Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-30

● ஏ. அகிலாண்டேஸ்வரி, அய்யர்மலை, எய்யலூர்.

எனது மகள் பவதாரணி பி.பி.ஏ., முடித்து வீட்டில் இருக்கிறாள். அவளுக்கு எப்போது திருமணம் செய்யலாம்?

Advertisment

பவதாரணி உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னம். ஜனவரியில் நடப்பு வயது 22 முடியும். நாக தோஷம், சனி தோஷம் இருப்பதாலும், குரு நீசம் என்ப தாலும் திருமண வகையில் குழப் பம் அல்லது பிரச்சினைகள் உருவாக இடமுண்டு. 19 வயது முதல் ராகு தசை ஆரம்பம். 2020-ல் சனிப்பெயர்ச்சியை ஒட்டி மகளுக்கு சூலினிதுர்க்கா ஹோமம், பார்வதி சுயம்வரகலா ஹோமம், காமோகர்ஷண ஹோமம் உள்பட 19 அல்லது 21 ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். உங்களுக்குத் தெரிந்த இடத்தில் செய்யலாம். அல்லது காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்பு கொள்ளலாம்.

● ஜி. நாகராஜன், மயிலாப்பூர்.

தாங்கள் ஜோதிட உலகில் வராக மிகிரரின் மறு அவதாரம்! ஜோதிடப் பெருமக்களின் குலதெய்வமாக விளங்கும் தங்களது நல்லாசிகளை நாடுகிறேன். உங்களது எழுத்திற்காகவே கடந்த சில காலமாக "பாலஜோதிட'த்தை பக்தியுடன் வாசித்துவரும் லட்சக்கணக்கான வாசகர் களுள் நானும் ஒருவன். ஜோதிட உலகின் பிரம்மாவே! எனக்கும் ஜோதிடக் கலையைக் கற்றுக்கொடுங்கள். வங்கிப் பணியிலிருந்து இன்னும் சில காலத்தில் ஓய்வுபெற உள்ளேன். வழிகாட்டுங்கள்.

உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துகள்! பணி ஓய்வுபெற்ற பிறகு ஒருமுறை நேரில் வந்து சந்தியுங்கள். ஜோதிடப்பயிற்சிக்கு வழிகாட்டுவேன். மதுரையில் பல ஆண்டு களுக்கு முன்பு என்னிடம் உதவியாளராக தசாபுக்தி கணக்குப் போட்டுவந்த நீலகண்டன் எனும் அன்பர் இன்று பிரபலமான ஜோதிடராகிவிட்டார். முத்துக்கிருஷ்ணன் எனும் ராணுவத்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர் ஜோதிடப் பயிற்சி வகுப்பில் படிப்பதோடு என்னை மானசீக குருவாக ஏற்றுள்ளார். சென்னையில் ஒரு அம்மையார் என் போட்டோவை பூஜை அறையில் வைத்து ஜோதிடம் பயில்கிறார். இதெல்லாம் தற்பெருமையாக நினைக்க வேண்டாம். ஏகலைவன் துரோணரை மானசீக குருவாக சிலை வடிவத்தில் வழிபட்டு, அர்ச்சுனனுக்கு மிஞ்சிய வில்லாளியாக வளர்ந்தான். "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்ற அளவில் ஜோதிடஞானமும் வாக்குப்பலிதமும் அடையவேண்டுமென்று தங்களை வாழ்த்துகிறேன். ஏற்றமும் தாழ்வும் எல்லார் வாழ்க்கையிலும் ஏற்படும். ஜோதிடஞானம் இருந்தால் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், தோல்வி வெற்றிக்குப் போடும் முதல் படிக்கட்டு என்ற பக்குவம் உண்டாகும். வீதியில் போகும்போது சைக்கிள்காரன் மோதிவிட்டால் மற்றவர்கள் சண்டைக்குப் போவார்கள். ஜோதிடஞானம் உடையவர்கள் "இன்று நமக்கு சந்திராஷ்டமம்; அதனால் வந்து மோதிவிட்டார்' என்று மனதை ஆறுதல் படுத்திக்கொள்வார்கள். ஜோதிடம் பயிலலாம். ஆனால் மாந்திரீகப் பரிகார சக்கரம் கொடுத்து "பிசினஸ்' செய்து பணம் சம்பாதிக்கக்கூடாது. அப்படி சம்பாதித்தால் வாரிசை பாதிக்கும். கோவில் பூஜை, ஹோமம் செய்யச் சொல்வது வேறு! அது சம்பந்தப்பட்டவர்கள் ஆன்மார்த்தமா

● ஏ. அகிலாண்டேஸ்வரி, அய்யர்மலை, எய்யலூர்.

