● வி. கார்த்திகேயன், ராசிபுரம்.
"அதிர்ஷ்டம்' பத்திரிகையிலிருந்து, "பாலஜோதிடம்' வரை ஜோதிட உலகில் சக்கரவர்த்தியாகத் திகழும் தாங் கள், ஜோதிட வகுப்புகள் நடத்தி இக்கலையை வளர்க்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
உங்கள் கேள்வி நியாயமானதுதான். அதேசமயம் எனது வயதும், ஓய்வில்லாத சூழ்நிலையும்தான் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாததற்குக் காரணம். இருந்தாலும் ராசிபலன் பகுதியில் நான் தரும் விளக்கமே ஜோதிடப் பாடம் மாதிரிதான்! பலரும் அதைப் படித்தே ஜோதிடராக மாறியிருக்கிறார்கள். என்றாலும் விரைவில் "பாலஜோதிட'த்திலேயே ஜோதிடப்பாடம் எழுத ஆர்வமாக இருக்கிறேன். நல்ல உதவியாளர் அமைந்தால் அந்தப் பணி எளிதாக ஈடேறும்.
● ரா. பாஸ்கரன், பெங்களூரு.
பல வருடங்களாக ஆய்க்குடி பாலசுப்ரமணிய சுவாமியை குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். இப்போது திடீரென்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனது உறவினர் ஒருவர், உங்களைத் தொடர்புகொண்டு வழிகாட்டும்படி அறிவுறுத்தினார். எங்களுக்கு வழிகாட்டவும்.
குலதெய்வம் தெரியாத வர்கள் இஷ்டதெய்வத் தையே வழிபடலாம். சிவஞானபோதகம் என்ற நூலில் "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி மாதொரு பாகனார் வந்தருளு வார்' என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் "எத்தெய்வத்தை வழிபட்டாலும் அது முக்கண் ஆதியை அடையும்' என்று சொல்லப்படுகிறது. இதுவரை நீங்கள் வழிபட்டுவந்த பாலசுப்ரமணியமே சிவனின் அம்சம்தான். ஆய்க்குடி முருகனையும் வழிபடலாம். சுவாமிமலை முருகனையும் வழிபடலாம். இதில் குழப் பமே கூடாது. அத்துடன் துவாக்குடியில் உள்ள சாந்தி என்ற பெண், குலதெய்வம் பற்றி குறிசொல்வதாகக் கேள் விப்பட்டேன். செல்: 94435 33173-ல் தொடர்புகொண்டு போகவும். ஏதாவது தகவல் அறியலாம்.
● என்.எஸ். ராமநாதன், மும்பை-400 081.
என்னுடைய இரண்டு பேரன்களின் படிப்பு, எதிர் காலம், ஆயுள் பற்றிய விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சித்தானந்த் மூல நட்சத் திரம், தனுசு ராசி. நடப்பு வயது 14. 2020 வரை ஏழரைச்சனி. நான்கு வயதுமுதல் சுக்கிர தசை. இது குட்டிச்சுக்கிரன். அதனால் ஆரோக்கியத்தில் குறை, படிப்பில் மந்தம், ஞாபக மறதி காணப்படும். சனிக்கிழமைதோறும் 15 மிளகை ஒரு சி
● வி. கார்த்திகேயன், ராசிபுரம்.
"அதிர்ஷ்டம்' பத்திரிகையிலிருந்து, "பாலஜோதிடம்' வரை ஜோதிட உலகில் சக்கரவர்த்தியாகத் திகழும் தாங் கள், ஜோதிட வகுப்புகள் நடத்தி இக்கலையை வளர்க்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
உங்கள் கேள்வி நியாயமானதுதான். அதேசமயம் எனது வயதும், ஓய்வில்லாத சூழ்நிலையும்தான் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாததற்குக் காரணம். இருந்தாலும் ராசிபலன் பகுதியில் நான் தரும் விளக்கமே ஜோதிடப் பாடம் மாதிரிதான்! பலரும் அதைப் படித்தே ஜோதிடராக மாறியிருக்கிறார்கள். என்றாலும் விரைவில் "பாலஜோதிட'த்திலேயே ஜோதிடப்பாடம் எழுத ஆர்வமாக இருக்கிறேன். நல்ல உதவியாளர் அமைந்தால் அந்தப் பணி எளிதாக ஈடேறும்.
● ரா. பாஸ்கரன், பெங்களூரு.
பல வருடங்களாக ஆய்க்குடி பாலசுப்ரமணிய சுவாமியை குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். இப்போது திடீரென்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனது உறவினர் ஒருவர், உங்களைத் தொடர்புகொண்டு வழிகாட்டும்படி அறிவுறுத்தினார். எங்களுக்கு வழிகாட்டவும்.
குலதெய்வம் தெரியாத வர்கள் இஷ்டதெய்வத் தையே வழிபடலாம். சிவஞானபோதகம் என்ற நூலில் "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி மாதொரு பாகனார் வந்தருளு வார்' என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் "எத்தெய்வத்தை வழிபட்டாலும் அது முக்கண் ஆதியை அடையும்' என்று சொல்லப்படுகிறது. இதுவரை நீங்கள் வழிபட்டுவந்த பாலசுப்ரமணியமே சிவனின் அம்சம்தான். ஆய்க்குடி முருகனையும் வழிபடலாம். சுவாமிமலை முருகனையும் வழிபடலாம். இதில் குழப் பமே கூடாது. அத்துடன் துவாக்குடியில் உள்ள சாந்தி என்ற பெண், குலதெய்வம் பற்றி குறிசொல்வதாகக் கேள் விப்பட்டேன். செல்: 94435 33173-ல் தொடர்புகொண்டு போகவும். ஏதாவது தகவல் அறியலாம்.
● என்.எஸ். ராமநாதன், மும்பை-400 081.
என்னுடைய இரண்டு பேரன்களின் படிப்பு, எதிர் காலம், ஆயுள் பற்றிய விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சித்தானந்த் மூல நட்சத் திரம், தனுசு ராசி. நடப்பு வயது 14. 2020 வரை ஏழரைச்சனி. நான்கு வயதுமுதல் சுக்கிர தசை. இது குட்டிச்சுக்கிரன். அதனால் ஆரோக்கியத்தில் குறை, படிப்பில் மந்தம், ஞாபக மறதி காணப்படும். சனிக்கிழமைதோறும் 15 மிளகை ஒரு சிவப் புத்துணியில் பொட்டலம் கட்டி, அதை நெய்யில் நனைத்து காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றவும்- ஏழரைச்சனி முடியும்வரை. அதிதி தத்துவுக்கு கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி. 2020 வரை அவனுக்கும் அட்டமச்சனி. 2019 ஜூலையில் 11 வயது முடிந்து 12 ஆரம்பம். சந்திர தசை முடிந்து செவ்வாய் தசை நடப்பு. லக்னாதிபதி தசை. (விருச்சிக லக்னம்). இருவருக்கும் ஆயுள் தீர்க்கம். இருவருக்கும் சனி தசை. ஒருவனுக்கு ஜென்மச்சனி. மற்றவனுக்கு அட்டமச்சனி. இளையவனுக்காக 12 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றவும். அத்துடன் கோவில் அல்லது வீட்டில் மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலுசரசுவதி ஹோமம், வாக்வாதினி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஆயுஷ் ஹோமம் ஆகியவற்றை இரண்டு பேரன்களுக்கும் செய்து கலச அபிஷேகம் செய்ய வேண்டும். இருவருக்கும் ஹயக்ரீவர் மந்திரத்தை உபதேசம் செய்து, தினசரி ஜெபம் செய்யும்படி ஏற்பாடு செய்யுங்கள். 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இருவருக்கும் கல்வி முன்னேற்றம், தொடர்கல்வி, ஆயுள், ஆரோக்கியம் எல்லாம் தெளிவாக அமையும். மும்பையில் மேற்படி ஹோமம் செய்ய சரியானவர்கள் இல்லையென்றால், காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு 19 வகையான ஹோமம் செய்யலாம். (செல்: 99942 74067). பேரன்களுக்கும், பெற்றவர்களுக்கும் புதுஆடை உடுத்தி, கலச அபிஷேகம் செய்யவேண்டும்.
● வி. பிரியா, சேலம்.
என் மகனுக்கு 2024 வரை ராகு தசை நடக்கிறது. அவனுக்கு நண்பர்கள் சகவாசம் மிக அதிகம். எட்டு நண்பர்கள் என்றால் நான்குபேர் கெட்டவர்கள்; நான் குபேர் நல்லவர்கள் என்ற கணக்கில் இருக் கிறார்கள். இப்போது இஞ்சினீயரிங் படிப்பு முடித்துவிட்டான். மேற்கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று படிக்க வேண்டும் என்கிறான். அனுப்பலாமா?
