● ஆர். பாஸ்கரன், பெங்களூரு.
என் மகன் ஜெயராம கிருஷ்ணன் உபநயனம் செய்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இறைவழிபாடு- பூஜை புனஸ்காரம் போன்ற ஆன்மிகக் காரியங்கள் எதிலும் ஈடுபாடு இல்லை. நம்பிக்கையும் இல்லை. மனதுக்கு கஷ்டமாக உள்ளது. ஏதேனும் பரிகாரம் உண்டா?
16-5-2019 வரை ராகு தசை நடக்கிறது. அதன்பிறகு குரு தசையிலிருந்து ஜெயராம கிருஷ்ணனுக்கு ஆன்மிகத்தில் நாட்டமும் ஈடுபாடும் உண்டாகும். அதுவரை ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவன் கோவிலில் நந்தி சந்நிதியில் காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் சூரிய ஓரையில் நெய்விளக்கேற்றி வேண்டிக்கொள்ளவும். அத்துடன் ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் வடக்குப் பார்த்த அம்மன் சந்நிதியில் ராகு தசை முடியும்வரை நெய்விளக்கு ஏற்றவும்.
● எம். ஜெயமணி, சீர்காழி.
"பாலஜோதிட' அதிதீவிர ரசிகர்களுள் நானும் ஒருவன். பலருக்கு பலன்களைக்கூறி நல்வழிகாட்டி அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் இறைவன் எவ்விதக் குறையுமின்றி வாழ வைப்பான். எனக்கு 65 வயது. ஒரு மகன்- ஒரு மகள்.மகளுக்குத் திருமணமாகி நன்றாக இருக்கிறாள். மகன் ரமேஷுக்கு 36 வயது. இன்னும் திருமணமாகவில்லை. வேலையும் இல்லை. அவனது கவலையே எனக்கு! ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறுகிறான். ஆனால் எங்களுக்கு அதில்
● ஆர். பாஸ்கரன், பெங்களூரு.
என் மகன் ஜெயராம கிருஷ்ணன் உபநயனம் செய்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இறைவழிபாடு- பூஜை புனஸ்காரம் போன்ற ஆன்மிகக் காரியங்கள் எதிலும் ஈடுபாடு இல்லை. நம்பிக்கையும் இல்லை. மனதுக்கு கஷ்டமாக உள்ளது. ஏதேனும் பரிகாரம் உண்டா?
16-5-2019 வரை ராகு தசை நடக்கிறது. அதன்பிறகு குரு தசையிலிருந்து ஜெயராம கிருஷ்ணனுக்கு ஆன்மிகத்தில் நாட்டமும் ஈடுபாடும் உண்டாகும். அதுவரை ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவன் கோவிலில் நந்தி சந்நிதியில் காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் சூரிய ஓரையில் நெய்விளக்கேற்றி வேண்டிக்கொள்ளவும். அத்துடன் ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் வடக்குப் பார்த்த அம்மன் சந்நிதியில் ராகு தசை முடியும்வரை நெய்விளக்கு ஏற்றவும்.
● எம். ஜெயமணி, சீர்காழி.
"பாலஜோதிட' அதிதீவிர ரசிகர்களுள் நானும் ஒருவன். பலருக்கு பலன்களைக்கூறி நல்வழிகாட்டி அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் இறைவன் எவ்விதக் குறையுமின்றி வாழ வைப்பான். எனக்கு 65 வயது. ஒரு மகன்- ஒரு மகள்.மகளுக்குத் திருமணமாகி நன்றாக இருக்கிறாள். மகன் ரமேஷுக்கு 36 வயது. இன்னும் திருமணமாகவில்லை. வேலையும் இல்லை. அவனது கவலையே எனக்கு! ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறுகிறான். ஆனால் எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. அவன் ஜாதகப்படி எப்படிப்பட்ட பெண் முடியும்? அரசு வேலை கிடைக்குமா? அரசு வேலைக்கு ஒருவரிடம் பணம்கொடுத்து ஏமாந்துவிட்டோம். அப்பணம் திரும்பக் கிடைக்குமா?
ரமேஷ் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னம். லக்னத்தில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பது நாகதோஷம். ராசிக்கு 7-க்குடைய சுக்கிரன் நீசம். அத்துடன் சனி சம்பந்தம். ராசிக்கு 8-ல் உள்ள செவ்வாயை சனி மூன்றாம் பார்வை பார்ப்பதால் கலப்புத் திருமணம், காதல் திருமணம் என்பதை உறுதிப்படுத்துகிறது. உங்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ- ரமேஷ் விரும்பும் பெண்ணுக்கு விருப்பம் இருந்தால் அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைக்கலாம். ஜாதகருக்கு 2020 மே வரை ராகு தசை நடப்பதால் அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் பணி அல்லது சுயதொழில் யோகம் உண்டு. அடுத்துவரும் குரு தசைமுதல் தொழில் மேன்மை, சம்பாத்தியம் பெருகும். ரமேஷ் விரும்பும் பெண் கும்ப ராசி, தனுசு லக்னம். ஜாதகப் பொருத்தம் உள்ளது.
● பா. ராஜன், செங்கல்பட்டு.
என் ஒரே மகள் லக்ஷ்மியின் படிப்பு, எதிர்காலம் எப்படி அமையும்?
ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மீன லக்னம். 23 வயதுவரை கேது தசை. தொடர் கல்வியோகம் உண்டு. அவர் விரும்பும் துறையில் படிக்கலாம். சுக்கிர தசை 2029-ல் ஆரம்பிக்கும்போது எதிர்கால வாழ்க்கை, உத்தியோகம், சம்பாத்தியத்துக்கு ஒரு ஹோமம்செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும்.
