● கோட்டைச்சாமி, விருதுநகர்.
பங்குனி மாதம் வீடு மாறலாமா? அஸ்திவாரம் போடலாமா?
12 ராசிகளும் 12 மாதங்கள். 12 கட்டத்தில் நான்கு மூலை இடங்கள் உபய ராசிகள் எனப்படும். அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை! இந்த நான்கு மாதங்களும் வாஸ்து புருஷன் கண் விழிப்பதில்லை. பூமி சம்பந்தமான, கட்டட சம்பந்தமான தேவதை வாஸ்து புருஷன் கண் விழிக்காமல் உறங்கிக்கொண்டிருக்கும் காலங்கள் மேற்படி கட்டட காரியங்களையும், தச்சு செய்வது, நிலைவைப்பது, வீடு மாறுவது, கிரகப்பிரவேசம் செய்வது போன்ற காரியங் களையும் செய்யக்கூடாது. ஆடிமாதம் அவற்றைச் செய்யலாம். ஆனால் ஆனி கூடாது. அதேபோல வீட்டில் குடும்பத் தலைவி கர்ப்பமாக இருக்கும்போதும் மேற்படி காரியங்களைச் செய்யக்கூடாது. எனது நண்பர் ஒருவர் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, தன் தந்தை மாடியில் குடியிருப்பதற்காக மாடியில் ஒரு அறை (ரூம்) கட்டினார். அங்கு அவர் குடியேறியதும் அந்தப் பெண்ணின் கர்ப்பம் கலைந்துவிட்டது. இப்படி அனுபவப் பூர்வமான சா
● கோட்டைச்சாமி, விருதுநகர்.
பங்குனி மாதம் வீடு மாறலாமா? அஸ்திவாரம் போடலாமா?
12 ராசிகளும் 12 மாதங்கள். 12 கட்டத்தில் நான்கு மூலை இடங்கள் உபய ராசிகள் எனப்படும். அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை! இந்த நான்கு மாதங்களும் வாஸ்து புருஷன் கண் விழிப்பதில்லை. பூமி சம்பந்தமான, கட்டட சம்பந்தமான தேவதை வாஸ்து புருஷன் கண் விழிக்காமல் உறங்கிக்கொண்டிருக்கும் காலங்கள் மேற்படி கட்டட காரியங்களையும், தச்சு செய்வது, நிலைவைப்பது, வீடு மாறுவது, கிரகப்பிரவேசம் செய்வது போன்ற காரியங் களையும் செய்யக்கூடாது. ஆடிமாதம் அவற்றைச் செய்யலாம். ஆனால் ஆனி கூடாது. அதேபோல வீட்டில் குடும்பத் தலைவி கர்ப்பமாக இருக்கும்போதும் மேற்படி காரியங்களைச் செய்யக்கூடாது. எனது நண்பர் ஒருவர் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, தன் தந்தை மாடியில் குடியிருப்பதற்காக மாடியில் ஒரு அறை (ரூம்) கட்டினார். அங்கு அவர் குடியேறியதும் அந்தப் பெண்ணின் கர்ப்பம் கலைந்துவிட்டது. இப்படி அனுபவப் பூர்வமான சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் உண்டு. அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்க்கை வளமாக அமையும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
● எஸ். பத்மா, சென்னை-15.
எனது சகோதரனுக்கு 2015 டிசம் பரிலிருந்து சனி தசை நடக்கிறது. நோய் வாய்ப்பட்டு பிழைத்ததே தெய்வச்செயல்! எப்பொழுது முழு குணமடைவான்? கல்யாணமாகி ஐந்து வயதில் பெண் குழந்தை உண்டு.
நாராயணன் சித்திரை நட்சத்திரம், துலா ராசி, சிம்ம லக்னம். அதற்கு சனி தசை- 6-க்கு டைய தசை. அத்துடன் நான்காவது தசை மாரக தசையாகும். குரு பார்வை இல்லை. எனவே காரைக்குடி அருகில் சுந்தரம் குருக் களை சந்தித்து 19 வகையான ஹோமம் செய்து, குடும்பத்தார் அனைவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். இதில் ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம், குழந்தை படிப்பு, ஆண் வாரிசு, கடன் நிவர்த்தி எல்லாம் அடங்கும். தொடர்புக்கு, செல்: 99942 74067.
● எஸ். லட்சுமணன், போரூர்.
