ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-57

● சுதா, தஞ்சாவூர்.

என் பேரிலும், தம்பி பேரிலும் இரண்டு வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கிறோம். வீடுகள் பழுதடைந்து பயனில்லாமல் இருக்கின்றன. அதைக் கட்டலாமா? விற்றுவிடலாமா? வேறு வீடு வாங் கலாமா?

சுதாவுக்கு திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னம். 2020 சனிப்பெயர்ச்சியின்போது மிதுன ராசிக்கு அட்டமச்சனி வருகிறது. தம்பிக்கு 2023 வரை ஏழரைச்சனி (தனுசு ராசி) நடக்கிறது. எனவே வீட்டை பழுது பார்ப்பதைவிட விற்பது நல்லது. சுதாவுக்கு அட்டமச்சனி வந்ததும் புது வீடு இடப்பெயர்ச்சி அமையும். தம்பிக்கு ஏழரைச்சனி முடியும்வரை கிரகநிலை அனுகூலமில்லை. அத்துடன் ராகு தசையும் நடக்கிறது. செயலற்ற நிலை. என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்.

● ராஜா, திருச்சி.

எனக்கு என்ன தொழில் ஏற்றது? அல்லது வேலை கிடைக்குமா? குடும்பத்தில் நிம்மதியில்லை. மனைவி, மக்களுடன் சந்தோஷமாக வாழ்வேனா?

ராஜாவுக்கு விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். 2020 வரை (அடுத்த சனிப்பெயர்ச்சிவரை) ஏழரைச்சனி நடக்கிறது. அத்துடன் 38 வயதுமுதல் பத்து வருடம் சந்திர தசை- 48 வயதுவரை. (தற்போது 40 வயது நடப்பு). பொருட்சேதம், விபத்து, குடும்

● சுதா, தஞ்சாவூர்.

என் பேரிலும், தம்பி பேரிலும் இரண்டு வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கிறோம். வீடுகள் பழுதடைந்து பயனில்லாமல் இருக்கின்றன. அதைக் கட்டலாமா? விற்றுவிடலாமா? வேறு வீடு வாங் கலாமா?

சுதாவுக்கு திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னம். 2020 சனிப்பெயர்ச்சியின்போது மிதுன ராசிக்கு அட்டமச்சனி வருகிறது. தம்பிக்கு 2023 வரை ஏழரைச்சனி (தனுசு ராசி) நடக்கிறது. எனவே வீட்டை பழுது பார்ப்பதைவிட விற்பது நல்லது. சுதாவுக்கு அட்டமச்சனி வந்ததும் புது வீடு இடப்பெயர்ச்சி அமையும். தம்பிக்கு ஏழரைச்சனி முடியும்வரை கிரகநிலை அனுகூலமில்லை. அத்துடன் ராகு தசையும் நடக்கிறது. செயலற்ற நிலை. என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்.

● ராஜா, திருச்சி.

எனக்கு என்ன தொழில் ஏற்றது? அல்லது வேலை கிடைக்குமா? குடும்பத்தில் நிம்மதியில்லை. மனைவி, மக்களுடன் சந்தோஷமாக வாழ்வேனா?

ராஜாவுக்கு விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். 2020 வரை (அடுத்த சனிப்பெயர்ச்சிவரை) ஏழரைச்சனி நடக்கிறது. அத்துடன் 38 வயதுமுதல் பத்து வருடம் சந்திர தசை- 48 வயதுவரை. (தற்போது 40 வயது நடப்பு). பொருட்சேதம், விபத்து, குடும்பப் பிரிவு- பிளவு, வைத்தியச்செலவு முதலிய பலன்களை சந்திக்கும் நிலை. திங்கட்கிழமைதோறும் சிவலிங்க அபிஷே கத்துக்குப் பால் வாங்கித் தரவேண்டும். முடிந்தால் ஒரு திங்கட்கிழமை சிவன் கோவிலில் ருத்ர ஜெபப் பாராயணம் செய்து, ருத்ர ஹோமம் வளர்த்து, சுவாமி- அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யலாம். அத்துடன் 45 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் சனிக்கிழமைதோறும் நெய்யில் நனைத்து தீபமேற்ற வேண்டும். (சனிப்பெயர்ச்சிவரை). இவற்றைச் செய்தால் மலைபோல வரும் துன்பம் பனிபோல விலகலாம்.

● ப. சுந்தரம், கும்பகோணம்.

குருவே, வாழ வழிசொல்லுங்கள். சுயதொழிலில் லட்சக்கணக்கில் நஷ்டம்- கடன். உறவுகள் மதிப்பதில்லை. உறவினர், மனைவி, மகள், மகன் ஒதுங்கி நிற்கின் றனர். பத்து ஆண்டுகளாக பூர்வீக சொத்து விற்பனை செய்ய முடியவில்லை.

2018 ஏப்ரலில் பதில் சொன்னதாக ஞாபகம். அதைக் கடைப்பிடித்தீர்களா? "இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்; செல்லாது அவன் வாய்ச்சொல்' என்று ஒரு புலவர் பாடியுள்ளார். கைப்பொருள் உள்ளானை எல்லாரும் சென்று எதிர்கொள்வர். ஒரு திரைப்படத்தில் சிவாஜி, "போங்கடா போங்க- என் காலம் வெல்லும்- வென்ற பின்னே வாங்கடா வாங்க' என்று பாடுவார். அதுமாதரி 2024 வரை சுக்கிர தசை முடியட்டும். அதன்பிறகு உங்கள் காலம் வெல்லும். பொருள் சேரும். பொருள் சேர்ந்தால் உறவுகள் தேடிவரும். அதுவரை உங்கள் வழி தனி வழியாக இயங்கட்டும். வசதி இருந்தாலும் இல்லையென்றாலும் கடன்உடன் வாங்கியாவது காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளுங்கள். எந்தப் பிரச்சினைக்கும் ஒரே தீர்வு அக்னி காரியம்தான். இதுதான் வாழும் வழி.

jj

● கோமதி, திருச்சி.

பெரிய பையனுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். வேலையில் நல்ல முன்னேற்றமும் சம்பளமும் வேண்டும். சின்னவனுக்கு லோன் கிடைத்து வீடு கட்ட வேண்டும். திருச்சியில் உள்ள வீடுகளை விற்கவேண்டும். கணவர் இறந்தபிறகு அவர் பெயரிலுள்ள வீட்டை விற்று இரு பையன்களுக்கும் கொடுத்துவிட்டேன். என் பேரிலும் வீடு உள்ளது. நல்ல விலைக்குப் போக வேண்டும்.

உங்களுடைய எல்லா "வேண்டும்' என்ற வேண்டுதலுக்கு ஒருமுறை நேரில் வரவேண்டும். (முன்பதிவு செய்துவிட்டு வரவேண்டும்). எல்லா ஜாதகங்களையும் கொண்டுவர வேண்டும்.

● வரதராஜ செட்டியார், ஆற்காடு.

என் பேத்திக்கு ஜாதகம் எழுதித் தரும்படி வேண்டுகிறேன். விஜயதசமி யன்று பள்ளியில் சேர்க்கலாமா?

விஜயதசமியன்று பள்ளியில் சேர்ப்பது நல்லதுதான். நீங்கள் அனுப்பிய குறிப்பு வாசன் பஞ்சாங்கப்படி திருக்கணித முறையில் உள்ளது. இதை மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப்படி கணித்து வாங்கவும். தொடர்புக்கு, செல்: 92453 28178. அப்பாஸ் காம்ப்ளக்ஸ், அண்ணாநகர் மெயின் ரோடு, (அம்பிகா காலேஜ் எதிர்புறம் மாடி) மதுரை-20.

● விசாலாட்சி, திருவனந்தபுரம்.

என் பெண் மீரா பொறியியல் மேற்படிப்பு படிக்கிறாள். படிப்பு, வேலை எதிலும் நாட்டமில்லை. உடல்நலத் திலும் பல பிரச்சினைகள். அவளை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதவைக்கலாமா? (தகப் பனாரின் ஆவல்).

2019 டிசம்பரில் 23 வயது முடியும். திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னம். சனி தசை நடக்கிறது. 10-க்குடைய செவ்வாய் அம்சத்தில் உச்சம்! (உத்திராடம் 2-ஆம் பாதம்). எனவே அரசு உத்தியோகம் உண்டு. ஐ.ஏ.எஸ். ஆக வாய்ப் புண்டு. 2020-ல் அட்டமத்துச் சனி வருவதால் ஹாஸ்டலில் தங்கிப்படிக் கலாம். முன்ன தாக காரைக் குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) 19 வகையான ஹோமம் செய்து மீராவுக்கு கலச அபிஷேகம் செய்தால் படிப்பில் நாட்டமும் ஆர்வமும் முன்னேற்றமும் உண்டாகும். (செலவைப் பார்க்கக்கூடாது.)

● துரைசாமி, வீராய்ச்சிபாளையம்.

என் மகன் சேஷன் எம்.காம்., (சி.ஏ.) முடித்துள்ளான். எந்த வேலையும் இல்லை. வருமானமும் இல்லை. உடலிலும் உபாதைகள்- தாய்க்கும் பீடைகள். இவை எப்போது சரியாகும்? திருமணம் எப்போது நடக்கும்?

படிப்பு, வேலை, சம்பாத்தியம் வருவதற்கு முன்பே திருமணக் கனவு காணாதீர்கள். 27 வயதுதான் ஆகிறது. 2020-ல் சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு வேலை யோகம். 30 வயது முடிந்தபிறகு திருமண யோகம்.

● ஆர். பாலாஜி, உறையூர்.

எனக்கு எந்தமாதிரி பெண் ஜாதகம் தேடவேண்டும்? எப்போது திருமணம் கூடிவரும்? பரிகாரம் உண்டா?

27 வயது நடக்கிறது. நாக தோஷம் உண்டு. 30 வயதில்தான் திருமண யோகம். பரிகார விவரம் நேரில் அறியலாம்.

● ஜெயந்திமாலா, கோவை.

என் தோழியின் மகள் ரேஷ்மாவின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

படிப்பு, வேலை, எதிர்காலம் எல்லாம் தெளிவாக உள்ளது. 2014 ஜூன்முதல் ராகு தசை. 2022 வரை சனி புக்தி. இதில் வெளிநாட்டு யோகம், வேலை, சம்பாத்தியம் அமையும். 2022-க்குமேல் திருமணம். வெளிநாட்டு வரன் அமையும்.

bala160819
இதையும் படியுங்கள்
Subscribe