● சண்முகம், காரைக்குடி.
ஒழுக்கம் முக்கியமா? பக்தி முக்கியமா? பக்தி வேடத்தில் உள்ள பல காவி கட்டியவர்கள் பெண்கள் வகையில் ஒழுக்கக் குறைவாக உள்ளனரே! ஏன்?
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்று வள்ளுவரே சொல்லியுள்ளார். காமமும் கோபமும் மனிதனை கீழே தள்ளிவிடும். இந்த இரண்டையும் வென்றவர்கள் உயர்ந்த மகான்களாக மதிக்கப்படுவார்கள். மகாத்மா காந்தியடிகளும் காஞ்சி மகாப்பெரியவரும் சத்தியசீலர்கள். அரச பதவியைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்ட விசுவாமித்திரர்கூட காமத்தில் வீழ்ந்து மேனகை வசப்பட்டு சகுந்தலையைப் பெற்றெடுத்தார். எத்த னையோ ஞானிகளும் தவசீலர்களும் இருப்பதால்தான் பாரதம் இன்னும் அழியாமல் இருக்கிறது. ஞானம் வேண்டி ஒழுக்கமாக வாழ்ந்தாலே எல்லாரும் வணங்கத்தக்க தெய்வமாகலாம். சங்கரர், இராமகிருஷ்ணர், விவேகா னந்தர், வள்ளலார் போன்றவர்கள் எல்லாம் இந்த வரிசை யில் வைத்துப் போற்றத்தக்க வர்கள்தான்.
● ராமசாமி, தேவகோட்டை.
ஜோதிடம் முக்கியத்து வமா? கைரேகை முக்கி யத்துவமா?
ஜோதிடம், கைரேகை, ஏடு, நாடி சாஸ்திரம், அருள்வாக்கு, குறி, ஆரூடம், முத்துப் போட்டு (சோழி) பார்ப்பது எல்லாம் ஒருதாய் மக்கள்தான். அவரவர் எதிர்காலத்தைக் கோடிட்டு உணர்த்தும் வழிகாட்டியாகும். எல்லாமே தெய்வீகக்கலை. ஆனால் அதை சிலர் வியாபார நோக் கோடு பரிகாரம் கூறி பணம் பறிப்பதே கொள்கையாக வாழ்வார்கள். சிலர் உண்மை யாக தெய்வத்தொண்டாக மதித்து செயல்படுவார்கள். எல்லாவற்றிலும் அசலும் உண்டு; போலியும் உண்டு. எது அசல்? எது போலி என்று தெரிந்து, தெளிந்து, பின்பற்றுவதே புத்திசாலிகளின் கடமை! வாக்குச்சீட்டு (ஓட்டு உரிமை) விற்பனைக் கல்ல என்றாலும், 200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கும் ஆசைப்பட்டு நேர்மையாளர்களைத் தோற் கடித்து, ஊழல்வாதிகளை மக்கள் தேர்ந் தெடுக்கிறார்களே! ஆக, இதில் ஏமாற்றுவது யார்? ஏமாறுவது யார்? ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்களும் கொடி கட்டி கோஷம் போடத்தான் செய்வார்கள். விழிப்புணர்வோடு வாழ்வதே ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும்.
● வெங்கடாசலம், கோவை.
என் வயது 40. இதுவரை குழந்தை

என் வயது 40. இதுவரை குழந்தை இல்லை. இனிமேல் குழந்தை பாக்கியம் உண்டா? மனைவி ஜாதகமும் அனுப்பி யுள்ளேன்.
