● வி. தங்கம், வேளச்சேரி.
என் மகள் பெயரில், ஒரு உறவினர் ஒரு காலிமனையை ஏமாற்றி விற்றுவிட்டார். அது எப்போது விலைபோகும்? வங்கியில் லோன் வாங்கியதால் மகள் சம்பளம் முழுவதும் கடனுக்குப் போய்விடு கிறது. மகளுக்கு சொந்த வீடு ஒன்று உள்ளது. அது நிலைக்குமா? தாய் பேரில் மாற்றலாமா? மகளுக்குப் பொருந்தும் நட்சத்திரம், ராசி என்ன?
மகள் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். 2022 வரை சூரிய தசை. சூரியன் அட்டமாதிபதி என்றாலும், ராசிநாதன் பாதிக்காது. காலிமனை விற்பனையாக செவலூர் பூமிநாத சுவாமிக்கு வேண்டுதல் செய்து அர்ச்சனை செய்யவும். தொடர்புக்கு: ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863. நேரில் போக முடியாவிட்டால் தபாலில் பணம் அனுப்பவும். விற்பனையானதும் நேரில் போய் ருத்ரஹோமம் வளர்த்து, ருத்ராபி ஷேகம் செய்யவும். வீட்டைக் காப்பாற்றிக் கொள்ளலாம். திருச்சியிலிருந்து பொன்னமராவதி பாதையில் செவலூர் உள்ளது.
● பி. செல்வம், வேளச்சேரி.
2018 ஜனவரி முதல் தைராய்டு சிகிச்சை எடுத்தேன். நவம்பரில் வலது கண் இயற் கைக்கு மாறாக பெரிதாகி, விழிகளை மூடமுடியவில்லை, அசைக்க முடிய வில்லை. ஒரு தனியார் மருத்துவமனை கண் நிபுணரிடம் காண்பித்தபோது, இது லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய கண் நோய் என்றும், நமது உடலில் நன்மை பயக்கக்கூடிய செல் சில நேரங்களில் தீமை செய்யும் (ஆய்ற்ண்ஞ்ங்ய் ஈங்ப்ப்) செல்லாக மாறி, உடலில் ஏதாவது ஒரு பகுதியைத் தாக்கும் என்றும், அது இப்போது கண்களை பாதித்துள்ளது என்றும், இதற்கு மருந்துகள் இல்லையென்றும், கதிர்வீச்சு (தஹக்ண்ஹற்ண்ர்ய்) ஒன்றே சிகிச்சை என்றும்கூறி, தினமும் ஒரு நிமிடம் என்று பத்து நாட்கள் செய்தார்கள். 90 சதவிகிதம் குணம் தெரிகிறது. இது எப்போது முழுமையாக குணமாகும்? கதிர்வீச்சு எடுப்பதால் பிற்காலம் கேன்சர் போன்று பக்கவிளைவு ஏற்படுமோ என்று பயமாக உள்ளது.
வாக்கியப்படி எழுதிய ஜாதகமே சரியானது. திருக்கணிதப்படி நவாம்சத்தில் கிரக நிலை மாறுகிறது. லக்னாதி பதி குரு ஆட்சி என்பதால் பயம் வேண்டாம். ஆயுள் தீர்க்கம். பார்வை பலமாகும். சென்னையிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலை விலுள்ள மதுர மங்கலம் சென்று எம்பார்பெருமானை புனர்பூச நட்சத்திரத்தன்று நெய்தீபமேற்றி பூஜை செய்யவும். மேலும் விவரங்களுக்கு செல்: 98404 61127 அல்லது தொலை பேசி: 044- 2844 0830-ல் தொடர்பு கொள்ளவும். அத்துடன் காஞ்சிபுரத் திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கூரம் சென்று (மினி பஸ் உண்டு) கூரத்தாழ்வார்- பங்கஜவல்லி- ஆதிகேசவப்பெருமாளையும் வழிபடவும். ஞாயிறு உத்தமம்.
● எஸ்.என். மாணிக்கம், திருவள்ளூர்.
என் மகன் ராஜேந்திரகுமார். மூன்று வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தைக்கும் தகப்பனாகிவிட்டான். நாங்கள் கலந்து கொள்ளவில்லை. தொடர்பும் இல்லை. எங்களுக்காக அந்தத் திருமணத்தை ரத்துசெய்துவிட்டு வந்தால் மறுமணம் செய்துவைக்க விரும்புகிறேன். நடக்குமா?
உங்கள் விருப்பத்துக்காக ஒரு பெண் வாழ்க்கையைக் கெடுப்பது நியாயமா? குழந்தை வேறு பிறந்துவிட்டது. மகன் விருப்பப்படி வாழ்ந்து போகட்டும். விருப்ப மிருந்தால் போய்ப்பாருங்கள் அல்லது விலகியே இருங்கள்.
● சாந்தி, நெற்குன்றம்.
தங்கள் அறிவுரைப்படி, என் மகனுக்கு சுந்தரம் குருக்களிடம் பரிகாரம் செய்ய, அவனே சென்று வருகிறேன் என்று கூறுகிறான். பெண்ணிற்கு அவர்கள் வீட்டில் அழைத்துப்போகிறோம் என்று கூறுகி றார்கள். இருவருக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? திருமணத்தேதி 4, 5, 7, 8 கூடாது என்று கூறுவீர்கள். ஆவணி மாதம் 11-ஆம் தேதி (28-8-2019) புதன்கிழமை நன்றாக உள்ளது. என் மகன் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசிக்கு புதன்கிழமை படுபட்சி நாள் என்று படித்தேன். செய்யலாமா? 12-9-2018 வியாழக்கிழமை, ஆவணி 26 நன்றாக உள்ளது. ஆனால் பெண்ணுக்கு சந்திராஷ்டமம். எது உத்தமம்?
மகனுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்ணுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும் பிரதானம். இருவருக்கும் பொதுவாக காமோகர்ஷண ஹோமம் செய்ய வேண்டும். இத்துடன் தன்வந்தரி, நவகிரகம், மிருத்யுஞ்ஜய ஆயுஷ் ஹோமம் உள்பட மொத்தம் 19 வகை ஹோமம் செய்து, பையன்- பெண் இருவருக்கும் புதுஆடை உடுத்தி, கலச அபிஷேகம் செய்ய வேண்டும். அந்த முறை சுந்தரம் குருக்களுக்குத் தெரியும். (செல்: 99942 74067). இல்லாவிட்டால் அங்குபோய் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டால் விவரம் தெரிவிக்கிறேன். 28-8-2019 தேதி நல்லது. 1+3 உத்தமம். வளர்பிறையில்தான் மயிலுக்கு புதன்கிழமை படுபட்சி. 28-8-2019 தேய்பிறை. அதற்கு வெள்ளிக்கிழமைதான் படுபட்சி. 28-8-2019 அமாவாசை. மறுநாள் என்று கடிதத்தில் எழுதியுள்ளீர்கள். அது தவறு. 28-8-2019 தேய்பிறை திரயோதசி. அமாவாசை 29-8-2019 இரவு 7.00 மணிக்குத் தான் வரும். 30-8-2019 தான் அமாவாசை. 12-9-2019 தேதி உத்தமம் என்றாலும், பெண்ணுக்கு கடக ராசிக்கு சந்திராஷ்டமம். வேண்டாம். 1-9-2019 கூட்டு எண் 4 என்பதால் அதுவும் வேண்டாம்.
● காளிதாஸ், பாப்பாகுடி.
எனக்கு 7-6-2016 அன்று திருமணம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. குழந்தை பாக்கியம் எப்போது ஏற்படும்? பரிகாரம் உண்டா?
தேதி எண் 4, 7, 8 என்றாலே பிரச்சினைதான். தேதி எண் 7, கூட்டு எண் 4. ஆகவே அன்று கட்டிய திருமாங்கல்யத்தை உண்டியலில் சேர்த்துவிட்டு, 1, 3, 6 எண் வரும் நாளில் புதுமாங்கல்யம் (மறுமாங்கல்யம்) அணிவிக் கவேண்டும். குழந்தை பாக்கியத்துக்கு ஜாதக த்தை நேரில் எடுத்துவந்து காண்பித்தால் பரிகாரம் சொல்லலாம்.
● அழகர்சாமி, வடமலைக்குறிச்சி.
என்னுடைய திருமணம் 22-2-2013-ல் நடந்தது. மூன்று மாதத்தில் விவாகரத்து ஆகிவிட்டது மறுமணம் எப்போது நடக்கும்?
