● ஏ. தணிகாசலம், விழுப்புரம்.
1980-ல் இருந்து உங்கள் ரசிகன். நாங் கள் எங்களுடைய பூர்வீகச் சொத்தை விற்று என்னுடைய பெயரில் அல்லது மனைவி பெயரில் சொத்து வாங்கலாமா? என் மகனின் எதிர்காலம் எப்படியிருக்கும்? எங்களைக் காப்பாற்றுவானா?
தணிகாசலத்துக்கு 66 வயது முடிந்து 67 ஆரம்பிக்கப்போகிறது. துலா ராசி, சுவாதி நட்சத்திரம். 2020 மே வரை புதன் தசை. புதன் மீனத்தில் நீசம்! புதன், கும்ப லக்னத்துக்கு 5, 8-க்குடையவர் என்பதால் சொத்துப் பரிவர்த்தனை செய்யலாம். 8-ஆம் இடம் என்பது 9-ஆம் இடம் பூர்வபுண்ணிய ஸ்தா னத்துக்கு விரய ஸ்தானம். சிலர் 5-ஆம் இடமும் பூர்வபுண்ணிய ஸ்தானம் என்பார்கள். அதற்கு டைய புதன் 2-ல் நீசம்! அதனால் ஒரு சொத்தை விற்று இன்னொரு சொத்து வாங்கலாம். உங்கள் பேரிலும் வாங்கலாம், மனைவி பேரிலும் வாங்கலாம். எந்தத் தடையும் இல்லை. மகன் சற்குருநாதன் துலா லக்னம். நீங்கள் துலா ராசி. தந்தை- மகன் ஆதரவும் உறவும் கடைசிவரை நன்றாக இருக்கும். கவலை வேண்டாம்.
● எஸ். கோபாலகிருஷ்ணன், திருவாரூர்.
தாங்கள் எனது ஆன்மிக குரு! தங்களின் தீவிர வாசகன். தங்களின் பதில்கள் நெற்றி யடியாக இருந்தாலும் துல்லியமாக இருக்கும். எனது மகன் சத்தியஸ்ரீ உடல் நிலை, ஆரோக்கியம், ஆயுள்பலம், எதிர் காலம், திருமணம் போன்ற விவரங்களைக் கூறவும்.
சத்தியஸ்ரீ விருச்சிக லக்னம், விசாக நட்சத்திரம், துலா ராசி. 24 வயது நடப்பு. 33 வயது வரை சனி தசை. கும்பத்தில் ஆட்சி. 10-க்குடைய சூரியன் 2-ல் குருவுடன் சம்பந்தம். 10-ஆம் இடத்துக்கு குரு பார்வை. அரசு உத்தியோகம் அமையும். 27 வயது முடிந்தபிறகு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். அடுத்து வரும் புதன் தசையும் யோக தசைதான். ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம்! திருவாரூர்- தஞ்சை பாதையில் சாலியமங்கலம் வழி ஆவூர் சென்று பஞ்சபைரவருக்கு அஷ்டமி அல்லது சனிக்கிழமையன்று வழிபாடு செய்யவும். சனி இனியவராக நற்பலன் தருவார்.
● எஸ். சரஸ்வதி, கிருஷ்ணகிரி.
தங்களின் அறிவுரைப்படி என் பேத்தி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, நல்ல கம்பெனியில் வேலையில் அமர்ந்து, பேரும்புகழும் அடைந்து வருகிறாள். அடுத்து திருமணம் பற்றிக் கேட்டபோது 27 வயது முடியட்டும் என்றீர்கள். இப்போது 26 வயது. உற்றார்- உறவினர்களுக்கு பதில் சொல்ல முடிய வில்லை. எங்கள் மனம் குளிரும்படி நல்ல பதில் கூறவும்.
