● பகவதி சோமசுந்தரம், ஈரோடு.
எனது மகன் விஜய்க்கு எப்போது திருமணமாகும்? அவன் ஜாதகப்படி தோஷம் உண்டா? எனது கணவர் சோமசுந்தரத்துக்கு ஆரோக்கியம், எதிர்காலம் எப்படியிருக்கும்? எனது ஜாதகப்படி எனது ஆயுள் பலம், மாங் கல்ய பலம் எப்படி உள்ளது? அப்பாவழி சொத்து கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? கடன் எப்போது தீரும்?
பகவதிக்கு கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். 45 வயது. மேஷ லக்னம். லக்னத்தில் குரு இருக்க, செவ்வாய் குருவைப் பார்க்கிறார். குரு 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 47 வயதுவரை புதன் தசை. பிறகு ஏழு வருடம் கேது தசை. (54-க்குமேல் சுக்கிர தசை யோக தசை). ஆயுள் தீர்க்கம், மாங்கல்யம் தீர்க்கம். சுக்கிர தசையில் 55 வயதில் அப்பாவழி சொத்து கிடைக்கும். மகன் விஜய் விருச்சிக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். 28 வயது நடக்கிறது. நாக தோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் இருப்ப தால் 30 வயதில் திருமணம் கூடும். ராமலிங்கம் பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னம். 58 வயது நடப்பு. சுக்கிர தசை 66 வயது வரை நடக்கும். குடும்பத்தில் மூவரும் ஒரே நட்சத்திரம். எனவே பரிகார ஹோமம் செய்துகொள்வது அவசியம். காரைக்குடி சுந்தரம் குருக் களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) ஹோமம் செய்து, மூவரும் கலச அபிஷேகம் செய்து கொள்ளவும். விஜய் திருமணம்- மற்றவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், வாழ்க்கை முன்னேற்றம், வசதி வாய்ப்பு போன்ற எல்லா யோகங்களும் வந்தடையும்.
● கே. கலைமன்னன், சிதம்பரம்.
நான் எம்.ஏ.பி.எட்., படித்துள்ளேன். இதுவரை வேலை இல்லை. மனைவி மணிமேகலை பூச நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னம். இதுவரை எங்களுக்கு குழந்தை யும் இல்லை. என் பெயரை ஃ. தஆஙஆசஒஈஐ நஊகயஆங என்று மாற்றியுள்ளேன். முன்னேற வழிகூறவும்.
உங்கள் திருமணத் தேதி 4, 5, 7, 8 என்றால் வாரிசு தோஷம் வரும். பெயர் மாற்றம் செய்யவும். எதிர்காலம், வேலை, சம்பாத்தியம், வாரிசு யோகத்துக்கும் முன்பதிவு செய்துவிட்டு நேரில் வந்து சந்திக்கவும்.
● பி. நாராயணமூர்த்தி, சென்னை-5.
என் தங்கை மகன் குபேருக்கு எப்போது திருமணம் நடைபெறும்?
குபேர் 42 வயது. சதய நட்சத்திரம், கும்ப ராசி, கும்ப லக்னம். 7-ல் சனி. ராசியை- லக்னத் தை நீச்ச செவ்வாய் (கடகச் செவ்வாய்) பார்க்கிறார்.
சுக்கிரனை கடகச் செவ்வாயும், சிம்மச் சனியும் பார்க் கிறார்கள். திருமணம் கேள்விக்குறிதான். திருமணமாகிப் பிரிந்த பெண் (மறுமணமாக) முடியலாம். அட்டமாதிபதி புதன் தசை நடக்கிறது. நாகதோஷமும் உண்டு. ஆகவே காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் காமோ கர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும், சூலினிதுர்க்கா ஹோமமும், இன்னும் பல ஹோமம் (19 ஹோமம்) செய்து குபேருக்கு கலசஅபிஷேகமும் செய்ய வேண்டும். செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும்.
● சு. தண்டபாணி, திருப்பூர்.
நான் 15 வருடங்களாக "பாலஜோதிட' வாசகன். நீங்கள் எனக்கு மானசீக குரு. என் ஒரே மகள் சௌந்தர்யாவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? அரசு வேலை கிடைக் குமா? ஜாதகத்தில் தோஷம் இருந்தால் பரிகாரம் என்ன? "ஓம் சரவணபவ' இதழில் ஜோதிடக் கட்டுரை எழுதினால் என் போன்றோருக்கு பயன் இருக்கும்.
