Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-53

● ரா. கதிர்வேலு, செட்டிப்பாளையம்.

எனது மகன் கனிவரசுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எந்த வயதில் நடக்கும்?

Advertisment

விருச்சிக லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். குரு தசை நடக்கிறது; 9-ல் உச்சம். அரசு வேலை கிடைக்கும்! 2019 ஆவணிக்குமேல் வாய்ப்புண்டு. திருமணம் 30 வயது முடிந்தபிறகு நடைபெறும்.

● சரவணன் கவிதா, கூடுவாஞ்சேரி.

எனது பெண் தேவி அரசு வேலைக்குச் செல்ல விரும்புகிறாள். அரசு வேலை கிடைக் குமா? திருமணம் எப்போது நடைபெறும்?

மகள் தேவி விசாக நட்சத்திரம், துலா ராசி, மகர லக்னம். ஏழரைச்சனி முடிந்து விட்டதால் இனி தடையேதுமில்லை. அரசு வேலைக்கு இடமுண்டு. முயற்சி செய்யவும்.

● க. பொன்னையா ராஜேந்திரன், திருச்சி-5.

Advertisment

கடந்த மூன்று மாதங்களாக வயிற்றுக் கோளாறு (மண்ணீரல்), கை- கால் வீக்கம் உள்ளது. மிகவும் சிரமப்படுகிறேன். தற்சமயம் குரு தசை, ராகு புக்தி நடக் கிறது. எனக்கு ஏனிந்த துன்பம்? நோய் எப்போது தீரும்? மாரகம் எப்போது ஏற்படும்?

நடப்பு வயது 68. பூர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னம். மீன குரு 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் இந்த துன்பம்- அதிலும் ராகு புக்தி வேறு. நல்ல டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வதோடு, ஸ்ரீரங்கம் கோவிலிலுள்ள தன்வந்திரி பகவானை தினசரி அல்லது வாரம் ஒருமுறை தரிசனம் செய்யவும். தீபமேற்றவும். சனி தசையே மாரகம்- அத்துடன் லக்னத்தில் ராகு நிற்பதால்.

● மிதுனம் நடராஜன், தெற்கு செய்யா னேந்தல்.

என் மகன் ஜாதகத்தில் லக்னத்துக்கு 8-ல் சனி மறைவு. சூரியனும் சனியும் பரிவர்த் தனை. ஆயுள் பங்கம் உண்டா? வேறு தோஷம் உண்டா? பரிகாரம் கூறவும்.

2019 ஜனவரியில் பத்து வயது முடிந்து 11 வயது ஆரம்பம். சித்திரை நட்சத்திரம், செவ்வாய் தசை இரண்டு வருடம் 11 மாதம். பிறகு ராகு தசை. (21 வயதுவரை). பாலாரிஷ்ட பீடை உண்டு. சூலினிதுர்க்கா

● ரா. கதிர்வேலு, செட்டிப்பாளையம்.

எனது மகன் கனிவரசுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எந்த வயதில் நடக்கும்?

Advertisment

விருச்சிக லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். குரு தசை நடக்கிறது; 9-ல் உச்சம். அரசு வேலை கிடைக்கும்! 2019 ஆவணிக்குமேல் வாய்ப்புண்டு. திருமணம் 30 வயது முடிந்தபிறகு நடைபெறும்.

● சரவணன் கவிதா, கூடுவாஞ்சேரி.

எனது பெண் தேவி அரசு வேலைக்குச் செல்ல விரும்புகிறாள். அரசு வேலை கிடைக் குமா? திருமணம் எப்போது நடைபெறும்?

மகள் தேவி விசாக நட்சத்திரம், துலா ராசி, மகர லக்னம். ஏழரைச்சனி முடிந்து விட்டதால் இனி தடையேதுமில்லை. அரசு வேலைக்கு இடமுண்டு. முயற்சி செய்யவும்.

● க. பொன்னையா ராஜேந்திரன், திருச்சி-5.

Advertisment

கடந்த மூன்று மாதங்களாக வயிற்றுக் கோளாறு (மண்ணீரல்), கை- கால் வீக்கம் உள்ளது. மிகவும் சிரமப்படுகிறேன். தற்சமயம் குரு தசை, ராகு புக்தி நடக் கிறது. எனக்கு ஏனிந்த துன்பம்? நோய் எப்போது தீரும்? மாரகம் எப்போது ஏற்படும்?