முந்தைய கேள்விக்கு (காளிதாஸ்) 4, 7, 8-ஆம் தேதி திருமணத் தேதியாக வந்தாலே பிரச்சினை என்று கூறியுள்ளேன். உங்கள் திருமணத்தேதி 4 என்பது ஆகாது. நேரில் வரவும். (முன்பதிவு செய்து வரவும்).
● வெங்கட்ராமன், சென்னை.
புதுவீடு வாங்க பத்திரப்பதிவு ஆனி மாதம் செய்யலாமா?
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களும் வாஸ்து புருஷன் கண்விழிப்பதில்லை. அதனால் மனை, கட்டடம் சம்பந்தமான எந்தக் காரியமும் செய்யக்கூடாது. ஆடி மாதம் கூடாது என்று சிலர் கூறுவார்கள். ஆடியில் 11-ஆம் தேதி வாஸ்து நாள். அத்துடன் 18-ஆம் பெருக்கு. இதில் பத்திரம் பதிய, தச்சுசெய்ய, கட்டட சம்பந்தமான பூமிபூஜை போன்ற காரியங்கள் செய்யலாம்.
● ஜனனி, (ஊர்?).
எனக்குத் திருமணமாகி மூன்றரை வருடமாகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. காதலித்து திருமணம் செய்துகொண்டேன். இப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம். மனம் நோகும்படி என் கணவர் பேசுகிறார். இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததும், நான் கருத்தடை செய்துகொண்டேன். மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் என்று அவர் தாயார் (என் மாமியார்) ஆசைப்பட்டதால் நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். அவர் அம்மா சொல்வதே வேதவாக்கு! என் மூத்த குழந்தையை கணவரும் மாமியாரும் அழைத்துச் சென்றுவிட்டார்கள். என் குழந்தை எப்போது என்னிடம் வருவாள்?
முதுகலைப் பட்டம் பெற்ற நீங்கள் காதலிப்பதற்கு முன்பும், திருமணம் செய்வதற்கு முன்பும் சிந்திக்கத் தவறிவிட்டீர்களே- இப்போது வருந்தி என்ன பயன்? உங்கள் கணவர் ஒரு ராட்சஸசப் பிறவி. அவர் தாயாரும் அதுபோலவே. அந்த அம்மாவுக்கு நீங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டதே பிடிக்கவில்லை. அந்த வஞ்சத்தை மனதில் வைத்துக்கொண்டு இப்போது பழிவாங்குகிறார். முதலில் ஒரு வேலை தேடுங்கள். அடுத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். அதுவரை தனியாக இருந்து போராடுங்கள். கணவர் திருந்திவந்தால் ஏற்றுக்கொளளவும். இல்லாவிட்டால் குழந்தையை வரவழைத்து தனியாக வாழுங்கள். கன்னி என்பதில்லாமல் திருமணமாகிவிட்டது. மலடு என்பதில்லாமல் இரண்டு குழந்தைக்குத் தாயாகிவிட்டீர்கள். இனி என்ன? வேலை கிடைக்க சேலம்- மேட்டூர் அருகில் நங்கவள்ளி சென்று லட்சுமிநரசிம்மருக்கு அபிஷேகம் செய்யவும்.
● ஜி. கருப்பையா, பசுபதிபாளையம்.
எனது மகன் ஹரிகிருஷ்ணனுக்கு 35 வயது நடக்கிறது. திருமணம் எப்போது நடக்கும்?
ஹரிகிருஷ்ணன் கும்ப லக்னம். 7-க்குடைய சூரியன் 8-ல் மறைவு. களஸ்திரகாரகன் சுக்கிரனும் 8-ல் மறைவு, நீசம். குரு பார்வையில்லை. (தனுசு குரு). அதனால் திருமணம் நடப்பதும் பிரச்சினை. திருமணத்துக்குப் பிறகும் பிரச்சினை. ஆகவே செலவைப் பார்க்காமல் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்து, அவருக்கு கலச அபிஷேகம் செய்தால், நீங்கள் விரும்புவதுபோல நல்ல மருமகள் அமைவார். அப்படியே ஹரியின் பெற்றோரும் ஆயுள், ஆரோக்கியம், ஆனந்தம், மனநிறைவுக்காக அபிஷேகம் செய்துகொள்ளலாம். செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு தேதியை நிர்ணயிக்கவும்.