● ஜனனி, (ஊர்?).

எனக்குத் திருமணமாகி மூன்றரை வருடமாகிறது. இரண்டு பெண் குழந் தைகள் உண்டு. காதலித்துத் திருமணம் செய்துகொண்டேன். இப்போது இரு வருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம். மனம் நோகும்படி என் கணவர் பேசு கிறார். இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததும், நான் கருத்தடை செய்துகொண் டேன். மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் என்று அவர் தாயார் (என் மாமி யார்) ஆசைப்பட்டதால் நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். அவர் அம்மா சொல்வதே வேதவாக்கு! என் மூத்த குழந்தையை கணவரும் மாமியாரும் அழைத்துச் சென்றுவிட்டார்கள். என் குழந்தை எப்போது என்னிடம் வருவாள்?

முதுகலைப் பட்டம் பெற்ற நீங்கள் காதலிப் பதற்கு முன்பும், திருமணம் செய்வதற்கு முன்பும் சிந்திக்கத் தவறிவிட்டீர்களே- இப்போது வருந்தி என்ன பயன்? உங்கள் கணவர் ஒரு ராட்சஸசப் பிறவி. அவர் தாயாரும் அதுபோலவே. அந்த ம்மாவுக்கு நீங்கள் காதலித்துத திருமணம் செய்துகொண்டதே பிடிக்கவில்லை. அந்த வஞ்சத்தை மனதில் வைத்துக்கொண்டு இப்போது பழிவாங்கு கிறார். முதலில் ஒரு வேலை தேடுங்கள். அடுத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். அதுவரை தனியாக இருந்து போராடுங்கள். கணவர் திருந்திவந்தால் ஏற்றுக்கொள் ளவும். இல்லாவிட்டால் குழந்தையை வர வழைத்து தனியாக வாழுங்கள். கன்னி என்பதில்லாமல் திருமணமாகிவிட்டது. மலடு என்பதில்லாமல் இரண்டு குழந்தைக்குத் தாயாகிவிட்டீர்கள். இனி என்ன? வேலை கிடைக்க சேலம் மேட்டூர் அருகில் நங்கவள்ளி சென்று லட்சுமிநரசிம்மருக்கு அபிஷேகம் செய்யவும்.

● ஜி. கருப்பையா, பசுபதிபாளையம்.

Advertisment

எனது மகன் ஹரிகி ருஷ்ணனுக்கு 35 வயது நடக்கிறது. திருமணம் எப்போது நடக்கும்?

ஹரிகிருஷ்ணன் கும்ப லக்னம். 7-க்குடைய சூரியன் 8-ல் மறைவு. களஸ்திரகாரகன் சுக்கிரனும் 8-ல் மறைவு, நீசம். குரு பார்வையில்லை. (தனுசு குரு). அதனால் திருமணம் நடப்பதும் பிரச்சினை. திருமணத்துக்குப் பிறகும் பிரச்சினை. ஆகவே செலவைப் பார்க்காமல் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்து, அவருக்கு கலச அபிஷேகம் செய்தால், நீங்கள் விரும்புவதுபோல நல்ல மருமகள் அமைவார். அப்படியே ஹரியின் பெற்றோரும் ஆயுள், ஆரோக்கியம், ஆனந்தம், மனநிறைவுக்காக அபிஷேகம் செய்துகொள்ளலாம். செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு தேதியை நிர்ணயிக் கவும்.

● எம். திருவேங்கடம், பெரம்பூர்.

Advertisment

என் மகன் பாலசுப்ரமணியம் வெளி நாட்டில் இஞ்சினீயராக வேலை பார்க் கிறான். வேறு வேலைக்கு முயற்சிக்கிறான். கிடைக்குமா? அல்லது இருக்கிற வேலை யிலேயே நீடிக்கலாமா?

பாலசுப்ரமணியத்துக்கு மூல நட்சத்திரம். தனுசு ராசி. 2020 வரை ஜென்மச்சனி இருக்கும். வேலையில் திருப்தி இருக்கிறதோ இல்லையோ, நீடிக்கட்டும். 2021 சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு வேறு நல்ல வேலை அமையும்.

● என். சுதா, தஞ்சாவூர்.