நடப்பு வயது 68. பூர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னம். மீன குரு 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் இந்த துன்பம்- அதிலும் ராகு புக்தி வேறு. நல்ல டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வதோடு, ஸ்ரீரங்கம் கோவிலிலுள்ள தன்வந்திரி பகவானை தினசரி அல்லது வாரம் ஒருமுறை தரிசனம் செய்யவும். தீபமேற்றவும். சனி தசையே மாரகம்- அத்துடன் லக்னத்தில் ராகு நிற்பதால்.

● மிதுனம் நடராஜன், தெற்கு செய்யா னேந்தல்.

என் மகன் ஜாதகத்தில் லக்னத்துக்கு 8-ல் சனி மறைவு. சூரியனும் சனியும் பரிவர்த் தனை. ஆயுள் பங்கம் உண்டா? வேறு தோஷம் உண்டா? பரிகாரம் கூறவும்.

2019 ஜனவரியில் பத்து வயது முடிந்து 11 வயது ஆரம்பம். சித்திரை நட்சத்திரம், செவ்வாய் தசை இரண்டு வருடம் 11 மாதம். பிறகு ராகு தசை. (21 வயதுவரை). பாலாரிஷ்ட பீடை உண்டு. சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணா மூர்த்தி ஹோமம், நீலு சரசுவதி, ஆயுஷ் ஹோமம் உள்பட 19 ஹோமம் செய்து ஜாதகர், பெற்றோர் கலச அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். சுந்தரம் குருக்கள் (காரைக்குடி), செல்: 99942 74067-ல் தொடர்பு கொண்டு விசாரிக்கவும்.

dd

● ஏ. பாலசேகர், கூடுவாஞ்சேரி.

"அதிர்ஷ்டம்' பத்திரிகையில் தாங்கள் ராசிபலன் எழுதிய காலம்முதல் நான் உங்கள் அபிமானி. தங்களை "ஜோதிட சகாதேவன்' என்று பாராட்டலாம். எனது மகனுக்கு 6-6-2016-ல் திருமணம் நடந்தது. 4-ஆவது மாதத்திலேயே பிரச் சினை உருவாகிவிட்டது. எனது மருமகள் எனது மகனிடம், ""உன் அப்பா என்னை பாலியல் தொல்லை செய்கிறார்'' என்று பொய் சொன்னதிலிருந்து வீட்டில் கலகம், குழப்பம். மருமகள் கோபித்துக்கொண்டு பிறந்தவீட்டுக்குப் போய்விட்டாள். 10- ஆவது மாதம் பையன் பிறந்துவிட்டான். கமிஷனர் ஆபீசில் பொய் புகார் கொடுத்து, என் மகனை அழைத்து விசாரித்து, "இருவரும் ஒழுங்காக குடும்பம் நடத்த வேண்டும்' என்று அறிவுறுத்தி அனுப்பி விட்டார்கள். சிலமாதம் கழித்து எனது மகன் கைபேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. மருமகளின் ஆண் நண்பன் என்று தெரிந்தது. மருமகள் மகனிடம், ""என்னை மன்னித்துவிடுங்கள். இனி இப்படி நடக்க மாட்டேன்'' என்று காலில் விழுந்தாள். மகனும் மன்னித்து ஏற்றுக் கொண்டான். இதற்கிடையில் 17-8-2018-ல் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பெற்றாள். 22-5-2019-ல் போலீஸ்மூலம் சம்பந்தி (பெண்ணின் தகப்பனார்) மருமகளை அழைத்துச் சென்றதோடு, 30-5-2019-ல் மகளிர் காவல் நிலையத்தில் புகார்செய்து எனது மகன், நான், எனது மனைவி மூவரையும் சிறையில் வைத்து சித்திரவதை செய்து ஜாமினில் வெளிவந்துள்ளோம். இருவர் ஜாதகத்தை யும் அனுப்பியுள்ளேன். இந்த ஏழைக்கு நல்ல தீர்வு கூறுங்கள்.

