு செவ்வாய் புக்தி அல்லது ராகு புக்தியில் தாய்க்கு கர்மம். அதற்குள் திருமணம் செய்து விடுங்கள். மருமகளை தாயார் பார்க் கட்டும். திருமணம் நடக்கவும், தாயாரின் ஆயுள் தீர்க்கம் பெறவும், உங்களுக்கு நல்ல சம்பாத்தியம் வரவும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் 19 வகையான ஹோமம் செய்து, நீங்களும் தாயாரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். (தொடர்புக்கு: செல்: 99942 74067).