டி. குலசேகரப்பெருமாள், நாகர்கோவில்.

என்னுடைய மகன் ஆனந்தன் எம்.சி.ஏ., பாஸாகி சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தான். மருமகள் பவித்ரா பி.ஈ., முடித்து சென்னையில் வேலை பார்த்தாள். மருமகளை கம்பெனியின்மூலமாக அமெரிக்கா அனுப்பினார்கள். அவளுக்குத் துணையாக மகனும் வேலையை விட்டுவிட்டு கூடவே சென்றுவிட்டான். மகனுக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்காமல் கடைகளில் பில் போட்டுக்கொண்டிருக்கிறான். சொந்த வியா பாரம் செய்ய விரும்புகிறான். செய்யலாமா? அல்லது நல்ல வேலை கிடைக்குமா?

மகன் ஆனந்தன் மீன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். 2020 மார்ச்- அடுத்த சனிப்பெயர்ச்சிவரை அட்டமச் சனி நடப்பதால், திறமைக்கேற்ற வேலையும், படிப்பிற்கேற்ற வேலையும் வருமானமும் கிடைக்காது. அதன்பிறகு நல்ல வேலை அமையும். அதுவரை மகனுக் காக நீங்கள் 45 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய் தீபமேற்றவேண்டும். அத்துடன் பவித்ராவுக்கும் விருச்சிக ராசி; 2020 மார்ச்வரை ஏழரைச் சனி நடக்கிறது. முடிந்தால் திருக்கொள்ளிக்காடு சென்று கலப்பை ஏந்திய சனீஸ்வரருக்கு இருவர்பேரிலும் அர்ச்சனை செய்யலாம்.

எஸ். தாமரை, சிங்கம்புணரி.

Advertisment

jothidamanswerகேள்வி- பதில் பகுதியில், என் மகளுக்கு மறுமணம் சிறப்பாக நடக்க விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் திரு விடையாறு செல்லுமாறு எழுதியிருந் தீர்கள். நன்றி. திருவையாறா அல்லது திருவிடையாறா? கோவில் குருக்கள், சுவாமி பெயர் பற்றிய விவரம் கூறவும்.

திருவிடையாறும் போகவேண்டாம்; திருவையாறும் போகவேண்டாம். மயிலாடுதுறை ரயில் நிலையத்தி−ருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் மாப்படி சென்று சுமங்கலி− காளியிடம் பௌர்ணமி அல்லது ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமை நாளில் மனமுருகப் பிரார்த்தனை செய்தால் போதும். தொடர்புக்கு ஸ்ரீதர், செல்: 99408 30484. இதிலும் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் எங்கும் போகவேண்டாம். சிங்கம்புணரி வாத்தியார் கோவி−ல் ஏழு பௌர்ணமி, ஏழு அமாவாசை அபிஷேகப் பூஜை செய்யலாம். 2020 ஜனவரியில் 29 வயது முடிந்து 30 ஆரம்பிக்கும். அக்காலம் மறுமணம் நடக்கும்.

ஜி. ஜானகிராமன், தூத்துக்குடி.

