● எஸ். பாலசுப்ரமணியன், சிவகங்கை.
என் மகள் காயத்ரிக்கு எப்போது திருமணம் நடைபெறும்? லக்னத்தில் கேது, சந்திரன் சேர்க்கை நல்லதா? 7-ல் ராகு இருப்பது பாதிப்பா? திருமண வாழ்வு, எதிர்காலம், மேற்படிப்பு, உத்தி யோகம் எப்படி அமையும்? காயத்ரி தேவி என்று பெயர் மாற்றம் செய்யலாமா?
காயத்ரி பிறந்தது 19-10-1999. தேதி எண் 1, கூட்டு எண் 3. ட. ஏஹஹ்ஹற்ட்ழ்ண் என்ற பெயர் 26 வருகிறது. இது மிகமிக மோசம். உங்ஸ்ண் என்று சேர்த்தால் 42 வரும். அது ராசியானது. அவர் ஜாதகத்தில் நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் பாதிப்பானதுதான். அதனால் 30 வயதில் திருமணம் கூடும். திருவோண நட்சத் திரம், மகர ராசி. அதில் கேது, ராசிக்கு 7-ல் ராகு நிற்பது தோஷம்தான். நடப்பு வயது 20. இன்னும் 10 வருடம் காத்திருக்க வேண்டும். திருமணத்தைப் பற்றி இப்போது கவலை வேண்டாம். மேற்படிப்பு, நல்ல உத்தியோகம், நல்ல சம்பாத்தியம் கிடைக்க 2020-ல் விரயச் சனி முடிந்ததும், ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் போதும். திருமணத்துக்கும் சேர்த்து சங்கல்பம் செய்தால் 24 அல்லது 25 வயதில் திருமணமும் அமையும்.
● ஞானப்பிரகாசம், கோயமுத்தூர்.
என் மகன் நாகார்ஜுன் பி.ஈ., (ஆட்டோ மொபைல்) பட்டம் பெற்று வேலை அமைய வில்லை. திருமணமும் நடக்கவில்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்?
நாகார்ஜுன் சிம்ம லக்னம், ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி. 2020 வரை அட்ட மச்சனி. அது முடிந்த பிறகுதான் அவர் சம்பந் தப்பட்ட காரியங்கள் யாவும் நடக்கும்- வேலை வாய்ப்பு, சம்பாத்தியம் போன்றவை. 23 வயதுதான் ஆகிறது. இப்போதே திரு மணத்துக்கு என்ன அவசரம்?
● ஜெயசரசுவதி, திருச்சி.
என் மகன் மோகன்ராஜ் ஜாதகப்படி 30 வயது முடிந்தபிறகு திருமண முயற்சிகள் செய்யும்படி கூறியிருந்தீர்கள். 2018 செப்டம் பரில் 30 வயது முடிந்துவிட்டது. திவ்ய பாரதி என்ற பெண் ஜாதகம் வந்துள்ளது. பொருத்தம் உண்டா?
திவ்யபாரதி பரணி; மோகன்ராஜ் பூரம். இரண்டும் ஒரே ரஜ்ஜு; சேராது. வரும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல வரன் வரும்.
● எஸ். சண்முகபாண்டியன், ஸ்ரீவைகுண்டம்.
இந்த வயதிலும் வாசகர்களின் கேள்வி களுக்கு நிதானமாக பதில் கூறுவதை நினைத் துப் பெருமைப்படுகிறேன். பாராட்டுகள்! எனது மூத்த மகன் சந்தான முத்துக் குமாருக்கு 33 வயதாகிறது. திருமணம் எப்போது நடக்கும்?
முத்துக்குமார் கன்னியா லக்னம். அதில் கேது; 7-ல் ராகு. 7-க்குடைய குரு 6-ல் மறைவு. சுவாதி நட்சத்திரம், துலா ராசிக்கு 2-ல் சனி. சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை. 35 வயதுக்கு மேல்தான் திருமண யோகம் வருகிறது. சூலினிதுர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், நவகிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், மிருத் யுஞ்ஜய ஆயுஷ் ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்பு கொள்ளலாம். அவருக்குப்பின் பிறந்தவர் களுக்கும் திருமணத்தடையும் தாமதமும் இருந்தால் ஒரே செலவில் அவர்களையும் இணைத்து ஹோமம் செய்யலாம்.
● தகப்பனார், கரிசல்குளம்.
பிரகாஷ் என்ற ஜாதகரும் அவன் தகப்பனாரும் கீரியும் பாம்புமாக இருக் கிறார்கள். ஆரம்பத்தில் அரைகுரை யாகப் பேசினான். இப்போது சுத்தமாகப் பேசுவதில்லை. சேட்டை அதிகம். ஏதாவது பரிகாரம் உண்டா?
பிரகாஷ் பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கன்னியா லக்னம். 9-ல் சனி, ராகு. நடப்பு- 2019 மார்ச்சில் 16 வயது முடியும். 10 வயதுமுதல் சனி தசை. 2020 வரை அட்ட மச்சனி. அறந்தாங்கி அருகில் எட்டியத்தளி சென்று சனீஸ்வரருக்கு அபிஷேக பூஜை செய்யவும். அத்துடன் 2020 வரை சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் 19 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, நெய்யில் நனைத்து தீபம் ஏற்றவும். வசதி இருந்தால் படிப்பு, ஆரோக்கியம், ஆயுள், குடும்ப உறவு எல்லாவற்றுக்கும் ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்யலாம்.
● புன்னவனம், சிவஞானபுரம்.
23 ஆண்டுகளாக மனைவி, பிள்ளைகளுடன் இல்லாமல் பிரிந்து வாழ்கிறேன். அவர்கள் நன்றாக உள்ளனர். தங்களின் ஆசியுடன் ஜோதிடம் படித்து வருகிறேன். மீண்டும் குடும்பத்துடன் சேரமுடியுமா? திருமணத் தகவல் புரோக்கராகவும் இருக்கிறேன். ஆயுள் எவ்வளவு?
2019 ஆனியில் 64 வயது முடியும். ஆயுள் 77 வரை தீர்க்கம். பூராட நட்சத்திரம், தனுசு ராசி. 2023 வரை ஏழரைச்சனி. 69 வயது வரை குரு தசை. பிறகு சனி தசை 19 வருடம். ஏழரைச்சனி முடியும்வரை குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருப்பதே நல்லது. ஆனால் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் உதவிகளையும் முடிந்தவரை செய்யலாம்.
● அருள், பண்ருட்டி.
என் தங்கை மகன் சரவணனின் திருமணம் எப்போது நடக்கும்?
2019 ஜூன் மாதம் 32 வயது முடியும். கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னம். நாகதோஷம், சனி தோஷம் இருப்பதால் 2020 சனிப்பெயர்ச்சியுடன் ஏழரைச்சனி முடிவடையும். அதன்பிறகு திருமணம் நடக்கும். நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகங்களை இப்போது பொருத்தம் பார்க்க வேண்டாம்.
● எம். அருணாச்சலம், திருவள்ளூர்.
எனது அக்கா மகன் ஜாதகப்படி நல்ல வேலை, திருமணம் எப்போது அமையும்? அவனுக்கு அரசு வேலை கிடைக்குமா?
ஜெயகுமார் உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னம். லக்னத்தில் ராகு; 7-ல் செவ்வாய், கேது. சுக்கிரன் 10-ல் நீசம். 2019 செப்டம்பரில் 27 வயது முடியும். 22 வயது முதல் ராகு தசை. அவருக்கு வேலைக்கும் முன்னேற் றத்துக்கும் திருமணத்துக்கும் சூலினிதுர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்ய வேண்டும். உங்கள் பகுதியில் செய்யலாம். அல்லது சுந்தரம் குருக்களைத் தொடர்புகொள்ளலாம். செல்: 99942 74067.
● எஸ். வாசுகி, திருச்சி-3.
தங்கள் கேள்வி- பதில் மற்றும் ராசிபலன்களைப் படிக்கிறபோது ஒரு தெய்வாம்சம் நிறைந்த உணர்வை அனுப விக்கிறேன். சிலசமயம் தாங்கள் கூறும் பதில் அதிர்ச்சியாக இருந்தாலும், இன்னின்ன காரணங்களால் ஜாதகம் வலுவிழந்திருப்பதால் இறுதிவரை இப்படியே கடத்திவிடவும் என்று தாங்கள் கூறும் நேர்த்தியான அதிரடி பதிலால் கோபம் வரவில்லை. யதார்த்தத்தைப் புரிய வைக்கிறது. சூரியனும் சந்திரனும் உள்ளவரை ஜோதிட உலகம் தங்களின் ஜோதிடப் பணியை நினைவில் வைத் துப் போற்றும்! எனது மகன் பி.ஈ., மெக் கானிக்கல் படிப்பை 2019 ஏப்ரலில் நிறைவு செய்வான். அவனுக்கு எந்தத் துறையில் எப்பொழுது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது செய்யலாம்?
பிரசன்னாவுக்கு 21 வயதுதான் நடக்கிறது. மேஷ லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத் திரம். 17 வயதுமுதல் 35 வயதுவரை ராகு தசை. 2021 வரை படிக்கும் யோகம் உண்டு. பி.ஈ., முடித்ததும் மேலும் இரண்டு வருடம் மேற்படிப்பு படிக்கலாம். எம்.ஈ., அல்லது எம்.பி.ஏ., படிக்கலாம். அதன்பிறகு டிரான்ஸ் போர்ட் துறையில் வேலை அமையும். வெளிநாடு போகும் யோகமும் உண்டு. 27 வயது முதல் 30 வயதுக்குள் திருமண காலகட்டம். 10-ல் செவ்வாய், சனி சேர்க்கை. புதன் நீசம். திருமணத்தில் சில குழப்பம், பிரச்சினைகள் உருவாகலாம். அக்காலம் பரிகார ஹோமம் அவசியம்.