எனது மகள் பவதாரணி பி.பி.ஏ., முடித்து வீட்டில் இருக்கிறாள். அவளுக்கு எப்போது திருமணம் செய்யலாம்?

Advertisment

பவதாரணி உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னம். ஜனவரியில் நடப்பு வயது 22 முடியும். நாக தோஷம், சனி தோஷம் இருப்பதாலும், குரு நீசம் என்ப தாலும் திருமண வகையில் குழப் பம் அல்லது பிரச்சினைகள் உருவாக இடமுண்டு. 19 வயது முதல் ராகு தசை ஆரம்பம். 2020-ல் சனிப்பெயர்ச்சியை ஒட்டி மகளுக்கு சூலினிதுர்க்கா ஹோமம், பார்வதி சுயம்வரகலா ஹோமம், காமோகர்ஷண ஹோமம் உள்பட 19 அல்லது 21 ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். உங்களுக்குத் தெரிந்த இடத்தில் செய்யலாம். அல்லது காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்பு கொள்ளலாம்.

● ஜி. நாகராஜன், மயிலாப்பூர்.

தாங்கள் ஜோதிட உலகில் வராக மிகிரரின் மறு அவதாரம்! ஜோதிடப் பெருமக்களின் குலதெய்வமாக விளங்கும் தங்களது நல்லாசிகளை நாடுகிறேன். உங்களது எழுத்திற்காகவே கடந்த சில காலமாக "பாலஜோதிட'த்தை பக்தியுடன் வாசித்துவரும் லட்சக்கணக்கான வாசகர் களுள் நானும் ஒருவன். ஜோதிட உலகின் பிரம்மாவே! எனக்கும் ஜோதிடக் கலையைக் கற்றுக்கொடுங்கள். வங்கிப் பணியிலிருந்து இன்னும் சில காலத்தில் ஓய்வுபெற உள்ளேன். வழிகாட்டுங்கள்.

உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துகள்! பணி ஓய்வுபெற்ற பிறகு ஒருமுறை நேரில் வந்து சந்தியுங்கள். ஜோதிடப்பயிற்சிக்கு வழிகாட்டுவேன். மதுரையில் பல ஆண்டு களுக்கு முன்பு என்னிடம் உதவியாளராக தசாபுக்தி கணக்குப் போட்டுவந்த நீலகண்டன் எனும் அன்பர் இன்று பிரபலமான ஜோதிடராகிவிட்டார். முத்துக்கிருஷ்ணன் எனும் ராணுவத்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர் ஜோதிடப் பயிற்சி வகுப்பில் படிப்பதோடு என்னை மானசீக குருவாக ஏற்றுள்ளார். சென்னையில் ஒரு அம்மையார் என் போட்டோவை பூஜை அறையில் வைத்து ஜோதிடம் பயில்கிறார். இதெல்லாம் தற்பெருமையாக நினைக்க வேண்டாம். ஏகலைவன் துரோணரை மானசீக குருவாக சிலை வடிவத்தில் வழிபட்டு, அர்ச்சுனனுக்கு மிஞ்சிய வில்லாளியாக வளர்ந்தான். "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்ற அளவில் ஜோதிடஞானமும் வாக்குப்பலிதமும் அடையவேண்டுமென்று தங்களை வாழ்த்துகிறேன். ஏற்றமும் தாழ்வும் எல்லார் வாழ்க்கையிலும் ஏற்படும். ஜோதிடஞானம் இருந்தால் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், தோல்வி வெற்றிக்குப் போடும் முதல் படிக்கட்டு என்ற பக்குவம் உண்டாகும். வீதியில் போகும்போது சைக்கிள்காரன் மோதிவிட்டால் மற்றவர்கள் சண்டைக்குப் போவார்கள். ஜோதிடஞானம் உடையவர்கள் "இன்று நமக்கு சந்திராஷ்டமம்; அதனால் வந்து மோதிவிட்டார்' என்று மனதை ஆறுதல் படுத்திக்கொள்வார்கள். ஜோதிடம் பயிலலாம். ஆனால் மாந்திரீகப் பரிகார சக்கரம் கொடுத்து "பிசினஸ்' செய்து பணம் சம்பாதிக்கக்கூடாது. அப்படி சம்பாதித்தால் வாரிசை பாதிக்கும். கோவில் பூஜை, ஹோமம் செய்யச் சொல்வது வேறு! அது சம்பந்தப்பட்டவர்கள் ஆன்மார்த்தமாகச் செய்வது!