சிவரஞ்சனி துலா லக்னம். 2-ல் ராகு, 8-ல் கேது. 5-ல் சனி. மாங்கல்ய தோஷம் உண்டு. வாரிசு தோஷமும் உண்டு. 2019 டிசம்பரில் 26 வயது முடியும். அந்த மாதம் அவள் ஜென்ம நட்சத்திரத்தன்று (31-12-2019 செவ்வாய்க்கிழமை, பகல் 12 மணிக்குமேல் சுவாதி, மறுநாள் 1-1-2020 புதன் கிழமை பகல் 12.00 மணிவரை இருக்கும். இதில் தலைகுளிக்காத நாளாக சுத்தமாக இருந்தால்) காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) தோஷ நிவர்த்திக்கும், நல்ல கணவர் அமையவும், நல்ல மணவாழ்க்கை அமையவும், நல்ல வாரிசு உண்டாகவும் 23 வகையான ஹோமம் செய்ய வேண்டும். அத்துடன் 2-ஆவது பேத்தி ஹரிதாவுக்கும் சேர்த்து ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்யலாம். உத்தியோக உயர்வு, நல்ல மணவாழ்க்கைக்கும் சங்கல்பம் செய்யலாம். மேலும் 3-ஆவது பேத்தி அம்ருதாவுக்கும், 4-ஆவது பேரன்ஹரிஹரசு தனுக்கும் சேர்த்து தடையில்லாத படிப்பு, பட்டம், முன்னேற்றம் தரும் வேலைவாய்ப்பு, எதிர்கால மேன்மை எல்லாவற்றுக்கும் சேர்த்து, ஒரே செலவில் ஹோமம் செய்து பெற்றோர் உள்பட எல்லாருக்கும் கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம்.இவற்றுடன், பேத்திகளின் திருமணத்தைப் பார்க்குமளவு உங்களுக்கு ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம் வேண்டி சங்கல்பம் செய்து கொள்ளலாம். எல்லாருக்கும் உகந்த நாளில் ஹோமம் ஏற்பாடு செய்யலாம். அப்போது தொலைபேசியில் தொடர்புகொள்ளவும்.
● எம். சிவசக்தி முருகன், பருத்திப்பாடு.
எனக்கு இரண்டு திருமணம் என்கிறார் கள். அதை நிவர்த்திசெய்ய பரிகாரம் உண்டா?
திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னம். 7-ல் சனி, சூரியன், புதன் இருப்பதால் களஸ்திர தோஷம். சுக்கிரன் 6-ல் மறைவு. இப்போது 25 வயது ஆரம்பம். (மார்ச்). 27 வயது முடிந்து திருமணம் செய்தால் (30 வயதில்) தாரதோஷம் விலகும். 27 வயது முடிவில் தோஷப் பரிகார ஹோமம் செய்து அபிஷேகம் செய்தால் 28-ல் திருமணம் செய்யலாம்.
● ஏ. ஜானகி, ராமாபுரம்.
என் மகன் சங்கரன் உத்திரட்டாதி நட்சத்திரம். ஒரு பெண்ணை விரும்புகிறான். பெண் ஆயில்ய நட்சத்திரம். அது மாமியாருக்கு ஆகாது என்கிறார்கள் தோஷமா?
இருவரும் ஒரே லக்னம் (மகரம்) என்பதா லும், ஆண் மீன ராசியும், பெண் கடக ராசியும் திரிகோண ராசி என்பதாலும் பயப்படத் தேவையில்லை. உங்களுக்கு மூட்டுவலி என்பதால் பயணம் செய்ய முடியாது என்றால், உங்கள் மகன்- அவர் விரும்பும் பெண் இருவரையும் காரைக் குடியில் சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்ய அனுப்பலாம். அவர்களுடன் பெண்ணின் பெற்றோர்கள் போகலாம். உங்களுக்கு தலையில் தெளிக்க பாட்டிலில் தீர்த்தம் கொண்டு போகலாம். சமுத்திர ஸ்நானம் (பரிகார பூஜை) செய்வதென்றால் காசி, ராமேஸ்வரம் போகலாம். வசதியில்லை என்றோ, உடல் நலம் ஒத்துழைக்காது என்றோ உள்ளூர் கண்மாயில் அல்லது குளத்தில் குளித்தால் சரியாகுமா? பிளாட்பாரத்தில் உள்ள கடை யிலும் உணவு விற்கிறார்கள். சாதாரண ஹோட் டல்களிலும், ஏ.