என் தம்பி ஒரு மனநோயாளி. 48 வயதா கியும் திருமணம் நடக்கவில்லை. தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். எனக் குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தம்பி எங்களுடன்தான் இருக்கிறான். எந்த வருமானமும் இல்லை. மருந்துச்செலவே மாதம் நாலாயிரம் ரூபாய் ஆகிறது. மேற்கொண்டு என்ன செய்யலாம்?

bb

தம்பி பிரபா கரன் கடக லக்னம், மூல நட்சத்திரம், தனுசு ராசி. 2019 மார்ச்சில் 50 வயது முடிந்து 51 ஆரம்பம். 7-ஆம் இடத்து அதிபதி சனி, ராகு- கேது சம்பந்தம். குருவும் ராகு- கேது சம்பந்தம். திருமண யோகமே இல்லை. 43 வயதுமுதல் ராகு தசை. உடல்நிலைக் கோளாறு- வைத்தியச் செலவு. அவரை ஏதாவது மனநோய்க் காப்பகத்தில் சேர்த்துவிட்டு பராமரிப்புச் செலவுக்கு ஏற்பாடு செய்யலாம்.

● லட்சுமி நாராயணன், புதுச்சேரி.

என் மகன் இமயவரம்பனுக்குப் பணி நிரந்தரம் எப்போது ஏற்படும்? திருமணம் எப்போது நடைபெறும்? நான்கு தலைமுறையாக வாடகை வீடு தான். சொந்த வீடு யோகம் உண்டா? மனை வியை இழந்த நிலையில் (60 வயது தாண்டிவிட்டது) நான்தான் சமையல் செய்கிறேன். மகன் சம்பாத்தியம் வாடகை, மின் கட்டணம், வீட்டுச்செலவுக்கு சரியாகப் போகிறது. இருப்பு எதுவுமில்லை.

மகன் கன்னி ராசி, அஸ்த நட்சத் திரம், ரிஷப லக்னம். அதில் கேது. 7-ல் ராகு. நாகதோஷம் உண்டு. 2-ல் செவ்வாய் 8-ல் உள்ள சனியைப் பார்க்கிறார். அதனால் 30 வயதில்தான் திருமண யோகம். திருவக்கரை வக்கிர காளியம்மனையும், குண்டலினி முனிவர் ஜீவசமாதியையும் நெய் விளக்கேற்றி வழிபட்டால், 27 வயதுக்குமேல் திருமணம் நடக்கலாம். சொந்த வீடு அமைவதும், நல்ல மனைவி அமைவதும் பூர்வபுண்ணிய பாக்கியத்தைப் பொருத்தது.

● ஏ. பழனிகுமார், விழுப்புரம்.

எனக்கு ஜாதகம் இல்லை. பிறந்த தேதியும் தெரியாது. மனைவி பெயர் ரத்தினம். பிறந்த தேதி 5-3-1981. மகன் பரணி 27-1-2008-ல் பிறந்தான். தற்போது எனது மகன் பரணியை, பரணிதரன் என்று கூப்பிடுகிறோம். பள்ளி, ஆதார் கார்டு போன்றவை எல்லாம் பரணிதரன்தான். பெயர் சரியா? திருப்பூரில் 1999 முதல் 2010 வரை வேலை செய்தேன். பிறகு திருப்பூரைவிட்டு குடும்பத்துடன் விழுப் புரம் வந்துவிட்டேன். எனது திருமணம் 27-5-2007-ல் நடந்தது. காதல் திருமணம்- கலப்புத் திருமணம். நிலையான வேலை, நிரந்தரமான வருமானம் எப்போது அமையும்?

பழனிகுமார் மனைவி ரத்தினம் பிறந்த தேதி 5-3-1981. தேதி எண் 5, கூட்டு எண் 4. இரண்டும் யோகமில்லாத எண்கள். திருமணம் நடந்தது; பையன் பிறந்தான் என்ற பலனைவிட வேறு ஒன்றும் சிறப்பாகக் கூறமுடியாது. திருமணத்தேதி எழுதியிருந்தால் தெளிவான பதில் கூறலாம். மகன் பரணி நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னம். 12 வயதுவரை சந்திரதசை- அட்டமாதிபதி தசை. அடுத்துவரும் செவ்வாய் தசை நல்ல தசை. அதுவரை திங்கள்கிழமைதோறும் சிவலிலிங்க அபிஷேகத்துக்கு பால் வாங்கித் தரவும். ஆயுள், படிப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றில் பொதுவாக பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால் குடும்பச் சூழ்நிலையில், தந்தையின் தொழில், சம்பாத்தியம் ஆகியவற்றில் பிரச்சினை நீடிக்கும். நித்திய கண்டம்; பூரண ஆயுசு.

● அண்ணாதுரை, நாமக்கல்.

9-10-2018-ல் வலது கண் (கண்புரை) சம்பந்தமாக ஆபரேஷன் செய்தேன். தற்போது 2019 மார்ச்சில் கண் பார்வை மங்கலாகவும், பாதிப்பாகவும் தெரிகிறது. ஆபரேஷன் செய்த டாக்டரிடம் கேட்ட தற்கு, ""இது ரெட்டினா; கண்ணில் இரத்தக் கசிவு இருக்கலாம்'' என்று கூறுகிறார். மீண்டும் வலது கண்ணில் ஆபரேஷன் தேவைப்படுமா? மருந்தில் குணமாகுமா? இடதுகண் பாதிக்காமல் இருக்குமா?

கண் தொந்தரவுக்கு முறையான சிகிச்சை அவசியம். ஜாதகரீதியான பரிகாரம் மட்டும் போதாது. அரவிந்த் ஆஸ்பத்திரியில் காண்பிக்கலாம்.

● பெயர் இல்லாத நபர்.

எனது அண்ணன் மகளுக்கு இரண்டா வது திருமணம் எப்போது நடைபெறும்? அவள் பெயரிலுள்ள காலிமனையை எப்போது விற்கலாம்? வீடு உள்ளது. நிலைத்து நிற்குமா?

ரகசியமாக இல்லாமல் ஊர், பெயர் எல்லாம் எழுதி கேள்வி கேட்டால்தான் பதில் சொல்லமுடியும்.

● ஜெயஸ்ரீ, சென்னை- 42.

எனக்காகவே வாழும் என் அக்காவுக்கு, லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய கண் நோய்(Antigon Grve Eye Disease) வந்திருக்கிறது. 1-1-2018 முதல் தைராய்டுக்கு சிகிச்சை (ஒருவருடம்) தொடர்ந்து எடுத்தும் குணமாகாமல், ரேடியேஷன் (கதிர்வீச்சு) ட்ரீட்மென்ட் செய்தபிறகு விழிகளை மூடமுடிகிறது. நம் உடலிலுள்ள நன்மை செய்யும் செல்லே தீமை செய்யும் செல்லாக மாறி, முதலில் கண்ணையும், பிறகு மூளையையும், மூன்றாவதாக இதயத்தையும் பாதிக்குமாம். நல்ல வேளையாக மூளையைப் பாதிக்கவில்லை. இப்படி கதிர்வீச்சு சிகிச்சை செய்வதால் பிற்காலம் பக்கவிளைவுகள் உண்டாகுமா? அக்கா மகள் திருமணம் முறிந்த நிலையில், தங்கள் ஆலோசனைப்படி பள்ளத்தூரில் 18 விதமான ஹோமங்கள் செய்தோம். மறுமணம் எப்போது நடக்கும்?

அக்கா கமலவேணிக்கு 59 வயது. அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னம். புதன் தசை, கேது புக்தி. லக்னத்தில் சனி. 7-ல் செவ்வாய், புதன் 2-ல். செவ்வாயின் பார்வை. அக்காவுக்கும் அவர் கணவருக்கும் கண் சம்பந்தமான பீடைகள் இருக்கும். அக்கா ஜாதகத்தில் 9-ல் சிம்மத்தில் ராகு. அவர் கணவர் அண்ணாதுரை ஜாதகத்தில் விருச்சிக லக்னத்தில் ராகு. அவருக்கு சிம்மச் செவ்வாய் பார்வை. இருவருடைய ஜாதகப்படியும் குலதெய்வக் குறையோ அல்லது முன்னோர்கள் வகையில் சாபதோஷமோ இருப்பதாகத் தெரிகிறது. அதை நல்ல கேரள ஜோதிடரிடம் பிரசன்னம் பார்த்து நிவர்த்தி தேடவும். மகள் மாதவி இந்துவுக்கு 2020 தைமுதல் திருமண யோகம். அதாவது 29 வயது முடிந்து 30-ல் நடைபெறும். (ஏற்கெனவே ஹோமம் செய்ததால் 30-ல் திருமணம் கூடும்). வேறு பரிகாரம் தேவையில்லை. ஈரோடு சீதாராம்சாமி அவர்கள் ஓராண்டுக்குமுன்பு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதனால் சந்திக்க அனுமதி இல்லை. இப்போது திடமாக- நலமாக உள்ளார். மீண்டும் அவர்களைச் சந்தித்து ஆசிபெறலாம். (சனிக்கிழமை மட்டும் மௌன விரதம் இருப்பதால் வேண்டாம்).

● த. கார்த்திகா, சென்னிமலை.

எனது பெரியம்மாவின் மகனுக்கு 26 வயது. எப்பொழுது திருமணம் நடைபெறும்? வேலை வாய்ப்பும் சரியில்லை.

சுந்தர் மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், கன்னியா லக்னம். லக்னாதிபதி புதனும் சந்திரனும் பரிவர்த்தனை. லக்னத்தில் குரு நின்று 7-ஆம் இடத்தைப் பார்ப்பதும், ராசியைப் பார்ப்பதும் சிறப்பு! ஆனால் அட்டமாதிபதி செவ்வாயும் கன்னியில் இருப்பது தோஷம். 27 வயது முடிந்தபிறகு 28-க்குமேல் திருமணம் செய்வது நல்லது. 30 வயதில் சுக்கிர தசை வந்தபின் தொழில், வருமானம் திருப்தியாக அமையும். இப்போது கேது தசை சுமார்தான்! ஒருமுறை பிள்ளையார்பட்டிக்குப்போய் கற்பக விநாயகருக்கு அபிஷேகப்பூஜை செய்யவும்.

● ஜி. முத்தராஸ், மதுரா.

எங்கள் மூத்தபிள்ளையின் தொழில், சிறிய பிள்ளையின் அரசு உத்தியோகம், பெண் குழந்தையின் ஆரோக்கியம் எப்படியிருக்கும்?

இவர்களுக்கெல்லாம் பெயர் வைக்கவில்லை? பொதுப்படையாக- அரைகுறையாக எழுதியுள்ளீர்கள். எந்தக் கேள்வியையும் விவரமாக- தெளிவாக எழுதிக்கேட்கவேண்டும். காசோலையில் தொகை, பெயர் எல்லாம் எழுதிவிட்டு, கையெழுத்துப் போடாமல்விட்டால் "செக்' செல்லுமா? மறுபடியும் விவரமாக எழுதுங்கள். மூத்தபிள்ளை, இளைய பிள்ளை என்பது உங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரியுமா?

● டி. கௌசல்யா, வீராச்சி பாளையம்.

நான் பிசியோதெரபி முடித்துள்ளேன். எனக்குத் திருமணம் எப்போது நடைபெறும்? நாகதோஷம், செவ்வாய் தோஷம் என்கிறார்கள். என்ன பரிகாரம் செய்யவேண்டும்? வெள்ளியங்கிரிக்கு மாலைபோடும்போது என் தந்தைக்கு ஏதாவது தடங்கல் அல்லது இறந்தசெய்தி வருகிறது. சமயபுரம் மாரியம்மனுக்கு தேங்காய் உடைத்தபோது அழுகிவிட்டது. என் அத்தை மகன் மூல நட்சத்திரம். எனக்கு அவனைத் திருமணம் செய்து வைக்கப் பார்க்கிறார்கள். அத்தை மகனை எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு அரசு வேலை கிடைக்குமா?

ரிஷப லக்னம், ரிஷப ராசிக்கு 2020 வரை அட்டமச்சனி நடக்கிறது. இது ஆகாத காலம் மட்டுமல்ல; போதாத காலம். (இஹக் பண்ம்ங்). அத்துடன் ராகு தசையும் நடக்கிறது. 19 வயதுமுதல் ராகு தசை 18 வருடம்- 37 வயதுவரை. இப்போது 28 வயதுதான் நடக்கிறது. 30 வயதுவரை திருமணம் பற்றி சிந்திக்க வேண்டாம். நாகதோஷம் உண்டு. உங்கள் அம்மாவிடம் சொல்லி திருமணத்தைத் தள்ளிவைக்கவும். நீங்கள் ரிஷப ராசி. அத்தை மகன் மூல நட்சத்திரம், தனுசு ராசி. 6ஷ்8 சஷ்டாஷ்டக ராசி. எந்த வகையிலும் பொருந்தாது. உங்கள் தாய்- தந்தையரிடம் சொல்லி இந்தப் பொருத்தம் சரிவராது என்று கேன்சல் செய்யவும். இந்த பதிலை அவர்களிடம் படித்துக்காட்டவும். 30 வயது ஆரம்பிக்கும்போது ஒரு பரிகாரம் செய்யவேண்டும். 2020 ஆடியில். அதற்கு செலவாகும். ஹோமம் செய்யவேண்டும். பணம் சேர்த்துவிட்டு கேட்கவும்.