● பெ. கலியமூர்த்தி, திருச்சி-2.

Advertisment

வயோதிகனான எனக்கோ அடிக்கடி மாரகத்துக்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படு கின்றன. சர்க்கரை நோய்- தொண்டைப் புற்றுநோய் போன்றவை! என்னை கவனிக்க இயலாமல், என் மனைவியோ கைகால் மூட்டுவலி சிகிச்சைக்காக வெளி யூரில் ஐந்தாண்டுகள் என்னைப் பிரிந்து வாழ்கிறார். நான் அனாதையாக வாடு கிறேன். ஏன் இந்த சோதனை? விடிவு உண்டா? மருமகள் சிம்ம ராசி, சிம்ம லக்னம். அனுசரிப்பில்லாத நிலை. கடைசி வரை இப்படித்தானா?

ரிஷப லக்னம். லக்னாதிபதி சுக்கிரன் 6-ல் மறைவு. அவரே களஸ்திர காரகன். அதுவும் 6-ல் மறைவு. நடப்பு சுக்கிர தசை 2021 வரை. எனவே 6-க்குடைய நோய், பீடை 2021 வரை. 8-ஆம் இடத்தை குருவும் சனியும் பார்ப் பதால் ஆயுள் தீர்க்கம். ஆனால் நித்திய கண்டம் பூரண ஆயுசு. ராசி, லக்னம், லக்னாதிபதி, ராசியாதிபதிக்கு குரு பார்வை இல்லை. எனவே மனைவியின் பதி சேவைக்கும் இடமில்லை. 5-ல் சூரியன், 4-ல் புதன் பரிவர்த் தனை. பிள்ளையிருந்தும் உதவியில்லை. 2-ல் உள்ள சனி- உங்கள் பேச்சும் சொல்லுமே குடும் பத்தினரின் பகையையும் வருத்தத்தையும் உண்டாக்கிவிடும். 75 வயது நடக்கிறது. 77-ல் சுக்கிர தசை முடிந்து சூரிய தசை ஆரம்பம். அதுவே அந்திம தசை! காதிருந்தும் செவிடராய், கண்ணிருந்தும் குருடராய் காலத்தை ஓட்ட முடிந்தால் ஓட்டுங்கள். இல்லாவிட்டால் எங்கேயாவது முதியோர் இல்லம் அல்லது ஆசிரம மடத்தில் போய் தஞ்சம் அடையலாம்.

● இரா. உதயகுமார், கடலூர்.

என் திருமணத் தேதி 21-6-2012. கல்யாணம் ஆனதிலிருந்து நிம்மதியில்லை. மனைவி சௌந்தரியை எனது அம்மா வீட்டில் விட்டுவிட்டு தனியாக சென்னையில் பணியில் இருக்கிறேன். யாரும் எனக்கு உதவியில்லை. பகைதான். குழந்தையும் இல்லை. நான் R. UDHAYAKUMAR என்றும், மனைவி U. SOUNDARI என்றும் கையெழுத்திடுகிறோம். எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வழிகாட்டவேண்டும்.

உங்கள் இரண்டு பெயரின் கூட்டுத்தொகை 35 வருகிறது. இது மோசமான எண். 8-சனியின் ஆதிக்கம். வாரிசு இருக்காது. குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. சேர்ந்துவாழ முடியாது.

U. SOUNDARI

2 6 4 5 1 1 1 2 6 4 5 1 1 2

அல்லது

R. U D H A Y A K H U M A A R

2 6 4 5 1 1 1 2 5 6 4 1 1 2

என்று 41-ல் அமைத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல

U. S O U N D H A R Y A

6 3 7 6 5 4 5 1 2 1 1

என்று 41-ல் அமைக்கவேண்டும்.

அத்துடன் காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபால கிருஷ்ண ஹோமம், சந்தான கணபதி ஹோமம் உள்பட 19 வகையான ஹோமம் செய்து தம்பதிகள் இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.

jothidamanswer

● மாசானம்.

என் மகன் முரளி மாடசாமிக்கு எப்போது திருமணம் நடக்கும்?

முரளி மாடசாமிக்கு அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னம். அதில் சனி ஆட்சி பெற்றாலும் அவரை மிதுனச் செவ்வாய் பார்க்கிறார். 30 வயது முடிந்தபிறகு திருமண ஏற்பாடுகள் நடக்கும்.

● க. தயாளன், அச்சிறுப்பாக்கம்.

குருநாதர் அவர்களுக்கு வணக்கம். எனது நண்பர் கன்னியப்பன் மகன் கமலேஷ் திருமணம் தடையாக உள்ளது. எப்போது நடக்கும்?

கமலேஷ்குமார் மகர ராசி, துலா லக்னம், அவிட்ட நட்சத்திரம். 2019 செப்டம்பரில் 30 வயது முடியும். அதன்பிறகு திருமண யோகம் வரும்.

● ராஜேந்திரன், சிதம்பரம்.

என் மகன் சிவசுந்தர்ராஜனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? பெண் எத்திசையிலிருந்து அமையும்? கடைசிவரை தனியார் நிறுவனப் பணிதானா? அல்லது வெளிநாட்டு வேலை அமையுமா?

சிவசுந்தர்ராஜனுக்கு கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம், ரிஷப லக்னம். ராசியில் கேது; அதற்கு ஏழில் ராகு. லக்னத்துக்கு 8-ல் சனி. 4-ல் செவ்வாய். சனியும் செவ்வாயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். 7-ல் சுக்கிரன்! ஆக களஸ்திர தோஷம், புத்திர தோஷம் உள்பட எல்லா தோஷங்களும் உண்டு. திருமணத்திலும் குழப்பம், பிரச்சினைகள். காதல் திருமணம், கலப்புத் திருமணம் போன்ற சூழ்நிலைகளுக்கு இடமுண்டு. என்றாலும் 2-ல் குரு அமர்ந்து சனியைப் பார்ப்பதால், பரிகார ஹோமம் செய்தால் முறையான திருமணம் 33 வயதில் நடக்கலாம். காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) பேசவும். காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் உள்பட 19-20 வகையான ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும்.

● பி.வி. அசோகன், சிங்கப்பூர்.

உங்களுடைய "ஓம்', "பாலஜோதிடம்' ராசி பலன்கள்தான் எனக்கு வழிகாட்டி யாக இருக்கிறது. எனக்கு அடிமை வேலையா? கூட்டுத் தொழிலா- சொந்தத் தொழிலா? மனைவிக்கு வெளிநாடுவாழ் யோகம் உண்டா? மூத்த மகன் 30 வயது. வெளிநாடு சுற்றிவருகிறான். சம்பாத்தியம் இல்லை. எனவே திருமணம் செய்து வைக்க யோசனையாக உள்ளது. நடுப்பையன் பி.ஈ., அரியர்ஸ் எழுதி உள்ளான். பட்டம் வாங்குவானா? கடைசிப் பெண் ஒன்பதாவது வகுப்பில் பெயில். எல்லா ஜோதிடர்களும் டாக்டருக்கு படிப்பாள் என்கிறார்கள்.

அசோகன் மிதுன லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். 61 வயது நடப்பு. 58 வயது முதல் புதன் தசை. லக்னாதிபதி தசை 5-ல் இருந்து நடத்துகிறார். அதன் யோகத்தை விரயச்சனி தடுக்கிறது. 2020-க்கு மேல் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு, புதன் தசை யோகமாக இருக்கும். இது 3-ஆவது சுற்று என்றாலும், ராசிநாதனே சனி என்பதால், ஏழரைச்சனியைக் கண்டு பயப்பட வேண்டாம். 5-ல் குரு, புதன், சூரியன். இதில் புதன்- சுக்கிரன் பரிவர்த்தனை. ஆயுள் பலமுண்டு. பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடமை களைச் செய்ய காலமும் கடவுளும் துணை புரியும். சொந்தத் தொழில் புரியலாம். மனைவிக்கு மேஷ ராசி, தனுசு லக்னம். 62 வயதுவரை ராகு தசை. உள்நாட்டில் மத்திமப் பலனாக ஓடும். முத்துவிநாயகன் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம். களஸ்திர தோஷமும், புத்திர தோஷமும் உண்டு. அதனால் 35 வயதுக்கு மேல்தான் திருமண யோகம் வருகிறது. உங்கள் நாட்டுக் கோவிலில் தமிழ்நாட்டு அர்ச்சகர்கள் இருந்தால், அவர்களைத் தொடர்புகொண்டு காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து, அவருக்கு கலச அபிஷேகம் செய்யலாம். அந்த ஹோமத்தில் தட்சிணா மூர்த்தி, ஹயக்ரீவர் ஹோமம், சரஸ்வதி ஹோமம் (படிப்புக்காக) செய்து ரமேஷ்ராஜாவுக்கும், ராஜேஸ்வரிக்கும் கலச அபிஷேகம் செய்யலாம். இத்துடன் தன்வந்தரி ஹோமம், மிருத்யுஞ்சய ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவ ஹோமம் போன்ற பல ஹோமம் செய்து நீங்களும் மனை வியும் (மொத்தம் ஐவருக்கும்) கலச அபிஷேக செய்யலாம். சிங்கப்பூரில் அந்த வசதி இல்லா விட்டால், எல்லாரும் தமிழ்நாடு வந்து காரைக் குடியில் சுந்தரம் குருக்களிடம் மேற்படி ஹோமம் செய்து, குடும்பத்தார் அனைவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். பிள்ளையார்பட்டி விநாயகரையும் தரிசனம் செய்யலாம்.

● ராஜேந்திரன், சிதம்பரம்.

என் மகன் சிவசுந்தர்ராஜனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? பெண் எத்திசையிலிருந்து அமையும்? கடைசிவரை தனியார் நிறுவனப் பணிதானா? அல்லது வெளிநாட்டு வேலை அமையுமா?

சிவசுந்தர்ராஜனுக்கு கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம், ரிஷப லக்னம். ராசியில் கேது; அதற்கு ஏழில் ராகு. லக்னத்துக்கு 8-ல் சனி. 4-ல் செவ்வாய். சனியும் செவ்வாயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். 7-ல் சுக்கிரன்! ஆக களஸ்திர தோஷம், புத்திர தோஷம் உள்பட எல்லா தோஷங்களும் உண்டு. திருமணத்திலும் குழப்பம், பிரச்சினைகள். காதல் திருமணம், கலப்புத் திருமணம் போன்ற சூழ்நிலைகளுக்கு இடமுண்டு. என்றாலும் 2-ல் குரு அமர்ந்து சனியைப் பார்ப்பதால், பரிகார ஹோமம் செய்தால் முறையான திருமணம் 33 வயதில் நடக்கலாம். காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) பேசவும். காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் உள்பட 19-20 வகையான ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும்.

● பாலாஜி, சென்னை.

என் அக்கா மகன் பொன் புவனேஷ் கடந்த சில மாதங்களாக பள்ளிக்குச் செல்ல மறுக்கிறான். சில நேரங்களில் படிக்கவே பிடிக்கவில்லை என்கிறான். பெரிய மனிதனைப்போல பேசுகிறான். என் மாமா (சரவணன்) வேலையிலும் பிரச்சினை. வேலை மாறுமா? அல்லது சுயதொழில் செய்யலாமா? என் அக்கா (வசந்தி) கர்ப்பபையிலும் பிரச்சினை. இரண்டாவது குழந்தை பிறக்குமா? அவர்கள் எப்போது நிம்மதியாக வாழ்வார்கள்?

சரவணனுக்கு சதய நட்சத்திரம், கும்ப ராசி. 42 வயது. சிம்ம லக்னத்துக்கு 6-க்குடைய சனி தசை, லக்னத்தில் இருந்து நடக்கிறது. 10-ஆம் இடத்துக்கு 8-ல் சனி தற்போது இருக்கிறார். பார்க்கும் வேலை இழப்பாகும். வேறு வேலை தாமதமாக அமையும். அக்காள் வசந்திக்கு ரிஷப லக்னம். 8-ல் சனி. மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், சுக்கிர தசை நடப்பு, கர்ப்பப்பையில் கட்டி இருக்கும். ஆபரேசன் செய்யவேண்டிய அவசியம் ஏற்படும். பொன் புவனேஷ் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம். 11 வயது முடிந்து 12 ஆரம்பம். புதன் தசை. கேது சாரம். படிப்பு தடைப்படும். 2020 வரை போராட்டம், எதிர்நீச்சல், வருமானத்தடை, வைத்தியச்செலவு, விரயச்செலவு. வசதியிருந்தால் அதற்கான ஹோமம் செய்து மூவரும் கலச அபிஷேகம் செய்துகொண்டால் ஓரளவு சாந்தி கிடைக்கும்.