ஸி. ஸ்டார் ஹோட்டல்களிலும் உணவு கிடைக்கும். அவரவர் தகுதி, தராதரம் என்று ஒன்று இருக்கிறதே. அங்கேதானே உணவு எடுத்துக்கொள்ளமுடியும்? சிறு நோய் என்றால் உள்ளூர் வைத்தியரிடம் சிகிச்சை செய்யலாம். ஹார்ட் ஆபரேஷன், கேன்சர் ட்ரீட்மென்ட், மேஜர் சர்ஜரி என்றால் அப்பல்லோ, அடையார் மருத்துவமனை போன்ற பெரிய ஆஸ்பத்திரியில்தானே பார்க்க முடியும். 48 நாள் விரதமிருந்து சபரிமலைக்கு பம்பைவழி பாதயாத்திரை போவதற்கு பலன் உண்டு. இயலாதவர்கள் என்று உள்ளூர் அய்யப் பனுக்கு இருமுடி கட்டி பூஜைசெய்ய முடியுமா? ஆதிசங்கரர்மாதிரி ஞானிகள், சித்தர்கள் இறைவனைத் தேடிப் போக வேண்டாம். அவர்களைத் தேடி இறைவன் வருவான். ஆதிசங்கரரே ஒவ்வொரு எல்லைக்கும் இமயமலைவரை போனவர் தானே! செலவுக்கு பயந்து மூட்டுவலி அதுஇது என்று சாக்கு சொல்லக்கூடாது. காசிக்குப்போயும் கருமம் தொலையாதது மாதிரி ஆகிவிடும். குடும்பமே தோஷமாகி இருக்கிறது. அதை முறையாகப் போக்கி நல்லது நடக்க வேண்டுமென்றால் ஹோமம் செய்துகொள்ளுங்கள்.
● ஆர். ரேணுகா, குரோம்பேட்டை.
எனக்கு இரைப்பையில் கேன்சர் உள்ளது என்றும், அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனது ஆயுள்பலம் எவ்வளவு? குழந்தைகள் இல்லை. தீவிர பெருமாள் பக்தை! இருந்தாலும் அவஸ்தைப்படுகிறேன். அளவுக்குமீறி சாமி கும்பிடுவது சோதனையா?
பள்ளிக்கூடம் சென்று படிப்பவனுக்குத்தானே பரீட்சை வைக்கமுடியும். படிக்காதவனுக்கு பரீட்சை தேவையா? சாமி கும்பிட்டால் சோதனை வரத்தானே செய்யும். உங்கள் பக்தி உண்மையா, பொய்யா என்பது தெரிய வேண்டாமா? ரமண மகரிஷிக்கும், இராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் நோயும் அவஸ்தையும் வரவில்லையா? அவர்கள் பக்தியில்லாதவர்களா? சரீரம் வேறு; ஆத்மா வேறு! மேஷ லக்னத்தை 7-ல் உள்ள குரு பார்ப்பது ஆயுள் தீர்க்கம். லக்னத்தில் சனி நீசம் என்பதால் கேன்சர். ஒரு டாக்டருக்கு பதில் பல டாக்டர்களை சந்தித்து பரிசோதனை செய்து, வைத்திய சிகிச்சை மேற்கொள்ளவும். வைத்தீஸ்வரன்கோவில் சென்று அபிஷேக பூஜை செய்துவிட்டு அறுவை சிகிச்சை செய்யலாம். பூரண குணம் அடைந்த பிறகு கேரள மாநிலம், ஷோரனூர் செல்லும்வழியில் அஞ்சுமூர்த்தி க்ஷேத்திரம் சென்று அபிஷேக பூஜை செய்யவும். முன்னதாக காணிக்கை எடுத்து வைக்கவும்.
● எம். முரளி மாடசாமி, பருத்திப்பாடு.
எனக்கு எந்த நட்சத்திரம், எந்த ராசிப் பெண் பொருத்தமாக இருக்கும்?
முரளி மாடசாமி அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி. இதற்குப் பொருந்தாத நட்சத்திரம் அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி. ஒரே ரஜ்ஜு சேராது. விருச்சிக ராசியும் கன்னி ராசியும் சஷ்டாஷ்டக ராசி; சேராது. சுவாதி, அஸ்தம் (எருமை) பகை யோனி; சேராது. புனர்பூசம், திருவோணம் வதை தாரை; சேராது. உங்களுக்கு வரும் பெண் ஜாதகம் மேற்கண்டவற்றில் இருந்தால் திருப்பிக்கொடுத்துவிட்டு வேறு ஜாதகங்களைப் பொருத்தம் பார்க்கலாம்.