● கே. சாந்தகுமாரி, நெற்குன்றம்.

என் மகன் பிரகாஷ் திருமணம் நடந்து நான் காவது வருடம் நடக்கிறது. மகன்- மருமகள் இருவருக் கும் அடிக்கடி சண்டை, சச்சரவு ஓயவில்லை. குழந்தை பாக்கியமும் இல்லை. திருமணத் தேதி 30-11-2015. என் கணவர் இறந்துவிட்டார். நான் ஒருத்திதான். மருமகளுக்கும் கொஞ்சம் மனநிலை பாதிப்பு உள்ளது. வைத்தியம் பார்க்கிறோம். அவர்கள் எப்போது மகிழ்ச்சி யாக இருப்பார்கள்? எப்போது வாரிசு கிடைக்கும்?

Advertisment

பிரகாஷ் (மகன்) உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னம். 31 வயது. மருமகள் புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னம். 25 வயது. திருமணத் தேதி கூட்டு எண் 4 குற்றமானது. அத்துடன் மரு மகளுக்கு நாகதோஷம் இருப்ப தோடு, துலா லக்னத்துக்கு கணவன் ஸ்தானம் 7-ஆம் இடத்தை செவ்வாய், சனி பார்ப்பது தோஷம். தாம்பத்திய ஒற்றுமை இருக்காது. லக்னத்தில் உள்ள குருவும் 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் 27 வயது முடிந்து 30-க்குள் திருமணம் செய்திருந்தால் சந்தோஷம் நிலைத்திருக்கும். 21 வயதிலேயே திருமணம் நடந்தது சரியல்ல. 2015-ல் கட்டிய தாலியை உண்டி யலில் செலுத்தியோ அல்லது அதை அழித்தோ மறுதாலி கட்டவும். தேதி எண்ணும் கூட்டு எண்ணும் 1, 3, 6 வரும் தேதியில் மறுமாங்கல்யம் கட்டவேண்டும். அதற்குமுன்னதாக காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் புனர்விவாக ஹோமம், சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபால ஹோமம் உட்பட 19 வகை யான ஹோமம் செய்து, இருவருக்கும் கலச அபிஷேகம் செய்ய வேண்டும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும். இருவருக்கும் சந்திராஷ்டமம் வராத நாளில் ஹோமம், மறுமணம் செய்யவேண்டும்.

● நிர்மலா விஜயராகவன், சேலம்.

இன்றுவரை தங்கள் அறிவுரைப்படிதான் நடந்து வருகிறேன். இப்போதும் உங்கள் நல்ல அறிவுரை அல்லது ஆலோசனையை விரும்புகிறேன். என் மகனுக்கு ஒரு பெண் ஜாதகம் வந்தது. 10-க்கு ஒன்பது பொருத்தம் என்று ஜோதிடர்கள் சொன்னதை நம்பி, அந்தப் பெண்ணை உறுதிசெய்துவிட்டோம். டிப்ளமோ எலக்ட்ரானிக் சிவில் இன்ஜினீயரிங் பாடத் தில் ஐந்து அரியர்ஸ் உள்ளது என்று சொன்னார்கள். இப்போது 15 அரியர்ஸ் என்கிறார்கள். என் பையன், "பொய் சொல்லிவிட்டார்கள்; வேண்டாம்' என்கிறான். எனக்குக் குழப்பமாக உள்ளது. உங்கள் முடிவு என்ன?

பையன் கௌதம் அனுஷ நட்சத்திரம், கடக ராசி. திருமணப் பொருத்தத்தில் ஒன்பது பொருத்தம் இருந்தாலும் கிரகப் பொருத்தம் இல்லை. எனவே இந்த சம்பந்தம் அமைய வாய்ப்பில்லை. பெண்ணுக்கு 21 வயதுதான் நடக்கிறது. நாகதோஷம் இருப்பதால் 23 வயதுக்குமேல்தான் திருமண யோகம். பொறுமையாக இருக்கவும்.

● ஏ.ஆர். சஞ்சய், கூட்டேரிப்பட்டு.

