● நீலகண்டன், மதுரை.
திருமணப் பொருத்தம் பத்து என்கி றார்கள். சில நூலில் 13 என்று எழுதப் பட்டுள்ளது. எது சரி? இது சம்பந்தமான விளக்கம் சொன்னால் தெளிவாக இருக்கும்.
1. தினம், 2. கணம், 3. மகேந்திரம், 4. ஸ்திரீ தீர்க்கம், 5. பிராணி (யோனி), 6. ராசி, 7. ராசியாதி பதி, 8. வசியம், 9. ரஜ்ஜு, பத்து. வேதை என்று பத்து பொருத்தம்தான் முக்கியமானது. தசப்பொருத்தம். இதில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு இவ்வைந்தும் மிக முக்கியம். இதில் தினம்- பிராமணர்களுக்கும், க்ஷணம்- சத்திரியர்களுக்கும், ராசி- வைசியர்களுக்கும், யோனி- சூத்திரர்களுக்கும், ரஜ்ஜு- எல்லா ஜாதியருக்கும் முக்கியம். இதுதவிர, நாடி, மரம், பட்சி என்று உபபொருத்தம் மூன்றும் சில நூல்களிலும், பஞ்சாங்கத்திலும் குறிக்கப் பட்டிருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் இல்லை.
● காந்திமதி, கோவை.
என் மகள் ஆனியில் பிறந்தவள். அவளுக்கு ஆனியில் பிறந்த ஒரு வரன் வந்துள்ளது. பொருத்தம் எல்லாம் இருக் கிறது. திருமணம் செய்யலாமா?
ஆனி மாதத்துக்கு ஜேஷ்ட மாதம் என்று வடமொழியில் பேர் உண்டு. திரிஜேஷ்டை ஆகாது என்பது விதி. அதாவது ஆனி மாதம் பிறந்த பெண் மூத்தவளாக இருந்தாலும், ஆனி மாதம் பிறந்த ஆண் மூத
● நீலகண்டன், மதுரை.
திருமணப் பொருத்தம் பத்து என்கி றார்கள். சில நூலில் 13 என்று எழுதப் பட்டுள்ளது. எது சரி? இது சம்பந்தமான விளக்கம் சொன்னால் தெளிவாக இருக்கும்.
1. தினம், 2. கணம், 3. மகேந்திரம், 4. ஸ்திரீ தீர்க்கம், 5. பிராணி (யோனி), 6. ராசி, 7. ராசியாதி பதி, 8. வசியம், 9. ரஜ்ஜு, பத்து. வேதை என்று பத்து பொருத்தம்தான் முக்கியமானது. தசப்பொருத்தம். இதில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு இவ்வைந்தும் மிக முக்கியம். இதில் தினம்- பிராமணர்களுக்கும், க்ஷணம்- சத்திரியர்களுக்கும், ராசி- வைசியர்களுக்கும், யோனி- சூத்திரர்களுக்கும், ரஜ்ஜு- எல்லா ஜாதியருக்கும் முக்கியம். இதுதவிர, நாடி, மரம், பட்சி என்று உபபொருத்தம் மூன்றும் சில நூல்களிலும், பஞ்சாங்கத்திலும் குறிக்கப் பட்டிருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் இல்லை.
● காந்திமதி, கோவை.
என் மகள் ஆனியில் பிறந்தவள். அவளுக்கு ஆனியில் பிறந்த ஒரு வரன் வந்துள்ளது. பொருத்தம் எல்லாம் இருக் கிறது. திருமணம் செய்யலாமா?