உங்கள் கோரிக்கையை ஏற்று ஜோதிடக் கட்டுரை எழுதுவேன். சௌந் தர்யாவுக்கு அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னம்! 23 வயது ஆரம்பம். 5-ல் செவ்வாய், ராகு நிற்க, அவர்களை மீனச்சனி பார்ப்பதால் நாகதோஷமும் உண்டு; மாங்கல்ய தோஷமும் உண்டு. செவ்வாய் 7-க்குடையவர். 8-க்குடைய மாங்கல்ய ஸ்தானாதிபதி குரு மகரத்தில் நீசம். என்றாலும், சனி மீனத்தில் பரிவர்த்தனை; நீசபங்கம். 27 வயதில் திருமணம் செய்வது நல்லது. முன்னதாக வேலை கிடைக்கும். ஆனால் அரசு வேலை தாமதமாகும். காத்திருப்பதே பரிகாரம்!
● எஸ்.பி.கே. ஜெயராஜன், கோடாங்கிபட்டி.
சொத்து என்னிடம் உள்ளது. ஆனால் இரண்டு சொத்து கிரயம் செய்து கொடுத்ததாக ஈஸியில் தெரி கிறது. அதனால் தம்பிக்கும் எனக்கும் பாகப்பிரிவினையாவது தடைப்பட்டு விட்டது. இதற்குத் தீர்வு என்ன?
உங்களுக்கு தனுசு லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். 2021- ஜூன்வரை விரயாதிபதி செவ்வாய் தசை. எந்தக் கோவிலுக்குப் போனாலும், பரிகாரம் செய்தாலும் இதற்குத் தீர்வு ஏற்படாது. சட்டரீதியாக நடவடிக்கை எடுங்கள். போலீஸில் புகார் செய்யுங்கள். பத்திர ஆபீசில் நகல் எடுத்து, உங்கள் கையெழுத்தை யார் போட்டது என்று சென்னை ஆபீசுக்கு புகார் செய்து விசாரியுங்கள். செலவாகத்தான் செய்யும். சொத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லை. குற்றம் செய்தவர்களைக் கூண்டிலேற்றி, தண்டனை வாங்கித் தாருங்கள். விசுவாசமான வக்கீலைப் பிடியுங்கள். மகன் அகிலனுக்கு- ரிஷப ராசிக்கு அட்டமச்சனி நடப்பதால், உங்களுக்கு இப்படிப்பட்ட சோதனை வருகிறது. அகிலன் வெளிநாடுபோக யோகமுண்டு.
● தணிகாசலம், விழுப்புரம்.
என் மகன் சற்குருநாதன் பி.ஈ., படித்துள்ளான். அரசு வேலை கிடைக்குமா? வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?
தணிகாசலம் கும்ப ராசி, சதய நட்சத்திரம், துலா லக்னம். 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை. அரசு வேலை சனி தசையில் கிடைக்கும்.
● புஷ்பராணி, விழுப்புரம்.
கடந்த இரண்டு வருடங்களாக சொந்த வீடு வாங்க முயற்சிக்கிறேன். முடியவில்லை. எப்போது அமையும்? அரசு வேலை கிடைக்குமா?
தெளிவான ஜாதகக் குறிப்பு அனுப்பவில்லை என்பதால், சரியான பதில் எழுதமுடியவில்லை. பிறந்தது 1987 ஜுலை எனத் தெரிகிறது. அதன்படி 32 வயது முடியும். 35 வயதுவரை ராகு தசை. எந்த முயற்சியும் கைகூடாது. சொந்த வீட்டுக்கனவு உங்களுக்கா? தகப் பனாருக்கா? உளுந்தூர்பேட்டை வழி ஸ்ரீமுஷ்ணம் சென்று பூவராக சுவாமியைப் பூஜை செய்தால் சொந்த வீடு யோகம் அமையும்.
● அ. சேது, மதுரை.
எனக்கு 3-6-2013-ல் திருமணம் நடந்தது. குடும்பத்தில் மனைவிக்கும் எனக்கும் எப்பொழுதும் பிரச்சினை. நோய், வைத்தியச்செலவு, பொருளா தார நெருக்கடி. எதிர்காலம் எப்படி யிருக்கும்?
சேது பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னம். புதன் தசை நடப்பு. மனைவி ரேகா அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னம். சூரிய தசை நடப்பு. உங்களுக்கு 49 வயது, மனைவிக்கு 27 வயது. இருவருக்கும் 22 வயது வித்தியாசம். மேலும் 21 வயதில் ரேகாவுக்கு திருமணம் நடந்தது தோஷம். அதனால் நீங்கள்தான் மனைவியை அனுசரித்துப் போகவேண்டும். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை. ஈகோ பார்க்க வேண்டாம். பொருத்தம் உள்ளதால் பிரிவினைக்கு இடமில்லை. குற்றம் கண்டுபிடிக்காமல் அன்பு பாராட்டுங்கள்.