Advertisment

என் மகன் கோகுல் படிப்பில் மந்தமாக இருக் கிறான். அவன் பிறந்தது முதல் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. எப்போது அடைபடும்?

கோகுல் புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னம். 2021 டிசம்பர் வரை அட்டமாதிபதி தசை. குரு தசை நடக்கிறது- 12 வயதுவரை. 2020 வரை அட்டமச்சனியும் நடக்கிறது. இதற்குப் பிறகு படிப்பில் ஆர்வம், முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். தகப்பனாருக்கும் கடன் படிப்படியாகக் குறையும். ஒருமுறை கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று வழிபட்டுவரவும். 11 திங்கட்கிழமை அர்ச்சனைக்கு பணம் செலுத்தி ஏற்பாடுசெய்து, ரிணவிமோசனப் பதிகம் வாங்கிவந்து தினசரி படிக்கவும். அத்துடன் 19 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம்கட்டி, சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து தீபமேற்றி வரவும். (அடுத்த சனிப்பெயர்ச்சிவரை.)

● சி. செங்குட்டுவன், புதுச்சேரி.

என் மகன் சிவன்மொழியின் திருமணம் எப்போது நடைபெறும்?

உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னம். 7-க்குடைய சூரியனும், 11-க்குடைய குருவும் பரிவர்த்தனை என்றாலும், சூரியன், ராகு- கேது சம்பந்தம் பெறுவதால் 30 வயதில் தான் திருமண யோகம் அமையும். காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வ ராஜ ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் 29-வயதில் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. (நடப்பு 28 வயது.) காரைக்குடி சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும்.

● ஏ. மாலதி, தூத்துக்குடி.

Advertisment

mஎன் அண்ணன் கார்த்திக்கிற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. திருமணமும் தடைப் படுகிறது. என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

2019 ஆவணியில் 28 வயது முடியும். துலா லக்னம். 3-ல் ராகு- சனி சேர்க்கை. மிதுன ராசிக்கு 7-ல் ராகு- ராசியில் கேது. நாகதோஷமும், களஸ்திர தோஷமும் உண்டு. 30 வயது முடிந்தபிறகு திருமணம் செய்வது நல்லது. 34 வயதுவரை குரு தசை- 6-க்குடைய தசை என்பதால் வைத் தியச்செலவு, நோய், கடன், போட்டி, பொறாமை எல்லாம் இருக்கும். தன்வந்திரி பகவானுக்கு அபிஷேக பூஜைசெய்து வழிபடவும்.

● லட்சுமி சிவசுப்பிரமணியன், வேளச்சேரி.

என் மகன் சிவராமகிருஷ்ணன் சாஃட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான். வேலை பிடிக்க வில்லை என்று எம்.பி.ஏ. படித்து, வேறு வேலைக்குச் செல்ல முயற் சிக்கிறான். அவன் எதிர்பார்க்கும் வேலை கிடைக்குமா? வேலையை விட்டுவிட்டு படிக் கப்போவானா?

திருமணம் எப்போது நடை பெறும்? சிவராம கிருஷ்ணன் கடக லக்னம், ரிஷப ராசி. 2020 டிசம்பர்வரை அட்டமச் சனி. 2015 முதல் ராகு தசை! எனவே எல்லா முயற்சிகளும் தடையும் தாமதமுமாக ஏமாற்றம் தரும். 2020 சனிப் பெயர்ச்சியாக வேண்டும்.

● ஸ்ரீரெங்கராஜன், திருச்சி-3.

தங்களின் எழுத்துகளைப் படித்து நிறைய ஜோதிட விஷயங்களையும், சூட்சுமங்களையும் புரிந்துகொண்டேன். தங்களால் உருவாக்கப்பட்டவன். தாங்கள் இருக்கும் திசை நோக்கி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 25 ஆண்டுகளாக தனிப் பயிற்சி மையம் நடத்தி கல்விப்பணியாற்றி வருகிறேன். 2009 ஆகஸ்டில் தொடங்கிய சனி தசையிலிருந்து ஜோதிடத்தில் அபரி மிதமான ஈர்ப்பு ஏற்பட்டு, தற்போது ஜோதிட ஆராய்ச்சி செய்து வருகிறேன். அடியேனை சீடனாக ஏற்று, ஜோதிடப் பிதாமகனான தாங்கள் அருளாசி வழங்கி ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன்.

துரோணரை மானசீக குருவாகப் போற்றி ஏகலைவன், அர்ஜுனனையும் மிஞ்சிய வில்வித்தை வீரனாக மாறியதுபோல, உங்கள் குருபக்தியும், விசுவாசமும், ஜோதிட ஆர்வமும் எல்லாரும் பாராட்டும் ஜோதிடக் களஞ்சிய மாக உங்களை உருவாக்கும் என்று வாழ்த்து கிறேன்! தோல்விகளைக்கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்சி செய்வது வெற்றிக்கு வழியமைக்கும்.

● என். பிரியா, வல்லம்.

தங்களின் வழிகாட்டுதலின்படி என் மகளை பி.ஏ. (ஆங்கிலம்) படிக்கவைத் தபிறகு, ஐ.ஏ.எஸ் பயிற்சியில் சேர்க்க முடி வெடுத்துள்ளோம். இப்பொழுது பி.ஏ. முதல் வருடம் பயின்று வருகிறாள். பி.ஏ. முடித்ததும் ஐ.ஏ.எஸ். எழுதலாமா? அல்லது எம்.ஏ. முடிக்க வேண்டுமா? படிப்பில் சில தடைகள் ஏற்படுகின்றன. பரிகாரம் வேண்டு மா? திருமணம் எப்போது நடக்கும்?

மகள் தேவியின் படிப்பு, எதிர்காலம் பற்றி ஏற்கெனவே 24-3-2017-ல் "பாலஜோதிடம்' இதழில் பதில் கூறியிருக்கிறேன். படிப்பில் தடை நீங்கி ஆர்வமாகப் படிக்கவும், லட்சியம் ஈடேறவும் காரைக்குடியில் சுந்தரம் குருக்களைக் தொடர்புகொண்டு ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலுசரசுவதி ஹோமம், வாக்வாதினி ஹோமம் முதலியவை செய்து, தேவிக்கு கலச அபிஷேகம் செய்யலாம். செல்: 99942 74067. தேவிக்கு இப்போது 18 வயதுதான். 25 வயதுவரை சுக்கிர தசை. இதன் பிறகு சூரிய தசையில் ஐ.ஏ.எஸ். ஆனபிறகு திருமணம் செய்வது நல்லது. மிதுன லக்னத்தில் ராகு, 7-ல் கேது இருப்பது மாங்கல்ய தோஷம். 7-க்குடைய குருவும் 12-ல் மறைவு. எனவே 27 வயது அல்லது அதன்பிறகு திருமண முயற்சிகள் செய்யலாம். தற்போது படிப்பு, பட்டம், அரசு வேலைதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த ஹோமம் அதற்கு வழியமைத்துத் துணைபுரியும்.

● ஜானகி இராமகிருஷ்ணன், சென்னை-64.

எனது கணவர் சமீபத்தில் புதிய கம்பெனியில் சேர்ந்தார். அங்கு சில பிரச் சினைகளை சந்திப்பதாகவும், வேறு வேலை பார்க்கப் போவதாகவும் கூறுகிறார். அதிக மாக கோபம் வருகிறது. இதே பணியில் இருப்பாரா? வேலை மாறுவாரா? பரிகார பூஜை எதுவும் தேவையா?

இராமகிருஷ்ணன் ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னம். சிம்ம லக்னம் அல்லது சிம்ம ராசி என்றாலே கோபம் வரத்தானே செய்யும்! கோட்சாரரீதியாக குரு கடக ராசிக்கு 6-ல் ஆட்சி, மறைவு. என்றாலும் ராசிக்கு 10-ஆம் இடத்தை- மேஷத்தைப் பார்ப்பதால் வேலையை விட்டுவிட மாட்டார். 2011 முதல் 2026 வரை சந்திர தசை. அது லக்னத்துக்கு 12-க்குடைய தசை என்பதால், வேலை மாற்றத்தை விரும்புகிறார். 2023-ல் அட்டமச்சனி வரும்போது சந்திர தசை சந்திப்பு ஏற்படும். அப்போது வேலை மாற்றம் வரும். அந்த நேரம் மகன் சிவசைலநாதனுக்கும் கடக ராசிக்கு அட்டமச்சனி நடக்கும். அப்போது அவனுக்கும் பள்ளி மாற்றம் வரும். தகப்ப னாருக்கு வேலை மாற்றம் வரும். அக்காலம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலையில், பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதைக் கோட் டைவிடும் சூழ்நிலையை சமாளிக்க ஹோமம் செய்து, குடும்பத்துடன் கலச அபிஷேகம் செய்து கொள்வது அவசியம்! அதில், பையன் படிப்பு தடையில்லாமல் முன்னேறவும், குடும்பத் தாரின் ஆரோக்கியத்துக்கும் சேர்த்து 19 அல்லது 21 ஹோமம் செய்ய வேண்டும். காரைக்குடி சுந்தரம் குருக்களை, செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யலாம். அதுவரை தற்காலிக சாந்திக்கு திங்கட்கிழமைதோறும் சிவலிங்க அபிஷேகத்துக்கு பால் வாங்கித்தரவும்.

● மகேஷ், கோவை.

மகள் பாமினி மக நட்சத்திரம், சிம்ம ராசி. தாங்கள் கூறியபடி லண்டனில் வேலை பார்க்கிறாள். 2020 செப்டம்பர்வரை அங்கு வேலை உண்டு. அதன்பிறகும் அங்கு வேலை தொடருமா? அல்லது இந்தியா திரும்புவாளா? என் பேரன் பிரவீன் 2019 மே வரை சந்திர தசை, சனி புக்தி. அடுத்து புதன் புக்தி எப்படி இருக்கும்?

மகள் பாமினிக்கு 2020 கடைசியில் சனிப்பெயர்ச்சியானதும், வெளிநாட்டிலிருந்து தாய்நாடு வந்துவிடுவார். பேரனுக்கு சந்திர தசை முடியும்வரை சளித்தொல்லை இருக்கும். திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யவும். பாமினி ஜென்ம நட்சத்திரத்தன்று மாதந்தோறும் தன்வந்திரி பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்.

● சு. வெங்கட்ராமன், அம்பத்தூர்.

என் மகன் கணேஷ்ராம் பி.ஈ., படித்து முடித்து பத்து வருடங்களாகின்றன. இன்னமும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. வீட்டில்தான் இருக்கிறான். எப்போது வேலை கிடைக்கும்? அடிக்கடி உடல்நிலையும் சரியில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

கணேஷ்ராம் மிருகசீரிட நட்சத்திரம், தனுசு லக்னம், ரிஷப ராசி. 2020 டிசம்பர் வரை அட்டமச்சனி நடக்கும். 35 வயது நடக்கிறது. நல்ல வேலை அமையவும், திருமணம் நடக்கவும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்யவும். அதில், உடல் ஆரோக்கியத்துக்கு தன்வந்திரி ஹோமமும் சேர்த்துச் செய்வார்கள். 9-க்குடைய சூரியன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். தாயும் தந்தையும் சம்பாதித்து, ஒரே மகனை சுகவாசியாக்கிவிட்டீர்கள் என்று சொல்லுவதா? சோம்பேறியாக்கிவிட்டீர்கள் என்று சொல்லுவதா? வேலை, வருமானம் இல்லாதவருக்கு யார் பெண் தருவார்கள்? சிந்தியுங்கள். ஹோமம் ஒன்றே விமோசனம்!

● நோபன் ஸ்ரீபதி, விழுப்புரம்.

கடந்த ஐந்து வருடங்களாக மிகுந்த பணக்கஷ்டம். அதனால் மனக்கஷ்டம். தாயாருக்கு ஆரோக்கியம் பாதிப்பு. இதற்கு தீர்வு என்ன?

விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சிவரை இந்த கஷ்டம் தொடரும். 27 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி காலபைரவர் சந்நிதியில் சனிக்கிழமைதோறும் நெய்யில் தீபமேற்றவும்.