● ஏ. ஜீவிதா ஆறுமுகம், நாமக்கல்.

என் அக்காள் மகன் பிரகாஷை என் மகள் நிவேதா காதல் திருமணம் செய்து கொண்டாள். எங்கள் விருப்பம் இல்லாம லேயே 27-5-2019-ல் கல்யாணம் நடந்து விட்டது. இருவர் ஜாதகத்திலும் தோஷம் உள்ளதா? எதிர்காலம் எப்படி அமையும்?

நிவேதா- பிரகாஷ் திருமணத்தேதியின் (27-5-2019) கூட்டு எண் 8 வருகிறது. அதனால் வாரிசு இருக்காது. அல்லது தம்பதிகளில் யாருக்காவது வைத்திய செலவு வரலாம். எனவே அன்று கட்டிய மாங்கல்யத்தைப் பிடித்த மான கோவில் உண்டியலிலில் சேர்த்துவிட்டு 1, 3, 6 வரும் தேதிகளில் மறுமாங்கல்யம் கட்டினால்தான் வாழ்க்கையில் வளம், மகிழ்ச்சி, வாரிசுயோகம் உண்டாகும்.

● சந்திரமோகன், மங்கைநல்லூர்.

Advertisment

எனது உறவினர் குடும்பத்தில் முதலில் தந்தைக்கு கைகால் முடக்கம். பிறகு தாய்க்கு மனநிலை பாதிப்பு. மகளுக்குத் திருமணமாகி ஒரு வருடமாகிறது. திருமண மான நாள்முதல் தன் கணவர் மூன்றாம் பாலிலினத்தவர் என்று கூறி, கணவருடன் சேர்ந்து வாழாமல் பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறாள். மருத்துவம் ஒருபக்கம்- பேய் பிடித்துள்ளது என்று கோவில் கோவிலாக அலைவது ஒருபக்கம். எதனால் இப்படி?

லலிதா மேஷ லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். 12-2-1992-ல் ஜனனம். சந்திர தசை 2021 வரை. சரவணகுமார் சித்திரை நட்சத்திரம், துலா ராசி, கடக லக்னம், லக்னத் தில் சனி! குருவும் சுக்கிரனும் 12-ல் மறைவு. சனி தசை 2035 வரை. 7-ஆவது நட்சத்திரம் வதை தாரை- பொருத்தம் இல்லை. லலிதாவுக்கு சரவணகுமாருடன் குடும்பம் நடத்தப் பிடிக்கவில்லை; பிடிக்காது. பெரியவர்கள் என்ன முடிவெடுக்கப்போகிறீர்கள்?

● கே. மாதவன், மணலி, சென்னை.

Advertisment

எனது தம்பியின் ஒரே மகன் கமல நாதன் என்ற பாலாஜிக்கு 28 வயதாகிறது. அவிட்ட நட்சத்திரம், மகர ராசி. எப்போது திருமணம் நடக்கும்?

பாலாஜியின் ஜாதகத்தை மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப்படி கணித்து நகல் அனுப்பவும். பதில் சொல்கிறேன். அவரது செல்: 92453 28178-ல் தொடர்புகொள்ளவும்.

● சு. கார்த்திக், திருவானைக்கோவில்.

டிரைவராக வேலை பார்க்கிறேன். திருமணம் எப்போதும் நடக்கும்? புது வாகனம் வாங்கலாமா?

கார்த்திக் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கன்னி லக்னம். 2019 நவம்பரில் 28 வயது முடியும். சுக்கிரன் நீசம். 5-ல் சனி, 4-ல் ராகு, 10-ல் கேது. 30 வயதுமுதல் திருமண யோகம். அப்போது பெண் தேடவும். இப்போது புது வாகனம் வாங்கலாம். கடன் வசதி அமையும்.

● அருணாசலம், திருவள்ளூர்.

தாங்கள் கூறியபடி சுந்தரம் குருக் களிடம் எல்லா ஹோமமும் செய்து விட்டேன். திருமணமும் நடக்கவில்லை. இருந்த வேலையும் போய்விட்டது. (என் அக்காள் பையனுக்கு).

ஜெயகுமார் தனுசு ராசி, உத்திராட நட்சத்திரம் 1-ஆம் பாதம். ஜென்மச்சனி நடப்பதால் பிரச்சினை. 2-ல் சனி, 10-ல் சுக்கிரன் நீசம்! அதனால் திருமணம், வேலை இரண்டும் தாமதமாகிறது. 2020-ல் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல வேலை, நல்ல மனைவி, நல்ல மணவாழ்க்கை அமையும். வேறு பரிகாரம் தேவையில்லை.

hh

● என். ஈஸ்வரன், சென்னை-35.

எனது பேத்தி தீபிகா ஜாதகமும் அவர் கணவர் ஜாதகமும் அனுப்பியுள்ளேன். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். 15-4-2013-ல் திருமணம் நடந்தது. 2019 மார்ச்சில் தீபிகா கரு உண்டானாள். மே மாதம் முதல் வாரம் கருச்சிதைவு ஆகிவிட்டது. எங்களுக்கு எல்லை மீறிய வருத்தம். ஏன் அப்படி நடந்தது? புத்திரபாக்கியம் உண்டா?

தீபிகா விருச்சிக லக்னம். சிம்மச் செவ்வாய் விருச்சிகச் சனியைப் பார்த்ததால் காதல் திருமணம். 5-ல் ராகு, குரு 6-ல் மறைவு. சர்ப்ப தோஷம். எனவே கருச்சிதைவு. திருமணத் தேதி கூட்டு எண் 7 என்பது தோஷம். தாமத வாரிசு. 2019 அக்டோபர் 28-ல் (ஐப்பசி 11-ல்) குரு தனுசு ராசிக்கு மாறியதும் மீண்டும் கருத்தரிக்கும். அது நிலைக்கும். தஞ்சை பாப நாசம் அருகில் திருக்கரு காவூர் சென்று கர்ப்பரட்ச காம்பிகை சந்நிதியில் நெய் படிபூஜை செய்து வாங்கி வந்து, கணவரும் மனைவியும் தொடர்ந்து சாப்பிடவும்.

● ஏ.கோவிந்தன், ஆம்பூர்.

எனது மகன் ஜெயராமனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

ஜெயராமன் உத்திராட நட்சத்திரம், மகர ராசி. 34 வயது முடிந்து 35 ஆரம்பம். ராகு தசை சந்திர புக்தி 2020 செப்டம்பர் வரை. குரு நீசம்; சனி பார்வை. சனிக்கு செவ்வாய் பார்வை. 7-க்குடைய சந்திரனுக்கும் சனி பார்வை. எனவே 40 வயதுவரை திருமணம் தடையாகலாம். காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்பு கொண்டு சூலிலினி துர்க்கா, காமோகர்ஷணம், சுந்தர்வ ராஜஹோமம் செய்து அவருக்கு அபிஷேகம் செய்ய வும். 2019 அக்டோபரில் பெண் அமைந்துவிடும். 21 வகை ஹோமங்கள் செய் வார்கள். செல்: 99942 74067-ல் தொடர்பு கொள்ளலாம்.

● ஜி. சாந்தி, திருச்சி- 20.

என் மகன் பிரதாபன் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளான். அங்கு இரண்டு நாள் லீவு எடுப் பதும், நான்கு நாள் வேலைக்குச் செல்வது மாக இருக்கிறான். ஏஜெண்டு குறைகூறி வருத்தப்படுகிறார். நல்ல முறையில் வேலை செய்து ஊர் திரும்பு வானா? என் மகளுக்கு 27 வயதுக்குமேல் திருமணம் செய்ய வேண்டுமென்று சொன்னீர்கள். அதன் படி 27-க்குமேல் திருமணம் செய்து மகள்- மருமகன், பேத்தி நன்றாக இருக்கிறார்கள். என் மகனுக்கு நல்ல வழிகாட்டவும்!

மகன் பிரதாபன் தனுசு ராசி, பூராட நட்சத்திரம். தனுசு ராசிக்கு 2020 ஏப்ரல்வரை ஜென்மச்சனி நடக்கிறது. அதன்பிறகு பாதச்சனி. ஆக, 2023 வரை ஏழரைச்சனி. கும்ப லக்னம். 29 வயதுமுதல் செவ்வாய் தசை- 36 வயதுவரை. அநேகமாக வெளிநாடு பிடிக்காமல் சொந்த ஊருக்குத் திரும்பிவரும் சூழ்நிலையும் இருக்கிறது. வெளிநாட்டுக்கு அனுப்பிய செலவு "வேஸ்ட்' ஆனாலும் ஆகலாம். சனிக்கிழமைதோறும் 36 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம்கட்டி அதை காலபைரவர் சந்நிதியில் நெய்யில் தீபமேற்றி வழிபடுங்கள். அத்துடன் ஏழு செவ்வாய்க்கிழமை வயலூர் சென்று முருகனிடம், மகன் தொடர்ந்து வெளி நாட்டில் வேலை செய்யவேண்டுமென்று வேண்டிக்கொள்ளவும். இதை தாயார் செய்யலாம். விமோசனம் பிறக்கும்.

● ரமேஷ், மேல்மலையனூர்.

வித்வான் வே. லட்சுமணன் காலத்திலிருந்தே "பாலஜோதிடம்' படித்து வருகி றேன். தாங்கள் ஆசிரியராகப் பொறுப் பேற்றபிறகு கேள்வி- பதில் பகுதியும், ராசி பலன் பகுதியும் சிறப்பாக இருப்பதோடு, "பாலஜோதிடம்' மாணவர்களுக்கு ஜோதிடராக மாறுமளவு பயனுள்ளதாக இருக்கிறது. என்னுடைய பூர்வீக நிலம் எப்போது விற்பனையாகும்? மனைவிக்கு செவ்வாய் தசை நன்மை தருமா? அண்ணன் மகன் சி.ஏ. படிக்கிறான். படிப்பை முடிப்பானா?

ரமேஷ் கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம், விருச்சிக லக்னம். சனி தசை, குரு புக்தி. 2020-ல் சனிப்பெயர்ச்சி. அப்போது ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கும்போது நிலம் விற்பனையாகும்! அண்ணன் மகனுக்கு 2020 ஏப்ரல்வரை சனி தசை; சூரிய புக்தி. இது முடிந்ததும் சி.ஏ. பட்டம் வாங்கலாம்.

● ரா. கதிர்வேலு, செட்டிப்பாளையம்.

எனது மகன் கனிவரசுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எந்த வயதில் நடக்கும்?

விருச்சிக லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். குரு தசை நடக்கிறது; 9-ல் உச்சம். அரசு வேலை கிடைக்கும்! 2019 ஆவணிக்குமேல் வாய்ப்புண்டு. திருமணம் 30 வயது முடிந்தபிறகு நடைபெறும்.

● சரவணன் கவிதா, கூடுவாஞ்சேரி.

எனது பெண் தேவி அரசு வேலைக்குச் செல்ல விரும்புகிறாள். அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?

மகள் தேவி விசாக நட்சத்திரம், துலா ராசி, மகர லக்னம். ஏழரைச்சனி முடிந்துவிட்டதால் இனி தடையேதுமில்லை. அரசு வேலைக்கு இடமுண்டு. முயற்சி செய்யவும்.