என் எதிர்காலம், மனைவி கவிதாவின் குடும்ப ஒற்றுமை, சொந்த வீடு யோகம், மகள் சாதனா மேற்படிப்பு, மகன் இராமபாலன் படிப்பு, எதிர்காலம் ஆகியவற்றை விளக்கவும்.
ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த நினைக்கிறீர்கள். பரவாயில்லை. லட்சு மணனுக்கு ரிஷப ராசி. 2020 வரை அட்டமச் சனி. எதிர்நீச்சல் போட வேண்டும். கவிதா வுக்கு லக்னரீதியாக ஜென்மச்சனி. சாதனா வுக்கும் தனுசு லக்னத்திற்கு ஜென்மச்சனி. இராமபாலனுக்கு ரிஷப லக்னம், மகர ராசி. லக்னத்துக்கு அட்டமச்சனி, ராசிக்கும் அட்டமச்சனி. இப்படி எல்லாருக்கும் சனி பாதிப்பு இருப்பதால் எதுவுமே செயலாகாது. செலவைப் பார்க்காமல் சுந்தரம் குருக்களிடம் காரைக்குடியில் 19 ஹோமம் செய்து, குடும்பத்தார் அனைவரும் கலச அபிஷேகம் செய்துகொண்டால் ஆயுள், ஆரோக்கியம், பிள்ளைகள் படிப்பு, எல்லாம் தெளிவாகும். தொடர்புக்கு, செல்: 99942 74067.
● இ. இரவி, சென்னை.
எனக்கு நடுக்க வியாதி உள்ளது. எண்ற்ள்-க்கு மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். என்னால் பஸ், கார், டிரெயினில் பயணம் செய்ய முடியவில்லை. மூக்கடைப்பும் உள்ளது. இதெல்லாம் குணமாகுமா? ஆயுள் எவ்வளவு? ஒரு ஜோதிடர் எனது ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, "குரு, சந்திரன், செவ்வாய் மிகப்பெரிய துரோகிகள் என்ப தால், கோவிலுக்குச் சென்றாலும் அவர் களை வணங்கக்கூடாது. திரும்பிப்பார்க்க வேண்டாம்' என்றார். உண்மையா? என்ன தொழில் செய்யலாம்? ஜோதிடம் கற்றுச் சொல்லலாமா? வீடு கட்டுவேனா? பிள்ளைகள் இல்லை. கடைசிக்காலம் எப்படியிருக்கும்?
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
ரிஷப லக்னம். அதில் வக்ர குரு. சித்திரை நட்சத்திரம், துலா ராசி. 6-ல் சந்திரன். அவருக்கு கடகச் செவ்வாயின் பார்வை. அத்துடன் 10-ல் சனி வக்ரம். அவருக்கும் செவ்வாய் பார்வை. தற்போது சனி தசை. இதுமுடியும்வரை நோய்த் தொல்லை, நரம்புத் தளர்ச்சி, வைத்தியச்செலவு சிகிச்சை தொடரும். சென்னை பல்லாவரம் அருகில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சனீஸ்வரப் பிரீதி கோவில். அங்கு சனிக்கிழமை சென்று வழிபாடு செய்யவும். அத்துடன் காரைக்குடி அருகில் ஒற்றை சனீஸ்வரர் கோவில் சென்று அல்லது திருத்துறைப்பூண்டி அருகில் திருக் கொள்ளிக்காடு சென்று கலப்பை ஏந்திய சனீஸ்வரரையும் வழிபடலாம்.
● ஜி. மாரிமுத்து, சென்னை.
எனக்கு உடல்நிலை சரியில்லை. எப்போது சரியாகும்? பெயர் மாற்றம் தேவையா? 1-12-2018 முதல் 18-3-2019 வரை 108 நாள் ஏ. ஙஆஆதஒஙமபஐம என்று 37-ல் பெயர் மாற்றம் செய்து, எழுதி முடித்துவிட்டேன். ஜோதிடக்கலையை முழுவதும் கற்றுக்கொள்ள ஆர்வமுடை யவனாக இருக்கிறேன். ஜோதிடம் வருமா?
மிதுன லக்னம், கன்னி ராசி, சித்திரை 1-ஆம் பாதம். புதன் நீசபங்க ராஜயோகம் என்பதால் ஜோதிடக்கலை சிறப்பாக வரும். வாக்குப் பலிதமும் உண்டாகும். சென்னையில் விஜய்பாலாவைத் தொடர்புகொண்டு, அவர் தந்தை எழுதிய ஜோதிடப் புத்தகம் வாங்கிப் படிக்கவும். தொடர்புக்கு, செல்: 98410 40251.