மகன் கார்த் திகேயன் விருச்சிக லக்னம். 2-ல் சனி. கும்ப ராசியில் ராகு. ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய், கேது, புதன். ராசிக்கு 8-ல் சுக்கிரன் நீசம்.இப்படிப் பட்ட கிரக அமைப்புள்ள ஜாதகருக்கு 30 வயதுக்குமேல் 31-ல் திருமணம் செய்திருந்தால், மண வாழ்க்கை மனம் நிறைந்த வாழ்க்கையாக அமைந் திருக்கும். அதேபோல மருமகள் பரமேஸ் வரிக்கும் ராசிக்கு 2-ல் சனி. ராசியில் சூரியன், செவ்வாய், ராகு சம்பந்தம் என்பதால் 25 அல்லது 27 வயதுக்குமேல் திருமணம் நடந் திருக்க வேண்டும். முன்னதாகவே நடந்தது பிரச்சினை. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு பிரிவினையோ விவாகரத்தோ ஏற்பட்டால் சட்டச்சிக்கல் உண்டாகும். எனவே "மறப்போம் மன்னிப்போம்' என்று பெருந்தன்மையாகவும், பிள்ளைகளுக் காகவும் பரமேஸ்வரியும் கார்த்திகேயனும் இணைந்து வாழ்வதே நல்லது. எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சந்தேகமோ, கருத்து வேறு பாடோ, குழப்பமோ வராமல் பரமேஸ் வரியும் கணவர்- பிள்ளைகள் என்ற பாசத் தோடு வாழ, காரைக்குடியில் சுந்தரம் குருக் களிடம்போய் ஹோமம் செய்து நான்குபேரும் கலசஅபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். "ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழ்ந்த ஸ்ரீராம பிரானே கற்புக்கரசியான சீதையை ஊர் உலகத்துக்காக "அக்னிப் பிரவேசம்' செய்து சீதையை ஏற்றுக்கொண்டார். இந்தக் காலத்தில் அப்படி அக்னிப்பிரவேசம் செய்யமுடியாது. (சட்டப்பிரச்சினை). அதனால் அக்னி காரியம் ஹோமம் செய்யலாம். ஹோமம் செய்யும்முன் என்னைத் தொடர்புகொண்டு கேளுங்கள்; சுந்தரம் குருக்களிடம் என்னென்ன ஹோமம் என்று விவரம் சொல்கிறேன். சுந்தரம் குருக்கள் செல்: 99942 74067. இந்த ஹோமம் செய் தால் குடும்ப ஒற்றுமை, தாம்பத்திய வாழ்க்கை, பிள்ளைகள் படிப்பு, ஆரோக்கியம், எதிர் காலம் எல்லாம் இனிமையாக அமையும்.

● ஏ. பேச்சியம்மாள், தூத்துக்குடி.

என் மகளின் திருமணம் பற்றிக் கேட்டிருந்தேன். 27 வயதுக்குமேல்தான் திருமண யோகமென்று எழுதியிருந்தீர்கள். +2தான் படித்திருக்கிறாள். டி.என்பி.எஸ்.சி., வி.ஏ.ஓ., ரயில்வே போன்ற தேர்வுகளுக்குப் படிக்கிறாள். ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா?

பெயர் வைக்கப்படாத மகளுக்கு உத்திரட் டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னம். பெற்ற தாயாருக்கு மகள் பிறந்த தேதியும் தெரியவில்லை போலும். பெயரும் இல்லை. பிறந்த தேதியும் இல்லை. தசாபுக்தி இருப்பும் இல்லை. எதைவைத்து உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வது? முழுமையான ஜாதக நகல் அனுப்பவும்.

● மகேஷ், கோவை.

எனக்கு கேது தசையில் சனி புக்தி நடப்பதால் சனி சாந்தி ஹோமம் செய்யும்படியும், கோவை சுகேஷிடம் செய்யுமாறும் கூறினீர்கள். ஆனால் பல காரணங்களால் அவரால் செய்யமுடியவில்லை. அதற்கு பதிலாக திருநள்ளாறு சென்று வணங்கிவந்தேன். இதுபோதுமா? 24-1-2020-ல் கேது தசை, சனி புக்தி முடிகிறது. அது பாதிக்குமா? பேரன் பிரணவ்- சந்திர தசையில் புதன் புக்தி- எப்படியிருக்கும்?

திருநள்ளாறில் சனீஸ்வரனுக்குத்தான் பூஜை செய்திருக்க முடியும். அல்லது அபிஷேகம் செய்திருக்கலாம். உங்களுக்கு அபிஷேகம் நடந்திருக்காது. சுகேஷ் ஹோமம் வளர்த்து உங்களுக்கு (குடும்பத்தாருக்கு) கலச அபிஷேகம் செய்திருப்பார். சுவாமிக்கு செய்வது வேறு; உங்களுக்கு செய்வது வேறு! பழனி முருகனுக்கு பிரார்த்தனையோ வேண்டுதலோ செய்துகொண்டு போகமுடியவில்லையென்று உள்ளூரில் முருகனுக்குப் பூஜை செய்தால் முழுப்பலன் (100%) உண்டா? பூரியும் சப்பாத்தியும் கோதுமை மாவுதான். இட்லியும் தோசையும் அரிசி மாவுதான். இரண்டுக்கும் வேறுபாடு இல்லையா? கோவையில் சுகேஷ் செய்யாவிட்டால் வேறு யாரிடமாவது செய்யலாம். அல்லது காரைக்குடி சென்று சுந்தரம் குருக்களிடம் செய்யலாம். செலவுக்கு பயந்துகொண்டு முறையான பரிகாரம் செய்யாவிட்டால் முழுப்பலன் கிடைக்குமா? பிரணவ் உத்திர நட்சத்திரம், கன்னி ராசி. ஒன்பது வயது நடக்கிறது. 13 வயதுவரை சந்திர தசை. சந்திரனும் சனியும் சேர்ந்திருப்பது தோஷம்! சிவனுக்கு ருத்ராபிஷேகப் பூஜை செய்தால் படிப்பு, ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம் உண்டாகும்.

● ஏ. பேச்சியம்மாள், தூத்துக்குடி.

என் மகளின் திருமணம் பற்றிக் கேட்டிருந்தேன். 27 வயதுக்குமேல்தான் திருமண யோகமென்று எழுதியிருந்தீர்கள். +2தான் படித்திருக்கிறாள். டி.என்பி.எஸ்.சி., வி.ஏ.ஓ., ரயில்வே போன்ற தேர்வுகளுக்குப் படிக்கிறாள். ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா?

பெயர் வைக்கப்படாத மகளுக்கு உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னம். பெற்ற தாயாருக்கு மகள் பிறந்த தேதியும் தெரியவில்லை போலும். பெயரும் இல்லை. பிறந்த தேதியும் இல்லை. தசாபுக்தி இருப்பும் இல்லை. எதைவைத்து உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வது?

● வி. ஆறுமுகம், நாமக்கல்.

என்அக்காள் பையன் பிரகாஷை என் மகள் நிவேதா, என் விருப்பமின்றி 27-5-2019-ல் காதல் திருமணம் செய்துகொண்டாள். அக்னி நட்சத்திரம் நடப்பிலுள்ள காலம்! என் மகள் பிரமை பிடித்ததுபோல் இருக்கிறாள். ஏதாவது பரிகாரம் செய்யவேண்டுமா?

நிவேதா அத்தை மகனைத்தானே விரும்பி மணம் புரிந்தாள்; வேறு இனத்துப் பையனை மணக்கவில்லையே? மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். திருமணத் தேதி கூட்டு எண் 8 என்பது சரியல்ல. அதனால், அன்று கட்டிய மாங்கல்யத்தை விருப்பமான கோவிலில் செலுத்திவிட்டு 1, 3, 6 வரும் தேதியில் மறுமாங்கல்யம் அணிவிக்க வேண்டும். பிரகாஷ் மக நட்சத்திரம், சிம்ம ராசி. நிவேதா உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. இருவருக்கும் ராசிப் பொருத்தமே இல்லை. ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அவசரத்தில் திருமணம் செய்துகொண்டதால் தாம்பத்திய ஒற்றுமை இருக்காது. அதனால் இருவருக்கும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்து தெய்வ சந்நிதியிலேயே மறுமாங்கல்யம் அணிவிக்கவேண்டும். நேரில்வந்து பேசினால்தான் தீர்வு கிடைக்கும்.

bala190719
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe