● சசிகுமார், விருதுநகர்.
எனது தந்தை 2017 டிசம்பரில் காலமாகி விட்டார். தங்கைக்கு எப்போது வேலை கிடைக்கும்- திருமணம் நடக்கும்? டி.இ.டி தேர்வில் இருமுறை தேர்ச்சி பெற்றும், அரசு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? அம்மாவின் உடல்நலம் எப்படி யிருக்கும்?
தங்கை சுகப்பிரியாவுக்கு சுவாதி நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னம். சனி தசை, சுயபுக்தி முடிந்து புதன் புக்தி ஆரம்பம். 2019 மார்ச்சில் 30 வயது முடியும். 8-ல் தனுசுவில் உள்ள சனியை ஜென்மத்தில் (ரிஷபத்தில்) உள்ள செவ்வாய் பார்ப்பது தோஷம். அதனால் திருமணத்தில் தடை, தாமதம், பிரச்சினைகள் உருவாகும். என்றாலும் சனி குரு வீட்டிலும், செவ்வாய் குருவோடும் சேர்க்கை என்பதால் 2020-ல் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் கூடும். தங்கையின் திருமணம், வேலை, உங்கள் திருமணம், வேலை, எதிர்காலத்துக்கும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்து, நீங்கள், தங்கை, தாயார் மூவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவும்.
● கோடிசுந்தரம், குச்சிக்காடு.
எனது அண்ணன் பேரன் தியாகராஜன்; அவர் மனைவி பிரியா- இருவர் ஜாதகப் படி எதிர்காலம் எப்படியிருக்கும்? மளிகை வியாபாரம் செய்யலாமா? அரசு வேலை அமையுமா?
தொழிலா? வேலையா? ஏ

தொழிலா? வேலையா? ஏதாவது ஒரு முடிவெடுங்கள். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று குட்டையைக் குழப்பக்கூடாது. 2020 வரை சூரிய தசை. சூரியன் நீசம். அரசு வேலைக்கு இடமில்லை. மளிகை வியாபாரம் செய்யலாம். 2020 முதல் பிரபல யோகமாக அமையும். சங்கராபுரம் தாலுகா ஆதிதிரு வரங்கம் சென்று ரெங்கநாதருக்கு ஒருமுறை பூஜை செய்து தொழிலை ஆரம்பிக்கலாம்.
● ராஜ் கணேஷ், திருப்பரங்குன்றம்.
அப்பா- அம்மா இல்லாததால் தாத்தா வீட்டில் வளர்ந்தேன். தாத்தாவும் இறந்து விட்டதால் பாட்டியும் நானும்தான்! நர்சரி பிரைமரி ஸ்கூல் நடத்துகிறோம். அதிலும் பிள்ளைகள் அதிகமில்லை. 35 வருட மதுரை வாழ்க்கையை விட்டுவிட்டு கோவில்பட்டி போகலாம் என்று நினைக் கிறேன். பத்து வருடங்களாக ஒரு விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று ஒரு லட்சியக்கனவு. நிறைவேறுமா?
முதலில் உங்கள் ஜாதகத்தை மதுரை கே.எம். சுந்தரம் வசம் (தொடர்புக்கு: செல்: 92453 28178) கணித்து எழுதி, வாங்கி நேரில் வந்து (மதுரையில்) என்னை சந்தியுங்கள்.
● சு. சங்கரநாராயணன், பொன்னமராவதி.
எனக்கு 30 வயது. திருமணம் நிச்சயிக் கப்பட்டு தடையாகிவிட்டது. என் ஜாதகத்தில் தோஷங்கள் உண்டா? நான் பார்க்கும் தற்காலிக அரசுப்பணி நிரந்தரப்பணியாகுமா? பல பேர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கும் தாங்கள் என் வாழ்வுக்கும் வழிகாட்ட வேண்டும்.
மிதுன ராசி, மீன லக்னம். தனுசு ராசியில் உள்ள சனி ராசிக்கு 1-ல் நின்று, லக்னத்திற்கு 7-ஆம் இடத்தைப் பார்ப்பது தோஷம். எனவே காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்யவும். அந்த ஹோமத்திலேயே பார்க்கும் வேலை நிரந்தரமாவதற்கும் சேர்த்து சங்கல்பம் செய்யலாம். காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொள்ளவும். செல்: 99942 74067.
● டி. பிரவீன், கோவை-38.
டிப்ளமோ முடித்துள்ளேன். கடந்த ஒரு வருடமாக எந்த வேலையும் நிரந் தரமில்லை. மேற்படிப்பு படிக்க இயலுமா? மேற்படிப்பு படித்துக் கொண்டே பகுதி நேரமாக உணவுத் தொழில் செய்யலாமா?
விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி. 2020 வரை ஏழரைச்சனி. துலா லக்னத்துக்கு சனி தசை முடிந்து, புதன் தசை ஆரம்பிக்கப் போகிறது. மேற்படிப்பு படிக்கலாம். தொழில் யோகம் சுமார்தான். விடாமுயற்சி வெற்றி தரும்.
● ஏ. பேச்சியம்மாள், தூத்துக்குடி.
எனது மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? மீன ராசி. இப்போது வியாழ நோக்கம் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். உங்கள் மகள்போல் நினைத்து பதில் கூறவும்.
மகள் ரேவதி நட்சத்திரம், கடக லக்னம். 24 வயது முடிந்து 25 ஆரம்பம். லக்னத்துக்கு 8-ல் சனி இருப்பதாலும், ராசிநாதன் குரு, ராகு- கேது சம்பந்தம் அடைவதாலும் 27 வயதில்தான் திருமண யோகம். அதுவரை பொறுமையாகக் காத்திருக்கவும்.
● மு. ஜோதிகா, சேலவாயில்.
நான் இரண்டாம் ஆண்டு இளம் அறிவியல் உயிரிவேதியியல் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்? அரசு வேலை கிடைக்குமா? தனியார் வேலையா? எதிர்காலம் எப்படி இருக்கும்?
துலா லக்னம், ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி. 2020 வரை அட்டமச்சனி நடக்கிறது. எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ, எதில் திறமை இருக்கிறதோ அதில் படிக்கலாம்.
● விஜயராஜன், சென்னை.
இறந்தவர்களின் படங்களை வீட்டில் வைத்துப் பூப்போட்டு வழிபடலாமா?
இயற்கை மரணமடைந்தவர்களின் படங் களை தெற்கு திசை நோக்கி மாட்டிவைத்து பூப்போட்டு வணங்கலாம். ஆனால் ஒரு வருடம் முடிந்த பிறகு, தலை திவசம் கொடுத்த பிறகே வழிபடலாம். அதுவரை மனதில் நினைத்துக்கொள்ளலாம். தற்கொலை செய்து கொண்டவர்கள், கொலை செய்யப்பட்ட வர்கள், விபத்தில், கிணற்றில்- நீரில் மரணம டைந்தவர்களின் படங்களையும், அம்மை வார்த்து மரணம் அடைந்தவர்களின் படங் களையும் மாட்டிவைத்து பூஜையும் செய்யக் கூடாது. பூப்போட்டு வணங்கவும் கூடாது. வருஷாப்தியம் (இறந்த நினைவு நாள்) செய்யக் கூடாது. வருஷ திதியும், தர்ப்பணமும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் குடும்பத்தில் சண்டையும், சச்சரவும், அமைதிக்குறைவும், ஆனந்தமில்லாத சூழ்நிலையும் உண்டாகும். உயிரோடு இருப்பவர்களும் அற்பாயுளில் மரணமடைவார்கள்.
● ராமராஜன், குடியாத்தம்.
காலண்டரில் கரிநாள் என்று குறிப் பிட்டுள்ள நாளில் நல்ல காரியம் செய்ய லாமா?
ஒவ்வொரு மாதத்திலும் சில குறிப்பிட்ட நாள் கரிநாள் என்று வரும். ராகு காலம், எமகண்டம், குளிகை ஆகியவை ஒன்றரை மணி நேரம்; மூன்றே முக்கால் நாளிகை. அதுபோல, கரிநாள் என்பதும் சூரிய உதயத் திலிருந்து ஒன்றரை மணி நேரம்தான் தோஷம்! தோஷமான நேரத்தில் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாது. மற்ற நேரங்களில் நல்ல காரியம் செய்யலாம். மரணயோகம் என்பது விலக்கப்பட வேண்டிய நாள்! கூடாது! எல்லா நாளிலும் (அஷ்டமி, நவமி என்றாலும்) அதிகாலை நான்கரை மணிமுதல் ஆறு மணிக்குள் பிரம்மமுகூர்த்த நேரம்! இதற்கு எந்த தோஷமும் இல்லை. அதேபோல உச்சிக்காலம் (மதியம் 12.00 மணி.) எந்த தோஷமும் இல்லை. அதுகூட இரண்டாம் பட்சம்தான். "உச்சிப்பொழுது அச்சமில்லை' என்பார்கள். 12 மணிக்கு முன்பு அரைமணி நேரமும், பின்பு அரைமணி நேரமும் உச்சிக்காலம். அதாவது பகல் 11.30 மணி முதல் 12.30 மணிவரை! தமிழ் மாதப்பிறப்பு, ஆடிப்பெருக்கு, அமாவாசை, பௌர்ணமி என்பது இதற்கு விதிவிலக்கு. தோஷமில்லாத காலம்!