● எஸ். கருப்பையா, பேராவூரணி.
என் திருமணத்தேதி 12-9-2018. எனக்கு புத்திர பாக்கியம் எப்போது ஏற்படும்? அப்பா வுக்கு மூட்டுவலி. எனக்கு உடல்வலி. எப்போது குணமாகும்? நான் பார்த்துவரும் நியூஸ் பேப்பர் ஏஜென்ட் தொழில் மேலும் வளர்ச்சி அடையுமா? வேறு துணைத் தொழில் ஏதும் செய்யலாமா? புது வீடு கட்டி, கார் வாங்கும் யோகம் உண்டா?
விருச்சிக லக்னம், துலா ராசி, விசாக நட்சத் திரம். அட்டமாதிபதி புதன் தசை நடக்கிறது. தீபாவளிக்குப் பிறகு (குருப்பெயர்ச்சிக்குப் பிறகு) தொழில் முன்னேற்றம் உண்டாகும். 40 வயதுக்குமேல் வீட்டுக்கனவும், வாகனக் கனவும் நிறைவேறும். புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதையிலுள்ள செவலூர் சென்று பூமிநாத சுவாமிக்கு ருத்ர ஹோமம் நடத்தி ருத்ராபிஷேகம் செய்தால் முன்னதாகவே உங்கள் கனவு நிறைவேறும். திருமணத் தேதி எண் 3, கூட்டு எண் 5 என்ப தால் நல்ல தேதிதான். 2020-ல் வாரிசு கிடைக்கும். மனைவி சண்முகப்பிரியா ஜாதகத்திலும் தோஷம் எதுவுமில்லை. ஹோமம் செய்யும்போது சந்தான பரமேஸ்வர ஹோமமும், சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும் சேர்த்து செய்யலாம்.
● டி. வேதலட்சுமி, தம்மநாயக்கன்பட்டி.
எனக்கு 4-ஆவது தசையாக வரும் சனி தசை மாரக தசை என்று ஜோதிடர் கூறுகிறார். திருமண நாள்முதல் கடுமை யான கஷ்டம்தான். கணவருக்கும் சரியான தொழில் இல்லை. எதிர்காலம் இனிமை யாக அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
4-ஆவது தசை சனி தசை மாரகம் அல்லது மாரகத்துக்குச் சமமான கண்டம், வைத் தியச்செலவு, பொருள் இழப்பு தரும் என்பது பொதுவிதி. நீங்கள் ரிஷப ராசி, துலா லக்னம். ராசிக்கும் லக்னத்துக்கும் சனி ராஜயோகா திபதி என்பதால், சனி தசை மாரகம் செய்யாது. கேது தசைதான் மாரகம் செய்யும். (75 வயது). சனி தசையின் சங்கடம் விலக (தற்போது அட்டமச்சனியும் நடப்பதால்) 45 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி. ஒவ்வொரு சனிக்கிழமையும் கால பைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து 2020 வரை (சனிப்பெயர்ச்சி வரை) தீபமேற்றி வழிபடவும். முடிந்தால் கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், மிருத்யுஞ்சய ஆயுஷ் ஹோமம் செய்து, குடும்பத்தார் அனைவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம்.
● எம். புவனேஸ்வரி, தளவாய்ப்பட்டி.
21-7-1990-ல் பிறந்தேன். எனக்கு ஜாதகம் எழுதவில்லை. என் ராசி, நட்சத்திரம் கூறவும். திருமணம் எப்போது நடை பெறும்?
மதுரை கே.எம். சுந்தரம், செல்: 92453 28178-ல் தொடர்புகொண்டு, உங்கள் ஜாதகத்தை எழுதிவிட்டு எனக்கு ஜெராக்ஸ் அனுப்பினால் திருமணம், வாரிசு போன்ற எதிர்கால பலன் களைச் சொல்லலாம் அல்லது நேரில் வரலாம். பரிகாரமும் சொல்லலாம்.
● ஆர். ரங்கசாமி, நம்பியூர்.
எனது மருமகன் ரவிகிருஷ்ணன் பெங் களூரில் மக்காச்சோளம் மற்றும் தவிட்டு வியாபாரம் செய்கிறார். வியாபாரம் மந்தமாகிவிட்டது (தேக்கம்தான்). அட்வான்ஸ் வாங்கிய வியாபாரிகள் சரக்கு அனுப்பவில்லை. பணத்தையும் திரும்பத்தரவில்லை. அதனால் நாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டிகூட கட்டமுடிய வில்லை. 30 லட்சத்துக்குமேல் முடக்கம். நல்ல வழிகாட்டவும்.