● மாசானம்.

என் மகன் முரளி மாடசாமிக்கு எப்போது திருமணம் நடக்கும்?

முரளி மாடசாமிக்கு அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னம். அதில் சனி ஆட்சி பெற்றாலும் அவரை மிதுனச் செவ்வாய் பார்க்கிறார். 30 வயது முடிந்தபிறகு திருமண ஏற்பாடுகள் நடக்கும்.

● க. தயாளன், அச்சிறுப்பாக்கம்.

குருநாதர் அவர்களுக்கு வணக்கம். எனது நண்பர் கன்னியப்பன் மகன் கமலேஷ் திருமணம் தடையாக உள்ளது. எப்போது நடக்கும்?

கமலேஷ்குமார் மகர ராசி, துலா லக்னம், அவிட்ட நட்சத்திரம். 2019 செப்டம்பரில் 30 வயது முடியும். அதன்பிறகு திருமண யோகம் வரும்.

● ஜி. பிரபாவதி, சேலம்.

நான் எம்.ஏ., பி.எட்., படித்துள்ளேன். தனியார் பள்ளியில் ஆசிரியர் பணி. அரசுப்பணி கிடைக்குமா? எப்போது?

கும்ப லக்னம், தனுசு ராசி, உத்திராட நட்சத்திரம். ஜென்மச்சனி நடப்பு. 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அரசு வேலை அமையும். முன்னதாக, இரண்டு பரிகாரம் செய்ய வேண்டும். நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு ஒரு அபிஷேக பூஜை செய்யவும். சனிக்கிழமைதோறும் 36 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, நெய்யில் மிளகுப் பெட்டலத்தை நனைத்து காலபைரவர் சந்நிதியில் தீபம் ஏற்றவும். -2020 சனிப்பெயர்ச்சி வரை.

● எம்.எம். கிருஷ்ணன், சின்னமனூர்.

1994 முதல் தங்களின் வாசகன். என் கடன் பிரச்சினைக்கு தீர்வு எப்போது? ஒரே மகள் சந்தியாவிற்கு எதிர்காலம் எப்படி இருக்கும்?

சந்தியா சதய நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னம். சூரியன், சனி, ராகு சேர்க்கை கெடுதல்தான். அத்துடன் குரு 12-ல் மறைவு. குரு தசை, குரு புக்தி. படிப்பு தடைப்படும். இடப்பெயர்ச்சி ஏற்படும். கையில் செல்போன் இருந்தால் பிடுங்கிவிடவும். 2020-ல் ஏழரைச்சனி ஆரம்பிக்கும்போது நல்ல புத்தி வர ஹோமம் செய்யலாம். தங்கள் அண்ணனை கலந்துகொள்ளச் செய்யவும்.

● ஐஸ்வர்யலட்சுமி, இடிகரை (கோவை).

என் கணவர் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து தனியார்துறையில் பணிபுரிகிறார். நான் கம்ப்யூட்டர் டெக்னாலஜி முடித்துள்ளேன். இரண்டு குழந்தைகள் பிறந்ததும் பார்த்த வேலையை விட்டுவிட்டேன். மீண்டும் வேலைக்குப் போகலாமா? இரு குழந்தைகளும் சிம்ம ராசி. அதனால் பிரச்சினை வருமா?

ஐஸ்வர்யா பூர நட்சத்திரம், சிம்ம ராசி. ராஜேஷ் ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம். ராகு தசை முடிந்தாலும் 2020 வரை அட்டமச்சனி நடக்கிறது. பிள்ளைகள் இருவருக்கும் மக நட்சத்திரம், சிம்ம ராசி, சுக்கிர தசை. கணவரைத் தவிர, உங்கள் மூவருக்கும் சனி பாதிப்பில்லை. மூவரும் சிம்ம ராசி. பிப்ரவரி 13-ல் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல மாற்றம் உண்டாகும். 2020 வரை நீங்கள்தான் பொறுமையாகப் போக வேண்டும். 45 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி காலபைரவர் சந்நிதியில் நெய் விளக்கில் மிளகுப் பொட்டலத்தை நனைத்து 2020 சனிப் பெயர்ச்சிவரை தீபமேற்றவும். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் ஏற்படும். அதன்பிறகு வேலை கிடைக்கும்.

bala180119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe