● சசிகலா, மகுடஞ்சாவடி.

எனது மகள் 12-ஆம் வகுப்பு முடித்துள்ளாள். மேற்படிப்பு, எதிர்காலம் பற்றிக் கூறவும்.

Advertisment

சிநேகாவுக்கு கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மகர லக்னம். 9 வயது முதல் சுக்கிர தசை. ஏழரைச்சனி 2020 வரை. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது டெக்னிக்கல் படிக்கலாம். அல்லது அழகுக்கலை பற்றி படிக்கலாம். 28 வரை சுக்கிர தசை. குட்டிச் சுக்கிரன் கட்டித்தங்கமும் கரையும். கொட்டிக் கவிழ்த்துவிடும். மாதம் ஒருமுறை சேந்தமங்கலம் (சாமியார் கரடு ஸ்டாப்) சென்று தத்தாத்ரேயரையும் குருநாதர் ஜீவசமாதியையும் வழிபட்டு வந்தால் தடையில்லாமல் படிப்பு தொடரும். அத்துடன் தம்பி மிதுன்ராஜ் மிதுன லக்னம், மக நட்சத்திரம், சிம்ம ராசி. அவனுக்கும் இரண்டு வயது முதல் 20 வருடம் குட்டிச்சுக்கிர தசை. தற்போது 15 வயது முடிந்து 16 ஆரம்பம். உள்ளூரில் வடக்குப் பார்த்த அம்மனுக்கு வெள்ளிக்கிழமையன்று இரண்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட்டு வரவும். இருவரின் கல்வி, ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை திருநாவலூர் சென்று திருநாவலேஸ்வரரையும் சுந்தரநாயகியம்மனையும் சுக்கிரலிங்கத்தையும் குடும்பத்துடன் வழிபடவும். நவகிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிரில் சுக்கிர லிங்கம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் ஆலயம் உள்ளது. குட்டிச்சுக்கிர தோஷம் விலகி சுபிட்சம் உண்டாகும்.

● எஸ். சரசுவதி, கிருஷ்ணகிரி.

lakshmiதங்களின் அறிவுரையும் ஜாதக ராசி பலன்களும் எங்களுக்கு அப்படியே நடக்கின்றன. பேத்தி அம்ருதாவுக்கும், பேரன் ஹரிஹரசுதனுக்கும் படிப்பு, உத்தியோகம், எதிர்காலம் பற்றி விளக்கம் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அம்ருதாவின் ஜாதகக்குறிப்புக் கட்டங்களும் கிரக நிலையும் சரியாக எழுதவில்லை. இருந்தாலும் ஏற்கெனவே அம்ருதா ஜாதகத்துக்குப் பலன் எழுதியுள்ளேன். பி.எஸ்.ஸி., கம்ப்யூட்டர் முடிக்கட்டும். பிறகு மேற்படிப்பு அவர் விருப்பப்படி படிக்கலாம். ஹரிஹரசுதன் மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம், நடப்பு 17 வயது ஆரம்பம். ஏழு வயதுமுதல் சனி தசை. துலா லக்னத்துக்கு சனி ராஜயோகாதிபதி. 2020-ல் அட்டமச்சனி வரும். அப்போது பள்ளி மாற்றம், ஊர் மாற்றம் வரலாம். இருவரின் பட்டப்படிப்புக்கும், நல்ல வேலைக்கும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்கும் தொழில் முன்னேற்றத்துக்கும் சேர்த்து, காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்பு கொண்டு ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். (செல்: 99942 74067).

● எம். சுந்தரராஜன், கோவை.

Advertisment

என் மகள் கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். 21-12-1989-ல் பிறந்தவள். திருமணம் அமையவில்லை. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர முடியுமா? முடியாதா என்ற மனவேதனையில் வாடுகிறேன். தங்களை குலதெய்வத்துக்கு சமமாக வணங்கி வாக்கு கேட்கிறேன்.

மகள் தேவிக்கு அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னம். லக்னத்துக்கு 7-ல் செவ்வாய் ஆட்சி என்பதால் தோஷமில்லை. ஆனால் 8-ல் சனி, சூரியன், புதன் இருப்பது தோஷம். 2018 டிசம்பரில் 29 வயது முடிந்து 30 வயது ஆரம்பிக்கும். 2019-ல் திருமணம் கூடும். குரு தசை நடக்கிறது. கோவை சேரன் மாநகரில் மீனாட்சி சுந்தரர் கோவில் உள்ளது. அங்கு சுகேஷ் என்பவர் அர்ச்சகராக இருக்கிறார். அவரைத் தொடர்புகொண்டு தேவிக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்தால் நல்ல மணவாழ்க்கை அமையும்.

● குமரன், சென்னை.

ஜோதிட உலகின் மாபெரும் அரிய பொக்கிஷம் நீங்கள்! ஜோதிடப் பிரம்மா- பீஷ்மர்! உங்கள் கேள்வி- பதிலைப் படிப்பதற்காகவே "பாலஜோதிடம்' வாங்குகிறேன். சமஸ்கிருதம் அறியாத என்னைப் போன்ற பட்டதாரிகள் (எம்.எஸ்ஸி) சுலபமாக ஜோதிடக்கலையைக் கற்றுக்கொள்ள தமிழகத்தில் அஞ்சல்வழியில் எங்கு கற்கலாம்? என்னுடைய ஜாதகப்படி ஜோதிடக்கலையில் முழுமையான அறிவும் ஞானமும் கிடைக்குமா?

Advertisment

ரிஷப லக்னத்தில் கேது; 7-ல் ராகு. 2-க்குடைய புதன் 5-ல் ஆட்சி. ஜோதிடம் அற்புதமாக வரும். எந்த ஒரு கலையானாலும் ஆர்வமும் அக்கறையும் விடாமுயற்சியும் இருந்தால் அந்தக் கலையில் பிரசித்தம் பெறலாம். இதைத்தான் வள்ளுவர் "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்மெய் வருத்தக்கூலி தரும்' என்றார். ராஜபோகத்தில் இருந்த மன்னன் தபசு செய்து விடாமுயற்சியால் பிரம்மரிஷி விசுவாமித்திரராகவில்லையா? உங்கள் ஜோதிட அறிவு மேன்மைபெற சென்னை பி.எஸ்.பி. ஜோதிட நூலை வரவழைத்து ஒருமுறைக்குப் பலமுறை படித்தால் ஜோதிடம் அத்துப்படியாகிவிடும். கைவந்த கலையாகிவிடும். பி.எஸ்.பி. மகன் விஜய்பாலா சென்னையில் "விடியல்' என்ற பத்திரிகை நடத்துகிறார். வடபழனியில் பஜனை கோவில் தெரு. செல்: 98410 40251-ல் தொடர்புகொண்டு விலை விவரம் தெரிந்து கூரியரில் அனுப்பச்சொல்லவும்.

● கே. மணிகண்டன். கோவில்பட்டி.

ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கம். "பாலஜோதிட'த்தில் நீங்கள் சொல்லும் பதில்களும் ராசி பலனும் அற்புதம்! அதிலும் சிம்ம ராசிக்கு நீங்கள் எழுதுவது அப்படியே நடக்கிறது. 2014 ஆகஸ்ட் முதல் வேலையின்மை. சம்பாத்தியம் இல்லை. சம்பந்தமே இல்லாத பிரச்சினைகளால் வேதனை. ஆறு மாதம் நன்றாக இருக்கும்; அடுத்த ஆறு மாதம் மோசமாக இருக்கும். பக்கத்தில் குடியிருப்பவரால் காவல் நிலையம் வரை போகவேண்டிய நிலை. நாங்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஒத்திக்கு இருக்கிறோம். வீட்டை காலிசெய்துவிட்டு வேறிடம் மாறிப்போகலாமென்று மூன்று வருடமாக முயற்சிக்கிறோம். முடியவில்லை. வீட்டின் உரிமையாளர் ஒத்திப் பணத்தைத் தரமறுக்கிறார். அந்தப் பணத்தை நம்பித்தான் இருக்கிறோம். பணம் கிடைக்கப் பரிகாரம் என்ன?

உங்களுக்குப் பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னம். நடப்பு 32 வயது ஆரம்பம். 22 வயதுமுதல் கேது தசை ஏழு வருடம். அடுத்து சுக்கிர தசை தனது புக்தி மூன்று வருடம், நான்கு மாதம். ஆக 2020 மே வரை கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. சுயபுக்திக்குப் பிறகு சுக்கிர தசை உங்களுக்கு யோகமாக இருக்கும். அதுவரை பொறுமையாக எதிர்நீச்சல் போட வேண்டியதுதான். சுயபுக்தி பெரிய பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க வெள்ளிக்கிழமைதோறும் தொடர்ந்து வடக்குப் பார்த்த அம்மனுக்கு இரண்டு நெய்விளக்கு ஏற்றி வழிபடவும். அத்துடன் ஒருமுறை பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியை வழிபட்டால் வீடு மாற்றம் ஏற்படும். மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்குத் தென்புற வீதியில் குபேர பத்ரகாளியம்மன் கோவில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை பகல் 12 மணிவரை; பிறகு மாலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரை கோவில் திறந்திருக்கும். அங்கு சென்று வழிபடவும். வரவேண்டிய பணமும் வந்துசேரும். வேறு வீடும் மாறலாம். திருப்பதி- திருச்செந்தூர்- பழனி போவதுபோல மாதாமாதம் குபேர பத்ரகாளியம்மனை வெள்ளிக்கிழமையன்று வழிபட்டு நெய்விளக்கு ஏற்றினால் சுக்கிர தசை உங்களுக்கு யோக தசையாக அமையும்.

● ஆர். ஆறுமுகம், திருப்பூர்.

எனது மகள் பவதாரிணி +2 படிக்கிறாள். கடன் வாங்கி கஷ்டப்பட்டு எப்படியோ படிக்க வைக்கிறேன். அடுத்து ஆசிரியர் வேலை அல்லது பேங்க் வேலைக்குப் படிக்கச் சொன்னால் அவள் அறிவியல் (ஒ.ந.த.ஞ.) படிக்கப்போகிறேன் என்கிறாள். அவளைப் படிக்க வைக்கமுடியுமா? படித்தாலும் அதற்குரிய வேலை கிடைக்குமா?

படிக்க ஆர்வமுள்ள பிள்ளைகளை கடன் வாங்கியாவது படிக்க வைக்க வேண்டியது பெற்றோர் கடமை. நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கு (வங்கியில்) கல்விக்கடன் தருவார்கள். வெறும் ஆர்வம் மட்டும் போதாது. அக்கறையும் விடாமுயற்சியும் தேவையென்று பவதாரிணியிடம் நான் கூறியதாகச் சொல்லவும்.

● ஜான்பீட்டர், மைக்கேல்பட்டி.