ஆனி மாதத்துக்கு ஜேஷ்ட மாதம் என்று வடமொழியில் பேர் உண்டு. திரிஜேஷ்டை ஆகாது என்பது விதி. அதாவது ஆனி மாதம் பிறந்த பெண் மூத்தவளாக இருந்தாலும், ஆனி மாதம் பிறந்த ஆண் மூத்தவனாக இருந் தாலும் திருமணம் செய்யக்கூடாது. (மூன்று ஜேஷ்டை). இதை தலைச்சனுக்கும் தலைச் சனுக்கும் ஆகாது என்று ஒதுக்குவார்கள். ஒருசிலர் தலையும் வாலும் ஆகாது என்பார்கள். அதாவது மூத்தவனுக்கும் கடைசிப் பெண்ணுக்கும் திருமணம் கூடாது என்பார்கள். சாஸ்திரம் என்றும், சம்பிரதாயம் என்றும் இருவிதமாகச் சொல்வார்கள். இரண்டையும் அனுசரிக்கத்தான் வேண்டும்.
● ரவி, தெற்குவாசல்.
கரிநாள் என்று குறிப்பிட்டுள்ள நாளில் எந்த சுபகாரியமும் செய்யக்கூடாது என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். பெரியவர்களும் தயங்குகிறார்களே!
கரிநாள் என்பது 24 மணி நேரமும் ஒதுக்கப்பட வேண்டிய அல்லது விலக்கப்பட வேண்டிய காலம் அல்ல! ராகு காலம், எமகண்டம், குளிகன் போன்றவற்றுக்கு ஒன்றரை மணி நேரம் ஒதுக்கியிருப்பதுபோல, கரிநாள் என்பதும் ஒன்றரை மணி நேரம்தான் தோஷமான நேரம்! சூரிய உதயத்தில் இருந்து மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) கரிநாள்- தோஷம் உடையது. உதாரண மாக தை மாதம் சூரிய உதயம் காலை 6.40 மணி என்றால் அதிலிருந்து ஒன்றரை மணி நேரம் காலை 8-10 மணிவரை கரிநாள். அதன் பிறகு திருமணம், கிரகப்பிரவேசம், தொழில் ஆரம்பம் முதலிய எல்லா சுபகாரியங்களும் செய்யலாம். எந்தவித சந்தேகமும் வேண்டாம். எந்த தோஷமுமில்லை. அஷ்டமி, நவமி போல முழுநாளும் விலக்க வேண்டாம். அதிலும் சூரியன் அஸ்தமித்தபிறகு மாலை 6.00 மணிக்கு மேல் இரவு முழுவதும் எந்த தோஷமும் இல்லை. அஷ்டமி, நவமி, மரணயோகம் என்பதும் பாதிக்காது. விதிவிலக்கு. சிலர் நவமிக்கு நவநாழிகைதான் (ஒன்பது நாழிகை) மூன்று மணி நேரம், 36 நிமிஷம் வரைதான் தோஷம். அதன்பிறகு சுபகாரியம் செய்யலாம் என்றும் ஒருவிதிவிலக்கு உண்டு என்பார்கள். இதற்கு ஜோதிட ஆதாரம் உண்டு. ஆக, எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு. அதைத் தெளிவாகத் தெரிந்து கடைப்பிடிக்க வேண்டும்.
பெயர்:...
என் மகனுக்கு களஸ்திர தோஷம் உண்டு என்கிறார்கள். அதனால் திருமணம் தாமதமாகத்தான் செய்யவேண்டும் என்பது உண்மையா? எப்போது செய்ய லாம்?
மகன் ஜாதகத்தில் லக்னத்துக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதோடு, 7-ல் சனி, சுக்கிரன் இருப்பதும் களஸ்திர தோஷம் தான். 30 வயது முடிந்தபிறகு திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். 35 வயதுக்குள் நடக்கலாம். 30 வயதுக்கு முன்பு திருமணம் செய்தால் கண்டிப்பாக இருதார யோகமாகிவிடும். 30 வயது முடிந்தபிறகு கந்தர்வராஜ ஹோமமும், காமோ கர்ஷண ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து விட்டுத் திருமணம் செய்யலாம். 35 வயதுக்குமேல் எந்த பரிகாரமும் தேவையில்லை. அதாவது மருந்துகளுக்கு "எக்ஸ்பயரி டேட்' இருப்பதுபோல தோஷங்களுக்கும் எக்ஸ்பயரி (காலாவதி) உண்டு.
● கந்தசாமி, மதுரை.
ஆனி மாதம் வீடு மாறலாம் என்று நினைக்கிறேன். சிலர் கூடாது என்கிறார்கள். ஆடி மாதம் பிறப் பதற்குள் மாறலாம் என்று விரும்புகிறேன்.
12 மாதங்களில் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களும் வாஸ்து புருஷன் கண் விழிப்பதில்லை. வீடு, மனை, கட்டடம் ஆரம்பிக்கவும், கிரகப்பிரவேசம் செய்யவும், பால் காய்ச்சவும் மேற்கண்ட நான்கு மாதங்களும் ஆகாது. வாஸ்து என்ற கிரகம் தான் வீடு சம்பந்தமான எல்லாக் காரியங்களுக்கும் உரிய தேவதை! அவர் கண் விழிப் போடு இருக்கும் மாதங்களில் தான் வீடு, மனை சம்பந்தப் பட்ட காரியங்கள் செய்ய வேண்டும். ஆடி மாதம் 11-ஆம் தேதி வாஸ்து நாள் இரண்டு நாழிகை. காலை 6.48 மணிமுதல் ஒன்றரை மணி நேரம். எனவே ஆடியில் வீடு மாறலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். ஆனி கூடாது. அடுத்து ஆவணியில் 6-ஆம் தேதி 21 நாழிகை வாஸ்து கண் விழிப்பு என்று ஒருசில பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும். காலண்டரிலும் குறிப்பிட்டிருக்கும். அது தவறு. ஆவணி 6-ஆம் தேதி ஒரு நாழிகைதான் வாஸ்து கண்விழிப்பு நேரம். அதாவது காலை 6.24 மணியிலிருந்து ஒன்றரை மணி நேரம். (காலை 754 மணி வரை). சமஸ்கிருதத்தில் (வடமொழியில்) இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யும்போது 1 நாழிகை என்பதை 21 நாழிகை என்று தவறாகக் கணக்கிட்டு ஆரம்பத்தில் அச்சிட்டுவிட்டார்கள். அதை அப்படியே பின்னாளில் "ஈயடிச்சான் காப்பி' என்பதுபோல மற்றவர்களும் பிழையாகவே குறித்துவிட்டார்கள். இது எனது ஜோதிட குருநாதர் கூறிய பாடம்; ஆதாரம்! எட்டு மாதத்திலும் வாஸ்து பகல் 12.00 மணிக்கு முன்புதான் கண்விழிக்கிறது. சித்திரை 10-ஆம் தேதி- 5 நாழிகை, வைகாசி 21-ஆம் தேதி- 8 நாழிகை, ஆடி மாதம் 11-ஆம் தேதி- 2 நாழிகை, ஐப்பசி மாதம் 11-ஆம் தேதி- 2 நாழிகை, கார்த்திகை மாதம் 8-ஆம் தேதி- 10 நாழிகை, தை மாதம் 12-ஆம் தேதி- 8 நாழிகை, மாசி மாதம் 22-ஆம் தேதி- 8 நாழிகை என்பதுபோல. ஆவணி மாதம் 6-ஆம் தேதி 1 நாழிகைதான் வாஸ்து கண்விழிப்பு. (21) நாழிகை என்பதும் பிற்பகல் 2 மணி 24 நிமிஷம் என்பதும் தவறு. ஸ்ரீரங்கம், மருத்துவக்குடி பஞ்சாங்கங்களில் ஆவணி 6-ஆம் தேதி ஒரு நாழிகை வாஸ்து கண்விழிப்பு என்பதே சரி! அனுஷ்டிக்க வேண்டியது. ஆக ஆவணி 6-ஆம் தேதி காலை 6.24 மணியிலிருந்து (ஒன்றரை மணி நேரம்) காலை 7.53 மணி வரை வாஸ்து நேரம்.