உங்கள் ஜாதகப்படி எந்த தோஷமும் இல்லை. ஆனால் உங்கள் மனைவி ஜாதகத்தில் புத்திர தோஷம் உண்டு. மனைவியின் ஜாதகத்தில் 5-ஆம் இடம் கர்ப்ப ஸ்தானம், 9-ஆம் இடம் வாரிசு ஸ்தானம். 5-ல் ராகு- கேது, சனி சம்பந்தம் இருப்பதால் கர்ப்பம் தரிப்பதும் நிலைப்பதும் பிரச்சினைக்குரிய சமாச்சாரம்! எனவே திருக்கருகாவூர் சென்று கர்ப்பரட்சகாம்பிகை சந்நிதியில் நெய் படிபூஜை செய்து, அந்த நெய்யை வாங்கிவந்து கணவரும் மனைவியும் 48 நாள் தொடர்ந்து ஒரு வேளை சாப்பிட வேண்டும். அதற்கு முன்ன தாக சந்தானபரமேஸ்வர ஹோமமும், சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும், சந்தான கணபதி ஹோமமும் செய்து தம்பதிகள் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். அத்துடன் கும்பகோணம் அருகில் குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு அபிஷேக பூஜை செய்ய வேண்டும். 40 வயது என்பது வாரிசுக்கு ஒரு தடையல்ல. 60 வயதிலும் அப்பா ஆனவர்கள் உண்டு.
● ரெங்கநாதன், உடுமலைப்பேட்டை.
"பிறக்கும்போதே அவனவன் தலையில் பிரம்மா தலையெழுத்தை எழுதிவிடு கிறான்' என்று சொல்லுகிறார்கள். அதேபோல "எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும்' என்று பகவத் கீதையில் கண்ணபரமாத்மா கூறியிருப்ப தாகவும் சொல்லுகிறார்கள். அப்படி யிருக்கும்போது ஜாதகம் என்றும், பரிகார பூஜை என்றும் ஏன் நேரத்தையும் பணத்தை யும் வீணாக்க வேண்டும்? சொர்க்கம் என்றும், நரகம் என்றும் சொல்லி மக்களை ஏன் மடையர்களாக்க வேண்டும்?
அறியாத குழந்தைக்கு இரட்டைக் கண்ணன் வருகிறான் என்றும், பூனை வருகிறது என்றும் பயமுறுத்தி தாய் சோறு ஊட்டு கிறாளே- அது ஏன்? அந்த பய உணர்விலேயே அந்த குழந்தை அதிகமாக சாப்பிட வேண்டு மென்பது தாயின் விருப்பம். சொர்க்கம்- நரகம் உண்மையா? பொய்யா என்ற ஆராய்ச்சி அவசியமில்லை. நல்லது செய்தால் சொர்க்கம்; கெட்டது செய்தால் நரகம் என்று ஒரு பயமுறுத்தல் இருந்தால், அதை நினைத்தாவது கெட்டது செய்ய மனிதன் அஞ்சுவான் என்பது ஒரு கணக்கு! மனசாட்சிக்கு பயந்து நடப்பவனுக்கு நரகமும் சொர்க்கமாகிவிடும்! இன்று யார் மனசாட்சிக்கு பயப்பட்டு ஒழுக்கமாக வாழ் கிறார்கள்? குடிபோதையில் தெருவில் போகிறவர்களையெல்லாம் திட்டியும், கத்தியைக் காட்டி மிரட்டியும் ரகளை செய்யும் ரௌடி, போலீஸ் வேன் வந்ததும் ஆர்ப்பாட்த்தைக் கைவிட்டு அமைதியாக ஒதுங்கிப்போகி றானே- அது ஏன்? அவனுக்கு போலீஸ் என்ற பயம்! போதையெல்லாம் இறங்கிவிடுகிறதே! மாணவனுக்கு வாத்தியாரிடம் பயம் அல்லது பரீட்சை பயம்! மகனுக்கு கண்டிப்பான தந்தையிடம் பயம். பணம் பதுக்கி வைத் திருப்பவனுக்கு திருடனை நினைத்து பயம்! அப்பாவி மக்களுக்கு முரட்டு அரசியல் ரௌடிகளிடம் பயம்! எலிக்கு பூனையிடம் பயம். பூனைக்கு நாயிடம் பயம்! நாய்க்கு புலியிடம் பயம். இப்படி ஏதாவது ஒரு பயத் திலேதான் வாழ்க்கை ஓடுகிறது. நல்ல மனைவி- மக்கள் அடங்கிய வாழ்க்கையே ஒரு சொர்க்கம்தான். நடத்தை