● ஆர். ரேணுகா, குரோம்பேட்டை.
எனக்கு இரைப்பையில் கேன்சர் உள்ளது என்றும், அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனது ஆயுள்பலம் எவ்வளவு? குழந்தைகள் இல்லை. தீவிர பெருமாள் பக்தை! இருந்தாலும் அவஸ் தைப்படுகிறேன். அளவுக்குமீறி சாமி கும்பிடுவது சோதனையா?
பள்ளிக்கூடம் சென்று படிப்பவனுக் குத்தானே பரீட்சை வைக்கமுடியும். படிக்காதவனுக்கு பரீட்சை தேவையா? சாமி கும்பிட்டால் சோதனை வரத்தானே செய்யும். உங்கள் பக்தி உண்மையா, பொய்யா என்பது தெரிய வேண்டாமா? ரமண மகரிஷிக்கும், இராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் நோயும் அவஸ்தையும் வரவில்லையா? அவர்கள் பக்தியில்லாதவர்களா? சரீரம் வேறு; ஆத்மா வேறு! மேஷ லக்னத்தை 7-ல் உள்ள குரு பார்ப்பது ஆயுள் தீர்க்கம். லக்னத்தில் சனி நீசம் என்பதால் கேன்சர். ஒரு டாக்டருக்கு பதில் பல டாக்டர்களை சந்தித்து பரிசோதனை செய்து, வைத்திய சிகிச்சை மேற்கொள்ளவும். வைத்தீஸ்வரன்கோவில் சென்று அபிஷேக பூஜை செய்துவிட்டு அறுவை சிகிச்சை செய்யலாம். பூரண குணம் அடைந்த பிறகு கேரள மாநிலம், ஷோரனூர் செல்லும்வழியில் அஞ்சுமூர்த்தி க்ஷேத்திரம் சென்று அபிஷேக பூஜை செய்யவும். முன்னதாக காணிக்கை எடுத்து வைக்கவும்.
● எம். முரளி மாடசாமி, பருத்திப்பாடு.
எனக்கு எந்த நட்சத்திரம், எந்த ராசிப் பெண் பொருத்தமாக இருக்கும்?
முரளி மாடசாமி அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி. இதற்குப் பொருந்தாத நட்சத்திரம் அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி. ஒரே ரஜ்ஜு சேராது. விருச்சிக ராசியும் கன்னி ராசியும் சஷ்டாஷ்டக ராசி; சேராது. சுவாதி, அஸ்தம் (எருமை) பகை யோனி; சேராது. புனர்பூசம், திருவோணம் வதை தாரை; சேராது. உங்களுக்கு வரும் பெண் ஜாதகம் மேற்கண்டவற்றில் இருந்தால் திருப்பிக்கொடுத்துவிட்டு வேறு ஜாதகங்களைப் பொருத்தம் பார்க்கலாம்.
● மயில்வாகனன், தேனி.
தாங்கள் 6-4-2018-ல் கூறிய பலன்கள் அப்படியே நடந்தன. கடனில் 60 சதவிகிதம் அடைத்தேன். உறவுகள் பகை. தினமும் விநாயகரை வழிபடுகிறேன். கேது தசையில் விடிவு ஏற்படுமா?
கேது தசை பாதிக்குமேல் ஆனதால் இனி பயமில்லை. தொடர்ந்து விநாயகர் கவசம் படிக்கவும். (வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க என்று தொடங்கும்.) 2022-ல் கேது தசை முடியும். தூறல் நின்றுவிடும். தேனி அருகில் கோடாங்கிப்பட்டியில் சித்திரகுப்தருக்கு தனிச்சந்நிதி உண்டு. கேதுவுக்கு அதிதேவதை விநாயகர். இங்கு ஆபத்திலிருந்து காக்கும் விநாயகர் சந்நிதியும் உண்டு. (தீர்த்தத்தொட்டி ஸ்டாப்.) சித்திரப்பிள்ளை, செல்: 98426 94379-ல் தொடர்புகொண்டு ஒருமுறை அபிஷேக பூஜை செய்துவிட்டு, வாராவாரம் போய் தரிசனம் செய்யவும். படிப்படியாகப் பொருளாதார முன்னேற்றம் தெரியும்.
● ஏ.எல். அழகப்பன், பிள்ளையார்பட்டி.
