ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-56

● ராஜேஸ்வரி, விழுப்புரம்.

என் கணவர் இறந்து ஆறு மாதமாகிறது. என் இளைய மகன் +2 வகுப்பிற்குச் செல்லாமலும், என் பேச்சைக் கேட்காமலும் கண்டவர்களுடன் ஊர்சுற்றி பொறுப்பில்லாமல் நடக்கிறான். படிப்பு தடைப்படுமா? ஜீவன ஸ்தானத்தில் சனி, ராகு. என்ன தொழில் செய்யலாம்?

சூரிய நாராயணன் சிம்ம லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். 15 வயதுமுதல் ராகு தசை- 33 வயதுவரை. 4-ஆம் இடம் கல்வி ஸ்தானத்தில் சூரியன், கேது, புதன். அதற்கு 10-ல் உள்ள சனி, ராகு பார்வை. பட்டப்படிப்புக்கு இடமில்லை. பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., போன்ற தொழிற்கல்வி படிக்கலாம். காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) சூலினி துர்க்கா ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலு சரசுவதி ஹோமம், வாக்வாதினி ஹோமம், வித்யா கணபதி ஹோமம் முதலிய 19 வகையான ஹோமம் செய்து, பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் அபிஷேகம் செய்யவேண்டும். பிள்ளைகளின் தந்தை இறந்து ஒரு வருடம் கழித்து (தலைத்திவசம் கொடுத்தபிறகு) இதைச் செய்யவேண்டும்.

● ......... வேலங்குடி.

ராஜாராமன் ஜாதகப்படி எதிர்காலம் எப்படியி

● ராஜேஸ்வரி, விழுப்புரம்.

என் கணவர் இறந்து ஆறு மாதமாகிறது. என் இளைய மகன் +2 வகுப்பிற்குச் செல்லாமலும், என் பேச்சைக் கேட்காமலும் கண்டவர்களுடன் ஊர்சுற்றி பொறுப்பில்லாமல் நடக்கிறான். படிப்பு தடைப்படுமா? ஜீவன ஸ்தானத்தில் சனி, ராகு. என்ன தொழில் செய்யலாம்?

சூரிய நாராயணன் சிம்ம லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். 15 வயதுமுதல் ராகு தசை- 33 வயதுவரை. 4-ஆம் இடம் கல்வி ஸ்தானத்தில் சூரியன், கேது, புதன். அதற்கு 10-ல் உள்ள சனி, ராகு பார்வை. பட்டப்படிப்புக்கு இடமில்லை. பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., போன்ற தொழிற்கல்வி படிக்கலாம். காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) சூலினி துர்க்கா ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலு சரசுவதி ஹோமம், வாக்வாதினி ஹோமம், வித்யா கணபதி ஹோமம் முதலிய 19 வகையான ஹோமம் செய்து, பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் அபிஷேகம் செய்யவேண்டும். பிள்ளைகளின் தந்தை இறந்து ஒரு வருடம் கழித்து (தலைத்திவசம் கொடுத்தபிறகு) இதைச் செய்யவேண்டும்.

● ......... வேலங்குடி.

ராஜாராமன் ஜாதகப்படி எதிர்காலம் எப்படியிருக்கும்? ரகுராமன் வாகன விபத்தில் ஒரு கண் பார்வையை இழந்துவிட்டான்.எதனால் பார்வையிழப்பு ஏற்பட்டது?

jjj

ரகுராமன் புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னம். எட்டு வயதுமுதல் சனி தசை. பாதகாதிபதி தசை- 27 வயதுவரை. (நடப்பு 25 வயது). 9-க்குடைய குரு ராகு- கேது சேர்க்கை. சுக்கிரன் நீசம். ராஜாராமனும் கடக ராசி, பூச நட்சத்திரம். 32 வயதுவரை கேது தசை. (தற்போது 29 வயது முடிந்து 30 ஆரம்பம்). 9-ல் சனி. குடும்பத்தில் சாபதோஷம் கடுமையாக உள்ளது. பள்ளத்தூர் வேலங்குடியில் வயல்நாச்சியம்மனுக்கு அபிஷேகம் செய்து, சேலை உடுத்தி, பூஜை செய்வதுடன், கருப்பர் மேடையில் பொங்கல் வைத்துப் பூஜை செய்யவும். தோஷம் விலகும்.

● ஏ. தாமரை, வேளச்சேரி.

என் மகள் தனஸ்ரீக்கு தாங்களும் துணைவியாரும் காரைக்குடி வந்து 18 வகையான ஹோமம் நடத்திக்கொடுத்தீர்கள். ஈரோடு திருமண மையத்தில் பதிவு செய்துள்ளோம். இந்தப் பக்கம் பெரும்பாலும் திருக்கணிதப் பஞ்சாங்கப்படிதான் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். நீங்கள் சொன்னபடி மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக் கியப்படி கணிக்கச் சொல்லி எழுதி வாங்கியுள்ளோம். முதல் திருமணம் முறிந்துவிட்டதால் மறுமணம் மனநிறைவாக இருக்க வேண்டும். நீங்கள் சரிசொன்னால் தான் எதனையும் முடிவு செய் வோம். எப்போது முயற் சிக்கலாம்?

திருக்கணிதப்படியும் வாக்கியப் படியும் மக நட்சத்திரம், சிம்ம ராசிதான். கிரக நிலைகள் மாற்றம் இருந்தாலும், பொருத்தம் பார்ப்பது மக நட்சத்திரம், சிம்ம ராசி என்று தான் பார்க்கவேண்டும். அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி- ஒரே ரஜ்ஜு சேராது. சிம்ம ராசிக்கு 6-ஆவது ராசி மகர ராசி. 8-ஆவது ராசி மீன ராசி- சேராது. (சஷ்டாஷ்டக ராசி). மகம்- எலி. இதற்கு ஆயில்யம், புனர்பூசம்- (பூனை) பகை. ரோகிணி, மிருகசீரிடம் (பாம்பு)- பகை சேராது. அத்துடன் 7-ஆவது நட்சத்திரம் விசாகம் வதைதாரை; சேராது. பூரட்டாதி யும் சேராது. ஹோமம் செய்தபடியால் தனஸ்ரீக்கு நல்ல கணவரும், தீர்க்க சுமங் கலி பாக்கியமும், தாய்மை யோகமும் (மகப்பேறும்) மனம் நிறைந்த மணவாழ்க்கை யும் அமையும். லக்னமும் ராசியும் நட்சத்திரமும் மாறவில்லை.

● வி. ஆறுமுகம், நாமக்கல்.

27-5-2019-ல் என் விருப்பமின்றி என் மகள் நிவேதா என் அக்காள் பையன் பிரகாஷை காதல் திருமணம் செய்து கொண்டாள். திருமணம் நடந்த நாள் சதய நட்சத்திரம், தேய்பிறை அஷ்டமி திதி, அக்னி நட்சத்திரம். இவர்கள் ஜாத கப்படி தோஷம் உண்டா? பரிகாரம் தேவையா?

திருமணத் தேதியின் கூட்டு எண் 8 என்பது ஆகாது. இதனால் வாரிசு கிடைக்காது. அல்லது சேர்ந்துவாழ முடியாமல் பிரிவு ஏற்படும். அக்னி நட்சத்திரம் குற்றமில்லை. அஷ்டமி திதி என்பது தோஷமானது. அதனால் அன்று கட்டிய மாங்கல்யத்தை கோவில் உண்டியலில் செலுத்திவிட்டு மறுமாங் கல்யம் (புதிது) 1, 3, 6 வரும் தேதிகளில், சந்திராஷ்டமம் இல்லாத முகூர்த்த நாளில் அணிவிக்கவேண்டும். அத்துடன் பிரகாஷ் சிம்ம ராசி, நிவேதா மீன ராசி. சஷ்டாஷ்டக ராசி என்பதால், ஹோமம் செய்து அவர்களுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். ஏற்கெனவே உங்களுக்குப் பதில் சொல்லிய தாக ஞாபகம்.

● பி. பர்வதலட்சுமி, சென்னை-37.

என் மகன் சுந்தருக்கு எப்போது திருமணம் நடைபெறும்? திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்?

சுந்தர் சதய நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னம். லக்னத்தில் சூரியன், சுக்கிரன், ராகு. 7-ல் கேது, குரு. நாகதோஷம் உண்டு. 2020 ஜனவரியில் 29 வயது முடிந்து 30 ஆரம்பம். அப்போது திருமணம் கூடும். அந்நிய சம்பந்தம். நல்ல மனைவி, நல்ல மணவாழ்க்கை உண்டாகும். நாகதோஷ நிவர்த்திக்கு ஒருமுறை காளஹஸ்தி சென்று நாகதோஷப் பரிகாரம் செய்யவும்.

● எஸ். லெட்சுமி நாராயணன், திருச்சி.

என் தம்பி கார்த்திகேயனுக்கு 42 வயது. இன்னும் திருமணமாகவில்லை. பத்து வருடம் முயற்சிசெய்தும் பயனில்லை. எல்லா தோஷங் களுக்கும் பரிகாரம் செய்து விட்டோம்.

களஸ்திர காரகன் சுக்கிரன் 8-ல் மறைவு. ராசியில் செவ்வாய், சனி சேர்க்கை. ராகு- கேது தோஷம். அதனால் திருமணம் தாமதம். கோவில் குளம், பரிகார பூஜைசெய்து பயனில்லை. காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் பிரதானமாகச் செய்து தம்பிக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டிதுர்க்கா ஹோமம் உள்பட 19 ஹோமங்கள் செய்யவேண்டும். காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யுங்கள். தீபாவளிக்குப் பிறகு பெண் அமையும். நல்ல மனைவியும் திருப்தியான மணவாழ்க்கை யும், ஓராண்டில் வாரிசு யோகமும் அமையும்.

bala090819
இதையும் படியுங்கள்
Subscribe