கெட்ட மனைவி யும், குடிகாரக் கணவனும், அவப் பெயருக்கு ஆளாக்கும் பிள்ளையும் அமைந்து விட்டால் நரகம்தான். இவற்றைத் தெரிந்து, தெளிந்து, புரிந்து, இன்பமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கும், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தத்துவத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் நமக்கு வழிகாட்டியாக இருப் பது ஜாதகம், பரிகாரம், தெய்வ நம்பிக்கை! தவறு செய்கிறவனுக்கு நீதிபதி தண்டனை விதிப்பது அவனைத் திருத்துவதற்காகத்தானே தவிர, தண்டித்து பழிவாங்குவதற்கல்ல! கொள்ளையனாகத் திரிந்த ரட்சகன் வால் மீகியானார். காமுகனாக அலைந்தவன் அருண கிரிநாதராகி திருப்புகழ் பாடினார். போரில் கொடூரக்கொலைகாரனாக இருந்த மன்னன்- அசோகராக மாறி புத்தமதத்தைப் பரப்பினார். இவர்கள் வரலாறு எல்லாம் நமக்குப் பாடம் புகட்டும் போதனையல்லவா! பத்து அடி நீளமுள்ள கயிற்றில், ஒரு கம்பில் கட்டியுள்ள மாடு பத்து அடிக்குள் போடப்பட்ட புல்லைத் தின்னலாம். அந்த மாடு அந்தக் கம்பைச் சுற்றிச் சுற்றி வந்து, பத்து அடி நீளத்தை ஐந்து அடியாக சுருட்டிக் குறைத்துக்கொண்டால் ஆறு அடியில் உள்ள புல் அதற்கு எட்டாது. அந்த சுற்றியுள்ள நீளத்தை (கயிற்றை) எடுத்துவிடுவது பரிகாரம்! ஆறு அடியல்ல- பத்து அடிவரை உள்ள புல்லையும் அது சாப் பிடமுடியும் என்று உணர்த்துவது ஜாதகம்! பிறக்கும்போது எல்லாப் பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளே. பட்டுக்கோட்டையார் பாடிய மாதிரி. "மனிதன் பிறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது; அவன் நல்லவனாவதும் வல்லவனாவதும் பொல்லாத வனாவதும் வளரும் வகையில்தான். (வளர்ப் பில்). அதற்கு வழிகாட்டுவது ஜோதிடம்!
● அந்தோணிராஜ், திண்டுக்கல்.
நான் கிறிஸ்துவன். ஒரு இந்துப் பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டேன். அவள் சர்ச்சுக்கு வரப் பிரியப் படவில்லை. நான் இந்துக் கோவில்களுக் குப்போக விருப்பமில்லை. என்ன முடிவு?
இந்தப் பிரச்சினையை திருமணத்துக்கு முன்பு யோசித்து முடிவெடுத்திருக்க வேண்டும். கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வ தால் என்ன பயன்? ஒன்று நீங்கள் இந்துவாக மாறவேண்டும் அல்லது உங்கள் மனைவியை கிறிஸ்துவராக மதம் மாறச்செய்ய வேண்டும். பக்குவமாகப் பேசி சமாதானப்படுத்திதான் காரியம் சாதிக்க வேண்டும். எதிர்காலத்தில் உங்களுக்கு குழந்தைகள் பிறந்துவிட்டால், அவர்கள் நிலையும், திருமண வாழ்க்கையும் எப்படி அமையும் என்பதை சிந்தியுங்கள். எல்லா மதமும் ஒன்றுதான். எல்லா தெய்வமும் ஒன்றுதான். மனிதர்கள்தான் பாகுபாடு பார்க்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வெங்காய வியாபாரி நண்பர் இந்து. அவர் மனைவி கிறிஸ்துவ மதம். நாளடைவில் அவரும் கிறிஸ்துவ சமயத்துக்கு மாறிவிட்டார்.
● கோட்டைச்சாமி, விருதுநகர்.
பங்குனி மாதம் வீடு மாறலாமா? அஸ்திவாரம் போடலாமா?