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த என் பெயர் ஜான் பீட்டர். கடந்த ஏழு ஆண்டுகளாக "பாலஜோதிடம்' படித்து ஜோதிடத்தில் மிகமிக ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. கேள்வி- பதில் பகுதியும், ராசிபலன் பகுதியும் தொகுத்து சேர்த்து வைத்திருக்கிறேன். பொக்கிஷமாக மதிக்கிறேன். "பாலஜோதிடம்' 30 கிலோமீட்டர் கடந்து தஞ்சைக்கு வந்துதான் வாங்கவேண்டும். தவறாமல் வாங்கிவிடுவேன். 16-3-2018 இதழில் ஷகிலா பானு என்ற முஸ்லிம் மதப்பெண்ணுக்கு, இரண்டரை வருடம் கழித்து டாக்டர் பட்டமும் உயர்ந்த பேராசிரியர் வேலையும் கிடைக்கும் என்று பதில் கூறியுள்ளீர்கள். அதில் எனக்கு சில சந்தேகம். அவர் பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி. இரண்டரை வருடத்தில் ஏழரைச்சனி ஆரம்பம். தனுசு லக்னம். புதன் தசை நீச தசை மூன்றாவது தசையாக வந்தால் போராட்டம் என்றும்; தனுசு லக்னத்துக்கு 10-ல் சுக்கிரன் நீசம் மற்றும் 10-ல் கேது சம்பந்தம்- கேதுவுடன் சேர்ந்த எந்த கிரகமும் கெடுத்துவிடும் என்றும் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியிருக்கும்போது அந்தப் பெண் ஜாதகத்துக்கு எப்படி யோகமான பலன் நடக்கும்?

"ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்' என்று சொல்லக்கூடாது. "ஏழரைச்சனியோ அட்டமச்சனியோ எல்லாரையும் கெடுக்கும் என்று சொல்லமுடியாது. ஒன்பது கிரகங்களும் நல்லதும் செய்யும்; ஒன்பது கிரகங்களும் கெட்டதும் செய்யும். ஒரு பலனை நிர்ணயிக்கும்போது ஆறுவிதமாக ஆய்வு செய்யவேண்டும். 1. பாவம்; 2. பாவாதிபதி; 3. பாவத்தில் நின்ற கிரகம்; 4-ஆம் பாவத்தில் நின்ற கிரகத்தோடு சேர்ந்த கிரகம்; 5. பாவத்தைப் பார்த்த கிரகம்; 6. பாவாதிபதி பெற்ற சாரம். இப்படி ஆறுவிதமான ஆய்வு செய்து பலனை நிர்ணயிக்க வேண்டும். இது ஷட்பலம் எனப்படும். (ஷட் என்பது ஆறு). இது ஸ்தூலமான ஷட்பலம். டிகிரி சுத்தமாகக் கணிப்பது ஒரு ஷட் பலம். இந்த ஷட்பலத்தில் எது மெஜாரிட்டியோ அதன்படி அந்த ஜாதகருக்குப் பலன் நடக்கும். ஒரு நோயாளியின் நோயை மேலோட்டமாகப் பார்த்து மருந்து கொடுத்து சிகிச்சை செய்வது ஸ்தூலமான வைத்தியம். அது குணமாகவில்லையென்றால் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பதும், அது தெளிவில்லை என்றால் ஸ்கேன் செய்து பார்ப்பதும் அடுத்த நிலை. அது சூட்சுமம். இப்படித்தான் ஜாதகப் பலனிலும் உண்டு. ராசிக்கட்டம் ஸ்தூலம். நவாம்ச கட்டம், தசவர்க்கம், பாதசாரம் சூட்சுமம். அந்தப் பெண் ஜாதகத்தில் தனுசு லக்னம். 7, 10-க்குடைய புதன் 4-ல் நீசம். 10-ல் 6, 11-க்குடைய சுக்கிரன் நீசம். சுக்கிரன் லக்னத்துக்கு 6, 11-க்குடையவர். கும்ப ராசிக்கு 4, 9-க்குடையவர். நீச சுக்கிரன்- நீச புதனைப் பார்ப்பது ஒரு சிறப்பு யோகம். உச்சனை உச்சன் பார்க்கக் கூடாது; கெடுதல். நீசனை நீசன் பார்ப்பது விசேஷம், யோகம். நீசபங்க ராஜயோகம். 4. கல்வி, பட்டம்; 10- உயர்பதவி; 11- வெற்றி. (கன்னிக்கு) 10-க்கு சுக்கிரன் 2, 9-க்குடைய யோகாதிபதி. சுக்கிரனுக்கு வீடு கொடுத்தவர் புதன்.