ரவிகிருஷ்ணன் மூல நட்சத்திரம், தனுசு ராசி. 2023 வரை ஏழரைச்சனி. அத்துடன் அட்டமாதிபதி செவ்வாய் தசை 5-ஆவது தசை. கோட்சாரமும் தசாபுக்தியும் எதிர்மறையாக இருப்பதால், எதிர்காலம் இருள்மயமாகத்தான் தெரிகிறது. 21 வகையான ஹோமம் செய்து அவருக்கும் மனைவிக்கும், இரண்டு பிள்ளைகளுக்கும் (குடும்பத்தார் அனைவருக்கும்) கலச அபிஷேகம் செய்யவேண்டும். பணம் ஏற்பாடு செய்துவிட்டு என்னைத் தொடர்பு கொள்ளவும். எதிர்காலத்தை ஒளிமய மாக்கலாம்.
● எம். தமிழரசி, நாகமலை புதுக்கோட்டை.
தங்கள் ஆசிர்வாதத்தால் ஜூன் மாதத் திலிருந்து நல்ல வரன்கள் வர ஆரம் பித்துள்ளன. தங்கள் பதில் கிடைத்த பிறகு மாப்பிள்ளை வீடு பார்க்க எண்ணி யுள்ளோம்.
ஜூலை 29-ல் எழுதிய கடிதம் ஆகஸ்டில் தான் என் பார்வைக்கு கிடைத்துள்ளது. கூப்பிடு தூரத்தில் இருந்துகொண்டு நேரில் வரமுடியவில்லை என்றால் சரியா? லாவண்யா ஜாதகம் மட்டுமே அனுப்பியுள்ளீர்கள். மாப்பிள்ளை ஜாதகம் அனுப்பவில்லையே. மாப்பிள்ளை ஜாதகத்துடன் பொருத் தம் பார்க்க நேரில் வருவதே முறையானது.
● எஸ்.பி. சக்திவேல், கோவை.
என் உடல் நிலை சரியில்லை. எப்போது குணமாகும்? ஆயுள் காலம் எவ்வளவு? நடக்கும் தசை மாரக தசையா?
கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னம். 2020 மார்ச் சனிப்பெயர்ச்சிவரை ஏழரைச்சனி. அத்துடன் 65 வயதுவரை செவ்வாய் தசை. செவ்வாய் ராசிநாதன் என்பதால் மாரகம் செய்யாது. அடுத்துவரும் ராகு தசைதான் மாரக தசை. கோவை சேரன் மாநகரில் மீனாட்சி சுந்தரர் திருக்கோவிலில் நவகிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், மிருத்யுஞ்சய ஆயுஷ்ஹோமம் (சனி சாந்தி ஹோமம்) செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளவும். அர்ச்சகர் சுகேஷ் என்ற யோகேஷ், செல்: 94430 64265-ல் தொடர்பு கொள்ளவும். மகன்- மருமகள்- பேரன்கள் அனைவருக்கும் சங்கல்பம் செய்து கொள்ளலாம்.
● வி. அருணாசலம், மேலக்கடையநல்லூர்.
எனது மகள் கோமுவுக்கு ஏழு வருட மாக வரன் தேடுகிறேன். அமையவில்லை. எனக்கோ 70 வயதாகிறது. மனைவி காலமாகி மூன்று வருடமாகிறது. எப்போது திருமணம் நடக்கும்?
கோமு கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, துலா லக்னம். நடப்பு வயது 2019, ஜூலை 26-ஆம் தேதிப்படி 29 வயது முடிந்து 30 வயது ஆரம்பம். கேட்டை 1-ஆம் பாதம். நீங்கள் அனுப்பிய ஜாதகக் குறிப்பில் கேட்டை 4-ஆம் பாதம் என்று தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. புதன் தசை இருப்பு 15 வருடம், மூன்று மாதம், இரண்டு நாள் என்பது சரிதான். (கேட்டை 4-ஆம் பாதம் என்றால் தவறு). அம்சத்தில் கேட்டை 1-ல்- தனுசு நவாம்சத்தில் சந்திரன் எழுதியிருப்பது சரிதான். ஏழரைச்சனியும் நாகதோஷமும் இருப்பதால் திருமணம் தடையாகிறது. 2020 மார்ச் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகுதான் திருமணம் நடக்கும். அதுவரை பொறுமை யாக இருக்கவும். முடிந்தால் மகளை அழைத்துக்கொண்டு திருவீழிமிழலை சென்று (கும்பகோணம்- பூந்தோட்டம் வழி) மாப்பிள்ளை சுவாமிக்கு அபிஷேக பூஜை செய்யவும். தொடர்புக்கு: ராமு குருக்கள், செல்: 94882 21538, மகாலிங்கம் குருக்கள், செல்: 94881 17358.