அல்லது அவன் அப்பா வெள்ளித்தொழில் செய்கிறார். அதில் ஈடுபட வைக்கலாமா? அவன் எதிர்காலம் எப்படி இருக்கும்? திருமணம் எந்த வயதில் நடக்கும்? காதல் திருமணமா? அல்லது பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணமா? மகனுக்கு 2019 சித்திரையில் 21 வயது முடிந்து 22 ஆரம்பம். ஆனால் இன்னும் பெயர் வைக்கவில்லை போலும்! அவனை எப்படி கூப்பிடுவீர்கள்? மகனே என்றா? ராசா என்றா? பேர் சொல்லியா? பேர் எழுதவில்லையே? அதனால்தான் இன்னும் பேர் வைக்கவில்லையோ என்று கேட்டேன். (குறிப்பு: இதைப் படித்தபிறகா வது அடுத்து கேள்வி கேட்பவர்கள் பெயர், ஊர் எல்லாம் எழுதவேண்டும். அப்போது தான் பதில் கூறமுடியும்.) இதில் ஒரு ரகசியம் மறைந்துள்ளது. அதாவது மகனுக்கு ராகு தசை நடப்பதால்தான் அவனுக்கு நான்கு நல்ல நண்பர்கள்; நான்கு கெட்ட நண்பர்கள். 21 வயதிலேயே அவன் திருமணத்தைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! காதல் வலையில் சிக்கிக் கொண்டானா? மகர ராசிக்கு ஏழரைச்சனி. விரயச்சனி நடக்கிறது. மகனுடைய பெயரை தான் எழுதவில்லை என்றால் அவன் பிறந்த நட்சத்திரம், ராசி, இருப்பு தசை எதுவும் எழுதவில்லையே. ராகு தசை மட்டும் 2024-ல் முடியும் என்று எழுதியுள்ளீர்கள். ராகு தசை முடியும்வரை அவனுக்கு எந்த நல்லதும் நடக்காது. ஏழரைச்சனியும் ராகு தசையும் இணைந்து நடப்பதால் விபத்து, பெண் விவகாரத்தில் சிக்கும் சூழ்நிலை, அவப்பெயர் எடுக்கும் நிலையுண்டு. மேஷ லக்னத்தில் செவ்வாய், சனி சேர்க்கை. சுக்கிரனோடு கேது, ராகு சம்பந்தம். போலீஸ் கேஸ் வரலாம். எனவே காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067). சூலினிதுர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் உள்பட 19-21 வகையான ஹோமம் செய்து மகனுக்கு கலச அபிஷேகம் செய்தால் தப்பிக்கலாம்.
● ஜெயசரசுவதி, திருச்சி-102.
பொன்மாயன் என்ற மோகன்ராஜுக்கு 30 வயது முடிந்ததும் பெண் அமையும் என்று எழுதினீர்கள். தேவிபட்டினம் சென்று சீனிவாச சாஸ்திரிகளிடம் எல்லா ஹோமமும் செய்து மூன்று வருடம் ஆகிறது. வரன் வருகிறது; எதுவும் முடிவாக வில்லை. அவன் திருமணம் முடிந்ததும் தனிக்குடித்தனமாக வைத்துவிட நினைக் கிறோம். என்பேரில் தகப்பனார் சீதனமாகக் கொடுத்த ஒரு வீடு இருக்கிறது. அதை மகனுக்கு எழுத நினைக்கிறேன். மகன் மெடிக்கல் ரெப் வேலை செய் கிறான். எதிர்கால முன்னேற்றம் எப்படி இருக்கும்? நல்ல மணவாழ்க்கை அமையுமா?
ஜெயசரசுவதியின் பக்திக்கும், நல்ல மனதுக்கும் யாருக்கும் எந்தக் குற்றமும் ஏற்படாது. "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்ற மாதிரி எந்தக் குறையும் வராது. தேவிபட்டினம் சென்று செய்த பரிகாரமே போதுமானது. 30 வயதில் செய்யவேண்டிய பரிகாரத்தை முன்கூட்டியே செய்துவிட்டீர்கள்; பரவாயில்லை. ராகு தசையில் சனி புக்திக்குள் திருமணம் முடிந்துவிடும். நல்ல மனைவி அமைவார். 7-ல் குரு உத்தமம். திருமணம் முடிந்து இருவரையும் காளஹஸ்திக்கு அனுப்பி அபிஷேக பூஜை செய்யலாம். அல்லது மதுரையில் என்னை ஆளாக்கிய குபேர பத்திரகாளியம்மனுக்கு ஒரு வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமியில் ஒருமுறை அபிஷேக பூஜை செய்யலாம். வாழ்க்கை முன்னேற்றம், வாரிசு யோகம் அமையும். உங்கள்பேரிலுள்ள வீட்டை மகனுக்கு செட்டில்மென்டு எழுதிக் கொடுக்கலாம். ஆனால் உங்கள் காலத்துக்குப் பிறகு அனுபவிக்கலாமென்று எழுத வேண்டும். மகன் திருமணம், ராமகிருஷ்ணனுக்கு நடக்கும் ராகு தசை, சரசுவதிக்கு நடக்கும் சனி தசை, அடுத்துவரும் புதன் தசை எல்லாம் இன்பமாக அமையவும், ஆயுள் தீர்க்கம், மாங்கல்ய தீர்க்கம், ஆரோக்கியம், குடும்ப மேன்மை- கடன் நிவர்த்தி எல்லாவற்றுக்கும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067). 19 வகையான ஹோமம் செய்து மூவரும் கலச அபிஷேகம் செய்துகொள்வது நல்லது.