"ஜெனனம்- ஜென்ம சௌக் யானாம்' என்று ஆனபிறகு அவரவர் கர்மாவுக்குத் தக்கபடிதான் கிரகம் பலன் தரப்போகிறது. இதில் குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி என்று ஏன் ஊரை ஏமாற்றுகிறீர்கள்? அவரவர் விதி அவரவர் வாழ்க்கை! பிறகு ஏன் தசாபுக்தி என்றும், கோட்சாரம் என்றும் குண்டுவிடுகிறீர்கள்? கண்ணன் கூறிய கர்மவினைதானே வாழ்க்கை! கர்மவினைதானே வாழ்க்கை என்பது உங்கள் புத்திக்கு தெரிகிறது. இந்த அறிவு உங்களுடைய 15 வயதில் உதயமாயிற்றா? வயது முதிர்வு நிலையில் தானே புரிகிறது; கேள்வி கேட்கத் தோன்றுகிறது. கணிதம் படிக்கும் மாண வனிடம் கம்ப்யூட்டர் அல்லது அல்ஜீப்ரா மேத்தமேடிக்ஸ் சொன்னால் புரியும். காய்கறி விற்கும் பெண் மணியிடம் சொன்னால் புரியுமா?
தீவிரவாதிகள் எல்லாம் பணத்துக்கு அடிமையாகி குண்டுவெடிப்பு நடத்தி ஏன் ஒன்றுமறியாத அப்பாவி மனித உயிர்களை பலியாக்குகிறார்கள்? அந்த மரமண்டைகளுக்கு ஆடு, கோழி, மாடுகளைப் பலிகொள்வதற்கும் மனித உயிர்களை பலிகொள்வதற்கும் வேறுபாடு, வித்தியாசம் தெரிய வில்லையே. இதற்கு விளக்கம் சொன்னால் புரியுமா? பகுத்தறி வில்லாத பைத்தியக்காரனுக்கும் போதை தலைக்கேறி தடுமாறுபவர் களுக்கும் இதன் தத்துவம் புரியுமா? சுட்ட சட்டி கறிச்சுவை அறியுமா? இவையெல்லாம் உங்களுக்கு விளங்க வேண்டுமென்றால் போதி மரத்தடியில் புத்தர் தவம் இருந்தமாதிரி தவமிருக்க வேண்டும்.
● எஸ். காமராஜ், கொராட்டூர்.
மத்திய அரசுப்பணியில் 41 ஆண்டு பணிசெய்து ஓய்வுபெற்றேன். பணவசதி இல்லாத காரணத்தால் பி.யு.ஸிக்குமேல் படிக்க முடியவில்லை. பணியில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க முயன்றும் முழுமை யடையவில்லை. தங்களைப் போன்ற ஜோதிட மேதைகளின் கட்டுரைகளையும் நூல்களையும் அவ்வப்போது படிப்பதால் ஜோதிட ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த வயதில் அது சாத்தியமா? அஞ்சல் வழி ஜோதிடம் படிக்கலாமா?
விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம், கன்னி லக்னம். 10-க்குடைய புதன் 9-ல் இருப் பதும், ராசிக்கு 7-ல் கேந்திரம் பெறுவதும் ஜோதிடப் புலமைக்குத் துணைபுரியும். ஜோதிடக்கலை பயில வயது ஒரு தடையல்ல! ஆர்வம், அக்கறை, விடாமுயற்சி இருந்தால் போதும். ஜோதிடப் பலன் சொல்லி சம்பாத்தியம் செய்வதைவிட முதலில் நமக்கு ஆத்மதிருப்தி உண்டாகும். மனப்பக்குவம் உண்டாகும். சென்னையில் சூளைமேடு பஜனை கோவில் தெருவில், (யுனிவர்சல் ரிசர்ச் அகாடமி' பி.எஸ்.பி. விஜய்பாலாவை அலைபேசி: 98410 40251-ல் தொடர்புகொள்ளவும். பல ஜோதிடக் கலைஞர்களை உருவாக்கிய ஸ்தாபனம்.
● அ. சாந்தி, குடியாத்தம்.
எனது மகள் அபிராமி வேலை யில் இருக்கிறாள். திருமண ஏற்பாடு செய்யும்போது தான் விரும்பும் பையனையே திருமணம் செய்வேன் என்கிறாள். அவள் ஜாதக அமைப்பு எப்படி உள்ளது?
சிம்ம லக்னம். லக்னத்துக்கு 7-ல் சனி. கடக ராசி. ராசிக்கு 8-ல் சனி. செவ்வாய் 4-ல் ஆட்சிபெற்று குரு சேர்க்கை இருந் தாலும், அவரை சனி பார்க்க- சனியை செவ்வாய் பார்ப்பதால், ஜாதகப்படி கலப்புத் திருமணம், காதல் திருமணம் என்பதுதான் விதி. ராசியை குரு பார்ப்பதால் அவர் விருப்பம் தெளிவாகத்தான் இருக்கும். அவர் இஷ்டத்துக்கு பச்சைக்கொடி காட்டலாம். ஜாதகப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை.