ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-55

● உஷா ராமமூர்த்தி, கந்தன்சாவடி.

2016-ல் என் மகன் விஜய் ஆனந்த திருமணம் பற்றிக்கேட்டபோது "சனி தோஷம், நாக தோஷம், சுக்கிரன்- ராகு சேர்க்கை தோஷம் இருப்பதால், எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை. அடுத்துவரும் சூரிய தசையில் திருமண யோகம் வரும்வரை பொறுமையாக இருக்கவும் என்று பதில் கூறினீர்கள். பரிகாரம் எதுவும் எழுதவில்லை. ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு பரிகாரம் கூறுகிறார்கள். சிலர் சிவன் அல்லது பெருமாளுக்கு தத்துக்கொடுத்தால் தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.

இது சரியா? நீங்கள் சொன்னபடி பொறு மையாக இருந்தேன். 2019-ல்தான் கேட்கிறேன். விஜய் ஆனந்த் சிம்ம லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. 1982 ஜூலையில் பிறந்த வர். 2019 ஜூலையில் 37 வயது முடிகிறது. 2019 மார்ச்முதல் சூரிய தசை ஆரம்பம். சுக்கிரன்- ராகு சேர்க்கையும், செவ்வாய்- சனி சேர்க்கையும் தான் திருமணத் தடைக்குக் காரணம். சுக்கிர தசை முடிந்து விட்டதால் கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் என்ற தோஷம் விலகும். என்றாலும் நல்ல மனைவி, நல்ல மணவாழ்க்கை, வாரிசு யோகம் அமைய காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்பு கொண்டு காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் செய்து விஜய் ஆனந்துக்கு கலச அபிஷேகம் செய்யலாம். தொடர்புக்கு செல்: 99942 74067.

fff

● வி.எஸ். செந்தில்குமார், கோவை.

என் திருமணம் தடைப்படுகிறது என்று உங்களிடம் கேட்டபோது கந்தர்வராஜ ஹோமம் செய்யும்படி பதில் கூறினீர்கள். ஐந்து வருடத்துக்கு முன்பு ஹோமம் செய்தேன். இன்னும் திருமணமாகவில்லை. எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?

7-ல் செவ்வாய், 8-ல் சனி இருப்பது கடுமை யான தோஷம். அதனால்தான் தள்ளிப் போகிறது. எதற்கும் நம்பிக்கையுடன் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் மீண்டும் ஒருமுறை காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்யுங்கள். மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்துக்குள் திருமணம் நடக்கலாம். தொடர்புக்கு: செல்: 99942 74067.

● ராணி, திருச்சி.

நான் எம்.ஏ., எம்பிஃல்., படித்து, தனியார் கல்லூரியில் பணிபுரிகிறேன். எனக்கு அரசுப்பணி எப்போது கிடைக்கும்?

● உஷா ராமமூர்த்தி, கந்தன்சாவடி.

2016-ல் என் மகன் விஜய் ஆனந்த திருமணம் பற்றிக்கேட்டபோது "சனி தோஷம், நாக தோஷம், சுக்கிரன்- ராகு சேர்க்கை தோஷம் இருப்பதால், எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை. அடுத்துவரும் சூரிய தசையில் திருமண யோகம் வரும்வரை பொறுமையாக இருக்கவும் என்று பதில் கூறினீர்கள். பரிகாரம் எதுவும் எழுதவில்லை. ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு பரிகாரம் கூறுகிறார்கள். சிலர் சிவன் அல்லது பெருமாளுக்கு தத்துக்கொடுத்தால் தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.

இது சரியா? நீங்கள் சொன்னபடி பொறு மையாக இருந்தேன். 2019-ல்தான் கேட்கிறேன். விஜய் ஆனந்த் சிம்ம லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. 1982 ஜூலையில் பிறந்த வர். 2019 ஜூலையில் 37 வயது முடிகிறது. 2019 மார்ச்முதல் சூரிய தசை ஆரம்பம். சுக்கிரன்- ராகு சேர்க்கையும், செவ்வாய்- சனி சேர்க்கையும் தான் திருமணத் தடைக்குக் காரணம். சுக்கிர தசை முடிந்து விட்டதால் கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் என்ற தோஷம் விலகும். என்றாலும் நல்ல மனைவி, நல்ல மணவாழ்க்கை, வாரிசு யோகம் அமைய காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்பு கொண்டு காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் செய்து விஜய் ஆனந்துக்கு கலச அபிஷேகம் செய்யலாம். தொடர்புக்கு செல்: 99942 74067.

fff

● வி.எஸ். செந்தில்குமார், கோவை.