12 ராசிகளும் 12 மாதங்கள். 12 கட்டத்தில் நான்கு மூலை இடங்கள் உபய ராசிகள் எனப்படும். அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை! இந்த நான்கு மாதங்களும் வாஸ்து புருஷன் கண் விழிப்பதில்லை. பூமி சம்பந்தமான, கட்டட சம்பந்தமான தேவதை வாஸ்து புருஷன் கண் விழிக்காமல் உறங்கிக்கொண்டிருக்கும் காலங்கள் மேற்படி கட்டட காரியங்களையும், தச்சு செய்வது, நிலைவைப்பது, வீடு மாறுவது, கிரகப்பிரவேசம் செய்வது போன்ற காரியங்களையும் செய்யக்கூடாது. ஆடிமாதம் அவற்றைச் செய்யலாம். ஆனால் ஆனி கூடாது. அதேபோல வீட்டில் குடும்பத்தலைவி கர்ப்பமாக இருக்கும்போதும் மேற்படி காரியங்களைச் செய்யக்கூடாது. எனது நண்பர் ஒருவர் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, தன் தந்தை மாடியில் குடியிருப்பதற்காக மாடியில் ஒரு அறை (ரூம்) கட்டினார். அங்கு அவர் குடியேறியதும் அந்தப் பெண்ணின் கர்ப்பம் கலைந்துவிட்டது. இப்படி அனுபவப் பூர்வமான சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் உண்டு. அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்க்கை வளமாக அமையும்.
_____________
சந்திராஷ்டம தினங்கள்
மேஷம்: 21-4-2019 பகல் 1.30 மணிமுதல் 23-4-2019 இரவு 8.30 மணிவரை சந்திராஷ்டமம். சொந்தம், சுற்றம், பங்காளி வகையிலும், உறவினர் வகையிலும் சங்கடங்களையும் சஞ்சலங்களையும், சந்திக்கநேரும். செய்முறைச் செலவு, விரயச்செலவு போன்றவை ஏற்படலாம். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் இருந்துவரும் சச்சரவுகள் விலகும். சில நேரம் எதிர்மறை வாக்குவாதங்கள் தோன்றினாலும், பொறுமை காத்து நடப்பது அவசியம். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முருகப் பெருமானை வழிபடவும். சண்முகப்பதிகம் பாராயணம் செய்யவும்.
ரிஷபம்: 23-4-2019 இரவு 8.30 மணிமுதல் 25-4-2019 பின்னிரவு 5.50 மணிவரை சந்திராஷ்டமம். எந்தவொரு பிரச்சினையிலும் முடிவெடுக்க முடியாத குழப்ப சூழ்நிலை உருவாகலாம். தகப்பனார் அல்லது பூர்வீகச் சொத்துவகையில் பிரச்சினைகள் தோன்றும். தொழில்துறையில் புதிய மாற்றங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. உடன்பிறந்தோரிடையே அமைதி காத்து நடந்தால் சண்டை சச்சரவுக்கு இடமிருக்காது. பழகிய நண்பர்களால் வருத்தங்கள் நேரலாம். தாயார் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். எதிலும் வீண்விவாதம் செய்வதைவிட்டு செயல்பாட்டில் கவனம் செலுத்தவும். காலபைரவரை வழிபடவும்.
மிதுனம்: 25-4-2019 பின்னிரவு 5.50 மணிமுதல் 28-4-2019 மாலை 5.00 மணிவரை சந்திராஷ்டமம். பழகியவர்களே ஏமாற்றி நம்பிக்கைத் துரோகம், இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல், சிரமங்கள் ஏற்படும். சிலர் தொழில் முன்னேற்றத்துக்காக கடன் வயப்படலாம். மனைவி, பிள்ளைகள் வகையில் கோபப்படாமல் நிதானத்துடன் அரவணைத்துச்செல்லப் பழகவும். சிலர் வேலை நிமித்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளலாம். அது ஆதாயமும் தரும். நண்பர்களின் ஆதரவு இருப்பதால் மன தைரியம் ஏற்படும். மேலதிகாரிகளின் தொந்தரவை சகித்துக்கொண்டால் நற்பெயர் எடுக்கலாம். லட்சுமி நாராயணரை வழிபடவும்.