● சு. கார்த்திகேயன், திருச்சி.
40 வயது முடிந்து 41 ஆரம்பம். இதுவரை திருமணப்பேச்சே நடக்கவில்லை. திருமணப் பதிவு மையத்தில் பதிவுசெய்தும் எந்தவித தகவலும் இல்லை. 12 வருடம் சுயதொழில் செய்கிறேன். தொழில் ஏற்றம்- இறக்கமாகவே இருக்கிறது. முன்னேற்றம் உண்டா?
தனுசு லக்னம், பூர நட்சத்திரம், சிம்ம ராசி. சந்திரன் ராசியில் செவ்வாய், சனி சேர்ந்ததும், ராசிப்படி ராகு- கேது தோஷம் இருப்பதும்தான் திருமணத்தடைக்குக் காரணம். மேலும் 9-ல் செவ்வாய்- சனி- சந்திரன் சேர்க்கை உங்கள் திருமணத்தைப் பார்க்கும் பாக்கியம் தகப்பனாருக்கு இருக்காது. திருமணத்தடை விலகவும் நல்ல மனைவி அமையவும், தொழில் முன்னேற்றத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் ஆயுள் தீர்க்கத்துக்கும் எல்லாம் சேர்த்து 16 விதமான ஹோமங்கள் செய்து நீங்கள் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். அதிகம் செலவாகும் என்றாலும் கடன்உடன் வாங்கியாவது இதைச் செய்தாகவேண்டும். காரைக்குடி அருகில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு பேசுங்கள். செல்: 99942 74067.
● வி.கே. ராமானுஜம், ஸ்ரீரங்கம்.
எனது மகன் பிரசன்னப் பெருமாள் பெற்ற கல்விக்கடன் ஒன்றரை லட்சம் ரூபாய் 2018-ல் அடையும் என்று முன்பு சொன்னீர்கள். அதுபோலவே அவனும் கடனைத் தீர்த்து அமைதியாக இருக்கிறான். அதேபோல 2018-ல் நிரந்தர வேலை அமையும் என்றும் சொன்னீர்கள். ஆனால் இதுவரை தற்காலிக ஆசிரியராக வேலை பார்க்கிறான். எம்.எஸ்.ஸி., பி.எட்., முதல் வகுப்பில் (எண்ழ்ள்ற் ஈப்ஹள்ள்) முடித்துள்ளான். அரசுப்பள்ளியில் வேலை கிடைக்குமா? பிரசன்னாவுக்குப் பெண் தருகிறேன் என்று இரண்டு மூன்று இடங்களில் சொல்கிறார்கள். எப்பொழுது திருமணம் நடைபெறும்?
பிரசன்னா உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னம். 2018 அக்டோபரில் 28 வயது முடியும். குரு தசை தனது புக்தி நடக்கிறது. லக்னத்தில்- 7-ல் சனியும், கன்னி ராசியில் நீச சுக்கிரனும் இருப்பதால் 30 வயது முடிந்தபிறகு 31-ல்தான் திருமணம் செய்யவேண்டும். அதேநேரம் அவருக்கு காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்யவேண்டும். காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு பேசவும். உறவுமுறையைத் தவிர்க்கவும். அந்நிய சம்பந்தம். படித்துப் பட்டம் பெற்று வேலை பார்க்கும் பெண் அமையும்.
● ஆர். அனந்து, கோவை-8.
வங்கியிலிருந்து ஓய்வுபெற்று ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது சொந்த வீட்டில் வசிக்கிறோம். பணியில் இருந்தபோது நகரின் மையப் பகுதியில் அபார்ட்மென்ட் வாங்கினேன். தற்போது அதை நிர்வகிக்கும் செலவுகளை ஈடுகட்ட முடியாததால் விற்றுவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எனது பூர்வீகம் செங்கோட்டை. எனவே அந்தப் பகுதியில் சிறியதாக ஒரு வீடு வாங்கினால் நலமாக இருக்குமென்று நம்புகிறேன். உடன்பிறப்புக்களும் அங்கு இருக்கிறார்கள்.
பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாதசுவாமி- ஆரணவல்லியம்மனுக்கு, வீடு நல்ல விலைக்கு விற்கவும் அடுத்து செங்கோட்டை அல்லது திருநெல்வேலியில் நீங்கள் விரும்பும் இடத்தில் புது வீடு அமையவும் அர்ச்சனைசெய்து வேண்டுதல் செய்யவும். புதிய வீடு அமைந்து கிரகப்பிரவேசம் செய்தபிறகு 108 சங்கு வைத்து ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். புது வீடு ராசியாகவும் திருப்தியாகவும் அமையும். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863-ல் தொடர்புகொள்ளவும்.
த. கோவிந்தசாமி, திருவண்ணாமலை.
● எனது மகன் திருமாவளவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான். இது தொடருமா? வேறு வேலை அமையுமா?
திருமாவளவனுக்கு மகர ராசி, அவிட்ட நட்சத்திரம், கடக லக்னம். நடப்பு வயது தெரியவில்லை. ஏனென்றால் ராசிக்கட்டம், நவாம்சக்கட்டம், தசை இருப்பு எல்லாம் எழுதிய நீங்கள் பிறந்த தேதி எழுத மறந்துவிட்டீர்கள். இருப்பினும் சனியின் சஞ்சாரத்தை வைத்து 30 வயது ஆகும் என்று கணிக்கலாம். ராகு- கேது தோஷம், களஸ்திர தோஷம் இருப்பதால், ராகு- கேது பெயர்ச்சிக்குப்பிறகு திருமண முயற்சிகள் எடுக்கலாம்.'