Advertisment

எனது மருமகளுக்கு முதல் குழந்தை நார்மல் டெ−வரிமூலம் பையன் பிறந்தான். இரண்டாவது குழந்தை பிறக்க ஏப்ரல் 20-ஆம் தேதி என்று குறித்து, பிறகு ஏப்ரல் 1-ஆம் தேதி செக்கப்புக்குப்போன மருமகளை உட்காரவைத்து, பிள்ளைக்கு நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்றும், உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்றும் கூறி ஆபரேஷன் செய்து பெண் குழந்தை பிறந்துவிட்டது. குழந்தைக்கு தடுப்பு ஊசி போடப் போனபோது, அங்குள்ள டாக்டர் குழந்தைக்கு இதயத்தில் கோளாறு உள்ளது என்று தடுப்பு ஊசி போட மறுத்துவிட்டார். திருநெல்வேலி− டாக்டருக்கு எழுதிக்கொடுத்தார். அவர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப, அவர்கள், "குழந்தைக்கு இதயத்துக்கு இரண்டு இரத்தக் குழாய் உண்டு. ஆனால் ஒரு இரத்தக் குழாய்தான் உள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இது சென்னை அல்லது திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில்தான் செய்யவேண்டும்' என்று நாட்களைக் கடத்திவிட்டார்கள். சென்னையில் ஐந்தரை லட்ச ரூபாய் செலவாகும் என்றார்கள். திருவனந்தபுரம் சென் றோம். ஒரு மாதம் அலையவிட் டார்கள். ஜுன் 3-ஆம் தேதி குழந் தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்து, ஒரு ரத்தக் குழாயைப் பிரித்து இரண்டாக்கிவிட்டார்கள். இதயத்தில் இருந்த ஓட்டையையும் அடைத்து விட்டார்கள். இப்பொழுது என் பேத்தி ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவளுக்கு ஆயுள் தீர்க்கம் உண்டா? எதிர்காலம் எப்படியிருக்கும்?

1-4-2019, பங்குனி 18-ஆம் தேதி, அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் குழந்தை ஜனனம். செவ்வாய் தசை இரண்டு வருடம், இரண்டு மாதம். தசாநாதன் செவ்வாய் 11-ல்- பாதக ஸ்தானம். ராசிக்கும் லக்னத்துக்கும் செவ்வாய்க்கும் குரு பார்வை இல்லை. மருத்துவச் சிகிச்சை உதவியோடு செவ்வாய் தசையைக் கடந்தாலும், அடுத்து வரும் ராகு தசை மாரக தசையாக வருகிறது. 2020 பங்குனியில் அவிட்ட நட்சத்திரத்தில் ஒரு வயது முடியும்போது ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம் செய்யவும். இரண்டு வயது முடிவில் மறுபடியும் சூலி−னி துர்க்கா ஹோமம் செய்யவும்.

செந்தில்நாதன்-

என் தாய்- தந்தைக்கு நான் ஒரே மகன். ஜாதகரீதியாக என்னை தனிக்குடித் தனம் போகச்சொல்கிறார்கள். நான் என்ன செய்வது?

செந்தில்நாதன் விருச்சிக லக்னம், திருவோண நட்சத்திரம், மகர ராசி. லக்னத்துக்கு 2-ல் கேது. அத்துடன் ஏழரைச்சனியில் விரயச்சனி. 32 வயதுமுதல் குரு தசை. குரு 12-ல். (நடப்பு 37 வயது). மனைவி லலி−தாவுக்கு 34 வயது முடிந்து 35 ஆரம்பம். பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னம். ராகு தசை நடக்கிறது. குழந்தை அவந்திகாவுக்கு கும்ப ராசி, சதய நட்சத்திரம். நான்கு வயதுவரை (2021 வரை) ராகு தசை நடக்கிறது. கூட்டுக்குடும்பமாக இருந்தால் யாருக்காவது உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் வரலாம். எனவே தனிக்குடித்தனம்- பெற்றோரைவிட்டு விலகியிருப்பது நல்லது. வேண்டிய உதவி களைச் செய்து பக்கத்திலேயே விலகியிருப் பதே பரிகாரம்.

ஏ.டி. புஷ்பராணி, விழுப்புரம்.

எனக்கு அரசு வேலை கிடைக்குமா? கனவில் அடிக்கடி சர்ப்பம் வருகிறது; அருகில் இருப்பதுபோல உணருகிறேன். இதற்குப் பரிகாரம் என்ன?

அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னம். 17 வயதுமுதல் 35 வயதுவரை ராகு தசை நடக்கிறது. அதனால் சர்ப்பம் கனவிலும் வரும்; பார்வையிலும் தென்படும். நாகதோஷப் பரிகாரம் செய்யலாம். காளஹஸ்தி சென்று செய்யலாம். பரிகாரப்பூஜை செய்வார்கள்.

ஆர். பெருமாள், பாடியந்தல்.

எனது மூத்தமகன் சிவக்குமார் ஐ.டி.ஐ டர்னர் படிப்பு முடித்து குறைந்த சம்பளத்தில் கஷ்டப்படுகிறான். கேது தசை முடிந்து சுக்கிர தசை ஆரம் பிக்கப் போகிறது. இது எப்படியிருக்கும்? சொந்த வீடு கட்டும் யோகம் வருமா? நான்காவது தசையாக வருவது நல்லதா?

நான்காவது தசையாக சனி தசைதான் வரக்கூடாது. சுக்கிர தசை வருவதால் தோஷமில்லை. பூச நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னம். சுக்கிரன் 10-க்குடையவர். 10-ல் ராகு. எனவே வெளிநாட்டுக்குப் போகும் யோகம் ஏற்படும். அங்கு சென்றபிறகு சம்பாத்தியம் செய்து, சுக்கிர தசை, தனது புக்திக்குப்பிறகு சூரியன் அல்லது சந்திர புக்தியில் சொந்தவீடு கட்டலாம். வெளிநாடு போக- சேலம்- மேட்டூர் அருகில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகபூஜை செய்ய வேண்டும். தொடர்புக்கு: பாலாஜி- செல்: 94435 15904.

ஆர். கவிதா, நாகை.

எனக்குத் திருமணமாகி ஒன்பது வருடமாகிறது. பெரியவர்கள் சொல்பேச்சு கேட்காமல் காதல் திருமணம் செய்துகொண்டேன். இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவர் பெரிய குடிகாரர். ஒன்பது வருடமும் நரக வேதனை. தினமும் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துகிறார். அவரிடமிருந்து எப்போது நிரந்தர விடுதலை கிடைக்கும்? குழந்தைகளைக் காப்பாற்றும் அளவு எனக்கு வருமானம் கிடைக்குமா? மறுமணத்துக்கு வழி உண்டா? கடவுள்மாதிரி உங்கள் தெளிவான முடிவைப் பின்பற்றுவேன்.

33 வயது முடிந்து 34 வயது ஆரம்பம். கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம், தனுசு லக்னம். 7-க்குடைய புதன் 8-ல் மறைவு. புதனுக்கு வீடுகொடுத்த சந்திரன் அவருக்கு 8-ல் கும்பத்தில் மறைவு. புதன் தசை, புதன் புக்தி. வீட்டுக்காரர் ரவிக்குமார் தனுசு லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். 40 வயது. 38 வயதுமுதல் சந்திர தசை. அத்துடன் ஏழரைச்சனி வேறு. சந்திரன் 8-க்குடையவர். ராசிநாதன் செவ்வாய் 8-ல் நீசம்; சந்திரனோடு பரிவர்த்தனை. குடிகாரரை ஏன் காத−த்தீர்கள்? அதற்கு தண்டனைதான் இந்த அவஸ்தை. 2020 சனிப்பெயர்ச்சிவரை கணவர் திருந்தமாட்டார். மகளிர் காவல் நிலையத்தில் புகார்செய்து அவரை விவாகரத்து செய்துவிடுங்கள். மறுமணம் செய்ய முன்வரும் ஆண் சரீர சுகத்துக்கு மட்டும் ஆசைப்படுகிறவராக இருந்தால், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை சிந்தியுங்கள். ஏதாவது வேலைசெய்யுங்கள். அல்லது வங்கிக்கடன் வாங்கி ஏதாவது தொழில் செய்யுங்கள். இரண்டு குழந்தைகள் பெற்றபிறகு உங்களுக்கு வாழ்வளிக்க உண்மையானவர் வருவார் என்று எதிர்பார்க்கிறீர்களா?