● ஏ. அகிலாண்டேஸ்வரி, அய்யர்மலை, எய்யலூர்.
எனது மகள் பவதாரணி பி.பி.ஏ., முடித்து வீட்டில் இருக்கிறாள். அவளுக்கு எப்போது திருமணம் செய்யலாம்?
பவதாரணி உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னம். ஜனவரியில் நடப்பு வயது 22 முடியும். நாக தோஷம், சனி தோஷம் இருப்பதாலும், குரு நீசம் என்பதாலும் திருமண வகையில் குழப்பம் அல்லது பிரச்சினைகள் உருவாக இடமுண்டு. 19 வயது முதல் ராகு தசை ஆரம்பம். 2020-ல் சனிப் பெயர்ச்சியை ஒட்டி மகளுக்கு சூலினிதுர்க்கா ஹோமம், பார்வதி சுயம்வரகலா ஹோமம், காமோகர்ஷண ஹோமம் உள்பட 19 அல்லது 21 ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். உங்களுக்குத் தெரிந்த இடத்தில் செய்யலாம். அல்லது காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்பு கொள்ளலாம்.
● ஜி. நாகராஜன், மயிலாப்பூர்.
தாங்கள் ஜோதிட உலகில் வராகமிகிரரின் மறு அவதாரம்! ஜோதிடப்பெருமக்களின் குலதெய்வமாக விளங்கும் தங்களது நல்லாசிகளை நாடுகிறேன். உங்களது எழுத்திற்காகவே கடந்த சில காலமாக "பாலஜோதிட'த்தை பக்தியுடன் வாசித்துவரும் லட்சக்கணக்கான வாசகர்களுள் நானும் ஒருவன். ஜோதிட உலகின் பிரம்மாவே! எனக்கும் ஜோதிடக்கலையைக் கற்றுக்கொடுங்கள். வங்கிப்பணியிலிருந்து இன்னும் சில காலத்தில் ஓய்வுபெற உள்ளேன். வழிகாட்டுங்கள்.
உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துகள்! பணி ஓய்வுபெற்ற பிறகு ஒருமுறை நேரில் வந்து சந்தியுங்கள். ஜோதிடப்பயிற்சிக்கு வழிகாட்டுவேன். மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் உதவியாளராக தசாபுக்தி கணக்குப் போட்டுவந்த நீலகண்டன் எனும் அன்பர் இன்று பிரபலமான ஜோதிடராகிவிட்டார். முத்துக்கிருஷ்ணன் எனும் ராணுவத்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர் ஜோதிடப் பயிற்சி வகுப்பில் படிப்பதோடு என்னை மானசீக குருவாக ஏற்றுள்ளார். சென்னையில் ஒரு அம்மையார் என் போட்டோவை பூஜை அறையில் வைத்து ஜோதிடம் பயில்கிறார். இதெல்லாம் தற்பெருமையாக நினைக்க வேண்டாம். ஏகலைவன் துரோணரை மானசீக குருவாக சிலை வடிவத்தில் வழிபட்டு, அர்ச்சுனனுக்கு மிஞ்சிய வில்லாளியாக வளர்ந்தான். "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்ற அளவில் ஜோதிடஞானமும் வாக்குப்பலிதமும் அடையவேண்டுமென்று தங்களை வாழ்த்துகிறேன். ஏற்றமும் தாழ்வும் எல்லார் வாழ்க்கையிலும் ஏற்படும். ஜோதிடஞானம் இருந்தால் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், தோல்வி வெற்றிக்குப் போடும் முதல் படிக்கட்டு என்ற பக்குவம் உண்டாகும். வீதியில் போகும்போது சைக்கிள்காரன் மோதிவிட்டால் மற்றவர்கள் சண்டைக்குப் போவார்கள். ஜோதிடஞானம் உடையவர்கள் "இன்று நமக்கு சந்திராஷ்டமம்; அதனால் வந்து மோதிவிட்டார்' என்று மனதை ஆறுதல் படுத்திக்கொள்வார்கள். ஜோதிடம் பயிலலாம். ஆனால் மாந்திரீகப் பரிகார சக்கரம் கொடுத்து "பிசினஸ்' செய்து பணம் சம்பாதிக்கக்கூடாது. அப்படி சம்பாதித்தால் வாரிசை பாதிக்கும். கோவில் பூஜை, ஹோமம் செய்யச் சொல்வது வேறு! அது சம்பந்தப்பட்டவர்கள் ஆன்மார்த்தமாகச் செய்வது!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-01/jothidamanswers-t.jpg)