● வி. தங்கம், வேளச்சேரி.
என் மகள் பெயரில், ஒரு உறவினர் ஒரு காலிமனையை ஏமாற்றி விற்றுவிட்டார். அது எப்போது விலைபோகும்? வங்கியில் லோன் வாங்கியதால் மகள் சம்பளம் முழுதும் கடனுக்குப் போய்விடுகிறது. மகளுக்கு சொந்த வீடு ஒன்று உள்ளது. அது நிலைக்குமா? தாய் பேரில் மாற்றலாமா? மகளுக்குப் பொருந்தும் நட்சத்திரம், ராசி என்ன?
மகள் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். 2022 வரை சூரிய தசை. சூரியன் அட்டமாதிபதி என்றாலும், ராசிநாதன் பாதிக்காது. காலிமனை விற்பனையாக செவலூர் பூமிநாத சுவாமிக்கு வேண்டுதல் செய்து அர்ச்சனை செய்யவும். தொடர்புக்கு: ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863 நேரில் போக முடியாவிட்டால் தபாலில் பணம் அனுப்பவும். விற்பனையினதும் நேரில்போய் ருத்ரஹோமம் வளர்த்து, ருத்ராபிஷேகம் செய்யவும். வீட்டைக் காப்பாற்றிக்கொள்ளலாம். திருச்சியிலிருந்து பொன்னமராவதி பாதையில் செவலூர் உள்ளது.
● பி. செல்வம், வேளச்சேரி.
2018 ஜனவரி முதல் தைராய்டு சிகிச்சை எடுத்தேன். நவம்பரில் வலது கண் இயற்கைக்கு மாறாக பெரிதாகி, விழிகளை மூடமுடியவில்லை, அசைக்க முடியவில்லை. ஒரு தனியார் மருத்துவமனை கண் நிபுணரிடம் காண்பித்தபோது, இது லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய கண் நோய் என்றும், நமது உடலில் நன்மை பயக்கக்கூடிய செல் சில நேரங்களில் தீமை செய்யும் (ஆய்ற்ண்ஞ்ங்ய் ஈங்ப்ப்) செல்லாக மாறி, உடலில் ஏதாவது ஒரு பகுதியைத் தாக்கும் என்றும், அது இப்போது கண்களை பாதித்துள்ளது என்றும், இதற்கு மருந்துகள் இல்லையென்றும், கதிர்வீச்சு (Radiation)ஒன்றே சிகிச்சை என்றும்கூறி, தினமும் ஒரு நிமிடம் என்று பத்து நாட்கள் செய்தார்கள். 90 சதவிகிதம் குணம் தெரிகிறது. இது எப்போது முழுமையாக குணமாகும்? கதிர்வீச்சு எடுப்பதால் பிற்காலம் கேன்சர் போன்று பக்கவிளைவு ஏற்படுமோ என்று பயமாக உள்ளது.
வாக்கியப்படி எழுதிய ஜாதகமே சரியானது. திருக்கணிதப்படி நவாம்சத்தில் கிரக நிலை மாறுகிறது. லக்னாதிபதி குரு ஆட்சி என்பதால் பயம் வேண்டாம். ஆயுள் தீர்க்கம். பார்வை பலமாகும். சென்னையிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மதுரமங்கலம் சென்று எம்பார்பெருமானை புனர்பூச நட்சத்திரத்தன்று நெய்தீபமேற்றி பூஜை செய்யவும். மேலும் விவரங்களுக்கு செல்: 98404 61127 அல்லது தொலைபேசி: 044- 2844 0830-ல் தொடர்புகொள்ளவும். அத்துடன் காஞ்சிபுரத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கூரம் சென்று (மினி பஸ் உண்டு) கூரத்தாழ்வார்- பங்கஜவல்லி- ஆதிகேசவப்பெருமாளையும் வழிபடவும். ஞாயிறு உத்தமம்.
● எஸ்.என். மாணிக்கம், திருவள்ளூர்.
என் மகன் ராஜேந்திரகுமார். மூன்று வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தைக்கும் தகப்பனாகிவிட்டான். நாங்கள் கலந்துகொள்ளவில்லை. தொடர்பும் இல்லை. எங்களுக்காக அந்தத் திருமணத்தை ரத்துசெய்துவிட்டு வந்தால் மறுமணம் செய்துவைக்க விரும்புகிறேன். நடக்குமா?
உங்கள் விருப்பத்துக்காக ஒரு பெண் வாழ்க்கையைக் கெடுப்பது நியாயமா? குழந்தை வேறு பிறந்துவிட்டது. மகன் விருப்பப்படி வாழ்ந்து போகட்டும். விருப்பமிருந்தால் போய்ப்பாருங்கள் அல்லது விலகியே இருங்கள்.