என் திருமணம் தடைப்படுகிறது என்று உங்களிடம் கேட்டபோது கந்தர்வராஜ ஹோமம் செய்யும்படி பதில் கூறினீர்கள். ஐந்து வருடத்துக்கு முன்பு ஹோமம் செய்தேன். இன்னும் திருமணமாகவில்லை. எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?

7-ல் செவ்வாய், 8-ல் சனி இருப்பது கடுமை யான தோஷம். அதனால்தான் தள்ளிப் போகிறது. எதற்கும் நம்பிக்கையுடன் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் மீண்டும் ஒருமுறை காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்யுங்கள். மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்துக்குள் திருமணம் நடக்கலாம். தொடர்புக்கு: செல்: 99942 74067.

● ராணி, திருச்சி.

நான் எம்.ஏ., எம்பிஃல்., படித்து, தனியார் கல்லூரியில் பணிபுரிகிறேன். எனக்கு அரசுப்பணி எப்போது கிடைக்கும்? பள்ளியா? கல்லூரியா? குடும்ப வாழ்க்கை சரியில்லை. எப்போது சரியாகும்? எனக்கு ஏழரைச்சனி என்கிறார்கள். உடம்பை பாதிக்குமா?

தனுசு லக்னம். 12-ல் சனி (குடும்பாதிபதி) மறைந்து 2-ஆம் இடம் குடும்ப ஸ்தானத் தைப் பார்க்கிறார். சனி ராசிநாதன் (கும்ப ராசி) என்றாலும், களஸ்திர காரகன் சுக்கிரன் 10-ல் கன்னியில் நீசம்; கேது சம்பந்தம்- ராகு பார்வை. இதுவே குடும்ப வாழ்க்கைக்கு பிரச்சினை. நடப்பு வயது 33. 13 வயதுமுதல் சனி தசை 19 வருடம் முடிந்து, புதன் தசை, புதன் புக்தி. 8-ல் இருந்து மறைந்து தசாபுக்தியை நடத்துவதால் அரசு வேலை தாமதமாகும். 2021-ல் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல வேலை மாற்றம் எதிர்பார்க்க லாம். ஆசிரியை பணியோடு ஜோதிடமும் படிக்கலாம். ராசிக்கு 2-ல் ராகு- கேது சம்பந் தம் என்பதால், ஜோதிட ஆராய்ச்சி மனதுக்கு ஆறுதலளிக்கும். புதன்கிழமைதோறும் குணசீலம் சென்று பெருமாளை வழிபடலாம்.

● ஆர். பெரியசாமி, நாமக்கல்.

மூன்று வருடம் முன்பே கந்தர்வராஜ ஹோமம் செய்தேன். என் சகோதரர்களும் உறவினர்களும் என் திருமணம் பற்றி அக்கறை எடுக்காமல் இருக்கிறார்கள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?

மேஷ லக்னம். 7-க்குடைய சுக்கிரன் பாதக ஸ்தானத்தில் 6-க்குடைய புதனோடு சேர்க்கை; செவ்வாய்- சனி பார்வை. குருவும் மறைவு. அத்துடன் ராகு தசை 2035 வரை. (36 வயது முதல் 54 வயது வரை). வெறும் கந்தர்வராஜ ஹோமம் செய்தால் மட்டும் போதாது; பலன் தராது. காமோகர்ஷண ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், சூலினிதுர்க்கா ஹோமம் மற்றும் 19 வகையான ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும்.

● ராஜ்குமார், திருக்காட்டுப்பள்ளி.

சிறு வயதிலேயே தாயை இழந்து, நானும் என் தம்பியும் கவலைப்பட்டோம். நான் தகவல் தொழில்நுட்பம் பற்றி படித்துள்ளேன். தம்பி சுதாகர் எம்.பி.ஏ., படித்துள்ளான். எங்கள் திருமணம், வேலை, எதிர்காலம் பற்றி வழிகாட்டவும். என் மாமாவின் ஆலோசனைப்படி தங்களை அணுகியுள்ளேன்.

ராஜ்குமார் பூராட நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னம். அங்கு சனி நிற்க, 6-ல் செவ் வாய் நின்று சனியைப் பார்க்கிறார். 2-ல் ராகு, 8-ல் குரு, சுக்கிரன், கேது மறைவு. 9-ல் சூரியன், புதன். தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால், எதிர்காலம் நன்றாக அமையும் என்றாலும், திருமணத்துக்குப் பிறகுதான் எல்லா யோகமும். ஆனால் சந்திரனும் சனியும் சேர்ந்து 7-ஆம் இடத்தைப் பார்ப்பது தோஷம். 35 வயது வரைகூட திருமணம் தாமதமாகலாம். குரு பார்வை இல்லாததால் குடும்ப சாபதோஷம் உண்டு. தம்பி சுதாகருக்கு பூர நட்சத்திரம், சிம்ம ராசி. பிறக்கும்போதே குட்டிச்சுக்கிரன். அதனால் தாயன்புக்கு இடமில்லாமல் போனது. உங்கள் இருவருக்கும் செவ்வாய் தசை சம தசை. அடுத்து ராகு தசை சம தசை வரும். அதனால் காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் உள்பட 19 வகையான ஹோமம் செய்து, இருவரும் கலச அபிஷேகம் செய்துகொண்டால் திருமணம், வேலை, நிம்மதியான வாழ்க்கை எல்லாம் அற்புதமாக அமையும். அத்துடன் திருக் காட்டுப்பள்ளி போய் (16 வாரம்) குரு பகவானை வியாழன்தோறும் வழிபடவும்.

● ஆர். காயத்திரி, திருவையாறு.

என் பெண் குழந்தைகள் இருவருக்கும் எதிர்காலம், படிப்பு, வேலை, திருமண வாழ்க்கை பற்றிக் கூறவும். இருவரில் யாராவது டாக்டர் படிக்க முடியுமா?

பிரேமா விருச்சிக லக்னம். 10-ல் செவ்வாய். 2-ல் ராகு. 22 வயதுவரை ராகு தசை. நடப்பு. ஒன்பது வயது. இந்தப் பெண்ணை மருத்துவத்துறையில் படிக்க வைக்கலாம். அதேசமயம் பிரேமாவுக்கு சட்டென்று கோபம் வரும். (நட்ர்ழ்ற் பங்ம்ல்ங்ழ்). சாந்தியும் விருச்சிக லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். 20 வயதுவரை குட்டிச் சுக்கிரன். நான்கு வயது. இவளும் நன்றாகப் படிக்கலாம். நிர்வாகப்படிப்பு, பி.பி.ஏ., அல்லது எம்.பி.ஏ., படிக்கலாம். இவள் ஜாதகப்படி 2014 முதல் தகப்பனாருக்கு சுகக்குறைவு, விரயச் செலவு, தொழில் மந்தம் போன்ற பலன் நடக்கும். ஆனாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆடி அமாவாசை யன்று திருமழபாடி ஆட்கொண்டார் சந்நிதியில் குங்குலியம் போட்டு வழிபடவும். தியாகய்யர் சமாதியிலும் பிரார்த்தனை செய்யலாம்.

● ராஜேஸ்வரி, விழுப்புரம்.

என் கணவர் இறந்து ஆறு மாதமாகிறது. என் இளைய மகன் +2 வகுப்பிற்குச் செல்லாமலும், என் பேச்சைக் கேட்காமலும் கண்டவர்களுடன் ஊர்சுற்றி பொறுப்பில்லாமல் நடக்கிறான். படிப்பு தடைப்படுமா? ஜீவன ஸ்தானத்தில் சனி, ராகு. என்ன தொழில் செய்யலாம்?

சூரிய நாராயணன் சிம்ம லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். 15 வயதுமுதல் ராகு தசை- 33 வயது வரை. 4-ஆம் இடம் கல்வி ஸ்தானத்தில் சூரியன், கேது, புதன். அதற்கு 10-ல் உள்ள சனி, ராகு பார்வை. பட்டப்படிப்புக்கு இடமில்லை. பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற தொழிற்கல்வி படிக்கலாம். காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) சூலினி துர்க்கா ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலு சரசுவதி ஹோமம், வாக்வாதினி ஹோமம், வித்யா கணபதி ஹோமம் முதலிய 19 வகையான ஹோமம் செய்து, பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். பிள்ளைகளின் தந்தை சிறந்து ஒரு வருடம் கழித்து (தலைத்திவசம் கொடுத்தபிறகு) இதைச் செய்ய வேண்டும்.

● ......... வேலங்குடி.

ராஜாராமன் ஜாதகப்படி எதிர்காலம் எப்படியிருக்கும்? ரகுராமன் வாகன விபத்தில் ஒரு கண் பார்வையை இழந்துவிட்டான். எதனால் பார்வையிழப்பு ஏற்பட்டது?

ரகுராமன் புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னம். எட்டு வயதுமுதல் சனி தசை. பாதகாதிபதி தசை- 27 வயதுவரை. (நடப்பு 25 வயது). 9-க்குடைய குரு ராகு- கேது சேர்க்கை. சுக்கிரன் நீசம். ராஜாராமனும் கடக ராசி, பூச நட்சத்திரம். 32 வயதுவரை கேது தசை. (தற்போது 29 வயது முடிந்து 30 ஆரம்பம்). 9-ல் சனி. குடும்பத்தில் சாபதோஷம் கடுமையாக உள்ளது. பள்ளத்தூர் வேலங்குடியில் வயல்நாச்சியம்மனுக்கு அபிஷேகம் செய்து, சேலை உடுத்தி, பூஜை செய்வதுடன், கருப்பர் மேடையில் பொங்கல் வைத்துப் பூஜை செய்யவும். தோஷம் விலகும்.

● ஏ. தாமரை, வேளச்சேரி.

என் மகள் தனஸ்ரீக்கு தாங்களும் துணைவியாரும் காரைக்குடி வந்து 18 வகையான ஹோமம் நடத்திக்கொடுத்தீர்கள். ஈரோடு திருமண மையத்தில் பதிவு செய்துள்ளோம். இந்தப் பக்கம் பெரும்பாலும் திருக்கணிதப் பஞ்சாங்கப்படிதான் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். நீங்கள் சொன்னபடி மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப்படி கணிக்கச் சொல்லி எழுதி வாங்கியுள்ளோம். முதல் திருமணம் முறிந்துவிட்டதால் மறுமணம் மனநிறைவாக இருக்கவேண்டும். நீங்கள் சரிசொன்னால்தான் எதனையும் முடிவு செய்வோம். எப்போது முயற்சிக்கலாம்?

திருக்கணிதப்படியும் வாக்கியப்படியும் மக நட்சத்திரம், சிம்ம ராசிதான். கிரக நிலைகள் மாற்றம் இருந்தாலும், பொருத்தம் பார்ப்பது மக நட்சத்திரம், சிம்ம ராசி என்றுதான் பார்க்கவேண்டும். அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி- ஒரே ரஜ்ஜு சேராது. சிம்ம ராசிக்கு 6-ஆவது ராசி மகர ராசி. 8-ஆவது ராசி மீன ராசி- சேராது. (சஷ்டாஷ்டக ராசி). மகம்- எலி. இதற்கு ஆயில்யம், புனர்பூசம்- (பூனை) பகை. ரோகிணி, மிருகசீரிடம் (பாம்பு)- பகை சேராது. அத்துடன் 7-ஆவது நட்சத்திரம் விசாகம் வதைதாரை; சேராது. பூரட்டாதியும் சேராது. ஹோமம் செய்தபடியால் தனஸ்ரீக்கு நல்ல கணவரும், தீர்க்க சுமங்கலி பாக்கியமும், தாய்மை யோகமும் (மகப்பேறும்) மனம் நிறைந்த மணவாழ்க்கையும் அமையும். லக்னமும் ராசியும் நட்சத்திரமும் மாறவில்லை.

● வி. ஆறுமுகம், நாமக்கல்.

27-5-2019-ல் என் விருப்பமின்றி என் மகள் நிவேதா என் அக்காள் பையன் பிரகாஷை காதல் திருமணம் செய்துகொண்டாள். திருமணம் நடந்த நாள் சதய நட்சத்திரம், தேய்பிறை அஷ்டமி திதி, அக்னி நட்சத்திரம். இவர்கள் ஜாதகப்படி தோஷம் உண்டா? பரிகாரம் தேவையா?

திருமணத் தேதியின் கூட்டு எண் 8 என்பது ஆகாது. இதனால் வாரிசு கிடைக்காது. அல்லது சேர்ந்துவாழ முடியாமல் பிரிவு ஏற்படும். அக்னி நட்சத்திரம் குற்றமில்லை. அஷ்டமி திதி என்பது தோஷமானது. அதனால் அன்று கட்டிய மாங்கல்யத்தை கோவில் உண்டியலில் செலுத்திவிட்டு மறுமாங்கல்யம் (புதிது) 1, 3, 6 வரும் தேதிகளில், சந்திராஷ்டமம் இல்லாத முகூர்த்த நாளில் அணிவிக்கவேண்டும். அத்துடன் பிரகாஷ் சிம்ம ராசி, நிவேதா மீன ராசி. சஷ்டாஷ்டக ராசி என்பதால், ஹோமம் செய்து அவர்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ஏற்கெனவே உங்களுக்குப் பதில் சொல்லியதாக ஞாபகம்.

bala020819
இதையும் படியுங்கள்
Subscribe