● எம். கீதா, துவாக்குடி.
எனது தம்பி சந்தானகிருஷ்ணன் தனியார் கடையில் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறான். 36 வயதாகியும் இன்னும் திருமணம் கூடவில்லை. எப்போது நடக்கும்? எப்படிப்பட்ட பெண் அமையும்?
சந்தான கிருஷ்ணன் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி 12-3-2020 வரை. பிறகுதான் குரு புக்தி வரும். குரு புக்தியில் திருமணம் கூடும். அன்னிய சம்பந்தம். பிரைமரி ஸ்கூல் டீச்சர் வேலை அல்லது டெய்லரிங் தொழில் செய்யும் பெண் அமையும். ராகு புக்திக்காக விருப்பமான ஒரு கிழமையில் ராகு காலத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு அர்ச்சனை, பூஜை செய்யவும். அப்படியே அருகிலுள்ள விக்ரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜயினி காளியம்மனுக்கு ஒரு அபிஷேக பூஜை செய்யவும். திருமணத்தடை விலகும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் பெருகும்.
● சி. சுந்தரம், சென்னை-56.
என் மகள் மனோசித்ராவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? சொந்தமா? அசலா? ஜாதகத்தில் தோஷம் இருந்தால் பரிகாரம் கூறவும்.
மனோசித்ராவுக்கு மக நட்சத்திரம், சிம்ம ராசி. 5-ல் ராகு இருப்பது நாகதோஷம். நடப்பு சூரிய தசை. 2020 பங்குனியில் (மார்ச் மாதம்) 27 வயது முடியும். அதன்பிறகு திருமணம் நடக்கும். அதற்கு முன்னதாக காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067). சூலினிதுர்க்கா ஹோமமும், திருஷ்டி துர்க்கா ஹோமமும், காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வர ஹோமமும் செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். அவருடன் பெற்றோரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். உடன்பிறந்தவர்கள் இருந்தால் அவர்கள் நட்சத்திரமும் சங்கல்பத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
● பி. சுந்தரம், கோவலூர்.
இதுவரை எப்படியோ வாழ்க்கை ஓடிவிட்டது. இனி அடிமை வேலையா? சுயதொழிலா? குடும்பத்தில் எந்த நிம்மதியும் இல்லை. மரியாதையும் இல்லை. பாசமும் இல்லை.
பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னம். எனது அனுபவத்தில் கும்ப ராசிக்காரர்களும் சரி; கும்ப லக்னத்தாரும் சரி- அனுதாபத்துக்குரியவர்கள் என்பதுதான் முடிவு! அதிலும் ராசிநாதனும் குரு- குடும்பாதிபதியும் குரு. அவர் 12-ல் மறைவு, நீசம், கேது சம்பந்தம், ராகு பார்வை. காவி கட்டாத சந்நியாசியாக வாழ்வதைவிட காவிகட்டிய சந்நியாசியாகவே எங்கேயாவது ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து மிஞ்சிய வாழ்க்கைப் பொழுதை ஓட்டலாமே!
● ஆர். ஆறுமுகம், திருப்பூர்.
என்னுடைய நண்பர் உதயகுமார் கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னம். மனைவி இறந்து இரண்டு வருடமாகிவிட்டது. அவருக்கு மறுமணம் நடக்குமா? எப்போது?
2019 செப்டம்பரில் 34 வயது முடிந்து 35 ஆரம்பம். 20 வயது முதல் 38 வரை ராகு தசை. ராகு 10-ல் நின்று சனி, கேது பார்வையைப் பெற்றதால், ராகு தசையில் வாழ்வை இழந்தார். பாக்கியாதிபதி குருவும் நீசம்! வரும் ஆவணிமுதல் திருமண யோகம் ஏற்படும். முன்னதாக காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) தொடர்புகொணடு சூலினிதுர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ புனர்விவாக ஹோமம் உள்பட 19-20 ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். அதன்பின்பு ஆரோக்கியமான- அதிர்ஷ்டமான- ஆயுள் தீர்க்கமான மனைவியும் வாரிசு யோகமும் அமையும்.