● ஜி. குமார், திருவையாறு.
2006-ல் குரு தசையில் மூன்று தொழில்- ஹோட்டல், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் நன்றாக நடந்தது. ராகு புக்தி வந்ததும் 40 லட்ச ரூபாய் நஷ்டம்! இப்போது எந்தத் தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை. மனைவிதான் சோறு போடுகிறார். எதிர்காலம் எப்படி யிருக்கும்?
கடக லக்னம், அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி. 56 வயதுவரை (2023) சனி தசை- 4-ஆவது தசை என்ப தால் சரியில்லை. அடுத்துவரும் புதன் தசை யோக தசை! 2020 ஏப்ரலில் சனிப்பெயர்ச்சி வரும்போது ஏழரைச்சனி நடைபெறும். இது பொங்குசனியாக பலன் தரும்.
● டி. புருஷோத்தமன், சங்ககிரி.
எனது மூத்த மகள் மேனகாவுக்கு அரசு வேலை அமை யுமா? திருமணம் எப்போது நடைபெறும்? தாய்க்கு அடிக்கடி பீடை ஏற்படு கிறது. இரண்டாவது மகள் சக்திப்பிரியாவுக்கு அரசு வேலை கிடைக்குமா? எம்.பி.ஏ. படித்துள்ளாள்.
மேனகா மக நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னம். சந்திர தசை 2028 வரை. சக்திப் பிரியா மகர ராசி, உத்திராட நட்சத்திரம், துலா லக்னம். 2024 வரை ராகு தசை. இருவர் ஜாதகத்திலும் அரசு வேலைக் கும் திருமணத்திலும் தடை ஏற்படும். காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்பு கொண்டு (செல்: 99942 74067) 19 விதமான ஹோமம் செய்ய வேண்டும். அதன்பிறகு வேலை வாய்ப்பு, திருமண யோகம் எல்லாம் இனிதாக நிறைவேறும்.
● ஏ.பி. சுந்தரம், சங்ககிரி.
எனக்கு ஒரு மகள், ஒரு மகன். மகளுக்குத் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை யும், ஒரு ஆண் குழந்தை யும் உண்டு. மகன் வெங்கடேஷ் திருமணம் தான் தடைப்படுகிறது. ஜாத கத்தில் தோஷம் உண்டா? பரிகாரம் தேவையா?
மகன் வெங்கடேஷ் அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னம். 2022 வரை சூரிய தசை. நடப்பு வயது 30. களஸ்திர தோஷம் உண்டு. காரைக்குடி சுந்தரம் குருக்களை சந்தித்து காமோகர்ஷண ஹோமம், சூலினி துர்க்கா ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் மேலும் ஆயுள், ஆரோக்கியம், வாழ்க்கை முன்னேற்றம், தாயின் சுகம் எல்லாவற்றுக்கும் ஹோமம் செய்து வெங்கடேஷிற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்புக்கு, செல்: 99942 74067.
● எஸ். செல்வராஜ், கும்பகோணம்.
தங்களின் ஆலோசனைப்படி 12 பௌர்ணமி தொடர்ந்து சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டுவிட்டேன். என் மகள் தர்மஸம்வர்த்தனி பி.காம். முடித்துள்ளாள். அடுத்து வேலை, திருமணம் எப்போது அமையும்? மகன் சங்கரநாராயணன் பி.காம்., முதல் வருடத்தில் அதிக அரியர்ஸ் வைத்துள்ளான். படிப்பு, எதிர்காலம் எப்படியிருக்கும்?
மகளுக்கு 20 வயது முடிந்து 21 ஆரம்பம். 27-க்குமேல் திருமண யோகம். மேலும் படிக்க விரும்பினால் படிக்கலாம். (இரண்டு வருடம்) சங்கரநாராயணன் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னம். 12 வயதுமுதல் புதன் தசை- அட்டமாதிபதி தசை. மூன்று வருடப்படிப்பை நான்கு வருடத்தில் முடித்து பட்டம் வாங்கிவிடுவார்.
● மகேஷ், கோவை.
எனக்கு கேது தசையில் சனி புக்தி நடப்பதால் சனி சாந்தி ஹோமம் செய்யும்படியும், கோவை சுகேஷிடம் செய்யுமாறும் கூறினீர்கள். ஆனால் பல காரணங்களால் அவரால் செய்யமுடியவில்லை. அதற்கு பதிலாக திருநள்ளாறு சென்று வணங்கிவந்தேன். இதுபோதுமா? 24-1-2020-ல் கேது தசை, சனி புக்தி முடிகிறது. அது பாதிக்குமா? பேரன் பிரணவ்- சந்திர தசையில் புதன் புக்தி- எப்படியிருக்கும்?
திருநள்ளாறில் சனீஸ்வரனுக்குத்தான் பூஜை செய்திருக்க முடியும். அல்லது அபிஷேகம் செய்திருக்கலாம். உங்களுக்கு அபிஷேகம் நடந்திருக்காது. சுகேஷ் ஹோமம் வளர்த்து உங்களுக்கு (குடும்பத்தாருக்கு) கலச அபிஷேகம் செய்திருப்பார். சுவாமிக்கு செய்வது வேறு; உங்களுக்கு செய்வது வேறு! பழனி முருகனுக்கு பிரார்த்தனையோ வேண்டுதலோ செய்துகொண்டு போகமுடியவில்லையென்று உள்ளூரில் முருகனுக்குப் பூஜை செய்தால் முழுப்பலன் (100%) உண்டா? பூரியும் சப்பாத்தியும் கோதுமை மாவுதான். இட்லியும் தோசையும் அரிசி மாவுதான். இரண்டுக்கும் வேறுபாடு இல்லையா? கோவையில் சுகேஷ் செய்யாவிட்டால் வேறு யாரிடமாவது செய்யலாம். அல்லது காரைக்குடி சென்று சுந்தரம் குருக்களிடம் செய்யலாம். செலவுக்கு பயந்துகொண்டு முறையான பரிகாரம் செய்யாவிட்டால் முழுப்பலன் கிடைக்குமா? பிரணவ் உத்திர நட்சத்திரம், கன்னி ராசி. ஒன்பது வயது நடக்கிறது. 13 வயதுவரை சந்திர தசை. சந்திரனும் சனியும் சேர்ந்திருப்பது தோஷம்! சிவனுக்கு ருத்ராபிஷேகப் பூஜை செய்தால் படிப்பு, ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம் உண்டாகும்.
● வி. ஆறுமுகம், நாமக்கல்.
என்அக்காள் பையன் பிரகாஷை என் மகள் நிவேதா, என் விருப்பமின்றி 27-5-2019-ல் காதல் திருமணம் செய்து கொண்டாள். அக்னி நட்சத் திரம் நடப்பிலுள்ள காலம்! என் மகள் பிரமை பிடித் ததுபோல் இருக்கிறாள். ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா?
நிவேதா அத்தை மகனைத் தானே விரும்பி மணம் புரிந்தாள்; வேறு இனத்துப் பையனை மணக்கவில் லையே? மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். திருமணத் தேதி கூட்டு எண் 8 என்பது சரியல்ல. அதனால், அன்று கட்டிய மாங்கல் யத்தை விருப்பமான கோவிலில் செலுத்தி விட்டு 1, 3, 6 வரும் தேதியில் மறுமாங்கல்யம் அணிவிக்க வேண்டும். பிரகாஷ் மக நட்சத் திரம், சிம்ம ராசி. நிவேதா உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. இருவருக்கும் ராசிப் பொருத்தமே இல்லை. ஏதோ உணர்ச்சிவசப் பட்டு அவசரத்தில் திருமணம் செய்து கொண்டதால் தாம்பத்திய ஒற்றுமை இருக்காது. அதனால் இருவருக்கும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்து தெய்வ சந்நிதியிலேயே மறுமாங்கல்யம் அணிவிக்கவேண்டும். நேரில்வந்து பேசினால்தான் தீர்வு கிடைக்கும்.
● ஆர். பாலமுருகன் பூசாரி, ஏழாயிரம் பண்ணை.
ஐந்து வருடத்துக்கு மேலாக "பால ஜோதிடம்' படிக்கிறேன். எனக்கு 8-க்குடைய குரு தசை நடக்கிறது. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
ரிஷப லக்னம், சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி. லக்னத்துக்கு 2-ல் சூரியன், சுக்கிரன், கேது சேர்க்கை. 8-க்குடைய குரு சிம்மத்தில். 27 வயது முடிந்து 28 ஆரம்பம். 38 வயதுவரை குரு தசை. ரிஷப லக்னத்துக்கு குரு 8, 11-க்குடையவர். 11-ஆம் இடத்துக்கு ஆறிலும், 8-ஆம் இடத்துக்கு ஒன்பதிலும் நின்று 8-ஆம் இடத்தையே பார்ப்பதால், குரு தசை முழுவதும் அட்டமாதிபத் தியப் பலனையே செய்யும். வியாழக் கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றவும். திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலத்தில் அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி உண்டு. வாசுதேவநல்லூர் அருகில் தாருகா புரத்தில் நவகிரக தட்சிணாமூர்த்தி சந்நிதி உண்டு. இவ்விரு சந்நிதிகளுக்குச் சென்று வியாழக்கிழமை பூஜை செய்யவும். உங்கள் கஷ்டங்களுக்கு விமோசனம் உண்டாகும்.